Ad Code

Responsive Advertisement

மாணவர்கள் சாதனையாளராக மாற பிரதமர் மோடி விருப்பம்.

தேர்வை சுமையாக கருதாமல் வெற்றிக்கு இலக்காக மனதில் கொள்ளவேண்டும் என ரேடியோ மூலம் பிரதமர் மோடி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.மன்கிபாத் என்ற நிகழ்ச்சி வாயிலாக ரேடியோ மூலம் பிரதமர் நரேந்திர மோடி மாதம் தோறும் பேசி வருகிறார். 

இன்று தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக பிரதமர் மோடி பேசியதாவது, மாணவர்கள் தேர்வை சுமையாக கருதாமால், வெற்றிக்கு இலக்காக மனதில் கொள்ள வேண்டும். தேர்வை எதிர்கொள்ள மாணவர்களுக்குவழிகாட்டியாக விளங்கும் ஆசிரியர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.படிபடி என்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு நெருக்கடி தராமல் , மற்றவர்களை விட நம் குழந்தைகள் சிறந்த படிப்பாளியாக வரவேண்டும் என்ற நோக்கத்தில் தங்கள் குழந்தைகளை பெற்றோர்கள் அணுக வேண்டும். தேர்வுக்கு தயாராக இருக்கும் மாணவர்களின் இலக்கும் சிந்தனையும் தெளிவாக இருக்க வேண்டும். குழந்தைகளை மற்றவர்களுடன் ஒப்பிடுவது அவர்களுக்கு நெருக்கடியை தரும். குடும்பத்தினர் தரும் நெருக்கடி குழந்தைகளுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் தேர்வு எழுதும் மாணவர்கள் அழுத்தத்திற்கு ஆளாக கூடாது. தேர்வில் தேர்ச்சி பெறுவது முக்கியம். ஆனால் இதனை சுமையாக கருதக்கூடாது. வாழ்க்கையில் போட்டி சிறந்ததாக அமையும்.

நாளையவாழ்க்கை சிறப்பாக அமைய இப்போதே இலக்கு நிர்ணயம் செய்ய வேண்டும். சில நேரங்களில் நமது நடவடிக்கைகள் குழப்பத்தை தரும். நமது சாதனைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். மாணவர்கள் சாதனையாளராக மாற வேண்டும் என விரும்புகிறேன். உங்களுடனே நீங்கள் போட்டியிடுங்கள். மற்றவர்களுடன் அல்ல. உங்களுக்கு சகோதரி இருந்தால், அவர் தாயாருக்கு உதவி செய்து கல்வி கற்பதை காணலாம் என கூறினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement