Ad Code

Responsive Advertisement

பொதுத்தேர்வுக்கு பெயர் பட்டியல் பிளஸ்2 மாணவர்கள், பெற்றோரிடம் உறுதிமொழிப்படிவம் வாங்க வேண்டும்: தேர்வுத்துறை உத்தரவு

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் நடக்கும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ,  மாணவியர் தேர்வு எழுதி வருகின்றனர். தேர்வுக்கு முன்னதாக பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியரின் பெயர், பிறந்த தேதி, பெற்றோர் பெயர்,  உள்ளிட்ட சரியான தகவல்களை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் சேகரித்து தேர்வுத்துறைக்கு அனுப்புவார்கள். 

அந்த விவரங்களை சரிபார்த்து  மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல்கள் தயார் செய்யப்படும். இதையடுத்து, 2016 மார்ச் மாதம் நடக்க உள்ள பிளஸ்2 தேர்வு எழுத உள்ள பள்ளி மாணவர்–்களின் சரியான  விவரங்ளை சேகரித்து அனுப்ப  தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மாணவர்களின் பெயர் பட்டியல் (ழிஷீனீவீஸீணீறீ ஸிஷீறீறீ) பிழையின்றி தயாரித்து அனுப்ப வேண்டும். அதற்காக,  மாணவர்களிடம் உறுதி மொழிப்படிவம் பூர்த்தி செய்து வாங்க வேண்டும். அதில் எந்த  தவறும் ஏற்படக் கூடாது. இன்று முதல் மாணவர்களிடம் அந்த  உறுதிமொழிப் படிவம் பூர்த்தி செய்து வாங்கி ஆகஸ்ட் 7ம் தேதிக்குள் தேர்வுத்துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மாணவர்களின் பெற்றோரை பள்ளிக்கு வரவழைத்து உறுதி மொழிப்படிவங்களை பூர்த்தி செய்து வாங்க வேண்டும். அதில், மாணவர்கள் ைகயெழுத்து,  பெற்றோரின் கையெழுத்தும் பெற வேண்டும். அந்த விவரங்கள் சரியானவை என்று பெற்றோரால் உறுதி செய்யப்பட வேண்டும். இல்லை என்றால்  அந்த படிவத்தில் பிழை இருந்தால் அந்த பிழை மதிப்பெண் பட்டியலிலும் இடம்பெறும். இதனால் மாணவர்கள் எதிர்காலம் பாதிக்கப்படும். அதை  திருத்த அலைய வேண்டிய சூழல் ஏற்படும்.  உறுதிமொழிப் படிவத்தில் 11 விவரங்களை மாணவர்கள் தெளிவாக பிழையின்றி எழுத வேண்டும்.  குறிப்பாக, ஆதார் அடையாள அட்டை இருந்தால் அதன் எண்ணை குறிப்பிட வேண்டும். ரேஷன் அட்டை எண் எழுதப்பட வேண்டும்.  இந்த விவரங்களை அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சேகரித்து ஆகஸ்ட் 7ம் தேதிக்குள் தேர்வுத்துறைக்கு அனுப்பி  வைக்க வேண்டும் என்று  தேர்வுத்துறை உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement