Sunday, May 31, 2015
வகுப்பறையில் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த ஏன் அனுமதிக்க வேண்டும்?தயவு செய்து, கற்பித்தல்-கற்றலுக்காகச் செல்போனை அனுமதியுங்க
சமீபத்தில் ஆசிரியர் நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தபோது, கற்பித்தல் முறையில் புதிய கருவியாகச் செல்போன் அமைந்திருப்பதை அறிந்தேன். செல்போன் என்பது வெறும் தகவல்தொடர்புச் சாதனமாக இல்லாமல், கல்வித்துறையில், முக்கியமாகக் கற்பித்தலில் எவ்வாறு பயன்படுத்துவது என்பதைப் பற்றிய நீண்ட உரையாடல் புதிய உத்வேகத்தை அளித்தது என்றுதான் சொல்லவேண்டும். அதில் ’வகுப்பறையில் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்துவது எப்படி?’ என்ற வரிதான் மீண்டும் மீண்டும் உரையாடலில் எழுந்த ஒரு தேடல்.
ஜூலை-2015 மாத்த்திற்க்கான அகவிலைப்படி எவ்வளவு உயரலாம்?
As far as DA from July 2015 is concerned we have CPI (IW) for 9 months out of 12 months.
Jul-2014 252
Aug-2014 253
Sep-2014 253
Oct-2014 253
Nov-2014 253
2015 RH List (June - Dec)
- June 2 - Tuesday - ஷபே பாராஅத்.
- June 19 - Friday - ரம்ஜான் நோன்பு முதல் நாள்.
- July 14 - Tuesday - ஷபே காதர்.
- August 3 - Monday - ஆடிப்பெருக்கு.
- August 28 - Friday - வரலட்சுமி விரதம்/ஓணம் பண்டிகை.
- August 29 - Saturday - ரிக் உபகர்மா/யஜீர் உபகர்மா.
இன்டர்நெட் இணைப்பு இல்லாததால்ஏ.இ.இ.ஓ., அலுவலகத்தில் கடும் அவதி
தமிழகத்தில், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, சம்பள பில் தயாரிப்பது முதல், தகவல் பரிமாற்ற கடிதம் வரை, ஆன்-லைன் மூலமே மேற்கொள்ளப்படும் சூழலில், உதவி தொடக்கக்கல்வி அலுவலகங்களுக்கு, இதுவரை 'பிராட்பேண்ட்' வசதி செய்துதரப்படாததால், கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
அரசு ஊழியர் பாஸ்போர்ட் பெற புதிய நடைமுறை அறிமுகம்
அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட் பெற, புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.பாஸ்போர்ட் மண்டல அலுவலக அறிக்கை:பொதுத் துறை மற்றும் அரசு சார்புடைய நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள், பாஸ்போர்ட் பெற, அரசின் தடையின்மை சான்றிதழை, விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.ஆனால், சில அரசு அலுவலகங்களில், தடையின்மை சான்று பெற, நீண்ட தாமதம் ஏற்படுகிறது. இதனால், ஊழியர்களுக்கு பாஸ்போர்ட் பெறுவதில் நெருக்கடி நிலவுகிறது.
ஏழை மாணவர்களுக்கான 25% சேர்க்கை: தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை
மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஏழை மாணவர்கள் 25 சதவீதம் சேர்க்கையை அளிக்காத தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.
வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அருகேயுள்ள ஏலகிரிமலையில் இரு நாள் கோடை விழா சனிக்கிழமை தொடங்கியது.
பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு இன்று தேர்வு
தமிழகத்தில் பள்ளி ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. தமிழகம் முழுவதும் 1,800 மையங்களில் 8 லட்சத்து 96 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகின்றனர். தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
மத்திய அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகை படி உயர்கிறது
தமிழகத்தின் கோவை, ஈரோடு உள்பட நாட்டின் 29 நகரங்களில் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட வீட்டு வாடகைப் படியையும், போக்குவரத்துப் படியையும் வழங்குவதற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
பட்டப்படிப்புடன் ஆசிரியர் பயிற்சி:நாடு முழுவதும் அறிமுகம்
நடப்பு கல்வியாண்டு முதல், பட்டப்படிப்புடன் கூடிய ஆசிரியர் பயிற்சி படிப்புகள் துவக்கப்படுகின்றன. இதற்காக நாடு முழுவதும் உள்ள கல்லுாரிகளில், 'பி.ஏ., - பி.எட்.,' மற்றும், 'பி.எஸ்சி., - பி.எட்.,' பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.ஒருங்கிணைந்த பாடத்திட்டத்தின் கீழ், நான்கு ஆண்டுகளில், ஏதாவது ஒரு பாடப்பிரிவிலான பட்டப்படிப்புடன், பி.எட்., படிப்பையும் முடிக்கலாம். பின், மூன்று ஆண்டுகளில், முதுகலை பட்டப்படிப்புடன் எம்.எட்., படிப்பை முடிக்கலாம்.
10ம் வகுப்பு புத்தகம் விலை இரட்டிப்பு உயர்வு
பத்தாம் வகுப்பு பாட புத்தகத்தின் விற்பனை விலை, இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம், ஸ்கூல் பேக், காலணி, சீருடை என, அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகின்றன.
Saturday, May 30, 2015
தொடக்க கல்வி-இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளிகள்(DEMOLISHED CONDITION) கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்ந்து இயக்குனரின் செயல்முறைகள் மற்றும் படிவங்கள்...
தொடக்க கல்வி-இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளிகள்(DEMOLISHED CONDITION) கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்ந்து இயக்குனரின் செயல்முறைகள் மற்றும் படிவங்கள்...
அரசு ஊழியர்களுக்கு தடையின்மை சான்று கட்டாயமல்ல!!!
அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட் பெறுவதற்கு தடையின்மைச் சான்று அளிக்க வேண்டிய கட்டாயமில்லை என பாஸ்போர்ட் அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஆய்வக உதவியாளர்கள் தேர்வு நாளை நடக்கிறது: நுழைவு சீட்டு இல்லாமல் வருபவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல்!
ஆய்வக உதவியாளர்கள் தேர்வுக்கு நுழைவு சீட்டு இல்லாமல் வருபவர் களை தேர்வு எழுத அனு மதிக்கப்படமாட் டார்கள் எனமாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது:–
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணிக்கான தேர்வு 31–ந்தேதி (நாளை) நடை பெற உள்ளது. இதில் தேர்வாளர்கள் கடை பிடிக்க வேண்டிய நடைமுறைகள் வருமாறு:–25.5.2015 முதல் ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகள்இணைய தளத்தில் வெளி யிடப்பட்டு உள்ளன. இதுவரை நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய் யாத தேர்வர்கள் உடனடியாக பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய்வதில்ஏதே னும் நடைமுறை சிக்கல்கள் இருப்பின் தேர்வர்கள் கலெக் டர் அலுவலக வளாகத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.
அனுமதி இல்லை....
விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது:–
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணிக்கான தேர்வு 31–ந்தேதி (நாளை) நடை பெற உள்ளது. இதில் தேர்வாளர்கள் கடை பிடிக்க வேண்டிய நடைமுறைகள் வருமாறு:–25.5.2015 முதல் ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகள்இணைய தளத்தில் வெளி யிடப்பட்டு உள்ளன. இதுவரை நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய் யாத தேர்வர்கள் உடனடியாக பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய்வதில்ஏதே னும் நடைமுறை சிக்கல்கள் இருப்பின் தேர்வர்கள் கலெக் டர் அலுவலக வளாகத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.
அனுமதி இல்லை....
தமிழக கல்வித்துறை இயக்குநர்களும் தொடர்பு எண்களும்!!
✅Tmt. D Sabitha IAS
Principal Secretary to Government of
Tamil Nadu
(Department of School Education)
Phone: 25672790 (O), 25676388 (Fax)
Principal Secretary to Government of
Tamil Nadu
(Department of School Education)
Phone: 25672790 (O), 25676388 (Fax)
பணவரவை அதிகரிக்க வீட்டில் பீரோ எந்த இடத்தில அமைக்க வேண்டும்?
காசு, பணம், துட்டு, மணி-மணி என்று, அனைவரின் நோக்கமும் பண சம்பாதிப்பதில்தான் இருக்கிறது. ஏழை, பணக்காரன் ஆக விரும்புகிறான். பணக்காரன் கோடீஸ்வரனாக விரும்புகிறான். கோடீஸ்வரன் மேலும் கோடிகளை குவிக்கவே விரும்புகிறான். இது மனித இயல்பு. எதுவும் ஓசியில் கிடைக்காது. பணம் இருந்தால்தான் மிட்டாய் வாங்க முடியும் என்று பணத்தின் அருமை குழந்தைகளுக்கு கூட தெரிகிறது. பணம் இருந்தால் நாம் விரும்பிய பொருட்களை வாங்குவதற்கு மட்டுமல்ல, சமுதாயத்தில் மதிப்பும்-மரியாதையும் பெற, பணம் இருந்தால்தான் முடியும் என்கிற நிலை உருவாகிவிட்டது.
பணம் சம்பாதிப்பது ஒரு திறமை என்றால், அதைவிட பணத்தை சேமித்து வைப்பதும் ஒரு பெரிய திறமை.
மதுரை மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சமையல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
மதுரை மாவட்டத்தில் உள்ள சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சமையல் உதவியாளர் பணிக்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
10, பிளஸ் 2 தேர்வில் 75% மதிப்பெண் பெற்றவர்களுக்கு ரூ.10,000 பரிசு வாட்ஸ்-அப் தகவலால் : சிஇஓ அலுவலகம் முற்றுகை
பொதுத்தேர்வில் 75 சதவீத மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கப்படுகிறது என்று வாட்ஸ் அப்பில் வெளியான தகவலால் வேலூர் சிஇஓ அலுவலகத்துக்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர் திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல், ‘வாட்ஸ் அப்’ மற்றும் எஸ்.எம்.எஸ் மூலமாக ஒரு குறுஞ்செய்தி வேகமாக பரவியது.
குடும்ப தலைவராக இருக்கும் பெண்களுக்குதமிழக அரசின் புதிய திட்டம் அறிவிப்பு
பெண்களை தலைவராகக் கொண்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, தமிழக அரசு புதிய திட்டத்தை அறிவித்து உள்ளது.தமிழகத்தில், 2011 மக்கள்தொகை கணக்குப்படி, 7.21 கோடி பேர் உள்ளனர்; இவர்கள், 1.85 கோடி குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.இதில், 1.39 சதவீத குடும்பங்கள், பெண்களை குடும்பத் தலைவராகக் கொண்டவை என, கணக்கெடுப்பு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
ஆய்வக உதவியாளர் பணித்தேர்வு: கண்காணிப்பாளர்கள், தேர்வர்கள் கைபேசி கொண்டு செல்ல தடை
ஆய்வக உதவியாளர் பணிக்கான தேர்வு மையங்களுக்குள் கண்காணிப்பாளர்கள், தேர்வர்கள் ஆகியோர் செல்லிடப்பேசி மற்றும் மின்னனு சாதன பொருள்கள் கொண்டு செல்வதற்கு பள்ளிக்கல்வித்துறை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இன்ஜி., படிக்க 1.50 லட்சம் பேர் விண்ணப்பம்! எல்லாருக்கும் ' சீட்' கிடைக்கும்
அண்ணா பல்கலைக்குட்பட்ட இன்ஜி., கல்லுாரிகளில் சேர, 1.50 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. 2 லட்சம் இடங்கள் இருப்பதால், விண்ணப்பித்த அனைவருக்கும், 'சீட்' கிடைக்கும். அண்ணா பல்கலைக்குட்பட்ட, 580 இன்ஜி., கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கவுன்சிலிங், அண்ணா பல்கலையில் நடக்க உள்ளது. இதில் பங்கேற்று, கல்லுாரியில் சேர, மே, 6ம் தேதி முதல், அண்ணா பல்கலை உட்பட தமிழகம் முழுவதும், 60 மையங்களில் விண்ணப்பங்கள் விற்கப்பட்டன.
2,172 இடங்களுக்கு31,000 பேர் போட்டி:மாணவர்கள் எம்.பி.பி.எஸ்., ஆர்வம்
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் சேர 31,332 பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டை விட 3,279 விண்ணப்பங்கள் அதிகம்.தமிழகத்தில் 19 அரசு மருத்துவ கல்லுாரிகள், ஒரு அரசு பல் மருத்துவ கல்லுாரிகளும் உள்ளன. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு, 15 சதவீத இடங்கள் போக மாநிலத்திற்கு 2,172 எம்.பி.பி.எஸ்., இடங்கள்; 85 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன. சுய நிதி கல்லுாரிகளில் இருந்து, 500 இடங்கள் வரை மாநிலத்திற்கு கிடைக்கும்.
எம்.பி.பி.எஸ்., 'கட் - ஆப்' கணக்கிடுவது எப்படி?:கடந்த ஆண்டை விட 0.5 குறையும்
தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., 'கட் - ஆப்' மதிப்பெண் கடந்த ஆண்டை விட, 0.5 வரை குறையும் என்பதால், கடந்த ஆண்டில், கடைசி கட்டத்தில் வாய்ப்பை இழந்த பலரும், புதிதாக இணைய வாய்ப்பு வருகிறது. தமிழகத்தில், ஒரு அரசு பல் மருத்துவக் கல்லூரி, 19 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.
Friday, May 29, 2015
படித்த வேலையில்லாதவர்கள் சிறு தொழில் கடன் பெற – விபரங்கள்
யு.ஒய்.இ.ஜி.பி. திட்டத்தில் கடன் பெற கல்வித் தகுதி, வயது நீங்கலாக குடும்ப ஆண்டு வருமானம் போன்ற நிபந்தனைகள் எதுவும் உண்டா?
business-loans
ஆம். நிபந்தனைகள் உண்டு. படித்து வேலை இல்லாதவருக்குத்தான் கடனுதவி வழங்கப்படுகிறது என்றாலும், அவரது குடும்பத்தின் பொருளாதாரப் பின்னணியும் கடன் பெற முக்கியமான தகுதியாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஏனெனில், ஏழை இளைஞர்களுக்கான கடனுதவியை வசதி படைத்தவர்கள் பெற்றுவிடக் கூடாது என்பதில் அரசு கவனமாக இருக்கிறது.
ஆய்வக உதவியாளர் எழுத்துத் தேர்வு ஹால்டிக்கெட் கிடைக்கவில்லையா?
தமிழகத்திலுள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆய்வக உதவியாளர் பணிக்கு அரசு தேர்வு துறை மூலம் எழுத்துத்தேர்வு மே 31ல் நடக்கிறது. இத்தேர்வை 6 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதுகின்றனர். தேர்வு மையம் ஏற்பாடு செய்தல், தேர்வு கண்காணிப்பு குறித்து சி.இ.ஓ.,க்கள் முதன்மை கண் காணிப்பாளர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினர்.
திட்டமிட்டபடி ஜூன் 1ம் தேதிபள்ளிகள் திறக்கப்படும்: இயக்குனர்
''பெற்றோர் வதந்திகளை நம்பி குழம்ப வேண்டாம்; திட்டமிட்டபடி, ஜூன் 1ம் தேதி, பள்ளிகள் திறக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்தார். கோடை விடுமுறைக்கு பின், வரும் ஜூன் 1ம் தேதி, பள்ளிகள் துவங்கும் என, கல்வித் துறை அறிவித்திருந்தது.
தேர்ச்சி சதவீதம் அதிகரிப்பு:தகுதிக் கல்வி கிடைக்கிறதா?
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள், அதிக தேர்ச்சி விகிதத்தை காட்டுவது, பெற்றோருக்கு மகிழ்ச்சி தரும் தகவல். அதே சமயம், பிளஸ் 2வகுப்புகளில் இந்த மாணவர் அனைவரும், அவர்கள் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் கல்வியை நோக்கி பயணிப்பரா என்பது, சிந்திக்க வேண்டிய விஷயம்.
'குரூப் - 1' முதன்மை தேர்வு:டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு
'தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., நடத்தும், குரூப் - 1 முதன்மைத் தேர்வு, ஜூன், 5, 6, 7ம் தேதிகளில், சென்னையில் நடக்கும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.தமிழகத்தில், துணை ஆட்சியர், போலீஸ் துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் பதவிகளில், காலியாக உள்ள, 79 இடங்களை நிரப்ப, முதல்நிலைத் தேர்வு, 2014 ஜூலை 20ம் தேதி நடந்தது; இதன் முடிவுகள், ஜன., 30ம் தேதி வெளியானது.
சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வில்தமிழக மாணவர்கள் 99.76% தேர்ச்சி
சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்புத் தேர்வில், தமிழக மாணவர்கள், 99.76 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்; சென்னை மண்டல அளவில், தேர்ச்சி அளவு, 99.03சதவீதமாக உள்ளது.சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்புத் தேர்வுகள், மார்ச் 2ம் தேதி முதல், 26ம் தேதி வரை நடந்தன; நாடு முழுவதும், 13 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இதன் முடிவுகள், மே 27ம் தேதி வெளியாகும் என, அறிவிக்கப்பட்டது. ஒருநாள் தாமதமாகி, நேற்று வெளியிடப்பட்டது.
பி.இ., எம்.பி.பி.எஸ். படிப்புகள்: விண்ணப்பிக்க இன்று கடைசி
தமிழகத்தில் பி.இ, எம்.பி.பி.எஸ். படிப்புகளில் மாணவர்கள் சேர நிறைவு செய்த விண்ணப்பத்தை அளிப்பதற்கு வெள்ளிக்கிழமை (மே 29) கடைசி நாளாகும். பி.இ.- 1.25 லட்சம் விண்ணப்பங்கள்: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட உறுப்புக் கல்லூரிகளில் பி.இ. படிப்பில் சேர இதுவரை 1.25 லட்சம் பேர் நிறைவு செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர்.
பிளஸ் 2: பிற பாடங்களின் விடைத்தாள் நகல்களையும் இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்
இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் ஆகிய முக்கியப் பாடங்களைத் தொடர்ந்து, கணினி அறிவியல் உள்ளிட்ட பிற பாடங்களுக்கான பிளஸ் 2 விடைத்தாள் நகல்களையும் வெள்ளிக்கிழமை (மே 29) முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
நீக்கப்படுகிறது சட்டப் படிப்புகளுக்கான வயது உச்ச வரம்பு? அரசின் அனுமதிக்காக காத்திருக்கும் பல்கலைக்கழகம்
சட்டப் படிப்புகளுக்கு இதுவரை நிர்ணயிக்கப்பட்டு வரும் வயது உச்ச வரம்பை நீக்குவது தொடர்பாக அதிகாரிகள் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதற்கான அரசு அனுமதி கிடைத்தவுடன், சட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கப்பட்டு விடும் என்று தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர். அவ்வாறு அனுமதி கிடைக்கும் பட்சத்தில், எந்த வயதினரும் சட்டப் படிப்புகளில் சேரக் கூடிய வாய்ப்பு கிடைக்கும்.
சாதிச்சான்று அளிப்பதில் தாமதம்: தொழில் படிப்பு சேர்க்கையில் பழங்குடியின மாணவி விண்ணப்பத்தை பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவு
சாதிச் சான்றிதழ் அளிப்பதில் ஏற்பட்டுள்ள காலதாமதம் காரணமாக மாணவியிடம் அந்த சான்றிதழைக் கேட்காமல் விண்ணப்பத்தை பரிசீலிக்க பொறியியல், மருத்துவ மாணவர் சேர்க்கை தேர்வுக் குழு செயலர்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
Thursday, May 28, 2015
பள்ளி / கல்லூரிச் சான்றிதழ் தொலைந்தால் புதிய சான்றிதழ் பெறுவது எப்படி?
வீட்டில் பத்திரமாக இருக்கும் பள்ளிச் சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல்கள் இவற்றை சில சமயங்களில் சரிபார்த்தல் (Verification) அல்லது நேர்காணல் போன்ற காரணங்களுக்காக வெளியில் எடுத்துச் செல்ல நேரலாம். அப்படி செல்லும்போது பயணத்தில் தொலைந்துவிட்டாலோ அல்லது சுனாமி, வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களினால் அழிந்துவிட்டாலோ அல்லது எதிர்பாராதவிதமாக தீ விபத்துகளில் சேதமாகியிருந்தாலோ, கரையான்களால் பழுதுபட்டிருந்தாலோ மீண்டும் புதிய சான்றிதழை விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்ளவேண்டும்.
கல்வி தரம், உட்கட்டமைப்பு வசதிகளை குறிப்பிட்டு அரசு பள்ளிகள் நோட்டீஸ் அச்சிட்டு மாணவர்களை சேர்க்க தீவிரம்: தனியார் பள்ளிகள் கலக்கம்
தனியார் பள்ளிகள் விளம்பரம் செய்து மாணவர்களை சேர்ப்பது போல அரசுப் பள்ளிகளும் மாணவர்களை சேர்க்க நோட்டீஸ் அச்சிட்டு விளம்பரம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 14 ஆயிரம் தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் நடத்தும் பள்ளிகள், ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை நடத்தும் பள்ளிகள், 6 முதல் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகு்ப்புவரை நடத்தும் பள்ளிகள் என பல வகைப்பட்ட பள்ளிகள் இயங்கி வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகள் திறக்கும் முன்னதாக தனியார் பள்ளிகள் பலவற்றில் முன்கூட்டியே மாணவர் சேர்க்கை நடத்தி முடித்து விடுகின்றனர்.
வேலை வாய்ப்பு குறைவாக உள்ளதால் 1 லட்சம் பிஇ சீட் காலியாக இருக்கும் : சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை
தமிழகத்தில் இன்ஜினியரிங் கல்லூரிகளில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்கள் காலியாகவே இருக்கும் என்கிற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. உள்கட்டமைப்பு வசதிகள் குறைவு, வேலை வாய்ப்பு குறைவு ஆகியவையே, இன்ஜினியரிங் படிப்பு மீது மாணவர்களுக்கு மோகம் குறைந்துபோனதற்கு காரணங்களாக கூறப்படுகிறது.
பிளஸ் 1 வகுப்பிலும் பொதுத்தேர்வு முறை: கல்வியாளர்கள் வலியுறுத்தல்
பிளஸ் 1 வகுப்பிலும் பொதுத்தேர்வு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கல்வியாளர்கள் வலியுறுத்தினர். இதுதொடர்பாக பேராசிரியர் ப.சிவகுமார், பேராசிரியர் கல்விமணி, பேராசிரியர் அ.மார்க்ஸ் உள்ளிட்டோர் சென்னையில் நிருபர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:
ஓய்வூதியம் தொடர்பான வழக்கு: தமிழக அரசுக்கு உத்தரவு
தற்காலிக பணிக்காலத்தில், 50 சதவீதத்தை, ஓய்வூதியத்தில் சேர்க்க கோரிய, ஓய்வு பெற்ற வனத்துறை ஊழியரின் மனுவை பரிசீலிக்க, அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
அடங்காத மாணவர்களை கண்டு அலறும் ஆசிரியர்கள்
புதுச்சேரி பிளஸ்2 தேர்வில் அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் வெகுவாக குறைந்து போனது. இதனால் அரசு பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்க பெற்றோர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு தேர்வில் அரசு பள்ளிகளின் மொத்த தேர்ச்சி சதவீதம் 87.07 ஆக இருந்தது.
பிளஸ் 2 மறு கூட்டல்: விடைத்தாள் நகல்களை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்
பிளஸ் 2 இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் ஆகிய பாடங்களில் விடைத்தாள் நகல்களைக் கோரி விண்ணப்பித்த மாணவர்கள் வியாழக்கிழமை (மே 28) முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை (மே 28) வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து இந்தத் தேர்வை 30 ஆயித்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதியுள்ளனர். இந்தத் தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஓர் நாள் தாமதமாக வியாழக்கிழமை வெளிவருகிறது. மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை cbseresults.nic.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.
பி.இ. விண்ணப்பம்; சான்றிதழ்களை தனியாக அனுப்பலாம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு
பொறியியல் சேர்க்கை விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் கிடைக்கப் பெறாதவர்கள், அவற்றை தனியாகவும் அனுப்பலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பல்வேறு தரப்பினரிடமிருந்து எழுந்த கோரிக்கையைத் தொடர்ந்து இந்தச் சலுகையை பல்கலைக்கழகம் அளித்துள்ளது.
குழந்தைகளுக்கான உதவி மையம் தொடக்கம்
குழந்தைகளின் பாதுகாப்புக்காக மத்திய அரசின் பெண்கள், குழந்தைகள் நல அமைச்சகத்தின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் "சைல்டு லைன்' இலவச தொலைபேசி (1098) சேவை மையம் தொடக்க விழா சென்னை ஒக்கியம், துரைப்பாக்கத்தில் உள்ள எழில் நகரில் புதன்கிழமை நடைபெற்றது.
ஓய்வூதியதாரர்களுக்கு நிதித் துறை புதிய உத்தரவு
ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் சான்றிதழை சமர்ப்பிப்பது தொடர்பாக, நிதித் துறை புதிய சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. இதுகுறித்து, தமிழக நிதித் துறை முதன்மைச் செயலாளர் கே.சண்முகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை விவரம்:
மாணவர்களின் உடல்நலத்தில் பள்ளிகளுக்கு அக்கறை தேவை
காற்றோட்டாமான வகுப்பறையும், இயற்கை உபாதைக்கு அனுமதியும் பள்ளி நிர்வாகங்கள் செய்ய வேண்டியது அவசியம் என்கிறார், மதுரையைச் சேர்ந்த மகப்பேறு நிபுணர் டாக்டர் சுஜாதா சங்குமணி. புதிய கல்வி ஆண்டு இன்னும் சில நாட்களில் துவங்க உள்ளது. பள்ளிகள் திறக்க உள்ளன.
அரசு கல்லூரிகளில் வரும் 30க்குள் மாணவர் சேர்க்கை
அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில், மாணவர் சேர்க்கையை, வரும் 30ம் தேதிக்குள் முடிக்க, உயர்கல்வித் துறை செயலர் உத்தரவிட்டு உள்ளார்.
Wednesday, May 27, 2015
9 மற்றும் 11ம் வகுப்புப் பாடங்களைப் புறக்கணிக்கும் அபத்தம் நிறுத்தப்பட வேண்டும்
10 மற்றும் +2 தேர்வுகளில் அதிக மதிப்பெண்களைக் குவித்தால் மட்டும் போதுமா? அக்கறையுள்ள கல்வியாளர்களின் கூட்டறிக்கை
இந்த ஆண்டு +2 மற்றும் 10 ம் வகுப்புத் தேர்வுகளில் நமது மாணவர்கள் அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளதோடு அதிக அளவில் 200 க்கு 200; 100 க்கு 100 என மதிப்பெண்களைக் குவித்தும் உள்ளனர். +2 தேர்வில் கணிதத்தில் 9,710 பேர்களும் கணக்குப் பதிவியலில் 5,167 பேர்களும் வேதியலில் 1,049 பேர்களும் 200 க்கு 200 மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.
SSLC - இந்த கல்வியாண்டு முதல் அறிவியல் புத்தகத்தில் மாற்றம்
தமிழகத்தில் தற்போது சமச்சீர் கல்வி முறை அமலில் உள்ளது. இதனால் மாணவர்கள்10ம் வகுப்பு பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெற்று வருகிறார்கள். நடப்பு கல்வியாண்டில் (2015-2016) 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, முன்கூட்டியே பாடப்புத்தகங்களை வழங்க, உத்தரவிடப்பட்டுள்ளது.இதன் அடிப்படையில், அனைத்து பள்ளிகளுக்கும், பத்தாம் வகுப்பு புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சமச்சீர், சி.பி.எஸ்.இ., 'கட் - ஆப்' கணக்கீடு எப்படி?அண்ணா, கால்நடை மருத்துவ பல்கலை அதிகாரிகள் தகவல்
சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வந்துள்ள நிலையில், இன்ஜினியரிங், கால்நடை மருத்துவ படிப்புகளில், பல்வேறு முறைகளில், 'கட் - ஆப்' மதிப்பெண் கணக்கிடப்படுகிறது.
பி.எட் படிப்பை 2 ஆண்டுகளாக மாற்றாவிட்டால் அங்கீகாரம் ரத்து :மத்திய அரசு அதிரடி உத்தரவு
இந்த கல்வி ஆண்டு முதல் 2 ஆண்டு பிஎட் படிப்பை அமல்படுத்தாத நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்படும் என்று மத்திய அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 600க்கும் மேற்பட்ட பி.எட். கல்லூரிகள் உள்ளன. இதில் ஓராண்டு பி.எட், எம்.எட், படிப்புகள் உள்ளன. சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி நாடு முழுவதும் ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளுக்கான புதிய வழிகாட்டுதலை என்.சி.டி.இ 2014ல் வெளியிட்டது. அதில் பி.எட், எம்.எட், படிப்பு காலம், 2015-16ம் கல்வியாண்டு முதல் 2 ஆண்டுகளாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் விபரங்களை வெளியிட்ட பல்கலை
காரைக்குடி அழகப்பா பல்கலையில் விடைத்தாள் மதிப்பீடு செய்யும் ஆசிரியர்கள் பெயர், மதிப்பீடு செய்யப்படும் நாள் மற்றும் இடம் ஆகியவை பல்கலை கழக அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதால், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
எம்.பி.பி.எஸ். விண்ணப்பம் பெற நாளை கடைசி
தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ்., விண்ணப்பங்களைப் பெற வியாழக்கிழமை (மே 28) கடைசி நாளாகும். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மே 29-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்ககத்துக்குச் சென்று சேர வேண்டும்.
சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வு'ரிசல்ட்' இன்று எதிர்பார்ப்பு
மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுகின்றன.சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்புத் தேர்வை,13.74 லட்சம் பேர் எழுதினர்; சென்னை மண்டலத்தில், 1.7 லட்சம் பேர் எழுதினர். இதற்கான விடை திருத்தம், புதிய முறையில், இணையதளம் வழியே நடந்துள்ளது.
Tuesday, May 26, 2015
வீட்டைக் காக்கும் காப்பீடு!!!
அடுத்தவரின் செல்போனுக்கு அனுப்பிய செய்திகளை அழிக்க உதவும் புதிய ஆப் அறிமுகம்!!
SSA Tamil Nadu Recruitment for Data Entry Jobs (15 Vacancies)
SSA Tamil Nadu DEO Notification 2015
SSA Tamil Nadu Recruitment 2015 Notification Apply Online Application Form for 15 Govt Jobs. Sarva Siksha Abhiyan Tamil Nadu SSA Tamil Nadu Recruitment 2015 SSA Tamil Nadu DEO Recruitment 2015
Post Name : Data Entry Operator
Vacancies : 15
Place of Posting: Coimbatore
Qualification: Candidate should have passed Intermediate and MS Office Course Completion Certificate
Age Limit: 35 years
How to Apply:Interested contenders can download the application form from official website and filled Application form send to office
Last date for application is 29th May 2015
Official Website: www.coimbatore.tn.nic.in
Recruitment Board | Total Vacancies | Last Date | More Details |
---|---|---|---|
Tamil Nadu Public Service Commission (TNPSC) Recruitment 2015 | 268 Posts | 03.06.2015 | Click Here |
SSA Tamil Nadu Recruitment | 15 Posts | 29.05.2015 | Click Here |
BSNL | 200 Posts | 14.06.2015 | Click Here |
Ordnance Factory Tamil Nadu | 43 posts | 22.05.2015 | Click Here |
Tamil Nadu Aavin jobs in Trichy, Perambalur, Ariyalur and Karur | 08 Posts | 07.05.2015 | Click Here |
TANUVAS தமிழ்நாடு | 49 Posts | 28.05.2015 | Click Here |
TNPSC Group II | 1241 Posts | 29.05.2015 | Click Here |
Tamil Nadu Govt school Education Department Lab Assistant Jobs,தமிழக பள்ளி கல்வித் துறை ஆய்வக உதவியாளர் வேலைவாய்ப்பு | 4360 Posts | 06.05.2015 | Click Here |
Tamil Nadu Newsprint And Papers Limited (TNPL) | 58 Posts | 15 days from the date of Advt | Click Here |
Neyveli Lignite Corporation Limited (NLC)Trainee, Assistant Jobs | 23 Posts | 13.05.2015 | Click Here |
Neyveli Lignite Corporation Limited (NLC) | 24 Posts | 06.05.2015 | Click Here |
Tamil Nadu Aavin தமிழ்நாடு ஆவின் வேலைவாய்ப்பு | 4 posts | 06.05.2015 | Click Here |
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் Central Institute of Classical Tamil | 1 Post | 20.06.2015 | Click Here |
போர் வாகனங்கள் ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனம், இந்திய அரசு, பாதுகாப்பு அமைச்சகம் தமிழக வேலைவாய்ப்பு | 15 Posts | 17.05.2015 | Click Here |
Anna University, Tamil Nadu Clerk Jobs | Not Specified | 04.05.2015 | Click Here |
Tamil nadu Cooptex Ltd | 61 posts | 08.05.2015 | Click Here |
Tamil Nadu Newsprint And Papers Limited (TNPL) Trainee Jobs | 45 posts | 08.05.2015 | Click Here |
தமிழக பள்ளி கல்வித் துறை ஆய்வக உதவியாளர் வேலைவாய்ப்பு Chennai | 33 Posts | 06.05.2015 | Click Here |
SACON Coimbatore | 02 Posts | 18.05.2015 | Click Here |
CIPET | Not Specified | 10.05.2015 | Click Here |
Government of Tamil Nadu MRB Jobs | 7243 Posts | 11.05.2015 | Click Here |
Government of Tamil Nadu SDAT | 38 Post | 29.04.2015 | Click Here |
Union Public Service Commission (UPSC) | 17 Posts | 30.04.2015 | Click Here |
Ministry Of Defence, Tamil Nadu | 10 posts | 01.05.2015 | Click Here |
Airports Authority of India (AAI) | 322 Posts | 10.06.2015 | Click Here |
Tamil Nadu Open University | 3 Posts | 28.04.2015 | Click Here |
Vijaya Bank (A Government of India Undertaking Bank) | 27 Posts | 29.04.2015 | Click Here |
State Bank of India (SBI) | 96 Posts | 27.04.2015 | Click Here |
CIBA Tamilnadu | 07 posts | 30.04.2015 | Click Here |
CIPET Chennai | Not specified | 29.05.2015 | Click Here |
Border Security Force (BSF) | 341 Posts | 30 days from advt | Click Here |
Air India Air Transport Services Limited (AIATSL) Chennai Interview | 402 Posts | 19.05.2015 | Click Here |
Lakshmi Vilas Bank | Not specified | 25.04.2015 | Click Here |
National Biodiversity Authority (NBA) | Not specified | 30.04.2015 | Click Here |
Staf Selection Commission India | 2902 Posts | 29.04.2015 | Click Here |
TNPSC New Recruitment April 2015 | 83 Posts | 24.04.2015 | Click Here |
V.O. Chidambaranar Port Trust | 1 Post | 30.04.2015 | Click Here |
Indian Air Force (IAF) | 07 Posts | 30.04.2015 | Click Here |
Indian Maritime University (IMU) Tamil Nadu | 54 Posts | 20.04.2015 | Click Here |
Chennai Rivers Restoration Trust (CRRT) | 4 Posts | 06.04.2015 | ClickHere |
Tamil Nadu Government Fisheries Department | 1 Post | 06.04.2015 | Click Here |
CSIR Chennai | 2 Posts | 20.04.2015 | Click Here |
IMU Chennai | 54 Posts | 20.04.2015 | Click Here |
CCRS Tamil Nadu | 44 Posts | 07.05.2015 | Click Here |
ICICI Bank | not specified | 30.06.2015 | Click Here |
கற்பித்தல் பணி மட்டும் செய்யவிடுவீர்
ஆசிரியர் பணியென்பது சமுதாயம் சார்ந்த அறப் பணியாகும். அதற்கு அர்ப்பணிப்பு உணர்வும், பல்துறை சார்ந்த அறிவும் இன்றியமையாதவை. அனைவருக்கும் உரிய, உகந்த கல்வி அளிப்பதைப் புறந்தள்ளி உடல் நலம், மன வளம், கற்கும் திறன், தனியாள் வேற்றுமை, அனைத்துத் துறைகளுக்கான வாய்ப்பு வசதிகளின்மை பற்றி கிஞ்சித்தும் கவலை கொள்ளாமல் உருவாக்கப்பட்ட பொதுப் பாடத் திட்டத்தை நாடு முழுமைக்கும் மாணவர்களிடம் குறுகிய கால இடைவெளியில் அடைவுபெறச் செய்ய அறிவுறுத்துவதும், எதிர்நோக்குவதும் தவறானவை. எல்லோருக்குமான இலவச, கட்டாய, சமச்சீர் பொதுக் கல்வி முறையில் தக்க திருத்தம் மேற்கொள்வது அவசியம்.
பள்ளித் தலைமை ஆசிரியை மூளைச்சாவு: 6 உடலுறுப்புகள் தானம்
மூளைச்சாவு அடைந்த மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியையின் 6 உடலுறுப்புகள் தானமளிக்கப்பட்டன. சென்னை மேடவாக்கம் கங்கா நகரைச் சேர்ந்தவர் ஜீவரத்தினம் (56). இவர் சைதாப்பேட்டையில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார்.
வறுத்தெடுக்கும் வெயிலில் இருந்து தப்புவது எப்படி? அரசு சித்தா மருத்துவர் எளிய ஆலோசனை
'அக்னி நட்சத்திர வெயில் வறுத்தெடுக்கும் நிலையில், அதன் தாக்கத்தில் இருந்து தப்ப, எளிய நடைமுறை போதும்; தப்புவதும், சிக்குவதும் அவரவர் கையில் தான் உள்ளது' என, அரசு சித்த மருத்துவர் தெரிவித்துள்ளார். தமிழக அரசு, சித்த மருத்துவர் மணிவண்ணன் தரும் ஆலோசனைகள்:
இப்போதே திட்டமிட்டால் அதிக மதிப்பெண்: மாநில ரேங்க் மாணவிகள் திட்டவட்டம்
"தேர்விற்காக கடைசி நேரத்தில் அவசரகதியில் மாங்கு... மாங்கு... என படித்து பதட்டத்துடன் தயாராவதை விட கல்வியாண்டு துவக்கம் முதல் திட்டமிட்டு படித்தால் அதிக மதிப்பெண் பெறுவதுடன் தேவையில்லாத அவஸ்தையை தவிர்க்கலாம்" என மதுரை சாதனை மாணவிகள் பார்வதி, சசிகலா தெரிவித்தனர்.
அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ‘செக்’ கூடுதல் ஆசிரியர் பணியிடத்தை சரண்டர் செய்ய அரசு உத்தரவு
அரசு நிதியுதவி பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை விட கூடுதலாக உள்ள ஆசிரியர்களை திரும்ப ஒப்படைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 30 ஆயிரம் தொடக்கப்பள்ளிகளும், 10 ஆயிரம் நடுநிலைப்பள்ளிகளும் இயங்கி வருகின்றன. இதில் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளின் எண்ணிக்கை 20 ஆயிரம்.
பி.எட்., எம்.எட். படிப்பு நாடு முழுவதும் இனி இரண்டு ஆண்டுகளாக அமல்: தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் தலைவர்
நாடு முழுவதும் பி.எட், எம்.எட். படிப்புகள் இரண்டாண்டுகளாக உயர்த்தப்பட்டு, நிகழாண்டு முதல் நடைமுறைக்குக் கொண்டு வரப்படுவதாக தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் தலைவர் சந்தோஷ் பண்டா திங்கள்கிழமை கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
குரூப் 2 தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு: சென்னை மாவட்ட ஆட்சியர் தகவல்
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் குரூப் 2 தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு நடத்த உள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவு; நீலகிரி மாவட்ட கல்வித்துறை கவலை
நீலகிரி மாவட்ட அரசுப் பள்ளிகளில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது, கல்வி அதிகாரிகள் வட்டாரத்தில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
பொறியியல் மாணவர் சேர்க்கை விண்ணப்ப விநியோகம் நாளையுடன் முடிகிறது : இதுவரை 1.85 லட்சம் விற்பனை
தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப விநியோகம் நாளையுடன் முடிவடைகிறது. இதுவரை 1.85 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த 7ம் தேதி வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து பொறியியல் மாணவர் சேர்க்கையில் அண்ணா பல்கலைக்கழகம் தீவிரம் காட்டி வருகிறது.
வியாபாரிகளுக்கு பள்ளி பாடப்புத்தகம் கிடைக்குமா? தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் விளக்கம்
பள்ளிப்பாட புத்தகங்கள் விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு இந்த ஆண்டு, புத்தகம் விற்பனை செய்ய தமிழ்நாடு பாட நூல் கழகம் புத்தகங்களை வழங்கவில்லை. இதனால் போட்டித்தேர்வு எழுதுவோர், தனித்தேர்வர்கள், டுட்டோரியல் முறையில் தேர்வு எழுதுவோர் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
சி.பி.எஸ்.இ. 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவு: நாளை வெளியீடு
சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு புதன்கிழமை (மே 27) வெளியிடப்படும் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) அறிவித்துள்ளது.
சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வில் இந்திய அளவில் சென்னை மாணவர் சிறப்பிடம்: தமிழகத்தில் 97.06 சதவீதம் பேர் தேர்ச்சி
சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வில் அகில இந்திய அளவில் சென்னை மாணவர் எஸ்.நிஷோக் குமார் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளார். இவர் இந்தத் தேர்வில் 500-க்கு 494 மதிப்பெண் பெற்றுள்ளார். கணிதம், வேதியியல், இயற்பியல் பாடங்களில் தலா 99 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 97, கணினி அறிவியலில் 100 மதிப்பெண்களும் அவர் பெற்றுள்ளார்.
ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படும் என்பது தவறான தகவல்
ஆதார் எண்ணை இணைக்காவிட்டால், வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படும் என்று தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. அப்படி எதுவும் கிடையாது. அதேபோன்று, புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும் ஆதார் எண் அவசியம் இல்லை என்று தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.
சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வில் 9 வகை கிரேடு மதிப்பெண்
சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வில், மாணவ, மாணவியருக்கு மதிப்பெண்களுடன், கிரேடு முறை என்ற மதிப்பெண் தர வரிசை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில், ஐந்து பாடங்களில், தலா, 100 மதிப்பெண்கள் வீதம், மொத்தம், 500 மதிப்பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
பள்ளிக்கல்வி - மேல்நிலைக் கல்வி - தலைமையாசிரியர்களுக்கு 01.01.2006 முதல் 31.05.2009 வரை உள்ள கால கட்டங்களில் தேர்வுநிலை / சிறப்புநிலை பதவி உயர்வு பெறும் நிகழ்வுகளில், கணக்கிட்டு முன் தேதியிட்டு தேர்வு நிலை / சிறப்பு நிலை திருத்திய ஊதியக் குழு ஊதிய நிர்ணயத்திற்கு வழங்கலாம் எனவும், இப்பயன்கள் 01.06.2009 முதல் வழங்கிட கூடாது என இயக்குனர் உத்தரவு
பொறியியல் கல்லூரி மாணவர் தேர்ச்சி விவரம் வெளியீடு: 19 கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் தேர்ச்சி விகிதம்
பொறியியல் கல்லூரிகளின் 2014-ஆம் ஆண்டு இரு பருவத் தேர்வுகளின் மாணவர் தேர்ச்சி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 19 கல்லூரிகளின் தேர்ச்சி விகிதம் ஒற்றை இலக்கத்திலேயே இருப்பது தெரியவந்துள்ளது.
Monday, May 25, 2015
பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் தோ்வுக்குாிய நுழைவுச் சீட்டை இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்....
பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் தோ்வுக்குாிய நுழைவுச் சீட்டை www.tndge.in என்ற இணையதளத்தில் இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்...
தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட 45 ஆயிரம் ஆசிரியர்களின் பிரச்னைக்கு தீர்வு - பள்ளிக்கல்வித் துறை தீவிரம்
தி.மு.க., ஆட்சியில் பணி நிரந்தரம் செய்யப்பட்டாலும், பணி முறிவு என்ற பிரச்னையை சந்தித்து வந்த, 45 ஆயிரம் ஆசிரியர்களின் பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டு உள்ளது. ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றுள்ளதால், இதற்கான உத்தரவை பிறப்பிக்க, பள்ளிக்கல்வித் துறை தீவிரமாக பணியாற்றி வருகிறது.
மாணவர் குறைவாக உள்ள பள்ளிகளில் ஆட்குறைப்பு: ஆசிரியர் இடங்களை சரண் செய்ய கல்வித்துறை உத்தரவு
தொடக்கப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், ஆட்குறைப்பு நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டுள்ளது. தமிழகம் முழுவதும், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் உள்ளன.
கட்டாய கல்வியில் சிறுபான்மை பள்ளிகள் குளறுபடி : அந்தஸ்து பெறாத பள்ளிகளின் பட்டியல் தயாரிப்பு
சட்டப்பூர்வ சிறுபான்மை அந்தஸ்து பெறாமல் பல பள்ளிகள், கட்டாய கல்விச்சட்டத்தை பின்பற்றாமல் குளறுபடி செய்துள்ளன. பெற்றோரின் புகாரால், விதிமீறல் பள்ளிகள் பட்டியலை தயாரிக்கும் பணி துவங்கி உள்ளது.
சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 'ரிசல்ட்' இன்று வெளியீடு
சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று பகல் 12:00 மணிக்கு வெளியாகும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், மாநிலப் பாடத்திட்டத்துக்கான தேர்வு முடிவுகள் வெளியாகி, 10ம் வகுப்பு முடித்தோருக்கு, பிளஸ் 1 சேர்க்கையும், பிளஸ் 2 முடித்தோருக்கு, மருத்துவம், இன்ஜினியரிங், கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கான சேர்க்கை நடவடிக்கைகளும் துவங்கியுள்ளன.
பள்ளியில் திறந்தவெளி கிணறு: கண்காணித்து அகற்ற உத்தரவு
புதிய கல்வியாண்டு துவங்கும் முன் பள்ளிகளில் திறந்தவெளி கிணறு, உயர் மின் அழுத்த கம்பி இருந்தால் அவற்றை கண்காணித்து பாதுகாப்பு ஏற்பாடு செய்ய பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.ஜூனில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. பள்ளி துவங்கும் நாளிலேயே மாணவர்களுக்கு இலவச பாடபுத்தகம், சீருடை வழங்க வேண்டும்.
ஆசிரியர் + பெற்றோர் = சிறந்த மாணவர்கள்: தலைமை ஆசிரியரின் ஆலோசனை
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் அதிகபட்சமாக உச்சரிக்கும் வார்த்தைகள் தான், படி... படி... படி... மாணவர்களை சிந்திக்க விடாமல், சுதந்திரமாக நடக்கவிடாமல் எந்நேரமும் படிக்கச் சொன்னால் படிப்பு வராது. விரும்பி படித்தால் பாடம் மனதில் ஏறும். மாணவர்கள் விரும்பும் வகையில் பாடம் நடத்தவும் ஆசிரியர்கள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்கிறார், மதுரை திருப்பாலை அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கிறிஸ்டோபர் ஜெயசீலன்.பெற்றோரும், ஆசிரியர்களும் மாணவர்களிடம் நடந்து கொள்ளும் விதம் குறித்து அவர் கூறியதாவது:
மாற்றுத்திறனாளி பணியிடம் விரைந்து நிரப்ப உத்தரவு
பொதுத் துறை மற்றும் அரசு துறைகளில், மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டின் கீழ், காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனப் பணிகளில், வகுப்பு வாரியான இடஒதுக்கீடு, பெண்களுக்கான இடஒதுக்கீடு, விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீடு உள்ளது போல், மாற்றுத் திறனாளிகளுக்கான இடஒதுக்கீடும் உள்ளது.
ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., தேர்வு ஆன் - லைனில் அப்ளிகேஷன்
ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளை தேர்வு செய்வதற்கான, யு.பி.எஸ்.சி., தேர்வுக்கான விண்ணப்பம், முதன்முறையாக, இந்த ஆண்டில் இணையதளம் மூலம் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது.
பி.இ, எம்.பி.பி.எஸ். படிப்புகளுக்கு விண்ணப்பம்: மறு மதிப்பீட்டுக்காக காத்திருக்க வேண்டாம்
பிளஸ் 2 மறு கூட்டல், மறு மதிப்பீட்டு மதிப்பெண் முடிவு தெரியும் வரை காத்திருக்காமல், தேர்வில் பெற்றுள்ள மதிப்பெண்களைக் கொண்டு பி.இ, எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர மாணவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசு பள்ளி தேர்ச்சி சரிந்ததால் கலக்கம்! விசாரணை நடத்த அதிரடி உத்தரவு
திருப்பூர் மாவட்டத்தில், தேர்ச்சி குறைந்த அரசு பள்ளிகளில், கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதால், ஆசிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
உடல் பருமனும், சோம்பலும் பயமுறுத்துகிறதா : இன்று உலக தைராய்டு தினம்
கழுத்தின் முன்பகுதியில் 15 முதல் 20 கிராம் எடையுள்ள தைராய்டு சுரப்பி, உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் இயங்க உதவுகிறது என்பது ஆச்சர்யமான விஷயம்.தைராய்டு சுரப்பி குறைந்தாலும், அதிகமானாலும் பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். 12 சதவீத இந்தியர்கள், தைராய்டு குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். எட்டு சதவீத இந்தியர்கள் அறிகுறி தெரியாத தைராய்டு குறைபாட்டால் அவதிப்படுகின்றனர்.
Subscribe to:
Posts
(
Atom
)