Ad Code

Responsive Advertisement

அவசர உதவி '138' சேவையில் தெற்கு ரயில்வே துரிதம்

ரயில் பயணம் தொடர்பான இடர்பாடுகள் குறித்த புகார்களுக்கு 138 என்ற எண்ணை தொடர்பு கொள்ளும் வசதியை தெற்கு ரயில்வே துரிதமாக பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தது.

ரயில் பயணம் தொடர்பான இடர்பாடுகள், மருத்துவ அவசர உதவி, உணவுப் பொருட்கள் தொடர்பான புகார்களுக்கு 138 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். பாதுகாப்பு தொடர்பான அனைத்து புகார்களுக்கும் 182 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என நேற்று தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே இன்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:

2015-2016 ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவிப்பின்படி ரயில் பயணிகளின் வசதிக்காக அனைத்து இந்திய அளவிலான ஹெல்ப்லைன் எண் '138' சேவை தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட அனைத்து ரயில்வே கோட்ட வர்த்தக கட்டுப்பாட்டு அறைகளிலும் நிறுவப்பட்டுள்ளது.

சுகாதாரம், உணவு தரம், ரயில் பெட்டிகள் மேலாண்மை, மருத்துவ அவசர உதவி, ரயில்களில் வழங்கபப்டும் போர்வைகளின் தரம் தொடர்பான புகார்களை இந்த எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். பயணிகள் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement