Saturday, February 28, 2015
பட்டா வாங்குவது எதற்காக?
சொத்து வாங்கியவுடன் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்தவுடன் வேலை முடிந்துவிட்டது என்று நினைக்கக் கூடாது. பத்திரம் தான் நம் கைக்கு கிடைத்துவிட்டதே இனி சொத்து நமக்குத்தான் சொந்தம் என்று நினைத்துவிடக்கூடாது. பட்டா வாங்குவது மிக அவசியம். அதிலும் ஒருவரிடம் இருந்து சொத்து முழுவதையும் வாங்காமல் ஒரு பகுதியை மட்டும் வாங்கி இருந்தால் உடனே பட்டா பெயர் மாற்றத்துக்கு விண்ணப்பித்துவிட வேண்டும்.
2015-16 பொது பட்ஜெட் தாக்கல்: சிறப்பம்சங்கள்
புதுடெல்லி: மத்திய அரசின் 2015-2016 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை மக்களவையில் நிதியமைச்சர் அருண்ஜெட்லி இன்று தாக்கல் செய்தார். அதன் சிறப்பம்சங்கள் வருமாறு:
* ரூ.ஒரு லட்சம் மதிப்பிற்கு மேல் சொத்து வாங்கினால் பான் கார்டு எண் அவசியம்
*வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் மாற்றமில்லை
*தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு தற்போதுள்ள ரூ. 2.5 லட்சமே தொடரும். அதில் மாற்றமில்லை
*தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு தற்போதுள்ள ரூ. 2.5 லட்சமே தொடரும். அதில் மாற்றமில்லை
இன்று தேசிய அறிவியல் தினம்! - தேசிய அறிவியல் தினத்தை கொண்டாடும் நோக்கம் என்ன?
வணக்கம், இன்று பிப்ரவரி 28. என்ன நாள் தெரியுமா?
“தேசிய அறிவியல் தினம்“.
இது எத்தனைப் பேருக்கு தெரியும்? நிலைமை இப்படிதான் உள்ளது. காதலர் தினம் என்றால் என்ன என்று 10 வயது சிறுவனுக்கு கூட தெரிகின்றது. (காதலர் தினம் கொண்டாட வேண்டாம் என்று கூறவில்லை), ஆனால் அறிவியல் தினம் பற்றியும் நாம் அறிந்து வைத்திருக்க வேண்டாமா? அறிவியல் தினம் கொண்டாடப்படுவதற்கான காரணம் என்ன?
என்னால் அடிக்கப்பட்டது என மாணவரே எழுதுவது அவசியம்: பள்ளிக்கல்வி இணை இயக்குனர்
பிளஸ் 2 தேர்வில், விடைத்தாளில் எழுதாத பக்கங்களில் மையால் அடித்த பின் என்னால் அடிக்கப்பட்டது என மாணவரே எழுதுவது அவசியம்” என பள்ளிக்கல்வி இணை இயக்குனர் செல்வராஜ் தெரிவித்தார்.
122 பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்கள்
நடப்பு கல்வி ஆண்டில் தரம் உயர்த்தப்பட்ட, 50 உயர்நிலைப் பள்ளிகள் உட்பட, 122 அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கு, பதவி உயர்வு மூலம் தலைமை ஆசிரியர்களை நியமிக்க, பள்ளிக்கல்வி துறை இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார்.
டி.இ.ஓ.,க்கள் பதவி உயர்வுக்கு இருவகை பரிந்துரை பட்டியல்: கல்வித் துறையில் குழப்பம்
தமிழகத்தில் மாவட்ட கல்வி அலுவலர்கள் (டி.இ.ஓ.,க்கள்) பதவி உயர்வுக்கு இரண்டு வகை பணி மூப்பு பட்டியல்கள் பரிந்துரைக்கப்படுவதால் பதவி உயர்வு வழங்குவதில் குழப்பம் நீடிக்கிறது.
பிளஸ் 2 கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வில் புதிய நடைமுறை: தேர்வுத்துறை உத்தரவு
பிளஸ் 2 கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத் தேர்வில் மாற்றங்களை செய்து தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.
மாணவர்கள் அச்சமடையும் வகையில் பறக்கும்படையினர் செயல்படக் கூடாது - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவுரை
பிளஸ் 2 தேர்வின்போது மாணவர்கள் அச்சமடையும் வகையில் செயல்படக் கூடாது என பறக்கும்படையினருக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.
அரசுப் பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா: பரிசீலிக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
அரசுப் பள்ளிகள் உள்பட அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்கள், ஆசிரியர்கள் செயல்பாடுகளைக் கண்காணிப்பதற்காக கேமரா பொருத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை இரண்டு மாதங்களுக்குள் பரிசீலனை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
10,12ம் வகுப்பு பொதுத்தேர்வு முன்னேற்பாடுகள் குறித்து தலைமை செயலாளர் ஆலோசனை
தமிழகம் முழுவதும், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 5ம் தேதியும், 10ம் வகுப்பு தேர்வு மார்ச் 19ம் தேதியும் தொடங்குகிறது. இதையொட்டி எடுக்கப்பட உள்ள முன்னேற்பாடுகள் குறித்து, சென்னை தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் ஞானதேசிகன் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
கல்விச் சுற்றுலா: அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற வேண்டும்
கல்விச் சுற்றுலா செல்வதற்கு முன்பாக மாவட்டக் கல்வி அதிகாரி, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த இயக்ககம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையின் விவரம்:
652 கணினி பயிற்றுநர் நியமனம்: சான்றிதழ் சரிபார்ப்பு தொடங்கியது
தமிழகம் முழுவதும் 652 கணினி பயிற்றுநர்களை நியமிப்பதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு வெள்ளிக்கிழமை தொடங்கியது. வேலூர், விழுப்புரம், சேலம், மதுரை ஆகிய 4 இடங்களில் வரும் திங்கள்கிழமை (மார்ச் 2) வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது.
மானியத் திட்டத்தில் சேராதோருக்கு எரிவாயு உருளை நிறுத்தமா? எண்ணெய் நிறுவன அதிகாரிகள் விளக்கம்
சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டத்தில் இணையாதவர்களுக்கு எரிவாயு உருளை விநியோகம் நிறுத்திவைக்கப்படுவதாக எழுந்த புகாருக்கு எண்ணெய் நிறுவன அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
தேர்வு அலுவலர்களுக்கு செல்போன் பயன்படுத்த தடை
10ம் வகுப்பு, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில் தேர்வு அறைக்கு வரும் கண்காணிப்பு அலுவலர்கள் செல்போன் பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது.
சிறப்பு வகுப்பு, டியூஷன் கட்டண வசூல் கூடாது: தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை
'சிறப்பு வகுப்புக் கட்டணம், விடுதியில் தனிப் பயிற்சி கட்டணம் போன்ற பெயர்களில் மறைமுக கட்டணம் வசூலித்தால், அந்தப் பணத்தை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்படும்' என, தனியார் பள்ளிகளுக்கு சிங்காரவேலு கமிட்டி எச்சரித்துள்ளது.
பிளஸ் 2 தேர்வு எழுதுவதில் மாணவிகள்... : ஆண்டுக்காண்டு குறையும் மாணவர்கள்
தமிழகத்தில் வரும் 5ம் தேதி துவங்கவுள்ள பிளஸ் 2 பொதுத் தேர்வில், கடலூர் மாவட்டத்தில் வழக்கம்போல் இந்தாண்டும் மாணவர்களை விட 2,322 மாணவியர் கூடுதலாக தேர்வு எழுத உள்ளனர்.
TNPSC : உரிமையியல் நீதிபதி பதவி தேர்வு : சான்றிதழ் சரிபார்ப்பு அழைப்பு கடிதம் இணையதளத்தில் வெளியீடு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்ட அறிவிப்பு: உரிமையியல் நீதிபதி பதவியில் (201314ம் ஆண்டுக்கான) காலியாக உள்ள 162 பணியிடத்தை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு கடந்த நவம்பர் 1, 2ம் தேதி நடந்தது.
டான்செட் தேர்வு: ஏப்ரல் 1 முதல் பதிவு ஆரம்பம்
முதுநிலைப் பொறியியல் படிப்புகள், எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் சேர்வதற்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்) அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
அவசர உதவி '138' சேவையில் தெற்கு ரயில்வே துரிதம்
ரயில் பயணம் தொடர்பான இடர்பாடுகள் குறித்த புகார்களுக்கு 138 என்ற எண்ணை தொடர்பு கொள்ளும் வசதியை தெற்கு ரயில்வே துரிதமாக பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தது.
பிளஸ் 2, 10-ஆம் வகுப்பு தேர்வுகள்: தடையற்ற மின்சாரம் வழங்க உத்தரவு
பிளஸ் 2, 10-ஆம் வகுப்புத் தேர்வுகள் தொடங்கவுள்ள நிலையில், மாநிலத்தில் உள்ள அனைத்து தேர்வுக் கூடங்களுக்கும் தடையற்ற மின்சாரம் வழங்கவும், மாணவ, மாணவிகளுக்கு சீரான போக்குவரத்து வசதியை அளிக்கவும் அரசுத் துறைகளுக்கு தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் உத்தரவிட்டார்.
Friday, February 27, 2015
பள்ளிக்கல்வி - 2014-15ம் கல்வியாண்டில் 50 நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப்பள்ளிகளாக புதிதாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளதால் அப்பள்ளிகளுக்கு பதவி உயர்வு மூலம் தலைமையாசிரியர் நியமனம் செய்தல் மற்றும் தற்போது காலியாக உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களையும் பதவி உயர்வு மூலம் கலந்தாய்வு நடத்தி நியமனம் செய்திட இயக்குனர் உத்தரவு!!
பள்ளிக்கல்வி - 2014-15ம் கல்வியாண்டில் 50 நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப்பள்ளிகளாக புதிதாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளதால் அப்பள்ளிகளுக்கு பதவி உயர்வு மூலம் தலைமையாசிரியர் நியமனம் செய்தல் மற்றும் தற்போது காலியாக உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களையும் பதவி உயர்வு மூலம் கலந்தாய்வு நடத்தி நியமனம் செய்திட இயக்குனர் உத்தரவு
பள்ளிக்கல்வி - 122 உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு மார்ச் 1ம் தேதி நடைபெறவுள்ளது!!
தமிழகத்தில் காலியாக உள்ள 122 உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களுக்கான பதவி உயர்வு கல்ந்தாய்வு மார்ச்1ம் தேதி நடைபெறவுள்ளது. இக்கலந்தாய்வில் முன்னுரிமை பட்டியல் வரிசை எண்.685 வரை உள்ள ஆசிரியர்கள் கலந்து கொள்ளலாம்
என பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் தலைவர் திரு.இரவிச்சந்திரன் தெரிவித்தார்.பழங்கால நூல்களை இணையத்தில் படிக்கலாம்: டிஜிட்டல் சேவையை தொடங்கி வைத்தார் அமைச்சர் கே.சி.வீரமணி
தமிழகத்தில் 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய தமிழ் நூல்கள் டிஜிட்டல் வடிவில் மாற்றப்பட்டு, இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த சேவையை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான கே.சி.வீரமணி நேற்று தொடங்கிவைத்தார்.
105 வங்கிகளின் புத்தகங்கள்முகவரி ஆவணங்களாக ஏற்பு:பாஸ்போர்ட் அதிகாரி தகவல்!!
''பாஸ்போர்ட் பெற முகவரி ஆவணமாக தனியார் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி உட்பட 105 வங்கிகளின் புத்தகங்கள் ஏற்கப்படும்,'' என, மதுரை மண்டல அதிகாரி மணீஸ்வரராஜா தெரிவித்தார்.அவர் கூறியதாவது:
Validity of Self Attested Documents!!
Government of India
Ministry of Personnel, Public Grievances & Pensions
Validity of Self Attested Documents
பிரிட்டிஷ் கவுன்சில் புதிய திட்டம்!!
பள்ளி மாணவர்களுக்காக ‘ஏப்டிஸ்’ (APTIS) என்ற ஆன்லைன் ஆங்கில மொழித் தேர்வை பிரிட்டிஷ் கவுன் சில் அறிமுகப்படுத்தியுள்ளது.
FLASH NEWS:-!!!
உச்ச நீதிமன்ற புதிய நீதிபதியாக "அமிதவாராய்"பொறுப்பேற்றுக்கொண்டார்...இவர் ஒடிசா மாநில உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் ஆவார்.
7 th PAY COMISSION : வேலை செய்யாத அரசு ஊழியர்களுக்கு 'செக்!'
அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களின் பணித் திறனுக்கேற்ப, ஊதிய உயர்வு வழங்க, ஏழாவது சம்பள கமிஷன் முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக, சம்பளம் வாங்கிக் கொண்டு, வேலை செய்யாமல் இருக்கும் ஊழியர்களுக்கு மத்திய அரசு, 'செக்' வைத்துள்ளது.
கல்வி அதிகாரிகளுக்கு திடீர் தேர்வு
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுப் பணிகள் தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு திடீரென தேர்வு நடத்தப்பட்டது.
பொதுத்தேர்வை கண்காணிக்க 1 லட்சம் பேர் நியமனம் : பள்ளி கல்வித்துறை செயலாளர் தகவல்
பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வுகள் நேர்மையாகவும், முறைகேடு நடக்காமல் இருக்கவும் கல்வித் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக கண்காணிப்பு அலுவலர்கள், பறக்கும் படை உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு 1 லட்சம் பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் பார்வையாளர்களுக்கு தடை
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி.,யின் பணிகளில், இடைத்தரகர் குறுக்கீடுகளைக் குறைக்க, டி.என்.பி.எஸ்.சி., தலைமை அலுவலகத்தில், பார்வையாளர் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது.
மகனை கண்டித்த பள்ளி ஆசிரியரை தாக்கியவர் கைது
திருப்போரூரை அடுத்த நெல்லிகுப்பம் தனியார் பள்ளியின் மாணவரைக் கணடித்த உடல்கல்வி ஆசிரியரை தாக்கிய மாணவனின் தந்தையை போலீஸார் கைது செய்தனர்.
பிளஸ் 2 தேர்வு மையங்களில் செல்லிடப்பேசிகளைப் பயன்படுத்தக் கூடாது: அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவு
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு மையங்களில் செல்லிடப்பேசிகளைப் பயன்படுத்தக் கூடாது என தேர்வு அலுவலர்களுக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
அங்கீகாரம் இல்லாத பள்ளி மாணவர்கள்:பொதுத்தேர்வு எழுத சிறப்பு சலுகை
அங்கீகாரம் பெறாத பள்ளிகளின் மாணவர்கள், சிறப்புச் சலுகை மூலம், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத, தேர்வுத் துறை இயக்குனரகம் அனுமதி அளித்துள்ளது.
பிளஸ் 2 விடைத்தாள்களை கையாள்வதில் புதிய முறை
“பிளஸ் 2 தேர்வில் விடைத்தாளில் எழுதாத பக்கங்களில் மையால் அடித்த பின் 'என்னால் அடிக்கப்பட்டது' என மாணவரே எழுதுவது அவசியம்,” என பள்ளிக்கல்வி இணை இயக்குனர் செல்வராஜ் தெரிவித்தார்.
Thursday, February 26, 2015
பயணிகள் கட்டணம் உயரவில்லை; ரயில்வே பட்ஜெட் முக்கிய அம்சங்கள்
2015 - 16 ஆம் நிதியாண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை நாடாளுமன்ற மக்களவையில் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தற்போது தாக்கல் செய்து, புதிய ரயில், பயணிகளுக்கான புதிய வசதிகள், திட்டங்கள் குறித்த அறிவிப்புகள்
தமிழ்நாடு காவல்துறையில் எஸ்.ஐ பணி
தமிழ்நாடு காவல் துறையில் காலியாக உள்ள 984 காவல் சார்பு ஆய்வாளர் பணிக்கான நேரடி நியமனத்திற்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியிட்டுள்ளது. இந்தியக் குடியுரிமையுடைய விண்ணப்பதாரர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள் (தாலுகா) பதவிக்கு விண்ணப்பிக்கலாம். இதில் 94 பின்னடைவுக் காலியிடங்களுக்கு காவல் துறையைச் சார்ந்த களப்பணியாளர்கள், அமைச்சுப் பணியாளர்களின் பெண் வாரிசுதாரர்களைக் கொண்டு நிரப்பப்படும்.
சம்பள விவரம்: மதம் ரூ.9,300 -34,800 + தர ஊதியம் ரூ.4,800
PGTRB - Provisional Selection List After Certiificate Verification
Direct Recruitment of Post of Post Graduate Assistants / Physical Education Director Grade - I - 2013 - 14 and 2014 - 15
Provisional Selection List After Certiificate Verification
Provisional Selection List After Certiificate Verification
Teachers Recruitment Board College Road, Chennai-600006
|
Direct Recruitment of Post Graduate Assistants for the year 2013 - 2014 and 2014 - 15
CERTIFICATE VERIFICATION RESULTS AND PROVISIONAL SELECTED LIST
| |
Dated: 25-02-2015 |
Member Secretary
|
மார்ச் 1ம் தேதி மருத்துவ மேற்படிப்பு நுழைவு தேர்வு
தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள மருத்துவ மேற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நுழைவு தேர்வு அடுத்த மாதம் 1ம் தேதி நடக்கிறது.
மார்ச் 1ல் சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு; 2ல் பிளஸ் 2 தேர்வு; பள்ளிகளில் சிறப்பு பயிற்சி தீவிரம்
சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தின் கீழ், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் மார்ச் 1ம் தேதியும், பிளஸ் 2 மாணவர்களுக்கு மார்ச் 2ம் தேதியும் துவங்குகின்றன. கோவை மாவட்டத்தில் செயல்படும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் சிறப்பு பயிற்சிகள் நடந்து வருகின்றன.
தேர்வு எழுத வந்த மாணவர்களை 'துணை நடிகர்களாக' ஆக்கி சினிமா ஷூட்டிங்
சிவகங்கை மாவட்டத்தில் திருப்புத்தூர் பள்ளியில் தேர்வு எழுத வந்த மாணவர்களை 'துணை நடிகர்களாக' ஆக்கி சினிமா ஷூட்டிங் நேற்று நடந்தது. இதை பார்த்த பெற்றோர் அதிருப்தியடைந்தனர்.
'மொழிப்பாட விடைத்தாள்களில் முதல் 2 பக்கங்களை எழுதக் கூடாது'
வரும் மார்ச், 5ம் தேதியில் இருந்து, பிளஸ் 2 தேர்வும், மார்ச், 19ம் தேதியில் இருந்து, பத்தாம் வகுப்பு தேர்வும் நடக்கிறது. இதையொட்டி, மாணவ, மாணவியரும், ஆசிரியர்களும் கடைபிடிக்க வேண்டிய செயல்பாடுகள் குறித்து, தேர்வுத்துறை, அவ்வப்போது சுற்றறிக்கை அனுப்புகிறது.
மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்: பள்ளி கல்வித்துறை புதிய முயற்சி - முதன்மை செயலர் சபிதா பேட்டி
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுக்குப் பின், மாணவர் கள் உடனடியாக உயர் கல்விக்குச் செல்ல வசதியாக, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்க, தமிழக பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. நாட்டி லேயே முதல் முறையாக, தமிழகத்தில்தான் இத்திட்டம் அமலுக்கு வருகிறது.
ஆலோசனை கூட்டம்:
தமிழகத்தில் 500 பள்ளிகளில் ரோபாடிக்ஸ் கல்வி
மத்திய அரசு நிறுவனமான இந்திய எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் சென்னையைச் சேர்ந்த டெக் விஸார்ட் நிறுவனத்துடன் இணைந்து தமிழகத்தில் 500 பள்ளிகளில் ரோபாடிக்ஸ் கல்வியை 2015-16-ஆம் கல்வியாண்டில் அறிமுகம் செய்ய உள்ளது.
தகுதி பெறாத உதவிப்பேராசிரியர் நியமனங்கள்: 6 மாதங்களில் ஆய்வை முடிக்க யு.ஜி.சி.,க்கு உத்தரவு
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்ற கல்லூரிகளில் நியமிக்கப்பட்ட, உதவிப்பேராசிரியர்களின் கல்வித் தகுதியை ஆய்வு செய்யும் பணியை, ஆறு மாதங்களில் முடிக்கும்படி, பல்கலைக்கழக மானியக் குழுவான - யு.ஜி.சி.,க்கு, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
Wednesday, February 25, 2015
நேரடி நியமன உதவியாளருக்கு பதவி உயர்வு: ஊழியர்கள் கோரிக்கையை ஏற்ற அரசு!!
வருவாய்த்துறையில் நேரடியாக நியமிக்கப்பட்ட உதவியாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி பெறும் விதிகளில் திருத்தம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
பள்ளிகள் அங்கீகாரம் அறிய இணையதளம் :பெற்றோர் வசதிக்காக துவக்கியது கல்வித்துறை
தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளிகளின் அங்கீகாரம் மற்றும் இதர விவரங்களை அறிந்து கொள்ளும் வகையில் முதன் முறையாக, tnmatric.com என்ற இணையதளத்தை அறிமுகம் செய்ய, பள்ளிக் கல்வித் துறை முன்னோட்டம் நடத்தி வருகிறது.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான 2 நாளில் தற்காலிக மதிப்பெண் சான்று வழங்க ஏற்பாடு
தற்காலிக மதிப்பெண் சான்று
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான 2 நாளில் தற்காலிக மதிப்பெண் சான்று வழங்க ஏற்பாடு.மேற்படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு காலதாமதத்தை தவிர்க்கும் வகையில் நடவடிக்கை.தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் 90 நாட்களுக்கு செல்லுபடியாகும்: பள்ளிக்கல்வித்துறை செயலர்.
உங்கள் Android போனின் Pattern,Password,pin ஆகியவற்றை மறந்து விட்டிர்களா ?
உங்கள் Android போனின் Pattern,Password,pin ஆகியவற்றை மறந்து விட்டிர்களா ?
...
Service Center அல்லது வேறு கடைகாரரிடம் எடுத்துச்
சென்றால் 300லிருந்து 350 வரை கேட்பார்கள்,,
...
நாம் இப்போது நாமலே எப்படி Unlock செய்வது என்று பார்க்கலாம்,,
பன்றிக்காய்ச்சல் அறிகுறிகளும் தடுப்பு முறைகளும்: ஓர் எளிய வழிகாட்டுதல்
உலகையே அச்சுறுத்தி வரும் பன்றிக்காய்ச்சல் 1920 - 1930-ம் ஆண்டுகளில் பன்றிகளிடம் காணப்பட்டது. ஆரம்பத்தில் பன்றிகளிடம் இருந்து பன்றிகளுக்கு காய்ச்சல் பரவி வந்தது. நாளடைவில் பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவத் தொடங்கியது. அதன்பின் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவி வருகிறது. இதனால் இந்தக் காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் என்று அழைக்கப்படுகிறது.
அழகப்பா பல்கலை தேர்வு முடிவு வெளியீடு!!
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலைக்கல்விக்கான டிசம்பர் -2014 ல் நடந்த தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகளை www. alagappauniversity.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இம்முடிவுகள் வெளியான 10 தினங்களுக்குள் (5.3.2015 தேதிக்குள்) மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம். மறுமதிப்பீட்டிற்கான விண்ணப்பம் பல்கலைக்கழக இணையதளத் தின் மூலம்பதிவிறக்கம் செய்யப்பட்டு மறுமதிப்பீட்டுக்கட்டணமாக பாடம் ஒன்றுக்கு ரூ. 500 வீதம் பதிவாளர்,அழகப்பாபல்கலைக்கழகம் என்ற பெயரில் வரைவோலை செலுத்தி தேர்வுப்பிரிவுக்கு விண்ணப்பிக்குமாறு பல்கலைக்கழகத்தின் தேர்வாணையர் கா. உதய சூரியன் தெரிவித்துள்ளார்.CLICK HERE TO KNOW UR RESULT..
ஆங்கிலத்திலும் அள்ளலாம் 100க்கு 100 !!
ஆங்கிலம் தவிர்த்த மற்ற பாடங்களில் மதிப்பெண்களை அள்ளும் மாணவர்களில் சிலர்கூட ஆங்கிலத்தில் அதிக மதிப்பெண்களைப் பெறத் தவறுவார்கள். சிலர் ஆங்கிலம் என்றாலே பெரிதாகப் பயப்படுவார்கள். ஆனால், இது போன்ற பயம் எதுவும் எஸ்.எஸ்.எல்.சி. ஆங்கிலத் தாளுக்குத் தேவையில்லை.
PGTRB - தமிழ் வழியில் படித்த பெண்ணுக்கு ஆசிரியர் பணி வழங்க ஐகோர்ட் கிளை உத்தரவு
தேனி மாவட்டம், சின்னமனூரைச் சேர்ந்த முருகேஸ்வரி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: நான், பிஏ, எம்ஏ மற்றும் பிஎட் தமிழ் வழியில் படித்துள்ளேன். பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் பணிக்கான 2,881 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை 9.5.2013ல் டிஆர்பி வெளியிட்டது.
பிளஸ் 2 விடைத்தாள் டாப்சீட் எரிந்தது நெல்லை கல்வி அதிகாரி திடீர் மாற்றம்: பள்ளி கல்வித்துறை அதிரடி
பிளஸ்2 தேர்வுகள் துவங்க ஒரு வாரமே உள்ள நிலையில் நெல்லையில் விடைத்தாள் ‘டாப் சீட்‘ எரிந்து நாசமானதால் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார்.
10ம் வகுப்பு செய்முறைத் தேர்வு இன்று தொடக்கம்
பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வு செவ்வாய்க்கிழமை (பிப்.24) துவங்குகிறது. நடப்பாண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 19 இல் தொடங்கி ஏப் 10ஆம் தேதி வரை நடக்கிறது.
மார்ச் 5-இல் பிளஸ் 2 பொதுத் தேர்வு
மார்ச் மாதம் 5-ஆம் தேதி நடைபெறவுள்ள பிளஸ் 2 பொதுத் தேர்வை சென்னை மாவட்டத்தில் மட்டும் 53 ஆயிரத்து 400 மாணவர்கள் எழுதவுள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் எ. சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.
பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்கள் 'தக்கல்' முறையில் விண்ணப்பிக்கலாம்
பத்தாம் வகுப்பு தேர்வு எழுத விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்கள், இன்றும், நாளையும் 'தக்கல்' முறையில் விண்ணப்பிக்கலாம்.
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வு முறைகேடுகளை தடுப்பது எப்படி? அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுரை
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொது தேர்வுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னையில் கலெக்டர் சுந்தரவல்லி தலைமையில் நடந்தது. அப்போது, தேர்வு மையங்களுக்கு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதி, தடையில்லா மின்சாரம் வழங்குவது தொடர்பாக கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
வருமா... வராதா...? : மத்திய அரசின் கல்வி உதவித் தொகை... : வருவாய் வழி தேர்வு எழுதிய மாணவர்கள் ஏக்கம்
கடந்த ஆண்டு நடைபெற்ற, தேசிய வருவாய் வழி தேர்வில், தேர்ச்சியடைந்தவர்களில் பெரும்பாலான மாணவர்களுக்கு, மத்திய அரசின் கல்வி உதவித்தொகை இன்று வரை கிடைக்கவில்லை. உதவித்தொகை எப்போது கிடைக்கும் என, தெரியாமல், வங்கிக்கும், கல்வி அலுவலகங்களுக்கும் மாணவர்களின் பெற்றோர் நடையாய் நடந்து கொண்டிருக்கின்றனர்.
வாய்ப்பு ! : மக்கள் தொகையில் விடுபட்டவர்களுக்கு : மார்ச் 15 ஆதார் முகாமில் பங்கேற்கலாம்
மக்கள் தொகை கணக்கெடுப்பில் விடுபட்டவர்கள் மார்ச் 15க்குப் பின் மக்கள்தொகை பதிவேட்டில் பதிவு செய்து ஆதார் அட்டை பதிவு முகாமில்
பங்கேற்கலாம் என்று வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.
மூன்றாண்டுக்கு ஒருமுறை 'பிரீமியம்' கட்டினால் போதும்: வாகன காப்பீட்டில் புதிய நடைமுறை
வாகன காப்பீட்டில், மூன்று ஆண்டுக்கு, ஒரு முறை பிரீமியம் வசூலிக்கும் திட்டத்தை துவக்க, காப்பீட்டு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
நேரடி நியமன உதவியாளருக்கு பதவி உயர்வு: ஊழியர்கள் கோரிக்கையை ஏற்ற அரசு
வருவாய்த்துறையில் நேரடியாக நியமிக்கப்பட்ட உதவியாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி பெறும் விதிகளில் திருத்தம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
Tuesday, February 24, 2015
குருப் 'சி' பணியிடங்கள் அறிவிப்பு
மெட்ரிக்குலேஷன் தகுதிக்கு இந்திய கடற்படையில் வேலை வாய்ப்பு 219 குருப் 'சி' பணியிடங்கள் அறிவிப்பு. மத்திய அரசின் பாதுகாப்பு துறைக்கு சொந்தமான இந்திய கடற்படை கிழக்கு தலைமையகத்தில் காலியாக உள்ள 219 குருப் 'சி' பணியிடங்களுக்கு மெட்ரிகுலேசன் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அரசு ஊழியர் / ஆசிரியர்களின் ஈட்டா விடுப்பின் பேரில் மருத்துவ விடுப்பு அனுமதித்தல் சார்பான வழிமுறைகள்
தமிழ்நாடு விடுமுறை விதிகள் - விதி 15 - அரசு ஊழியர் / ஆசிரியர்களின் ஈட்டா விடுப்பின் பேரில் மருத்துவ விடுப்பு அனுமதித்தல் சார்பான வழிமுறைகள் வழங்கி அரசு உத்தரவு.
CLICK HERE - GO.8 PERSONNEL & ADMINISTRATION DEPT DATED.19.01.2015 - GRANT OF UNEARNED LEAVE ON MEDICAL LEAVE - CONSOLIDATED INSTRUCTIONS
உபரி ஆசிரியர்கள் விரைவில் 'டிரான்ஸ்பர்'
மாநிலம் முழுவதும், அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் உபரி ஆசிரியர்களாக பணிபுரிபவர்கள் பிற ஒன்றியங்களுக்கும், மாவட்டங்களுக்கும் விரைவில், பணியிட மாற்றம் செய்யப்படவுள்ளனர்.
மீண்டும் ஒரு பரபரப்பு சம்பவம் : மாணவனை கண்டித்த ஆசிரியர் மீது தாக்குதல் - கேட்கும் திறனை ஆசிரியர் இழந்தார்
பள்ளி மாணவனை கண்டித்த உடற்கல்வி ஆசிரியரை, தந்தை, உறவினர்கள் சரமாரியாக தாக்கியதால், அவரது காது கிழிந்தது. நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து சக ஆசிரியர்கள், காவல் நிலை யத்தை முற்றுகையிட்டனர்.
பிஎட் படிப்பை 2 ஆண்டாக்க மத்திய அரசிடம் அவகாசம் - உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன்
தமிழகத்தில் 7 அரசு ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளும் 14 அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளும் 668 சுயநிதி ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளும் என மொத் தம் 689 கல்லூரிகள் உள்ளன.
பள்ளிகளைத் தனியாரிடம் ஒப்படைக்க மாட்டோம்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
சென்னை மாநகராட்சி பள்ளிகளைத் தனியாரிடம் ஒப்படைக்க மாட்டோம் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.சட்டப்பேரவையில் மார்க்சிஸ்ட் உறுப்பினர் அ.சவுந்தரராஜன் பேசும்போது, சென்னை மாநகராட்சி பள்ளிகள் மூடப்படக் கூடிய நிலை இருப்பதாகக் கூறினார்.
கணினி ஆசிரியர் நியமனத்தில் அதிரடி: சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிப்பு
ணினி ஆசிரியர் நியமனத்திற்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதியை, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., அறிவித்து உள்ளது. அரசு பள்ளிகளில் பணி நீக்கம் செய்யப்பட்ட, 652 கணினி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, டி.ஆர்.பி., கடந்த ஆண்டு நடவடிக்கை எடுத்தது.
தமிழ்நாடு முழுவதும் பிளஸ்-2 வினாத்தாள் கட்டுகளுக்கு 24 மணிநேர பாதுகாப்பு துப்பாக்கி ஏந்திய போலீசார் நிற்கிறார்கள்
பிளஸ்-2 வினாத்தாள் கட்டுகளை பாதுகாக்க 24 மணிநேர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய போலீசார் விழிப்புடன் காவல் காத்து வருகிறார்கள்.
பிளஸ் 2 தேர்வு தனித் தேர்வர்களுக்கு இன்று 'ஹால் டிக்கெட்!'
'தத்கல்' திட்டத்தில், பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், இன்றும், நாளையும், 'ஹால்டிக்கெட்'டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என, அரசு தேர்வுகள் துறை அறிவித்து உள்ளது.
இதுகுறித்த அறிவிப்பு:
புகைப்படத்துடன் கூடிய ஓ.எம்.ஆர்., விடைத்தாள் : பிளஸ் 2 கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வில் புது ஏற்பாடு
பிளஸ் 2 கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வுக்கு, புகைப்படத்துடன் கூடிய, ஆப்டிக்கல் மார்க் ரீடர் - ஓ.எம்.ஆர்., விடைத்தாள் வழங்கப்பட உள்ளது. இதை பயன்படுத்தும் முறை குறித்து, தேர்வுத்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
பிளஸ் 2 தேர்வு, வரும் மார்ச் 5ம் தேதி துவங்குகிறது. 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தேர்வை எழுதுகின்றனர்.
Monday, February 23, 2015
பி.எட்., கல்வியியல் படிப்பு காலம் இந்த ஆண்டு உயர்த்தப்படாது: அமைச்சர் பழனியப்பன்!
சட்டசபையில் இன்று உறுப்பினர்கள் க.அன்பழகன், டில்லிபாபு ஆகியோர் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து உயர்கல்வி துறை அமைச்சர் பழனியப்பன் கூறியதாவது:
Direct Recruitment of Computer Instructor - Click here for Certificate Verification Details
Teachers Recruitment Board College Road, Chennai-600006
|
DIRECT RECRUITMENT OF COMPUTER INSTRUCTOR
|
வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்கிறது? மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும்
தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பினை ரூ.3 லட்சமாக உயர்த்தி மத்திய பட்ஜெட்டில் நிதி மந்திரி அருண் ஜெட்லி அறிவிப்பு வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.பட்ஜெட்தோறும் எதிர்பார்ப்புஒவ்வொரு ஆண்டும், பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது என்றால், மாத சம்பளம் பெறுவோரின் எதிர்பார்ப்பு, தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு உயர்த்தப்படுமா என்பதாக உள்ளது.
மாணவர்கள் சாதனையாளராக மாற பிரதமர் மோடி விருப்பம்.
தேர்வை சுமையாக கருதாமல் வெற்றிக்கு இலக்காக மனதில் கொள்ளவேண்டும் என ரேடியோ மூலம் பிரதமர் மோடி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.மன்கிபாத் என்ற நிகழ்ச்சி வாயிலாக ரேடியோ மூலம் பிரதமர் நரேந்திர மோடி மாதம் தோறும் பேசி வருகிறார்.
'CTET' தேர்வு: ஆசிரியர்கள் பங்கேற்பு
மத்திய அரசு பள்ளிகளில், ஆசிரியராக சேர நடத்தப்படும் தகுதித் தேர்வான, 'சி - டெட்' தேர்வு நேற்று நடந்தது. தமிழகத்தில், பல ஆயிரம் ஆசிரியர்கள் இத்தேர்வில் பங்கேற்றனர்.
ஆர்.டி.ஐ., விண்ணப்பதாரர்களுக்கு விரைந்து பதிலளிக்க அரசு உத்தரவு
தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு, உரிய காலத்திற்குள் தகவல்களை வழங்கவும், நிராகரிக்கப்படும் விண்ணப்பங்கள் குறித்த விவரங்களை தெரிவிக்கவும், மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
Sunday, February 22, 2015
தமிழக அளவில் சிறந்த கணினி வழிக் கற்பித்தல் விருது அரசுப்பள்ளிக்கு எவ்வாறு கிடைத்தது? - Karunai Doss
தமிழகத்தில் கணினி வழிக் கற்பித்தலை சிறப்பாக செய்து கொண்டிருக்கும் எனது ஆசிரிய நண்பர்கள் அனைவருக்கும் முகநூல் நண்பர்களுக்கும் வணக்கம்.
என்னிடம் பலர் கேட்ட கேள்விகளுக்கு விடையினை அளிக்கிறேன். நான் விடையளிப்பது மற்ற ஆசிரியர்களை ஊக்கமூட்டுவதற்காக மட்டுமே!
1. தமிழக அளவில் சிறந்த கணினி வழிக் கற்பித்தல் விருது அரசுப்பள்ளிக்கு எவ்வாறு கிடைத்தது?
ஆதார் கார்டில் பிழைகள் உள்ளதா? நீங்களே ஆன்லைனில் Edit செய்திடுங்கள்!
ஆதார் கார்டில் பிழைகள் உள்ளதா?nநீங்களே ஆன்லைனில் Edit செய்திடுங்கள்!
இந்தியாவில் ஒரு சிலருக்கு ஆதார் கார்டு இந்திய அரசால் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரி, மொபைல் எண் அல்லது மற்ற குறிப்புகளில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால், அந்த மாற்றத்தை ஆன்லைன் மூலம் அப்டேட் செய்ய முடியும்.
தேர்வு பயம் போக்க ஆலோசனை: '104'ல் 650 மாணவர்கள் அழைப்பு
அரசுத் தேர்வுகள் துவங்க உள்ள நிலையில், '104'ல் ஆலோசனை பெறும், மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தினமும், 650 பேர் வரை ஆலோசனை பெறுகின்றனர்.
சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்ட 590 பேரின் பட்டியல் வெளியீடு!
உரிமையியல் நீதிபதி பதவிக்கு விண்ணப்பித்தவர்களில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்ட 590 பேரின் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:–
வி.ஏ.ஓ.க்கள் பதவி உயர்வில் புதிய நடைமுறை: தமிழக அரசு உத்தரவு
கிராம நிர்வாக அலுவலர்களுக்கு (வி.ஏ.ஓ.) பதவி உயர்வு வழங்குவதற்கான புதிய உத்தரவை தமிழக அரசு வெளியிட்டது. இதன்படி, பதவி உயர்வுக்கான தகுதியாக 6 ஆண்டுகள் வி.ஏ.ஓ., பணியை நிறைவு செய்தாலே போதும். இதுகுறித்து வருவாய்த் துறை செயலாளர் ஆர்.வெங்கடேசன் வெளியிட்ட உத்தரவு:
"88 பாடப் பிரிவுகளில் இலவச இணையதளக் கல்வி'
பொறியியல், மேலாண்மை உள்ளிட்ட 88 பாடப்பிரிவுகளில் இலவச இணையதளக் கல்வி அளிக்கப்படுவதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.
ஒவ்வொரு பக்கமும் 25 வரி எழுத வேண்டும்: பிளஸ் 2 மாணவர்களுக்கு அறிவுறுத்தல்
பிளஸ் 2 பொதுத்தேர்வில், விடைத்தாளில் ஒவ்வொரு பக்கமும், 20 முதல், 25 வரிகள் வரை விடை எழுத வேண்டும் என்று, அரசுத் தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
Saturday, February 21, 2015
CONGRATS......
Mr.Dhilip kumar working has an English Teacher in Govt.high school,villupuram district has been declared the winner in MIELI COMPETETION held byMICROSOFT out of 760 teachers.He has also been selected has the teacher representative to attend GLOBAL FORUM at U.S.A...
we wish his journey to be successful like this always....
தகுதித்தேர்வு தேர்ச்சி சான்றுக்கு உண்மைத் தன்மை தேவையா: அலையும் ஆசிரியர்கள்
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தகுதித்தேர்வில் தேர்வான பலர், அதற்கான உண்மை தன்மை அவசியத்தால் அரசு உதவி பெறும் பள்ளியில் பணியில் சேர முடியாமல் தவிக்கின்றனர். 2011க்கு பின் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியில் சேர தகுதித்தேர்வு தேர்ச்சி பெறுதல் அவசிய மாக்கப்பட்டது. கல்வித் தகுதி அடிப்படையில் அரசு உதவி பெறும் பள்ளியில் பணியில் சேர்ந்தவர்களுக்கு சம்பளம் நிறுத்தப்பட்ட நிலையில், தகுதித்தேர்வை எழுதி தேர்வான இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பலர் பணியில் சேர முடியாத நிலை உள்ளது.
தொடக்கப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களை நியமிக்க முடிவு
தொடக்க கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் தற்போது படிக்கும் மாணவர்கள், பணியில் உள்ள ஆசிரியர்கள் விவரங்களை தொடக்க கல்வித்துறை கேட்டுள்ளது. மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் என்று கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளதால், அதிகமாக உள்ள ஆசிரியர்களை குறைவாக உள்ள இடங்களுக்கு பணி நிரவல் மூலம் நியமிக்க தொடக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு ஊக்கத் தொகை: அரசாணையில் திருத்தம்
எம்.பில்., பி.எச்டி. படித்த உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் ஊக்கத் தொகை வழங்க அரசாணையில் திருத்தம் வெளியிடப்பட்டுள்ளது.
எஸ்.எஸ்.எல்.சி. செய்முறை தேர்வு 24-ந் தேதி தொடங்குகிறது
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மார்ச் மாதம் 19-ந் தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கி ஏப்ரல் 10-ந் தேதி முடிவடைகிறது.
பிரச்னைகள் ஏற்பட்டால் தனியார் கல்லூரிகள் அரசுடமை : அமைச்சர் பழனியப்பன் எச்சரிக்கை
பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது காட்டுமன்னார்கோவில் முருகுமாறன் (அதிமுக) கேட்ட கேள்விகளுக்கு உயர் கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் அளித்த பதில் வருமாறு:
ஐ.எப்.எஸ்., தேர்வில் சேலம் மாணவி முதலிடம்
ஐ.எப்.எஸ்., எனும் இந்திய வனப்பணி தேர்வில், சேலம் மாணவி பிரீத்தா, அகில இந்திய அளவில் எட்டாமிடமும், தமிழக அளவில் முதலிடமும் பெற்றுள்ளார். மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான, யு.பி.எஸ்.சி., சார்பில், இந்திய வனப்பணியான, ஐ.எப்.எஸ்., முதல்நிலைத் தேர்வு, கடந்த ஆண்டு, ஆகஸ்ட் மாதம் நடந்தது. நவம்பர் மாதம் முதன்மை தேர்வும், கடந்த பிப்ரவரி மாதம், நேர்காணலும் நடந்தன.
10ம் வகுப்பு செய்முறை தேர்வு: மார்ச் 4க்குள் முடிக்க உத்தரவு
இந்தாண்டு, 10ம் வகுப்பு அறிவியல் செய்முறைத் தேர்வை, வரும் 4ம் தேதிக்குள் முடிக்க, அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து, இன்று பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வி அதிகாரிகள், வழிகாட்டுதல் வழங்க உள்ளனர்.
Friday, February 20, 2015
மனைவி கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் கணவருக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு உண்டா?
அரசுப்பணியாளர் மனைவி கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் போது கணவருக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு அனுமதி உண்டா?
பள்ளிக்கூடங்களில் நாளை தாய்மொழி தினம் கொண்டாட்டம்; பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி நடத்தப்படுகிறது
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை வேண்டுகோள்படி தமிழ்நாட்டில் உள்ள பள்ளிக்கூடங்களில் நாளை (சனிக்கிழமை) தமிழ்மொழியில் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி நடத்தப்படுகிறது.
தேர்வு முறைகேடு: மாணவர் - கல்லூரிகளுக்கு கிடுக்கிப்பிடி; தண்டனைகளை கடுமையாக்கியது தேர்வு வாரியம்
தேர்வு முறைகேடுகளில் ஈடுபடும் மாணவர்களின் தண்டனைகளை கடுமையாக்கியுள்ள பாலிடெக்னிக் தேர்வு வாரியம், முறைகேடுகளுக்கு உதவிபுரியும் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை குறைப்பு, மூன்றாண்டு தடை உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் பாயும் என, எச்சரித்துள்ளது.
'புரோகிராம்' செய்யப்பட்ட கால்குலேட்டர்:பிளஸ் 2 மாணவர்கள் பயன்படுத்தலாமா?
'பிளஸ் 2 தேர்வில், சிறப்புப் பாடம் எழுதும் மாணவர்களுக்கு, 'புரோகிராம்' செய்யப்படாத கால்குலேட்டர்களை மட்டுமே, தேர்வறையில் அனுமதிக்க வேண்டும்' என, தேர்வுத் துறை இயக்குனரகம் உத்தரவிட்டு உள்ளது.
பிப்., 23 ல் பி.எட்., செய்முறை தேர்வு
பி.எட்., மாணவர்களுக்கான செய்முறை தேர்வு பிப்., 23 ல் துவங்குகிறது.தமிழகத்தில் 661 கல்வியியல் கல்லுாரிகள் உள்ளன. ஒரு லட்சம் மாணவர்கள் பயில்கின்றனர். இவர்களுக்கு 2014--15 க்கான செய்முறை தேர்வு பிப்., 23 ல் துவங்கி மார்ச் 13 வரை 6 கட்டங்களாக நடக்கிறது.
சர்ச்சையில் சிக்கிய கல்வி அதிகாரி மாற்றம்
சேலம், நாமக்கல் மாவட்டங்களில், பொதுத்தேர்வு பணியை கண்காணிக்க நியமிக்கப்பட்ட, கல்வித் துறை இணை இயக்குனர் பழனிச்சாமி, திடீரென வேறு மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டார்.
தாமதமாக வந்த பயிற்சி கையேடு:ஆசிரியர்கள் கடும் அதிருப்தி
பள்ளிகளில், மாதிரி தேர்வுகள் நடந்து வரும் நிலையில், ஆசிரியர் பயிற்சி கையேடு வினியோகிக்கப்பட்டு வருவது, ஆசிரியர்கள் மத்தி யில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மார்ச் 7க்குள் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்கணும்!மீண்டும் இன்னொரு வாய்ப்பு கிடைக்காது
வேலைவாய்ப்புக்கான பதிவை புதுப்பிக்க தவறியோர், சிறப்பு சலுகையின் கீழ் புதுப்பித்துக் கொள்வதற்கான அவகாசம், மார்ச் 7ம் தேதியுடன் முடிகிறது. 'இந்த காலத்தில் புதுப்பிக்க தவறினால், மீண்டும் வாய்ப்பு கிடைக்காது' என, வேலைவாய்ப்பு இயக்குனரகம் தெரிவித்து உள்ளது.தமிழகம் முழுவதும், 85 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில், கல்வித்தகுதியை பதிவு செய்துவிட்டு, அரசு வேலை வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். பதிவு செய்தோர், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பதிவை புதுப்பிக்க வேண்டும்.
TNPSC : அரசு பணி நியமனத்தில் சிபாரிசு:அரசியல் தலையீட்டுக்கு 'செக்!'
அரசுப் பணிக்கான தேர்வுகளில், முறைகேடு நடக்காமல் தடுக்க, பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வருவது குறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., கமிட்டி, அவசரமாகக் கூடி, நேற்று ஆலோசனை நடத்தியது.
அண்ணாமலை பல்கலையில் விடைத்தாள் மாயம்:தேர்வுத்துறை அலட்சியம்: அதிகாரிகள் அதிர்ச்சி
அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டுத் துறை, இருப்பு அறையில் இருந்த மாணவர்களின் தேர்வு விடைத்தாள்கள் மாயமானதால், அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Thursday, February 19, 2015
புத்துணர்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் 'குஷி'
தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கு இணையாக, அரசுப் பள்ளிகளின் கல்வி மற்றும் தகவல் தொடர்புத்திறனை உயர்த்து வதாக, அரசுப் பள்ளி தலைமையாசிரியர்கள் சூளுரைத்து உள்ளனர்.
2016க்குள் 11 லட்சம் விலையில்லா மடிக்கணினி வழங்க தமிழக அரசு முடிவு!
2016ஆம் ஆண்டிற்குள் மாணவ- மாணவிகளுக்கு 11 லட்சம் விலையில்லா மடிக்கணினி வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
10ம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு இன்று முதல் ஹால்டிக்கெட்
பத்தாம் வகுப்பு தேர்வு எழுத ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த தனித் தேர்வர்களுக்கு இன்று முதல் ஹால்டிக்கெட் வழங்கப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
அழகப்பா பல்கலை. தொலைநிலைக் கல்வி தேர்வு முடிவுகள் வெளியீடு
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி இயக்குநரகம், டிசம்பர் 2014-ஆம் ஆண்டுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
பிப்ரவரி 22ஆம் தேதி இரண்டாம் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம்
பிப்ரவரி 22ஆம் தேதி இரண்டாம் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம்கடந்த மாதம் 18ஆம் தேதி முதல் தவணை சொட்டு மருந்து 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது.
மாத சம்பளம் பெறுவோர் வருமானவரி விலக்கு பெறும் வகையில் பட்ஜெட் இருக்கும் !!
மத்திய பட்ஜெட்டில் வருமான வரி பிடித்தம் ரூ.10 லட்சம் வரை 10 சதவீதமாக குறைக்க அருண்ஜெட்லி முடிவு செய்துள்ளார்.
குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான ஆசிரியர்களுக்கான கையேட்டை மகளிர், குழந்தைகள் மேம்பாட்டுக்கான அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
பேராசிரியர் மாடபூஷி ஸ்ரீதர் ஆய்வின் அடிப்படையில், மாணவர்களுக்கு வழங்கப்படும் உடலையும், மனதையும் வருத்தக்கூடிய தண்டனைகளை மூன்று விதமாக அந்தக் கையேடு பிரித்துள்ளது.
பணிநியமனம் வழங்கக் கோரி டிஆர்பியை மாற்றுத் திறனாளி பட்டதாரிகள் முற்றுகை போராட்டம்
ஆசிரியர் பணி நியமனங்களை வழங்கக் கோரி மாற்று திறனாளி பட்டதாரிகள் நேற்று ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை டிபிஐ வளாத்தில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகம் முன்பு நேற்று காலை திடீரென திரண்ட மாற்றுத் திறனாளிகள் 100 பேர் பணி நியமனம் தொடர்பான கோரிக்கையை வலியுறுத்தி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆங்கிலத்தை வளர்த்த தமிழனால் ஏன் தமிழை வளர்க்க முடியவில்லை?
ஆங்கிலம் மட்டுமே போதும் என்ற நிலைக்கு இன்று பெரும்பான்மையானவர்கள் கருதுகிற நிலையில் தமிழில் என்ன இருக்கிறது என்ற சிறப்பு அடுத்த சந்ததிக்குத் தெரியாமலே போகிறது. தமிழை தாழ்வாக நினைக்கும் தமிழர்களுக்கு தமிழின் சிறப்புகளை இங்கே ஒவ்வொரு பகுதியாக சுட்டிக்காட்டுகிறோம்.
Wednesday, February 18, 2015
6வது ஊதிய குழு அரசாணையின்படி (மூத்தோர் இளையோர்) - ஊதிய முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தால் களைய நீதிமன்றம் உத்தரவு.
பணியல் மூத்தோர் இளையோர் ஊதிய முரண்பாடுகளை 45113 ஊதிய பிரிவு.17.08.2009 - இதன்படி களைந்துகொள்ள உயர்நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது
CLICK HERE TO DOWNLOAD JUDGEMENT COPY
தமிழக சட்டப்பேரவை: ஆளுநர் உரையில் கல்வித் துறை சார்ந்த முக்கிய அம்சங்கள்
அனைவருக்கும் தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்ய கடந்த நான்கு ஆண்டுகளில் 182 புதிய தொடக்கப் பள்ளிகளை தொடங்கியும், 1,317 நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளை தரம் உயர்த்தியும், இந்த அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்துள்ளது.
பிளஸ் 2, 10ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதும் போது செய்யக்கூடியவை என்ன? , செய்யக் கூடாதவை என்னென்ன? - தேர்வுத்துறை அறிவிப்பு
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதும் போது என்னென்ன செய்ய வேண்டும், செய்யக் கூடாது என்பதை தேர்வுத்துறை தெளிவுபடுத்தியுள்ளது.
செய்யக்கூடியவை என்ன?
* விடைத்தாளின் முகப்பு சீட்டில் உரிய இடத்தில் மாணவர்கள் கையொப்பமிட வேண்டும்.
நான்கு ஆண்டுகளில் 72 ஆயிரத்து 597 ஆசிரியர்கள் நியமனம் - ஆளுநர் உரை
தமிழக அரசின் சார்பில் கடந்த 4 ஆண்டுகளில் 72 ஆயிரத்து 597 ஆசிரியர்கள் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு புதிய மருத்துவத் திட்டம்: சோதனை முறையில் மதுரையில் அமல்
தமிழகத்தில் விரைவில் அங்கன்வாடி முதல் மேல்நிலைப்பள்ளி வரை அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு புதிய இலவச மருத்துவத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
பிளஸ்-2 வினாத்தாள் இன்று அனுப்பப்படுகிறது
பிளஸ்-2 வினாத்தாள்கள் சென்னையில் இருந்து இன்று (புதன்கிழமை) முதல் அனைத்து மாவட்டங்களுக்கும் அரசு தேர்வுத்துறை சார்பில் அனுப்பப்படுகிறது.
"ஸ்கெட்ச்', வண்ண பென்சில்களால் விடைத்தாள்களில் எழுதக் கூடாது: அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தல்
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள்களில் "ஸ்கெட்ச்', வண்ண பென்சில்களால் எழுதக் கூடாது என அரசுத் தேர்வுகள் இயக்ககம் மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
அதிகமாக பணம் வசூலித்த பள்ளிகளுக்கு நெருக்கடி
அரசு நிர்ணயித்ததை விட, மாணவர்களிடம் அதிகமாக வசூலித்த, 7 கோடி ரூபாயை தனியார் பள்ளிகளிடமிருந்து பறிமுதல் செய்ய, தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு, நீதிபதி சிங்காரவேலர் கமிட்டி உத்தரவிட்டு உள்ளது.
வினா, விடைத்தாள்களை பத்திரமாக அனுப்புவது எப்படி? பிளஸ் 2 தேர்வு குறித்து செயலர் மற்றும் இயக்குனர் ஆலோசனை
தமிழகத்தில், மார்ச் 5ம் தேதி, பிளஸ் 2; மார்ச் 19ம் தேதி, 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் துவங்க உள்ளன. இந்தத் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள், ஏற்கனவே தயார் செய்யப்பட்டுள்ளன. விடைத்தாள்கள் மற்றும் முகப்புப் பக்கம் இணைப்புப் பணி நடந்து வருகிறது. முதற்கட்டமாக, பிளஸ் 2 தேர்வை நடத்தும் ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பிளஸ் 2 தேர்வு: மாணவர்களை கண்காணிக்க 1,000 பறக்கும் படை: தொழில்நுட்ப பாட தேர்வை ஆய்வு செய்கிறது அண்ணா பல்கலை குழு
மார்ச் 5ம் தேதி நடக்க உள்ள, பிளஸ் 2 தேர்வை, 8.43 லட்சம் மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். இவர்களைக் கண்காணிக்க, 4,000 ஆசிரியர், அதிகாரிகளைக் கொண்ட, 1,000 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
Tuesday, February 17, 2015
குறைந்த விலை ஸ்மார்ட்போன்: மைக்ரோசாப்ட் அறிமுகம்!!
மைக்ரோசாப்ட் நிறுவனம் 2 புதிய ரக ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தும் நோக்கில் இவை அறிமுகப்படுத்தப்பட்டுள் ளதாக நிறுவனத்தின் தென் பிராந்திய இயக்குநர் டி.எஸ். ஸ்ரீதர் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் ரோசய்யா உரையின் சிறப்பம்சம் வருமாறு
* வண்ணாரப்பேட்டை- திருவொற்றியூர் வரையிலான மெட்ரோ திட்டத்துக்கு ஒப்புதல் தர மத்திய அரசுக்கு வலியுறுத்தல்.
* கோயம்பேடு- ஆலந்தூர் இடையே மெட்ரோ ரயில் சேவை விரைவில் தொடங்கப்படும்.
* கோயம்பேடு- ஆலந்தூர் இடையே மெட்ரோ ரயில் சேவை விரைவில் தொடங்கப்படும்.
ஒரே ஆண்டில் இரு பட்டங்கள் ஆசிரியர் பணி வழங்க உத்தரவு
ஒரே ஆண்டில் எம்.ஏ., மற்றும் பி.எட்., படித்தவருக்கு பணி வழங்க மறுத்த ஆசிரியர் தேர்வு வாரிய உத்தரவை, மதுரை ஐகோர்ட் கிளை ரத்து செய்தது.
மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் 400 பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி
தலைமை ஆசிரியர்தான் ஒரு பள்ளியின் முன்மாதிரியாக திகழவேண்டும். அப்படி விளங்கினால்தான் சக ஆசிரியர்கள் முன்மாதிரியாக வருவார்கள். ஆசிரியர்கள் சிறப்பாக பணியாற்றினால்தான் மாணவர்கள் சிறப்பாக படிப்பார்கள், ஒழுக்கமாக நடப்பார்கள் என்பதை பள்ளி கல்வித்துறை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் உள்ள நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் அனைவருக்கும் பயிற்சி அளிக்க முடிவு செய்தது.
முறைகேட்டை தடுக்க 9200 பறக்கும்படை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வை 19,15,735 மாணவர்கள் எழுதுகின்றனர்: தேர்வுத்துறை அறிவிப்பு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வை 8 லட்சத்து 43 ஆயிரத்து 64 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். அதேபோல, பத்தாம் வகுப்பு தேர்வை 10 லட்சத்து 72 ஆயிரத்து 691 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.
பிளஸ் 2 தேர்வு: 8.43 லட்சம் பேர் எழுதுகின்றனர்
நிகழாண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வை 8.43 லட்சம் மாணவர்களும், 10-ஆம் வகுப்புத் தேர்வை 10.72 லட்சம் மாணவர்களும் எழுத உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் நியமனம்: சான்றிதழ் சரிபார்ப்பு தொடக்கம்
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு திங்கள்கிழமை தொடங்கியது.
உயர்கல்வி படிக்கும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற புதிய திட்டம் அறிமுகம்
வெளிநாடுகளில் பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட பிரிவுகளில், உயர்கல்வி படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான, புதிய கல்வி உதவித் தொகை திட்டம், அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
தேர்வு காலங்கள்.. மாணவனே பதட்டம் தவிர்... மனதை லேசாக்கு!
பிளஸ் 2 தேர்வுகள் இன்னும் சில நாட்களில் துவங்க உள்ளது. ஆண்டு முழுக்க கண்விழித்து படித்தாலும், தேர்வு காலங்களில் நமது படிப்பு, மனநிலை, உடல் நிலை, உணவு முறை போன்றவையும் நாம் பெறும் மதிப்பெண்ணில் முக்கிய பங்கு வகிக்கிறது. பொதுத்தேர்வு எழுதப்போகும் மாணவர்களுக்கு பாடம் அல்லாத பிற விஷயங்களில் வழிகாட்டவே இந்த பகுதி.
Monday, February 16, 2015
ஹோம்வொர்க்கை செக் பண்ணினா பத்தாது... கை கழுவி இருக்காங்களான்னும் இனி ஆசிரியர்கள் பார்க்கணும்!
மாணவர்கள் சாப்பிடுவதற்கு முன்னதாக கைகளை கழுவி உள்ளனரா என்பதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஒன்றரை மாதத்தில் குரூப் 4 தேர்வு ரிசல்ட் வெளியிடப்படும்: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பேட்டி
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குழந்தை மேம்பாட்டு திட்ட அலுவலர் பணியில் காலியாக உள்ள 117பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு நவம்பர் 11ம் தேதி வெளியிடப்பட்டது.
குரூப் - 2 தேர்வு முடிவுகள் ஒரு வாரத்தில் வெளியாகும்:டி.என்.பி.எஸ்.சி., தலைவர் தகவல்
''குரூப் - 2 தேர்வு முடிவுகள், இன்னும் ஒரு வாரத்தில் வெளியிடப்படும்,'' என, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி.,யின் தலைவர் (பொறுப்பு) பாலசுப்ரமணியன் தெரிவித்தார்.
பிளஸ் 2 பொது தேர்வு மாணவர்களுக்கு அறிவுரை
'பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், வினாத்தாளில் கறுப்பு, நீல மை பேனாக்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்' என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பிளஸ் 2 பொதுத் தேர்வுகள், மார்ச் 5ல் துவங்குகின்றன. விடைத்தாள்கள் தைக்கும் பணி முடிந்துள்ளது.
விதிகளை மீறி மாணவர்களுக்கு உடனடி தேர்வு :தன்னாட்சி கல்லூரிகளுக்கு சென்னை பல்கலை கண்டிப்பு
மாணவர்கள் தோல்வியடையும் பாடங்களுக்கு, பல்கலை தேர்வு விதிகளை மீறி, உடனடி தேர்வு நடத்தும் தன்னாட்சி கல்லுாரிகளை கண்டித்து, சென்னை பல்கலை, சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
ஓய்வூதிய வயதை அதிகரிக்க இ.பி.எப்.,ஆலோசனை
தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கான வயதை 58-இல் இருந்து 60ஆக உயர்த்துவது குறித்து தொழிலாளர் வருங்கால சேம நல நிதி நிறுவனம் ஆலோசித்து வருகிறது.
இந்திய ராணுவ பயிற்சி கல்லூரி யில் 8-ம் வகுப்பு படிக்க மாணவர் களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
இதுகுறித்து ராணுவ பொதுத் துறை செயலகம் நேற்று வெளி யிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது: இந்திய ராணுவ பயிற்சி கல் லூரியில் 2016 ஜனவரி கல்வி ஆண்டில் 8-ம் வகுப்பு படிக்க மாணவர்களிடமிருந்து விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Sunday, February 15, 2015
2004 முதல் 2006 வரை நியமனம் செய்யப்பட்ட 28 இடைநிலை ஆசிரியர்களுக்கு நியமனம் செய்யப்பட்ட நாள் முதல் பணிவரன்முறை - அனைத்து ஆசிரியர்களுக்கும் இது பொருந்துமா ?
தொடக்கக் கல்வி - கரூர், திருப்பூர், நாமக்கல், ஈரோடு மற்றும் திருச்சி மாவட்டத்தை சார்ந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாக 2004-05ஆம் ஆண்டில் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்டு பின்னர் 01.05.2006ல் முறையான ஊதியம் அளிக்கப்பட்டு பணிவரன்முறை செய்யப்பட்ட 28 இடைநிலை ஆசிரியர்களுக்கு நீதிமன்ற உத்தரவின்படி நியமனம் செய்யப்பட்ட நாள் முதல் பணிவரன்முறை செய்து அரசு உத்தரவு
தேர்வு நேரத்தில் கிரிக்கெட் ஜுரம்; பெற்றோர், ஆசிரியர்கள் கவலை
பொதுத்தேர்வு நாட்களில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறுவது, பெற்றோர் மற்றும் ஆசிரியர்களை கவலை அடையச் செய்துள்ளது.
பரிசு 30 ரூபாய்க்கு தருவதோ காசோலை; பெற்றோர், ஆசிரியர்கள் அதிருப்தி
பள்ளிகள் அளவில், நடத்தப்பட்ட போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு, 100 முதல் 30 ரூபாய் வரை வழங்கப்படும் பரிசுத்தொகை கட்டாயம் காசோலையாக மட்டுமே வழங்கவேண்டும் என்ற உத்தரவு பல்வேறு பெற்றோர்கள், ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
'
1,400 கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆசிரியர் பணியிடம் காலி
'கம்ப்யூட்டர் சயின்ஸ்' பாட ஆசிரியர் பணியிடங்கள்,1,400 அரசு பள்ளிகளில் காலியாக உள்ளதால், பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில், 2,600 அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. ஐ.டி., பிரிவு வளர்ச்சி தாக்கத்தால் அனைத்து பள்ளி மேல்நிலை வகுப்பிலும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவு உள்ளது. இந்த பாடப் பிரிவில் சேர, மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
தேர்வு அறைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த திட்டம்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், மார்ச், 5ம் தேதி, பிளஸ் 2 பொதுத் தேர்வு துவங்குகிறது. மார்ச், 31ல் நிறைவடைகிறது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச், 19ல் துவங்கி, ஏப்ரல், 10ம் தேதி நிறைவடைகிறது.
தேர்வுக்கு ஏற்ற உணவுகள் -டாக்டர்.கு. கணேசன்
பிளஸ்2 தேர்வுகள் இன்னும் சில நாட்களில் துவங்க உள்ளது. ஆண்டு முழுக்க கண்விழித்து படித்தாலும், தேர்வு காலங்களில் நமது படிப்பு, மனநிலை, உடல் நிலை, உணவு முறை போன்றவையும் நாம் பெறும் மதிப்பெண்ணில் முக்கிய பங்கு வகிக்கிறது.
சரியான வேலை; சரியான தேர்வு
இன்ஜினியரிங்,மருத்துவம், வங்கி, ஆசிரியர், சட்டம், மீடியா, அறிவியல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகள் உள்ளன. ஒவ்வொருவரும் தகுதி திறமைக்கேற்ப இந்த துறைகளை தேர்ந்தெடுக்கின்றனரா என்பது சந்தேகமே.
இந்தியாவில் 'பட்டம்' விட திட்டமிடும் கூகுள்
உலகின் மிகப் பெரிய இணையத் தேடல் பொறி நிறுவனமான கூகுள், 2016 வாக்கில், இந்தியாவில் பட்டம் விடப்போகிறது. இது சிறுவர்கள் காற்றுக் காலத்தில் விடும் சாதாரண பட்டம் அல்ல. மின் பட்டம். கூகுள் நிறுவனத்தின் அதிகம் வெளியில் அறியப்படாத ஒரு பிரிவு கூகுள் எக்ஸ். இது கூகுள் புதுமையான தொழில்களை துவக்குவதற்கென்றே இயங்கி வருகிறது. இதுவரை, 12 நிறுவனங்களுக்கும் மேல் கூகுள் விலை கொடுத்து வாங்கவும், அவற்றை கூகுளின் குடையின் கீழ் தனி நிறுவனங்களாக வளர்த்தெடுக்கவும் கூகுள் எக்ஸ் உதவுகிறது.
Saturday, February 14, 2015
ஏ.டி.எம். கார்டு இல்லாமலேயே நினைத்த நேரத்தில் பணம் எடுக்கும் 'புதிய வசதி!!!
ஏ.டி.எம். கார்டு இல்லாமலேயே நினைத்த நேரத்தில் பணம் எடுக்கும் 'கார்டுலெஸ் வித்டிராவல்' (Cardless cash withdrawal) என்ற புதிய வசதியை ஆரம்பக்கட்டமாக, நாடு முழுவதும் 1 லட்சம் ஏ.டி.எம்.கள் மற்றும் பி்.ஓ.எஸ்.களில் கொண்டுவர வங்கிகள் ஆர்வத்துடன் செயல்பட்டு வருகின்றன.
டெல்லி முதல்வராக அர்விந்த் கேஜ்ரிவால் பதவியேற்பு: ஊழல் இல்லாத மாநிலமாக டெல்லியை உருவாக்குவேன் என பேச்சு
பேஸ்புக் இலவச நெட் வசதி எதிரொலி: கட்டணங்களை குறைக்க செல்போன் நிறுவனங்கள் திட்டம்
பேஸ்புக் நிறுவனம் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துடன்இணைந்து இலவசமாக இணைய தள வசதியை வழங்க இருக்கிறது என்ற தகவல் வெளியானது.
சர்வதேச ஆசிரியர் விருது: இறுதிச்சுற்றில் இந்தியர்
அகமதாபாத்தைச் சேர்ந்த, ஆசிரியை கிரண் பிர் சேத்தி, சர்வதேச ஆசிரியர் விருதுக்கான இறுதிச்சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.
'அட்டஸ்டேஷன் வேண்டாம்; சுய ஒப்புதல் போதும்!'
''உறுதிமொழி பத்திரம், 'நோட்டரி பப்ளிக்' எனப்படும், வழக்கறிஞரிடம் இருந்து சான்று போன்றவற்றை கைவிட்டு, விண்ணப்பதாரரே சுய உறுதிமொழி அளிக்கும் நடைமுறையை ஏற்றுக் கொள்ள வேண்டும்; அதை பின்பற்ற வேண்டும் என, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது,''
1- 9 ஆம் வகுப்பு பாட நூல்களுக்கு ஒப்புதல் பெற விண்ணப்பிக்கலாம்
ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பாடப் புத்தகங்களுக்கு ஒப்புதல் பெற விரும்பும் தனியார் பதிப்பகங்கள் மாநிலப் பொதுப் பள்ளி கல்வி வாரியத்துக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்க வழக்கு: ஐகோர்ட் நோட்டீஸ்
தமிழகத்தில் ஐ.சி.எஸ்.இ., பாடத்திட்ட பள்ளிகளுக்கு கல்விக் கட்டணம் நிர்ணயிக்க தாக்கலான வழக்கில் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
குரூப் - 1 முதல்நிலை தேர்வு: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு
குரூப் - 1 முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்கள், சான்றிதழ்களின் நகல்களை அனுப்பி வைக்கும்படி, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்து உள்ளது.
பெங்களூரு: 10 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம்
''கர்நாடகா மாநிலத் தில் காலியாக உள்ள, 9,550 துவக்கப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் 1,137 உயர்நிலை பள்ளி ஆசிரியர்கள் நியமனத்துக்கு, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று, துவக்கக் கல்வித் துறை அமைச்சர், கிம்மனே ரத்னாகர் மேலவை யில் தெரிவித்தார்.
Friday, February 13, 2015
தினம் ஒரு அரசாணை!!
வருங்கால வைப்புநிதி மாதச்சந்தா எவ்வளவு வேண்டுமானாலும் பிடித்தம் செய்யலாமா???
அரசாணை எண்.461, நிதித்துறை நாள்.22.9.2009ன்படி அடிப்படை ஊதியம், தர ஊதியம், சிறப்புஊதியம், தனிஊதியம், அகவிலைப்படி ஆகியவற்றை சேர்த்து 12% தொகை குறைந்த பட்ச சந்தாவாக பிடித்தம் செய்திடவேண்டும். 12%க்கு மேலாக எவ்வளவு வேண்டுமானாலும் பிடித்தம் செய்திடலாம். மேலும் சந்தா தொகையை எந்த மாதத்திலும் உயர்த்திக் கொள்ளலாம். குறைக்க வேண்டுமெனில் மார்ச்சு மாதத்தில் குறைத்துக்கொள்ளலாம்.
அரசாணை எண்.461, நிதித்துறை நாள்.22.9.2009ன்படி அடிப்படை ஊதியம், தர ஊதியம், சிறப்புஊதியம், தனிஊதியம், அகவிலைப்படி ஆகியவற்றை சேர்த்து 12% தொகை குறைந்த பட்ச சந்தாவாக பிடித்தம் செய்திடவேண்டும். 12%க்கு மேலாக எவ்வளவு வேண்டுமானாலும் பிடித்தம் செய்திடலாம். மேலும் சந்தா தொகையை எந்த மாதத்திலும் உயர்த்திக் கொள்ளலாம். குறைக்க வேண்டுமெனில் மார்ச்சு மாதத்தில் குறைத்துக்கொள்ளலாம்.
சிறப்பு பட்டதாரி ஆசிரியர் 200 பேரை நியமிக்க ஆணை
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கு பாடம் சொல்லித்தரும் வகையில் புதிதாக 202 சிறப்பு பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
வாசித்தல் திறன் 2ம் கட்ட ஆய்வு
அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில், அரசு பள்ளி மாணவர்களின் "வாசித்தல் மற்றும் எழுதுதல்' திறன் குறித்த 2ம் கட்ட ஆய்வு, நடைபெற்று வருகிறது.
பிளஸ் 2 பொதுத்தேர்வில் எந்த பேனாவை பயன்படுத்த வேண்டும்?
பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் வினாத்தாளில் கருப்பு, நீல மை பேனாக்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்’ என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
கூடுதல் கட்டணம் வசூல்: 4 பள்ளிகளுக்கு நோட்டீஸ்
தமிழகத்தில் சில பள்ளிகள் கூடுதலாக கட்டணம் பெற்றுள்ளது தொடர்பாக 400க்கும் மேற்பட்ட புகார்கள் வந்தன. 2012ம் ஆண்டு முதல் நடத்தப்பட்ட விசாரணையில் 12 பள்ளிகள் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டது தெரியவந்தது.
மாணவர்களுக்கு வாகன வசதி: கல்வித்துறை ஏற்பாடு
மலை, வனம், எளிதில் செல்ல முடியாத பகுதி களில் உள்ள பள்ளிகளில், கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் சேர்ந்துள்ள, 12,295 மாணவர்களுக்கு, பள்ளி கல்வித்துறை வாகன வசதியை ஏற்படுத்தி உள்ளது.
Thursday, February 12, 2015
பிரார்த்தனை நேரங்களில் பள்ளிக்கூட மாணவர்கள் வலது கையை மார்பில் வைக்க வேண்டாம்: தமிழக அரசு விளக்கம்
தமிழ்நாட்டில் உள்ள சில அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்களில் பிரார்த்தனைநேரங்களில், மாணவர்கள் உறுதிமொழி எடுக்கும் போது, வலது கையை மார்பில் வைக்க சொல்லி கட்டாயப் படுத்துகிறதா? என்று முதல்-அமைச்சர் தனிப்பிரிவில் ஒருவர் விளக்கம் கேட்டிருந்தார்.
PGTRB: முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணி: பிப்.16, 17 இல் சான்றிதழ் சரிபார்ப்பு
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பிப்.16, 17 ஆம் தேதிகளில் மதுரையில் நடைபெறுகிறது.
நாடு முழுவதும், பின்தங்கிய மாவட்டங்களில் எல்.கே.ஜி. முதல் முதுகலை பட்டம் வரை ஒரே இடத்தில் படிக்கும் வசதி : பட்ஜெட்டில் அறிவிக்க மத்திய அரசு பரிசீலனை
நாடு முழுவதும், கல்விரீதியாக பின்தங்கிய மாவட்டங்களில், ஒரேவளாகத்தில் எல்.கே.ஜி. முதல் முதுகலை பட்டம் வரை படிக்கும் வசதியை அளிக்க மத்திய அரசுபரிசீலித்து வருகிறது.
கல்வி வளர்ச்சி நாள் பரிசாக 80 லட்ச ரூபாய் பள்ளிகளுக்கு ஒதுக்கீடு
கல்வி வளர்ச்சி நாள் பரிசாக, பள்ளிகளுக்கு 80 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15, கல்வி வளர்ச்சி
நாளாக, பள்ளிகளில் கொண்டாடப்படுகிறது. இதற்காக, 80 லட்சம் ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.
அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் 1,095 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்பும் பணியில் 6 பாடங்களுக்கான நேர்முகத்தேர்வு பிப்ரவரி 25-ம் தேதி நடைபெற உள்ளது.
தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) இருந்தும் அழைப்புக் கடிதத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர்- செயலர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு: மாணவர்களுக்கு அறிவுரை
'பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் வினாத்தாளில் கருப்பு, நீல மை பேனாக்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்' என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
28-ந் தேதி பட்ஜெட் : நாடு முழுவதும், பின்தங்கிய மாவட்டங்களில் எல்.கே.ஜி. முதல் முதுகலை பட்டம் வரை ஒரே இடத்தில் படிக்கும் வசதி : பட்ஜெட்டில் அறிவிக்க மத்திய அரசு பரிசீலனை
நாடு முழுவதும், கல்விரீதியாக பின்தங்கிய மாவட்டங்களில், ஒரேவளாகத்தில் எல்.கே.ஜி. முதல் முதுகலை பட்டம் வரை படிக்கும் வசதியை அளிக்க மத்திய அரசுபரிசீலித்து வருகிறது.