Ad Code

Responsive Advertisement

பொதுத்தேர்வை கண்காணிக்க 1 லட்சம் பேர் நியமனம் : பள்ளி கல்வித்துறை செயலாளர் தகவல்

பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வுகள் நேர்மையாகவும், முறைகேடு நடக்காமல் இருக்கவும் கல்வித் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக கண்காணிப்பு அலுவலர்கள், பறக்கும் படை உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு 1 லட்சம் பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பிளஸ் 2 தேர்வு மார்ச் 5ம் தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வு மார்ச் 19ம் தேதியும் தொடங்குகின்றன. இதையடுத்து, அனைத்து ஆய்வு அலுவலர்களுக்கான கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதற்கு பள்ளிக் கல்வி துறை அமைச்சர் கே.சி.வீரமணி, பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபீதா ஆகியோர் தலைமை தாங்கினர்.

இதில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், பள்ளி கல்வி துறை இயக்குநர்கள், தேர்வுத்துறை இயக்குநர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளின் ஆய்வாளர்கள், தேர்வுத்துறை மண்டல துணை இயக்குநர்கள், புதுச்சேரி இணை இயக்குநர், காரைக்கால் முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் பள்ளிக் கல்வி துறை செயலாளர் சபீதா பேசியதாவது, ‘‘பிளஸ் 2 தேர்வில் 8 லட்சத்து 43 ஆயிரத்து 64 பேர் பள்ளிகள் மூலம் தேர்வு எழுதுகின்றனர். 

பத்தாம் வகுப்பு தேர்வில் 10 லட்சத்து 72 லட்சத்து 691 பேர் பள்ளிகள் மூலம் தேர்வு எழுத உள்ளனர் என்று தெரிவித்தார். மேலும், பிளஸ் 2 தேர்வுக்கு 2,302 மேனிலைப் பள்ளிகளிலும், பத்தாம் வகுப்பு தேர்வுக்கு 3,298 பள்ளிகளிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வுப்பணிகளுக்காக சுமார் 1 லட்சம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர் என்றும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement