Ad Code

Responsive Advertisement

மதுவின் தீமைகள்: மாணவர்களுக்கு அறிவுறுத்த கல்வித்துறை உத்தரவு

தமிழகத்தில் பள்ளி மாணவர்களிடம் பரவும் மது குடிக்கும் கலாச்சாரத்தை கட்டுப்படுத்த பள்ளி கல்வித்துறை அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில், பள்ளி மாணவர்கள், மாணவிகள் பள்ளி வளாகம் மற்றும் பொது இடங்களில் மது அருந்துவது ரகளை செய்வது போன்ற அநாகரீக செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இந்த நிகழ்வு கல்வி துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இத்தகைய செயல்பாடுகளால் மாணவர்களின் உடல்நலம், கல்வி பாதிக்கும்.

எனவே, பள்ளி, வகுப்பறைகளில் நடத்தப்படும் காலை இறைவணக்க கூட்டத்தின் போதும், நீதிபோதனை கல்வி பாட வேளையின் போதும் மாணவர்களிடம் மதுவால் ஏற்படும் தீமைகள் பற்றி விளக்கி கூறி நல்வழிப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர். இந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்த தலைமை ஆசிரியர்கள் வகுப்பு ஆசிரியர்களுக்கு தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement