Ad Code

Responsive Advertisement

பெங்களூரு: 10 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம்

 ''கர்நாடகா மாநிலத் தில் காலியாக உள்ள, 9,550 துவக்கப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் 1,137 உயர்நிலை பள்ளி ஆசிரியர்கள் நியமனத்துக்கு, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று, துவக்கக் கல்வித் துறை அமைச்சர், கிம்மனே ரத்னாகர் மேலவை யில் தெரிவித்தார்.

கர்நாடகா மேலவை கேள்வி நேரத்தில், அமைச்சர் கிம்மனே ரத்னாகர் கூறியதாவது: துவக்கப் பள்ளி ஆசிரியர்களை நியமிப்பது தொடர்பாக, ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டது. விரைவில், பொதுத்தேர்வு நடத்துவதன் மூலம், ஆசிரியர்கள் நியமன செயல்பாடுகள் துவங்கப்படும். ஐதராபாத் - கர்நாடகா பகுதியில், '371ஜெ சட்டம்' தொடர்பாக, அடுத்த மாதம், 18ம் தேதி, விதிமுறை வகுக்கும் கால அவகாசம் முடிகிறது. அதன் பின், ஆசிரி யர்கள் நியமிப்பது தொடர்பான அறிவிப்பு வெளியாகும். பட்டப்படிப்பு, கல்லூரி களில் காலியாக உள்ள, 1,130 விரிவுரையாளர்கள் பதவிகளை நிரப்ப, அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அரசு துவக்கப் பள்ளிகளில், தற்போது, 16,732 பதவிகள் காலியாக உள்ளன. அதில், 9,511 பதவிகள் நிரப்பப்படும். மாநிலத்தில் உடற்பயிற்சி ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது; இந்த ஆசிரியர்களை நியமிக்க, அரசு முக்கியத்துவம் அளிக்கும். கணவன் அல்லது மனைவி ஒரே இடத்தில் பணியாற்றுவது தொடர்பாக, அரசு, விரைவில், அவசர சட்டம் கொண்டு வரும். இவ்வாறு, அவர் கூறினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement