Ad Code

Responsive Advertisement

ஆய்வக உதவியாளர் பணித்தேர்வு: கண்காணிப்பாளர்கள், தேர்வர்கள் கைபேசி கொண்டு செல்ல தடை

ஆய்வக உதவியாளர் பணிக்கான தேர்வு மையங்களுக்குள் கண்காணிப்பாளர்கள், தேர்வர்கள் ஆகியோர் செல்லிடப்பேசி மற்றும் மின்னனு சாதன பொருள்கள் கொண்டு செல்வதற்கு பள்ளிக்கல்வித்துறை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் கூறுகையில், விருதுநகர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 154 ஆய்வக உதவியாளர் பணிக்காலியிடம் உள்ளன. இப்பணிக்காலியிடத்திற்கு மொத்தம் 41223 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். இப்பணிக்கு விண்ணப்பம் செய்தவர்களுக்கான எழுத்துத் தேர்வு வரும் 31-ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருக்கிறது. இத்தேர்வு விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, காரியாபட்டி, சிவகாசி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், வத்திராயிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் 68 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே இத்தேர்வுக்காக வழங்கப்பட்ட நுழைவு சீட்டுக்களில் தேர்வு மையம் உள்ளிட்ட விவரங்களும் இடம் பெற்றுள்ளன.

இத்தேர்வை நேர்மையான முறையிலும், வெளிப்படைத்தன்மையாகவும் நடத்தப்பட உள்ளது. இப்பணித் தேர்வுக்கான வினாத்தாள்கள் அனைத்தும் தயாராக உள்ளன. ஒவ்வொரு தேர்வு மையங்களுக்கும் அன்றைய நாளில் ஒரு மணிநேரத்திற்கு முன்னதாக வாகனத்தில் ஆயுதம் ஏந்திய போலீஸார் பாதுகாப்புடன் வினாத்தாள்களை விநியோகிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஒவ்வொரு தேர்வு மையத்திற்குள் அறைக்கண்காணிப்பாளர்கள் மற்றும் பறக்கும் படை அலுவலர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில், மேற்பார்வையாளர்கள், கண்காணிப்பாளர் மற்றும் தேர்வர்கள் ஆகியோர் உள்பட யாரும் செல்லிட பேசி மற்றும் மின்னனு சாதன பொருள்கள் ஆகியவைகளை தேர்வு மையங்களுக்கு கொண்டு வர பள்ளிக்கல்வித்துறை தடை விதித்துள்ளது. மேலும்,  தேர்வர்கள் கருப்பு அல்லது ஊதா நிற பந்து முனைப்பேனாக்களை பயன்படுத்தி தேர்வு எழுத வேண்டும்.

அதனால், தேர்வர்கள் காலை 8.30 மணிக்குள் தேர்வு மையங்களுக்குள் வந்து விட வேண்டும். அதேபோல், 10.10 மணிக்கு மேல் வருவோரை தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படமாட்டாது. தற்போது, இத்தேர்வுக்கான பணிகளில் பள்ளிக் கல்வித்துறை அலுவலர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement