Ad Code

Responsive Advertisement

விருப்ப ஓய்வுக்கு பின் பணியாற்றக்கூடாது - உயர்நீதிமன்றம்

 'விருப்ப ஓய்வு பெற்றபின் வேறு மருத்துவமனையில் பணியாற்றினால் அரசு நடவடிக்கை எடுக்கலாம்' என அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் தொடர்ந்த வழக்கில், சுகாதாரத் துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

ராஜபாளையம் அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் எலிசபெத் மனுஇம்மருத்துவமனை மகப்பேறு பிரிவின் தலைமை டாக்டராக உள்ளேன். 2017 வரை பணிக்காலம் உள்ளது. உடல் நிலை சரி இல்லாததால் விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பித்தேன். இதற்கு சுகாதாரத்துறை செயலர் மறுத்துவிட்டார். கட்டாயப்படுத்தாமல் விருப்ப ஓய்வு வழங்க உத்தரவிட வேண்டும் என்றார்.

அரசு தரப்பில் தாக்கல் செய்த மனுவில், 'மனுதாரருக்கு பணிக்காலம் 2017ம் ஆண்டு வரை உள்ளது. அனைத்து அரசு சலுகைகளையும் அனுபவித்துவிட்டு திடீரென பணியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். இதை ஏற்க முடியாது' என தெரிவிக்கப்பட்டது.
நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அவரது உத்தரவு:
மனுதாரர் முக்கியப் பணியில் இருந்தாலும்கூட சிகிச்சை அளிக்கும் மனநிலையில் இல்லாதது தெரிகிறது. அவரை கட்டாயப்படுத்துவது தவறு. கேலிக்கூத்தாகும். அரசு விதிப்படி முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் விருப்ப ஓய்வு பெற முடியாது. ஆனால், உடல்நிலையை காரணம் காட்டி பெறுவதற்கான விதிமுறை இல்லை. இதனால் நீதிமன்றம் தலையிட வேண்டியுள்ளது. அப்பணியில் வேறு ஒருவரை நியமிக்கலாம். ஆனால் மனுதாரர் விருப்ப ஓய்வு பெற்றபின் வேறு மருத்துவமனையில் பணியாற்றினால் அவர் மீது அரசு நடவடிக்கை எடுக்கலாம்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement