புரட்சித்தலைவி "அம்மா" அவர்கள் மீண்டும் முதல்வர் பதவி ஏற்று பொற்கால ஆட்சி புரிய வேண்டும் என பலதரப்பு மக்கள் இறைவனை வேண்டுகின்றனர். அவர்களின் பிரார்த்தனைக்கு வலு சேர்க்கும் விதமாக, புரட்சித்தலைவி "அம்மா" அவர்களின் பொற்கால ஆட்சி விரைவில் மலர வேண்டி வேலூர் மாவட்ட "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" சார்பில் நாளை 01/10/2014 அன்று சர்வமத பிரார்த்தனை நடைப்பெற உள்ளது. எனவே வேலூர் மாவட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் திரளாக இந்த சர்வமத பிரார்த்தனையில் கலந்துக்கொண்டு புரட்சித்தலைவி "அம்மா" அவர்களின் கரங்களுக்கு வலு சேர்க்குமாறு மாவட்டத்தலைவர், மாவட்டச் செயலாளர், மாவட்டப் பொருளாளர் ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இடம் : மாவட்டத் தலைமை அலுவலகம், ஆம்பூர்.
நேரம் : காலை 10.00 மணி