Posts

Showing posts from July, 2015

"டாக்டர்.அப்துல் கலாம்' அவர்களின் பிறந்தநாளை "இளைஞர் எழுச்சிநாள்" ஆக கொண்டாட முதலமைச்சர் செல்வி . ஜெயலலிதா அவர்கள் உத்தரவு - ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் "டாக்டர். அப்துல் கலாம் விருது" என்ற விருதும் வழங்கப்படும்

Image

TV Flash News: ஆசிரியர் கலந்தாய்வு மாறுதல் விண்ணப்பம் இன்று முதல்(31.07.15) விண்ணபிகலாம் தமிழக அரசு அறிவிப்பு

*ஆசிரியர் கலந்தாய்வு மாறுதல் விண்ணப்பம் இன்று முதல்(31.07.15) விண்ணபிகலாம் தமிழக அரசு அறிவிப்பு *மேல்நிலை,உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் முதன்மைக்கல்வி அலுவகத்தில் விண்ணப்பிக்க கடைசி நாள் 7.08.2015

ஆசிரியர்கள் மாறுதலுக்கு விண்ணப்பிக்க ஒரு வருடம் பணிபுரிந்திருந்தால் போதும்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, முதன்மை செயலாளர் த.சபீதா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு

தமிழ்நாட்டில் 35 ஆயிரம் தொடக்கப்பள்ளிகள், 10 ஆயிரம் நடுநிலைப்பள்ளிகள், 5,500 உயர்நிலைப்பள்ளிகள், 5,900 மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். 1 கோடியே 50 லட்சம் மாணவ-மாணவிகள் படிக்கிறார்கள்.

அகஇ-பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி வசதி அளித்தல் சார்ந்து மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள்

CLICK HERE-SSA-INCLUSION OF OUT OF SCHOOL CHILDREN AGENDA IN GRAMA SABHA 15.08.2015 REG...

"ICT"திட்டத்தில் ஆசிரியர்களுக்கு தேசிய விருது

தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கற்பித்தல் பணியில் சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களுக்கு தேசிய விருது விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. முதல்கட்ட ஆய்வுக்கு, 21 ஆசிரியர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். பள்ளிக்கல்வித்துறையின் கீழ், மாணவர்களுக்கு தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை சிறப்பாக செயல்படுத்தி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு நிபந்தனைகள்: கல்வித்துறை முடிவில் திடீர் மாற்றம்

பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் தொடர் போராட்டம் எதிரொலியால் பொதுமாறுதல் கலந்தாய்வில் இந்தாண்டு சேர்க்கப்பட்ட புதிய நிபந்தனைகளை தளர்த்திக்கொள்ள கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 19 கடைசி நாள்

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (சி.டி.இ.டி.) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்வுக்கு ஆகஸ்ட் 19}ஆம் தேதி வரை இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இந்திய ராணுவத்தில் சேர இன்று முதல் இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்

இந்திய ராணுவத்தில் சேருவதற்கு இணையம் மூலம் வெள்ளிக்கிழமை (ஜூலை 31) முதல் விண்ணப்பிக்கலாம்.இணையம் மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு ஆள்சேர்ப்பு முகாமில் பங்கேற்க அனுமதிக் கடிதம் அனுப்பப்படும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய ஏழு மாவட்டங்கள், புதுச்சேரி மாநிலத்தில் உள்ளவர்களும் ராணுவ ஆள் சேர்ப்பு முகாமில் பங்கேற்கலாம். இதற்கான தேர்வு வரும் செப்டம்பர் 4 முதல் 13 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

சித்தா, ஆயுர்வேத படிப்புக்குவிண்ணப்பிக்க இன்றே கடைசி

சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட, இந்திய மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள் என, அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், இந்திய மருத்துவ படிப்புகளுக்காக, ஆறு அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 336 இடங்கள், 21 சுயநிதி கல்லுாரிகளில், 1,143 இடங்கள் உள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பம் கடந்த, 24ம் தேதி வரை வழங்கப்பட்டது. மொத்தம் உள்ள, 1,479 இடங்களுக்கு இதுவரை, 3,850 பேர் விண்ணப்பித்துள்ளனர். 

அப்துல் கலாம் அடக்கம் செய்யபட்ட இடத்தில் கூட்டம் கூடமாக அஞ்சலி செலுத்திய பொதுமக்கள்

Image
12.15 மணிக்கு அப்துல் கலாமின் உடல் நல்லடக்கப் பணிகள் முடிந்தன. இதை யடுத்து உடல் அடக்கம் செய் யப்பட்ட இடத்தில் நிறைய மலர்கள் தூவினார்கள். அப் போது இஸ்லாமிய முறைப் படி அப்துல்கலாமின் உறவி னர்கள் பிரார்த்தனை செய் தனர்.

வருங்கால வைப்பு நிதி கணக்குடன் இணைப்பதற்காக, அரசு ஊழியர்கள் ஆதார் எண் சமர்ப்பிக்க வேண்டும்.

வருங்கால வைப்பு நிதி கணக்குடன் இணைப்பதற்காக, அரசு ஊழியர்கள் ஆதார் எண் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு இரண்டு மாதம் அவகாசம் எடுத்துக்கொள்ளலாம். வயதானவர்கள், மருத்துவ சிகிச்சை பெறுபவர்கள் மேலும் ஒரு மாத காலம் அவகாசம் எடுத்துக்கொள்ளலாம்' என்று, அந்த சுற்றறிக்கையில், கணக்குத்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

விபத்தில் சிக்குவோருக்கு உதவிசெய்ய 70,000 மாணவருக்கு முதலுதவி பயிற்சி

தமிழகத்தில், 70 ஆயிரம் மாணவர்களுக்கு, அவசரகால முதலுதவி பயிற்சி அளிக்கும் முகாம் துவங்கியது.இதுகுறித்து, தமிழ்நாடு எலும்பு, முடநீக்கியல் நிபுணர் சங்க மாநிலத் தலைவர் ராஜா ரவிவர்மா கூறியதாவது:இந்தியாவில், சாலை விபத்துகளால், ஒரு மணி நேரத்துக்கு, 16 பேர் மரணம் அடைகின்றனர். 

கலாம் பாடத்துடன் புதிய பி.இ., வகுப்பு துவக்கம் அண்ணா பல்கலை இணைப்பு கல்லூரிகள் ஏற்பாடு

அண்ணா பல்கலைக்கு உட்பட்ட, 534 இன்ஜினியரிங் கல்லுாரிகளில், ஆகஸ்ட், 3ம் தேதி, புதிய வகுப்புகள் துவங்க உள்ளன. முதல் நாளில், முன்னாள் ஜனாதிபதியும், அண்ணா பல்கலை முன்னாள் கவுரவ பேராசிரியருமான அப்துல் கலாமுக்கு அஞ்சலி மற்றும் அவரைப் பற்றி பாடம் நடத்தப்பட உள்ளது.

WHATSAPP புதிய VERSION DOWNLOAD WhatsApp 2.12.213

CLICK HERE TO DOWNLOAD THE NEW WHATS APP VERSION 2.12.213

வாட்ஸ் ஆப் அறிமுகப்படுத்தியிருக்கும் 3 புதிய வசதிகள் – ஆக்டிவேட் செய்யும் வழிமுறை!

பிரபல சமூக வலைத்தளமான வாட்ஸ் ஆப் 3 புதிய வசதிகளுடன் கூடிய அப்டேட்களை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வசதிகளை அப்டேட் செய்யப்பட்ட லேட்டஸ்ட் பதிப்பான V.2.12.194 -ஐ டவுண்லோடு செய்து பெறலாம்.

பார்வையற்றோர் காலிபணியிடங்களின் எண்ணிக்கை 14 ஆயிரம்

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பார்வையற்றோருக்கான காலிப் பணி யிடங்களின் எண்ணிக்கை 14 ஆயிரமாக உள்ளது என மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திரசிங் தெரிவித்துள்ளார். 

7th Pay Commission Likely to Hike Salaries By 40%: Credit Suisse

The 7th Pay Commission is likely to raise the salaries of government employees by up to 40 per cent, said Neelkanth Mishra, India equity strategist of Credit Suisse. The Pay Commission will submit its recommendations in October and it will be implemented by next year.

திங்கட்கிழமை பள்ளிகளின் காலை வழிபாட்டுமுறை அட்டவணை

Image

"அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" - இன் மாநிலத் தலைவர் தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களுடன் சந்திப்பு

Image
27/07/2015 அன்று மதுரை வந்திருந்த தொடக்கக்கல்வி இயக்குனர் திரு.இளங்கோவன் அவர்களை   "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" - இன் மாநிலத்  தலைவர் திரு.பாலமுருக  பாண்டியன்  அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அவ்வமயம் தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களுக்கு சால்வை அணிவித்து திரு.பாலமுருக  பாண்டியன்  அவர்கள் மரியாதையை அளித்தார்.    

தொடக்க/உயர்/மேல்நிலை பள்ளிகளின் மாதிரி கால அட்டவணை

Image

03.08.2015-வல்வில் ஓரி விழா-நாமக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் செயல்முறை

Image

“அப்துல் கலாம்” எழுதிய “அக்னி சிறகுகள்” தமிழில் படிக்க

CLICK HERE TO DOWNLOAD

ஒட்டுமொத்த தமிழகமும் கலாமுக்கு அஞ்சலி

Image
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், இறுதி சடங்கு, இன்று நடைபெறுவதையொட்டி, தமிழகத்தில், இன்று கடைகள் மூடப்படுகின்றன; லாரிகள் ஓடாது. சினிமா காட்சிகள் ரத்து என, யார் நிர்பந்தமும் இல்லாமல், அனைத்து அமைப்பினரும், தானாக முன்வந்து அறிவித்துள்ளனர். அரசு முழு விடுமுறை அறிவித்துள்ளது. பள்ளி, கல்லுாரிகள் இயங்காது.

சி.பி.எஸ்.இ.,க்கு இணையாக அரசு பள்ளிகளில் சிறப்பு பாடத்திட்டம்

மத்திய இடைநிலைக் கல்வி அமைப்பான சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் போல், தனியார் பள்ளிகளுக்கு நிகராக, சமச்சீர் கல்வியில், சிறப்புப் பாடங்களுக்கான, 'சிலபஸ்' தயாரிக்கப்படுகிறது. ஐந்து குழுக்கள் இந்த பணிகளில் ஈடுபட்டுள்ளன.

குரூப் - 2 'கீ ஆன்சர்' குறித்து ஆக., 4க்குள் கருத்து சொல்லலாம்

அரசுத் துறைகளில் காலியாக உள்ள குரூப் - 2 பதவிகளான, துணை வணிகவரி அதிகாரி, லஞ்ச ஒழிப்பு போலீஸ் சிறப்பு உதவியாளர் உட்பட, 1,241 காலியிடங்களுக்கு, கடந்த 26ம் தேதி முதல்நிலை எழுத்துத் தேர்வு நடந்தது. 4 லட்சத்து, 55 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர்.

விடுமுறை நாளில் கூடுதல் வேலை: கலாம் வேண்டுகோள் நிறைவேற்றம்

முன்னாள் ஜனாதிபதிஅப்துல் கலாமின் வேண்டுகோளை ஏற்று, கேரளாவிலுள்ள பல்வேறு துறைகளை சேர்ந்த தொழிலாளர்கள், விடுமுறை நாட்களிலும், கூடுதல் நேரம் வேலை செய்ய ஆரம்பித்துள்ளனர்.

சென்னை அண்ணா பல்கலை இன்ஜி., கவுன்சிலிங் ரத்து

பி.இ., - பி.டெக்., படிப்புக்கான தொழிற்கல்வி கவுன்சிலிங், ௩௦ம் தேதி நடக்கும் என, அண்ணா பல்கலை அறிவித்து இருந்தது.இன்ஜி., பொது கவுன்சிலிங் நேற்று முன்தினம் முடிந்தது. இதைத் தொடர்ந்து, 3,000 மாணவர்களுக்கான தொழிற்கல்வி கவுன்சிலிங் நேற்று துவங்கியது.

தமிழகத்தில் 7,243 நர்ஸ் தேர்வு:தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்த, தமிழகத்தில், 7,243 நர்ஸ் தேர்வு அறிவிப்புக்கு, தடை விதிக்க, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. அரசு பயிற்சி பெற்ற மற்றும் பயிற்சி செவிலியர் சங்கத்தின் தலைவர், பூமி, தாக்கல் செய்த மனு:

30/07/2015 அன்று நடைபெற இருந்த ஆதி திராவிட நல பள்ளிகளின் பொதுமாறுதல் கலந்தாய்வு தேதிகள் மாற்றம் செய்து உத்தரவு

Image

மேதகு அப்துல் கலாம் மறைவு - 30/07/2015 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை - கல்வித்துறை செயலாளர் திருமதி.சபீதா அவர்களின் செயல்முறைகள்

Image

பள்ளி வேலை நாட்கள் - திருப்பூர் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரின் செயல்முறை ஆணை.

Image

கற்பித்தலில் அலட்சியம்: இடைநிலை ஆசிரியர் சஸ்பெண்ட்

Image

ஆசிரியர்கள் பொது மாறுதல் - ஓராண்டு பணிபுரிந்தாலே கலந்து கொள்ளலாம் என அரசாணை விரைவில் வெளிவரலாம்.

Image

தொடக்கக்கல்வி - "Enhancing Understanding of Indigenous Traditions " என்ற தலைப்பில் கவ்காத்தியில் மத்திய அரசின் சார்பில் நடைபெறும் பயிற்சி வகுப்புகளுக்கு தமிழகத்திலிருந்து தேர்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்களின் பட்டியல் வெளியீடு - அவர்களை பணியிலிருந்து விடுவிக்க சம்பந்தப்பட்ட மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு இயக்குனர் உத்தரவு

Image

TNPSC GR.II EXAM(26/07/2015) - OFFICIAL ANSWER KEY PUBLISHED BY TNPSC

CLICK HERE FOR GENERAL TAMIL CLICK HERE FOR GENERAL ENGLISH

PLEASE STOP SHARING THIS PICTURE

Image

பள்ளிக்கல்வி - தகவல் தொழில் நுட்பத்தை பள்ளியில் சிறப்பாக பயன்படுத்தும் ஆசிரியர்களுக்கு "ICT" திட்டத்தின் கீழ் தேசிய விருது - ஆசிரியர்களின் பட்டியல் வெளியிட்டு இயக்குனர் செயல்முறைகள்

Image

மாணவர்களும் கலாமும்

Image
விஞ்ஞானி, ஏவுகணை மனிதன், ஜனாதிபதி உள்ளிட்ட பல பெருமைகளுக்கு கலாம் சொந்தக்காரர் என்பதை மறுப்பதற்கில்லை. இருப்பினும் மாணவர்களுடன் உரையாட வேண்டும் என்பதே இவரது விருப்பமான பணியாக இருந்தது என சொல்லாம். இந்தியாவில் பல்வேறு மொழி, இனம் இருந்தாலும் தேசம் முழுவதும் உள்ள மாணவர்களின் ரோல்மாடலாக தன்னை உயர்த்திக் கொண்டார். 

தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை

Image
குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் இறுதிச் சடங்கு வியாழக்கிழமை (ஜூலை 30) நடைபெறுவதை ஒட்டி, தமிழகத்தில் அன்றைய தினம் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை ஆளுநர் கே.ரோசய்யாவின் அனுமதியுடன் பொதுத் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

அரசு ஊழியர்களுக்கு ஆதார் அட்டை இனி, கட்டாயம்! 60 நாட்களுக்குள் எடுக்க காலக்கெடு

Image
'அரசு ஊழியர்கள் அனைவரும், கட்டாயம் ஆதார் எண் சமர்ப்பிக்க வேண்டும்' என்று, தமிழக அரசின் கருவூல கணக்குத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

தமிழகத்தில் ஒரு வாரம் துக்கம்அரை கம்பத்தில் தேசியக்கொடி

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைவையொட்டி, தலைமைச் செயலகம் உட்பட, அனைத்து அரசு அலுவலகங்களிலும், நேற்று தேசியக் கொடி, அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. 'ஒரு வாரம் துக்கம் அனுஷ்டிக்கப்படும்' என, தலைமைச் செயலர் ஞானதேசிகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

எங்கள் இதயங்களில் பிறந்திருக்கிறார்: மாணவர்கள் உருக்கம்

Image
குழந்தை உள்ளம்; கருணை பார்வை, கள்ளம் கபடம் அறியா தங்கத் தலைவன் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமை இழந்து கண்களில் செந்நீர் வடிய செய்வதறியாமல் திகைத்து நிற்கிறது மாணவர் உலகம்.மண்ணை விட்டு பிரிந்தது அவர் உயிர்தானே தவிர, அவர் உணர்வுகளுக்கு என்றுமே இறப்பில்லை. ஆம், கலாம் இறக்கவில்லை; ஒவ்வொரு இந்திய இளைஞர்களின் இதயங்களில் தன்னம்பிக்கையாய் பிறந்திருக்கிறார் என்கிறார்கள் பள்ளி, கல்லுாரி மாணவர்கள். கலாமின் கனவுகளை நிறைவேற்றுவோம் என்ற உறுதியுடன் பேசுகிறார்கள்...

CENTRAL TEACHER ELIGIBILITY TEST (CTET) – SEPT 2015

CLICK HERE-Advertisement Notice IMPORTANT DATES:  Submission of On-line application 30.07.2015 to 19.08.2015 Last date for Online Submission of application 19-08-2015  Last date for payment of fees Through E-Challan or Debit/Credit Card by  the candidate 20-08-2015 (before 03:30 PM) Period for On-line Corrections in Particulars (No correction will be allowed in any particulars after this date) 

விரைவில் அமலுக்கு வருகிறது புதுத்திட்டம் - ஆதார் அட்டை நகல் வழங்காத போலீசாருக்கு சம்பளம் கட்

ஆதார் அட்டையின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசின் உதவிகள், சலுகைகள் பெறுவது உள்ளிட்ட அனைத்துக்கும்  முக்கியமானதாக உள்ளது. கைரேகைப் பதிவுகள், கருவிழிப் பதிவு, பிறந்த தேதி போன்ற நிரந்தர தகவல்கள் இருப்பதால் அதை அடிக்கடி மாற்ற முடியாது.  குற்ற வழக்குகளில் சிக்கியவர்களை விரைவில் கண்டுபிடிக்க போலீசாருக்கு இது மிகவும் உதவிகரமாக இருக்கும். 

அஞ்சலகங்களில் ஓய்வூதியம் பெற ஆதார் எண் அவசியம்

அஞ்சலகங்கள் வாயிலாக ஓய்வூதியம் பெறுபவர்கள் ஆதார் அடையாள எண்ணைத் தெரிவிக்குமாறு அஞ்சல் துறைக் கேட்டுக் கொண்டுள்ளது. இதுகுறித்து சென்னை நகர மண்டல அஞ்சல் துறைத் தலைவர் மெர்வின் அலெக்ஸாண்டர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை நகர மண்டல அஞ்சல் வட்டத்தில் 20 தலைமை அஞ்சலகங்கள், பல்வேறு துணை அஞ்சலகங்கள் செயல்படுகின்றன.

விருப்ப ஓய்வுக்கு பின் பணியாற்றக்கூடாது - உயர்நீதிமன்றம்

 'விருப்ப ஓய்வு பெற்றபின் வேறு மருத்துவமனையில் பணியாற்றினால் அரசு நடவடிக்கை எடுக்கலாம்' என அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் தொடர்ந்த வழக்கில், சுகாதாரத் துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

30-ஆம் தேதி அரசு பொதுவிடுமுறை அறிவிப்பு!!!

கலாமின் இறுதிச் சடங்கை முன்னிட்டு "கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு 30-ஆம் தேதி பொது விடுமுறை"----/தமிழக அரசு அறிவிப்பு!!!

கலாம் இறுதிசடங்கு : 30- ம் தேதி அரசு பொதுவிடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு

Image

ஆசிரியர் தகுதித் தேர்வு எப்போது நடத்தப்படும்?

மத்திய அரசின் கட்டாய இலவச கல்வி உரிமை சட்டத்தின்படி, ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரையில் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்ட தாரி ஆசிரியர் பணியில் சேர வேண்டுமானால் ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அப்துல் கலாமுக்கு ஓர் ஆசிரியரின் அஞ்சலி

Image
" கனவு காண புறப்பட்ட நீவீர்..விழித்தெழுவது எப்போது? " என் ஒளியே - வாழ்வின் வழியே ஏவு க ணையின் நாயகரே ! இளைஞர்களின் போதகரே !! வெண்தோகை தலையில் போர்த்தி- என்றும் நாவால் தமிழை வாழ்த்தி நீர் படைத்த அக்கினி சிறகுகள் - இன்று சிறகுடைந்து போனதுவே, கனவு காணச் சொன்னாய் - கண்கள் மூடினேன் கனவு முழுக்க நீயே தோன்றினாய். என்னை கனவு காணச் சொல்லிவிட்டு என் ஒளியே வாழ்வின் வழியே - நீர் உறங்கச் சென்று விட்டாய் - நிரந்திரமாக, என்றும் கனவோடும், உம் நினைவோடும் வாழும் ( இல்லை..இல்லை ) வாடும்... - தெரு விளக்கு கோபிநாத் 7598479285

SSA-மேற்பார்வையாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு நிரந்தர பயணப்படி 01.04.2015 முதல் உயர்த்துதல் ஆணை !!

முன்னாள் குடியரசு தலைவர் A.P.J அப்துல் கலாம் மறைவு - தமிழக முதல்வர் ஜெ . ஜெயலலிதா இரங்கல்

Image

அப்துல் கலாமின் 10 தன்னம்பிக்கை வரிகள்

Image
" இமயத்தின் உச்சியை எட்டித் தொடுவதாயினும் சரி அல்லது உன் வாழ்க்கைப் பணியின் உச்சத்தை அடைவதாயினும் சரி, மேலே ஏறிச் செல்ல ஒருவருக்கு மிக்க மனவுறுதி தேவைப்படுகிறது. " ஏ. பி. ஜெ. அப்துல் கலாம் (A. P. J. Abdul Kalam) என அழைக்கப்படும் ஆவுல் பகீர் ஜெய்னுலாப்தீன் அப்துல் கலாம் (Avul Pakir Jainulabdeen Abdul Kalam) (பிறப்பு - அக்டோபர் 15, 1931, ராமேஸ்வரம்) இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆவார். இவர் ஒரு சிறந்த விஞ்ஞானியும் பொறியியலாளரும் ஆவார். இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO), பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (DRDO) ஆகியவற்றின் பணிகளில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

FLASH NEWS : இன்று பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் - விடுமுறை இல்லை - பள்ளிக்கல்வி இயக்குனர் திரு.கண்ணப்பன்

இன்று பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என பள்ளிக்கல்வி இயக்குனர் திரு.கண்ணப்பன் தெரிவித்துள்ளார். தனியார் பள்ளிகள் தங்களின் சுய விருப்பத்தின் பேரில் விடுமுறை அளித்துள்ளன.

'ஆசிரியர் பணியை நேசித்தவர்'

Image
தமிழ்நாடு கல்வியியல் பல்கலை முன்னாள் துணைவேந்தர் விஸ்வநாதன்:வரும், 2020ல், இந்தியாவை வல்லரசாக்க வேண்டும் என்ற கொள்கையோடு, இளைஞர்களை உருவாக்கி கொண்டிருந்தார். இப்போது அவரது இழப்பு ஈடுகட்ட முடியாதது. பொக்ரானில் அணுகுண்டு சோதனை செய்த போது, உலகமே அவரை பார்த்து வியந்தது.அறிவியல் மட்டுமல்லாமல், கல்வி, பக்தி மீது அதிக நம்பிக்கை உள்ளவர். பேசும் இடங்களில் கூட பகவத் கீதை, குரான், பைபிளில் உள்ள கருத்துக்களை எடுத்துரைப்பார். அனைத்து இளைஞர் மனதிலும் நீங்கா இடம் பெற்றவர்.

பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை தற்போதுவரை உறுதிபடுத்தவில்லை தமிழக அரசு.

தினமணி மற்றும் மாலைமலர் நாளிதழில் நேற்றிரவு விடுமுறை செய்தி அறிவிப்பு வெளியிடப்பட்டது.அந்த செய்தி தற்போதுவரை தமிழக அரசால் உறுதிபடுத்தவில்லை.

ஆசிரியர் இடமாறுதல் விதிமுறைகளை மாற்ற திட்டம் 'கவுன்சிலிங்' தேதி அறிவிப்பு திடீரென தள்ளிவைப்பு.

இடமாறுதல், 'கவுன்சிலிங்' விதிமுறை களுக்கு, ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், கவுன்சிலிங் தேதி அறிவிப்பது, திடீரென தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

ஆசிரியர்களுக்கான பணியிடமாறுதல்: 3 ஆண்டுகள் நிபந்தனையை குறைக்க ஆலோசனை.

தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களுக்கான பணியிடமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க அவர்கள் ஒரே பள்ளியில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும் என்ற நிபந்தனையை மாற்றுவது தொடர்பாக தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. 

Adi Dravidar and Tribal Welfare Department online counselling for Teachers Transfers and postings

CLICK HERE - ADW GENERAL COUNSELLING ANNOUNCEMENT

தொடக்க கல்வியில் 50:50 முறை மீண்டும் வருமா: ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு.

தமிழக அரசு நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்விற்கு எற்கெனவே நடைமுறையில் இருந்த '50 சதவீதம் பதவி உயர்வு; 50 சதவீதம் நேரடி நியமனம்' முறை பின்பற்ற வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர். 

நினைவுத் திறனை அதிகரிக்கிறதா ஆழ்ந்த இரவு தூக்கம்?

Image
இரவு தூக்கத்தை ஏன் தவிர்க்க கூடாது? என்பதற்கு சொல்லப்படும் பல காரணங்களுடன் புதிய காரணம் ஒன்றும் சேர்ந்துள்ளது. புதிய ஆய்வு ஒன்றின் படி ஆழ்ந்த இரவு தூக்கம் மனிதர்களின் நினைவுத் திறனை அதிகரிப்பதாக தெரியவந்துள்ளது.

சென்னை கணித அறிவியல் நிலையத்தில் உதவித்தொகையுடன் பயிற்சி

இந்திய அரசின் அணுசக்தி துறையின்கீழ் சென்னையில் செயல்பட்டு வரும் கணித அறிவியல் கல்வி நிறுவனத்தில் (The Institute of Mathematical Science)  ஒரு வருட Administrative Trainees பணியிடங்களுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு 2013-14 மற்றும் 2014-15-ம் கல்வி ஆண்டுகளில் படித்து முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஏ.பி.ஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு

Image
இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் நம் எல்லோருக்கும் தெரிந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை பற்றி மேலும் தெரிந்துகொள்ள மேலும் படியுங்கள்.

"அப்துல்கலாம்"‬ என்றொரு தமிழன் - வாழ்க்கையும் கல்வியும்...

Image
              

FLASH NEWS:-.....முன்னாள் குடியரசுத் தலைவர் "அப்துல் கலாம்" மாரடைப்பால் மரணம்!!!

Image
முன்னாள் குடியரசுத் தலைவர் "அப்துல் கலாம்" மாரடைப்பால் மரணம்!!! 

DEE - PAY AUTHORIZATION FOR 1610 SEC.GR .TEACHERS

Image

அகஇ - மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வாயிலாக பள்ளிகளில் கழிவறைகள் கட்டிதருதல் சார்ந்து மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள்....

Image

TNPSC GROUP - II EXAM (26/07/2015) - TENTATIVE ANSWER

CLICK HERE - MAMALLAN IAS ACADEMY ANSWER KEYS CLICK HERE - AASEAN VISAC FREE COACHING CENTRE ERODE CLICK HERE - GK ANSWER KEY BY MINERVA STUDY CENTRE CLICK HERE - GENERAL TAMIL ANSWERS BY VIDIYAL CLICK HERE - ANSWER KEYS BY VIDIYAL STUDY CENTRE CLICK HERE - ANSWER KEYS பொதுத்தமிழ் விடைகள் CLICK HERE - ANSWER KEYS BY APPOLO STUDY CENTRE 

இடமாறுதல் கவுன்சலிங் நெறிமுறைகளில் மாற்றம்: ஆசிரியர்கள் எதிர்ப்பு எதிரொலி

ஆசிரியர்களின் எதிர்ப்பால் இடமாறுதல் கவுன்சலிங் நெறிமுறைகளை  மாற்ற கலவித்துறை முடிவு செய்துள்ளது. இதைதொடர்ந்து  ஆகஸ்ட் முதல் வாரத்தில் கலந்தாய்வு நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

தொடக்கக் கல்வி - 2012ல் ஆசிரியர் தகுதி தேர்வு மூலம் நியமனம் பெற்றவர்களுக்கு தர எண் அடிப்படையில் பதவி உயர்வு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது என RTIல் தகவல்

Image

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: சென்னையில் 29-இல் ஆலோசனை

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உள்ளிட்டவை குறித்து விவாதிப்பதற்காக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் கூட்டம் சென்னையில் புதன்கிழமை (ஜூலை 29) நடைபெற உள்ளது.

மதுவின் தீமைகள்: மாணவர்களுக்கு அறிவுறுத்த கல்வித்துறை உத்தரவு

தமிழகத்தில் பள்ளி மாணவர்களிடம் பரவும் மது குடிக்கும் கலாச்சாரத்தை கட்டுப்படுத்த பள்ளி கல்வித்துறை அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில், பள்ளி மாணவர்கள், மாணவிகள் பள்ளி வளாகம் மற்றும் பொது இடங்களில் மது அருந்துவது ரகளை செய்வது போன்ற அநாகரீக செயல்களில் ஈடுபடுகின்றனர்.

தமிழகத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் 37 ஆயிரம் பேர்!

தமிழகத்தில் 37,500 குழந்தைகள் பள்ளி செல்லாமல் உள்ளது தெரியவந்துள்ளது.  அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டம் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி செல்லாத குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு கடந்த ஏப்ரல் மாதத்தில் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் 37,500 பள்ளி செல்லாக் குழந்தைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, இந்தக் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கும் பணிகள் இப்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

உதவி பேராசிரியர் நியமிக்க உயர் நீதிமன்றம் தடை

உதவிப் பேராசிரியர் நியமனத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த சங்கீதா, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:-

முதல்வர் தனிப்பிரிவுக்கு மனு எதிரொலி : ஓவியம், தையல் பாடங்களுக்கு புதிய பாடத்திட்டம் தயாரிக்க குழு அமைப்பு

ஓவியம், தையல் உள்ளிட்ட சிறப்பு பாடங்களுக்கு புதிய பாடத்திட்டம் தயாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு நாளை தொடங்கி 3  நாட்களில் பாடத்திட்டம் தயாரிக்க உள்ளது. ஓவியம், தையல், உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பு பாடங்களுக்கு இதுவரை சரியான பாடத்திட்டம் இல்லை. இது குறித்து மேற்கண்ட பாட ஆசிரியர்கள்  முதல்வர் தனிப்பிரிவுக்கு மனு கொடுத்தனர். 

பொதுத்தேர்வுக்கு பெயர் பட்டியல் பிளஸ்2 மாணவர்கள், பெற்றோரிடம் உறுதிமொழிப்படிவம் வாங்க வேண்டும்: தேர்வுத்துறை உத்தரவு

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் நடக்கும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ,  மாணவியர் தேர்வு எழுதி வருகின்றனர். தேர்வுக்கு முன்னதாக பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியரின் பெயர், பிறந்த தேதி, பெற்றோர் பெயர்,  உள்ளிட்ட சரியான தகவல்களை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் சேகரித்து தேர்வுத்துறைக்கு அனுப்புவார்கள். 

ஆசிரியர்களுக்கு பயிற்சி கட்டாயம்:தற்செயல் விடுப்புக்கு அனுமதி மறுப்பு.

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், ஆசிரியர்களுக்கு நடத்தப்படும் பயிற்சி நாட்களில் தற்செயல் விடுப்பு எடுக்க அனுமதி மறுத்து, மாநில திட்ட இயக்குனர் எச்சரித்துள்ளார். தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர்களுக்கு பல்வேறு விதமான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இப்பயிற்சிகளுக்காக மட்டும், கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்படுகிறது.

பள்ளி வாகனங்கள் பராமரிப்பை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு

தனியார் பள்ளி வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தப்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.  தமிழகத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு அருகில் 1,101 சாலை விபத்துகள் நடைபெற்றுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இதையடுத்து, பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையின் விவரம்:

கல்வி உதவித் தொகை பெற்றுத் தருவதில் தனியார் மெட்ரிக். பள்ளி நிர்வாகங்கள் அலட்சியம்

சிறுபான்மை இன மாணவர்களுக்கு அரசின் கல்வி உதவித் தொகையை பெற்றுத் தருவதில் தனியார் மெட்ரிக். பள்ளிகள் அலட்சியம் காட்டி வருவதாக பெற்றோர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.

"80 சதவீதத்தினருக்கு ஹெபடைட்டிஸ் - சி அறிகுறிகளே தெரியாது'

ஹெபடைட்டிஸ் சி வைரஸ் பாதித்தவர்களில் 80 சதவீதம் பேருக்கு 6 மாதங்களுக்குப் பிறகுதான் நோய்க்கான அறிகுறிகளே தென்படும் என டாக்டர் பாசுமணி தெரிவித்தார்.

பி.இ., - பி.டெக்., படிப்புகளுக்கு ஆக., 1ல் 2ம் கட்ட கவுன்சிலிங்

தமிழகத்தில், பி.இ., - பி.டெக்., படிப்புகளுக்கு காலியாக உள்ள இடங்களை நிரப்ப, இரண்டாம் கட்ட கவுன்சிலிங், ஆகஸ்ட், 1ம் தேதி நடக்கிறது. அண்ணா பல்கலைக் கழகத்துக்கு உட்பட்ட, 530க்கும் மேற்பட்ட இன்ஜி., கல்லுாரி களில், பி.இ., - பி.டெக்., படிப்பு களுக்கான பொது கவுன்சிலிங், நாளை முடிகிறது.மொத்தமுள்ள, 2 லட்சத்து, 5,000 இடங்களில், நேற்று வரை, 94 ஆயிரம் இடங்கள் நிரம்பின.

பள்ளிக்கல்வி - அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் 29.07.2015 அன்று சென்னையில் நடைபெறவுள்ளது.

CLICK HERE - DSE - ALL CEO / DEOs MEETING WILL BE HELD ON 29.07.2015 AT CHENNAI REG PROC

மெக்ஸிகோவில் நடைபெறும் அறிவியல் மாநாட்டுக்கு கரூர் அரசு பள்ளி தேர்வு

Image
குஜராத் மாநிலத்தில் உள்ள டிசைன் பார் சேஞ்ச் என்ற தனியார் நிறுவனம் சமூகத்திற்கு பயன்படக்கூடிய வகையிலான எளிமையான திறன் போட்டிகளை ஆண்டுதோறும் நடத்தி பள்ளிகளையும், மாணவ, மாணவிகளையும் அடையாளம் காட்டி வருகிறது.  

மின் கட்டணம் கணக்கிடும் முறை நாம் தெரிந்து கொள்ளவேண்டிய ஓன்று !!

Image
வீட்டு இணைப்புகளுக்கானது:- முதல் நிலை:- 1-100 யூனிட் வரை ரூபாய் 1.00 நிலைக்கட்டணம் இல்லை. (நீங்கள் 100 யூனிட்டுக்குள் எவ்வளவு உபயோகித்தாலும் ஒரு யூனிட்டுக்கு ஒரு ரூபாய் மட்டும் தான். கூடுதலாக எந்த கட்டணமும் இல்லை.) —————————————

மத்திய அரசின் புதிய திட்டம்: இனி அரசு பள்ளி மாணவர்களும் இங்கிலிலீஷில் பேசலாம்!

Image
31 ஆயிரம் அரசு பள்ளி மாணவர்கள் ஆங்கிலம் பேசுவதற்கு பயிற்சியை அளிக்கிறது "கரடி பாத்' என்கிற கல்வி நிறுவனம். இதன்மூலம் இனி அரசு பள்ளி மாணவர்களும் ஆங்கிலத்தில் கலந்துரையாடும் அரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் கான்வென்ட் பள்ளிக் குழந்தைகளைப் போல தங்களது குழந்தைகளும் இனி ஆங்கிலத்தில் பேசும் என்ற நம்பிக்கை ஏழை பெற்றோருக்கு ஏற்பட்டுள்ளது. 

ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய வாய்ப்பு! தபால் மூலமும் விண்ணப்பிக்கலாம்

Image
"ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை, "ஆன்-லைன்' வாயிலாக திருத்த முடியாதவர்கள், தபால் மூலமாக அனுப்பி, திருத்தம் செய்யலாம்' என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

"CRC" எஸ்கேப் ஆசிரியர்களுக்கு ஆப்சென்ட் எச்சரிக்கை

Image

பணிநிரவல் ஆசிரியர்கள் எதிர்ப்பு

முந்தைய ஆண்டு மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில், உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்ய, ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஒவ்வொரு ஆண்டும் அரசு மற்றும் உதவிபெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஆக., 1 மாணவர் வருகை அடிப்படையில் அடுத்த ஆண்டிற்கான பணியிடங்கள் கணக்கிடப்படுகின்றன. இந்த பணியிடங்கள் அடிப்படையில் உபரியாக உள்ள ஆசிரியர்கள் மற்ற பள்ளிகளுக்கு பணி நிரவல் செய்யப்படுகின்றனர்.

அரசு பள்ளி பராமரிப்பு நிதியில் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்க உத்தரவு

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்கும் பராமரிப்பு நிதியில், முழு சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு, அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,) மூலம் பள்ளி மானிய, பராமரிப்பு நிதி வழங்குகிறது. 

நான்காம் வகுப்பு ஆங்கிலம், முதல் பருவம், செயல் வழிக்கற்றல் அட்டைகளில் மாணவர்கள் வாசிக்க வேண்டிய பகுதிகள்.

Image
இதை நகல் எடுத்து ஒவ்வொரு மாணவனின் கையில் கொடுத்து வீட்டிலும் , பள்ளியிலும் பன்முறை வாசிக்க செய்வதின் மூலம் கற்றவை மறக்காமல் இருப்பதுடன், மாணவர்களின் ஆங்கில வாசிப்பு திறனும் மேம்படும்.

ஓவியம், தையல் பாடம் ஆய்வு செய்ய சிறப்பு குழு

அரசு பள்ளிகளில் ஓவியம், தையல், உடற்கல்வி படிப்புகளுக்கான, பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க, பள்ளிக்கல்வித் துறையில், குழு அமைக்கப்பட்டுள்ளது.அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், ஓவியம், தையல், இசை மற்றும் உடற்கல்வி படிப்புகளுக்கு, அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில், 20 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, பாடம் நடத்துவது குறித்து, சில ஆண்டுகளாக, எந்த உத்தரவும் வழங்கப்படவில்லை.

மாவட்டந்தோறும் உள்ள பள்ளிகளை கண்காணிக்க இணை இயக்குனரை தலைவராக கொண்ட கண்காணிப்பு குழு

இணை இயக்குனரை தலைவராக கொண்ட கண்காணிப்பு குழு அமைத்து, மாவட்டந்தோறும் உள்ள பள்ளிகளை கண்காணிக்கவும், பின்தங்கிய பள்ளிகளில் முன்னேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

பணத்தை ரீபண்ட்’ பெற விரும்பினால் ‛ஆன்-லைன்’மூலமே வருமான வரி தாக்கல்

வருமான வரம்பு ரூ.5 லட்சத்துக்கு மேற்பட்டவர்களும், வருமான வரி பிடித்தம் செய்ததை திரும்ப பெற விரும்புபவர்களும் ‛ஆன்-லைன்’ மூலம் மட்டுமே வருமான வரித்தாக்கல் செய்ய வேண்டும் என வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

இன்று குரூப்- 2 தேர்வு:6 லட்சம் பேர் எழுதுகின்றனர்

தமிழகத்தில் குரூப்- 2 முதல் நிலைத் தேர்வு, ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 26) நடைபெறுகிறது. இதில் 6 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். தமிழகத்தில் குரூப் 2 தொகுதியில் வணிக வரித் துறை இணை அதிகாரி (8 காலியிடங்கள்), சார் பதிவாளர் (23 காலியிடங்கள்), தொழிலாளர் நலத் துறையின் உதவி ஆய்வாளர், உதவிப் பிரிவு அலுவலர் என மொத்தம் 1,241 காலியிடங்கள் உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு தேர்வு நடத்துவதற்கான அறிவிக்கை கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

குடித்துவிட்டு வந்த மாணவர்களுக்கு " TC " - மீண்டும் சேர்க்க மாவட்ட ஆட்சியர் பரிந்துரையை நிராகரித்த தலைமை ஆசிரியை - விளக்கம் கேட்டு தலைமை ஆசிரியைக்கு நோட்டீஸ்

Image

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு விதிகளில் மாற்றம் வர வாய்ப்புள்ளது - பள்ளிக்கல்வி இயக்குனர்

Image

இன்று (25/07/2015) நடக்கும் SPECIAL CRC மற்றும் UPPER PRIMARY CRC குறித்து தெளிவுரை ஆணை

Image

ஆக.,1ல் ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வு?

ஆசிரியர்கள் எதிர்பார்த்த பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு ஆக.,1 அல்லது 2ம் தேதி துவங்க வாய்ப்பு உள்ளது. இந்தாண்டு கலந்தாய்வு நிபந்தனை தொடர்பாக ஆசிரியர்களிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 

ஆசிரியர்களுக்கு கடிவாளம் அவசியம் தீர்வு என்ன?

ஒழுங்கீனமாக நடந்து கொண்ட, இரு தலைமை ஆசிரியர்கள் உட்பட நான்கு ஆசிரியர்கள் மீது, கல்வித்துறை சஸ்பெண்ட் நடவடிக்கை எடுத்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க, நடவடிக்கையை கடுமையாக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மாணவர்கள் மோதல் தடுக்க கவுன்சிலிங்