Ad Code

Responsive Advertisement

10,12ம் வகுப்பு பொதுத்தேர்வு முன்னேற்பாடுகள் குறித்து தலைமை செயலாளர் ஆலோசனை

தமிழகம் முழுவதும், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 5ம் தேதியும், 10ம் வகுப்பு தேர்வு மார்ச் 19ம் தேதியும் தொடங்குகிறது. இதையொட்டி எடுக்கப்பட உள்ள முன்னேற்பாடுகள் குறித்து, சென்னை தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் ஞானதேசிகன் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்தில், அரசு ஆலோசகர்கள் ஷீலா பாலகிருஷ்ணன், ராமானுஜம், பள்ளி கல்வித்துறை செயலாளர் சபீதா, மின்சாரத்துறை செயலாளர் ராஜேஷ் லக்கானி, போக்குவரத்து துறை செயலாளர் பிரபாகர்ராவ் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் மையங்களில் செய்யப்பட வேண்டிய வசதிகள், தேர்வு மையங்களுக்கு அளிக்கப்பட வேண்டிய பாதுகாப்பு, விடைத்தாள்களை பாதுகாப்பாக கையாள்வது, மேலும், தேர்வு மையங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவது, முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஜெனரேட்டர் பயன்படுத்துவது,  மாணவ, மாணவிகள் தேர்வு எழுத வரும்போது கூடுதல் பஸ் வசதி செய்து கொடுப்பது, பள்ளி அருகேயே பஸ்களை நிறுத்தி இறக்கி விட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement