Ad Code

Responsive Advertisement

சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்ட 590 பேரின் பட்டியல் வெளியீடு!

உரிமையியல் நீதிபதி பதவிக்கு விண்ணப்பித்தவர்களில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்ட 590 பேரின் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:–

உரிமையியல் நீதிபதி பதவி தமிழ்நாடு மாநில நீதித்துறை பணியில் அடங்கிய உரிமையியல் நீதிபதி பதவிக்கான 162 காலி பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 1 மற்றும் 2–ந்தேதிகளில் எழுத்துத்தேர்வு நடைபெற்றது. அதில் 6 ஆயிரத்து 561 விண்ணப்பதாரர்கள் பங்கேற்றனர்.

விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தில் அளித்துள்ள தகுதிகள் மற்றும் விவரங்கள் ஆகியவற்றின் உண்மை தன்மையை அறியும் பொருட்டு சான்றிதழ் சரிபார்ப்பிற்காக 590 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.சான்றிதழ் சரிபார்ப்பு அவர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in–ல் வெளியிடப்பட்டுள்ளது. மார்ச் மாதம் 4–ந்தேதி சென்னை பிரேசர் பாலச்சாலையில் உள்ள தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் அவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி தொடங்கப்படும். விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் நாள், நேரம் குறித்த தகவல்கள் தனியே அனுப்பப்படும்.குறிப்பிட்ட நாளில் உரிய அசல் சான்றிதழ்களுடன் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ள தவறினால் அடுத்தகட்ட தெரிவு நிலைகளுக்கான தகுதியினை இழந்தவராகிறார். சான்றிதழ் சரிபார்ப்பிற்காக அனுமதிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளதால் மட்டுமே அடுத்தகட்ட நிலைக்கு உரிமை கோர இயலாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement