Ad Code

Responsive Advertisement

விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் விபரங்களை வெளியிட்ட பல்கலை

காரைக்குடி அழகப்பா பல்கலையில் விடைத்தாள் மதிப்பீடு செய்யும் ஆசிரியர்கள் பெயர், மதிப்பீடு செய்யப்படும் நாள் மற்றும் இடம் ஆகியவை பல்கலை கழக அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதால், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
காரைக்குடி அழகப்பா பல்கலை கழகத்திற்குட்பட்ட இணைப்பு கல்லுாரிகளில், கடந்த ஏப்ரலில் செமஸ்டர் தேர்வு நடந்தது. விடைத்தாள்கள் தேர்வு மையங்களிலிருந்து பல்கலையின்தேர்வுத்துறைக்கு அனுப்பப்பட்டன. தேர்வு துறை விடைத்தாளை மதிப்பீடு செய்ய தகுதியுடைய ஆசிரியர் பட்டியலை பாடவாரியாக தயார் செய்து, துணைவேந்தரின் அனுமதி பெற்று ஆசிரியர்களை விடைத்தாள் திருத்த அழைப்பார்கள்.
அதற்கான ஆணை தபாலில் ரகசியம் (கான்பிடன்ஸியல்) என்று முத்திரையிடப்பட்டு அனுப்பப்படும். விடைத்தாளை மதிப்பீடு செய்பவர் யார்? என்ற விபரம் பிறருக்கு தெரியக்கூடாது என்பதற்காக, இந்த நடைமுறை அனைத்து பல்கலை கழகங்களிலும் பின்பற்றப்படுகிறது.ஆனால், அழகப்பா பல்கலையின் அதிகார பூர்வ இணையதளத்தில் விடைத்தாள் மதிப்பீடு செய்யும் ஆசிரியர்களின் பெயர், எந்த பாடத்திற்கு எந்த நாளில், எந்த இடத்தில் மதிப்பீடு செய்யப்படுகிறது, என்ற விபரங்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
விடைத்தாளில் டம்மி நம்பர் இடப்பட்டாலும், மதிப்பீடு குறித்த பிற தகவல்கள் இணையதளத்தில் இடம்பெறுவது, தேர்வு துறையின் மீதான நம்பகத்தன்மையை குலைப்பதாக அமைந்து
உள்ளது.அதிகாரப்பூர்வமாக வெளியிட வேண்டிய பல்வேறு தகவல்களை இணையதளத்தில் வெளியிடாமல், ரகசியம் காக்க வேண்டிய தேர்வுத்துறை தகவல்களை அழகப்பா பல்கலை வெளியிட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.பல்கலை நிர்வாகம் இது குறித்து உடனடி நடவடிக்கை எடுத்து, தேர்வுத்துறையின் ரகசிய தன்மையை காக்க வேண்டும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement