Ad Code

Responsive Advertisement

பிளஸ் 2 மாணவர்களின் ரேஷன், ஆதார் எண் சேகரிப்பு

நடப்பு கல்வி ஆண்டில், பிளஸ் 2 தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியரின் ரேஷன் அட்டை, ஆதார் அட்டை மற்றும் மொபைல் போன் விவரங்களை சேகரிக்க, அரசு தேர்வுகள் துறை உத்தரவிட்டு உள்ளது.இதன்படி, 'அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி கள், தங்கள் பள்ளி பிளஸ் 2 மாணவர்களின் விவரங்கள் அடங்கிய உறுதிமொழி படிவத்தை, உடனடியாக தயாரிக்க வேண்டும்' என, தேர்வுத் துறை இயக்குனர் (பொறுப்பு) வசுந்தராதேவி தெரிவித்து உள்ளார்.

அவரின் உத்தரவு விவரம்: 

* மாணவ, மாணவியர் தங்கள் பெயர், இன்ஷியல், தந்தை அல்லது காப்பாளர் பெயர், பிறந்த தேதியை தெளிவாக குறிப்பிட வேண்டும்.  

* உறுதிமொழி படிவத்தில் உள்ள விவரங்கள் தான், பிளஸ் 2 மதிப்பெண் பட்டியலில் இடம் பெறும் என்பதால், பிறப்புச் சான்றிதழ் படி, சரியான தகவல்களை குறிப்பிட வேண்டும்.  

* உறுதிமொழி படிவத்தில் தவறான தகவல்கள் குறிப்பிட்டால், சட்டரீதியான பிரச்னை ஏற்படும் என்பதை, தலைமை ஆசிரியர், மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் அறிவுறுத்த வேண்டும். 

* மாணவரின் பாலினம், முகவரி, ஜாதி சான்றிதழ் அடிப்படையிலான ஜாதி விவரம், மதம், மாற்றுத்திறனாளி என்றால் அதற்கான குறைபாடு, தந்தை அல்லது பாதுகாவலரின் பெயர், தாய் பெயர், ஆதார் அடையாள அட்டை எண் விவரம், ரேஷன் அட்டை எண் விவரம், பெற்றோர் அல்லது பாதுகாவலரின் மொபைல்போன் எண் (விரும்பினால் மட்டும்), பாடங்களின் விவரம், தட்டச்சு முடித்திருந்தால் அதன் விவரம், போன்றவற்றை பதிவு செய்ய வேண்டும். 

* வரும் 27ம் தேதி முதல், இந்த பணிகளை துவங்கி, ஆக., 7ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement