Ad Code

Responsive Advertisement

பட்டப்படிப்புடன் ஆசிரியர் பயிற்சி:நாடு முழுவதும் அறிமுகம்

நடப்பு கல்வியாண்டு முதல், பட்டப்படிப்புடன் கூடிய ஆசிரியர் பயிற்சி படிப்புகள் துவக்கப்படுகின்றன. இதற்காக நாடு முழுவதும் உள்ள கல்லுாரிகளில், 'பி.ஏ., - பி.எட்.,' மற்றும், 'பி.எஸ்சி., - பி.எட்.,' பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.ஒருங்கிணைந்த பாடத்திட்டத்தின் கீழ், நான்கு ஆண்டுகளில், ஏதாவது ஒரு பாடப்பிரிவிலான பட்டப்படிப்புடன், பி.எட்., படிப்பையும் முடிக்கலாம். பின், மூன்று ஆண்டுகளில், முதுகலை பட்டப்படிப்புடன் எம்.எட்., படிப்பை முடிக்கலாம்.
ஏற்கனவே முதுகலை பட்டம் பெற்றவர்கள், மூன்று ஆண்டுகளில், பி.எட்., - எம்.எட்., பட்டம் பெற முடியும். இதன் மூலம், அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நீக்கப்படும். முதுகலை பட்டதாரி ஆசிரியராக விரும்புவோர், ஏழு ஆண்டுகளில், குறிப்பிட்ட பாடப்பிரிவில், இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புடன், பி.எட்., எம்.எட்., படிப்புகளை யும் முடித்து விடலாம்.இத்திட்டத்தில் படிப்பவர்களுக்கு, படிக்கும்போதே, பள்ளிகளில் பணிபுரியும் வாய்ப்பும் வழங்கப்படும்.தொலைதுார கல்வியில், பி.எட்., படிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களின் கல்வித்திறன் மற்றும் கற்பிக்கும் திறனை அதிகரிப்பதற்காக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பள்ளி கல்வி துறை செயலர் விருந்தா ஸ்வரூப் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement