Ad Code

Responsive Advertisement

வாய்ப்பு ! : மக்கள் தொகையில் விடுபட்டவர்களுக்கு : மார்ச் 15 ஆதார் முகாமில் பங்கேற்கலாம்

மக்கள் தொகை கணக்கெடுப்பில் விடுபட்டவர்கள் மார்ச் 15க்குப் பின் மக்கள்தொகை பதிவேட்டில் பதிவு செய்து ஆதார் அட்டை பதிவு முகாமில்
பங்கேற்கலாம் என்று வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.

2011ல் மக்கள் தொகை கணக்கெடுப்பில் பதிவானவர்கள், கணக்கெடுப்பு சலானைக் கொடுத்து ஆதார் அட்டைக்கு போட்டோ எடுக்கும் முகாமில்பயோமெட்ரிக் பதிவுகளான கண் கருவிழிப்படலம், கைவிரல் ரேகை, போட்டோவை பதிவு செய்தனர்.இவர்களுக்கு ஆதார் அட்டை ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. தற்போது கணக்கெடுப்பில் பெயர் இருந்தும் பதிவு செய்யாதவர்களுக்காக கடந்த நவம்பர் முதல்,தாலுகா,நகராட்சி அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடக்கிறது. முறையான அறிவிப்பில்லாததால்,இதுவரை பதிவு செய்யாதவர்கள் பலர் முகாமிற்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.பதிவு செய்து ஆதார் அட்டை வராதவர்களும் மீண்டும் முகாமிற்கு வந்து செல்கின்றனர். முகாமில் அவர்களுக்கு சரியான விபரம் கூற தேவையான இன்டர்நெட்,சாப்ட்வேர் வசதி இல்லாமல், தனியார் பிரவுசிங் சென்டர்களுக்கு அனுப்பப்படுகின்றனர்.
வருவாய்த்துறையினர் கூறியதாவது: தற்போது கணக்கெடுப்பில் பதிவாகி,ஆதார் அட்டை முகாமில் பதிவு செய்யாமல் உள்ளவர்களுக்குமட்டுமே பதிவு நடக்கிறது. கணக்கெடுப்பில் விடுபட்டவர்களுக்கு மார்ச் 15க்கு மேல் மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவத்தில் பதிவு செய்து, அதன் பின்னர் முகாமில் பதிவு செய்யப்படும்.என்றனர். ஆதார் பதிவு முகாம் பணியாளர்கள் கூறுகையில்,"தற்போது புதியதாக " மேக்ஸ்' நிறுவனம் பதிவு பணிகளை மேற்கொள்கிறது. புதிய சாப்ட்வேர் மார்ச் 2வது வாரத்திற்குள் வந்த பின்னரே, விடுபட்டவர்களுக்கு பதிவு செய்ய முடியும்.தற்போது கணக்கெடுப்பில் பதிவாகி உள்ளவர்களுக்கு மட்டுமே "பயோ மெட்ரிக்' பதிவு நடக்கிறது. கடந்த ஆண்டு பதிவு செய்தவர்களில் கார்டு வராதவர்கள் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம். கார்டு வராதவர்களுக்கு "பயோ மெட்ரிக்" பதிவில் குறைபாடு இருக்கலாம். காயத்தால்,தேய்வால் ரேகை, அறுவை சிகிச்சை, முதுமை காரணமாக கருவிழிப்படலம் பதிவில் தெளிவில்லாமல் இருந்திருக்கலாம். விரைவில் "பெல்' நிறுவனத்தின் புதிய "சாப்ட்வேர்' மூலம் அவர்களுக்கும் மறுபதிவு முகாம் நடத்தப்படும். தற்போது பதிவு செய்பவர்களுக்கு 3 மாதத்தில் கார்டு தயாராகி விடும்,' என்றனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement