Ad Code

Responsive Advertisement

விபத்தில் சிக்குவோருக்கு உதவிசெய்ய 70,000 மாணவருக்கு முதலுதவி பயிற்சி

தமிழகத்தில், 70 ஆயிரம் மாணவர்களுக்கு, அவசரகால முதலுதவி பயிற்சி அளிக்கும் முகாம் துவங்கியது.இதுகுறித்து, தமிழ்நாடு எலும்பு, முடநீக்கியல் நிபுணர் சங்க மாநிலத் தலைவர் ராஜா ரவிவர்மா கூறியதாவது:இந்தியாவில், சாலை விபத்துகளால், ஒரு மணி நேரத்துக்கு, 16 பேர் மரணம் அடைகின்றனர். 

கடந்த ஆண்டு நடந்த, 4 லட்சத்து, 5௦ ஆயிரம் சாலை விபத்துகளில், 1 லட்சத்து, 1 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். தமிழகத்தில் நடந்த, 77 ஆயிரத்து, 725 விபத்துகளில், 15 ஆயிரத்து, 190 பேர் இறந்துள்ளனர். சாலை விதிமுறைகளை பின்பற்றாததே இதற்கு காரணம். எனவே, ஆக., 4, தேசிய எலும்பு மூட்டு தினத்தை முன்னிட்டு, எங்கள் சங்கம் சார்பில், கடந்த, 29ம் தேதி முதல், மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

மேலும், 70 ஆயிரம் மாணவர்களுக்கு, அவசரகால முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்த பயிற்சியும் அன்று துவங்கியது. அடுத்த ஆண்டுக்குள், ௭௦ ஆயிரம் பேருக்கு பயிற்சி அளித்து விடுவோம்.சென்னையில், ஆக., 1ம் தேதி முதல் 4ம் தேதி வரை, மாணவர்களுக்கு முதலுதவி பயிற்சி அளித்தல், முதியோருக்கு எலும்புச் சத்து அறியும் பரிசோதனை முகாம்கள், பொதுமக்களுடன் கலந்துரையாடல், ரத்ததான முகாம்கள் ஆகியவை நடத்தப்படுகின்றன. ஆக., 4ம் தேதி, சென்னை மெரீனாவில், மாணவர், பொதுமக்கள் பங்கேற்கும், 'வாக்கத்தான்' நடத்தப்படுகிறது. 
இவ்வாறு, அவர் கூறினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement