Ad Code

Responsive Advertisement

ஆசிரியர்களுக்கான பணியிடமாறுதல்: 3 ஆண்டுகள் நிபந்தனையை குறைக்க ஆலோசனை.

தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களுக்கான பணியிடமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க அவர்கள் ஒரே பள்ளியில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும் என்ற நிபந்தனையை மாற்றுவது தொடர்பாக தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. 

இந்த நிபந்தனை குறைப்பு தொடர்பான அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களுக்கான இடமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான இடமாறுதல் கலந்தாய்வுக்காக வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித் துறை அண்மையில் வெளியிட்டது.

இடமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க ஒரே பள்ளியில் மூன்று ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும் என்ற புதிய நிபந்தனையும் அதில் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிபந்தனைக்கு தலைமையாசிரியர்கள், ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. மேலும் இதை ஓராண்டாகக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டங்களையும் அவை அறிவித்துள்ளன. இந்த நிலையில், கலந்தாய்வில் பங்கேற்பதற்கான நிபந்தனையை குறைப்பது தொடர்பாக தமிழக பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த நிபந்தனைக் காலம் குறைப்பு தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் எனத் தகவல்கள் தெரிவித்தன. தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு அட்டவணை தேதியும் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. நிபந்தனை தொடர்பாக முடிவு எடுத்த பிறகு, கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement