Ad Code

Responsive Advertisement

'அட்டஸ்டேஷன் வேண்டாம்; சுய ஒப்புதல் போதும்!'

''உறுதிமொழி பத்திரம், 'நோட்டரி பப்ளிக்' எனப்படும், வழக்கறிஞரிடம் இருந்து சான்று போன்றவற்றை கைவிட்டு, விண்ணப்பதாரரே சுய உறுதிமொழி அளிக்கும் நடைமுறையை ஏற்றுக் கொள்ள வேண்டும்; அதை பின்பற்ற வேண்டும் என, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது,''
என, மத்திய அமைச்சர், பா.ஜ.,வைச் சேர்ந்த ஜிதேந்திர சிங் கூறினார்.டில்லியில் நேற்று நடைபெற்ற, லஞ்சத்தை ஒழிப்பது தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்ற அமைச்சர் ஜிதேந்திர சிங், இவ்வாறு கூறினார்.மேலும் அவர், ''மத்திய அரசு, இந்த நடைமுறையை பின்பற்றி வருகிறது. மத்திய அரசின் இந்த கோரிக்கையை, சில மாநில அரசுகள் ஏற்றுக் கொண்டுள்ளன; சில, தயக்கம் காட்டியுள்ளன,'' என்றார்.இவர், மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, பென்ஷன் துறைகளின் இணையமைச்சராக உள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement