Ad Code

Responsive Advertisement

9ம் வகுப்பில் பலவீன மாணவர் குறித்து ஆய்வு:முடிவின் அடிப்படையில் புதிய திட்டம் அமல்

அரசு பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பு மாணவர்களின் கல்வித்தரம் குறித்து, கல்வித் துறை, ஆய்வு நடத்தி உள்ளது. அடுத்த வாரம் வர உள்ள இம்முடிவின் அடிப்படையில், புதிய திட்டத்தைச் செயல்படுத்த, கல்வித்துறை திட்டமிட்டு உள்ளது.திறன் குறைவு:எஸ்.எஸ்.ஏ., எனப்படும், அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்குனரகம், ஏற்கனவே, அரசு பள்ளிகளில் படிக்கும், ஒன்று, மூன்று, ஐந்து, எட்டு ஆகிய வகுப்பு மாணவர்களிடம் ஆய்வு நடத்தி, அறிக்கையை தயாரித்துள்ளது. இதில், பெரும்பாலான மாணவர்களிடம், வாசிப்பு திறன், எழுதும் திறன் உள்ளிட்ட, பல திறன்கள் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளன.

இந்த பிரச்னையை சரி செய்ய, அதிகாரி கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஒன்பதாம் வகுப்பு மாணவர்களின் கல்வித்தரம் குறித்து, ஆர்.எம்.எஸ்.ஏ., என்ற மத்திய இடைநிலைக் கல்வி திட்ட இயக்குனரகம், சமீபத்தில் ஆய்வு நடத்தி முடித்துள்ளது. ஒரு வட்டாரத்தில் மூன்று பள்ளிகள், ஒவ்வொரு பள்ளியிலும், தலா, 30 மாணவர்கள் என, 'ரேண்டம்' அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு, 1.11 லட்சம் மாணவர்களிடம், ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தேர்வு:எட்டாம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்பு பாடத் திட்டத்தின் கீழ், தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய மூன்று பாடங்களில், 'அப்ெஜக்டிவ்' முறையிலான கேள்விகள் மற்றும் விரிவான விடை அளிக்கும் கேள்விகள் மூலம், தேர்வு நடத்தப்பட்டது.மாணவர்களின் மொழி அறிவுத்திறன், கணித அறிவுத்திறன் மற்றும் எழுதுதல் திறன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கணிக்கும் வகையில், இந்த தேர்வு நடத்தப்பட்டது.எவ்வளவு பேர்?இதன் முடிவு, தற்போது தயாரிக்கப்பட்டு வருகிறது. அடுத்த வாரம், முடிவு கிடைத்ததும், அதனடிப்படையில், புதிய திட்டம் தீட்டி செயல்படுத்தப்படும்.

இது குறித்து, திட்டத்தைச் செயல்படுத்திய ஆர்.எம்.எஸ்.ஏ., வட்டாரம் கூறியதாவது:
எத்தனை சதவீத மாணவர்கள், கல்வித்திறன் பெற்றவர்களாக உள்ளனர்; எத்தனை சதவீத மாணவர்கள், கல்வித்திறன் குறைபாடு உள்ளவர்களாக இருக்கின்றனர் என்ற விவரம், முடிவில் தெரியும்.நடவடிக்கை:மாணவர்கள், எந்தெந்த பகுதிகளில், 'வீக்'காக உள்ளனர் என்பதையும் அடையாளம் காண்போம். அதன் அடிப்படையில், புதிய திட்டங்களை தீட்டி, செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.ஒன்பதாம் வகுப்பிற்குரிய அறிவுத்திறன் பெறாமல், ௧௦ம் வகுப்பிற்கு வந்து, தோல்வி அடையும் மாணவர்கள் எண்ணிக்கை, அதிகமாக உள்ளது. இதுபோன்ற குறையை, முன்கூட்டியே களையும் வகையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, துறை வட்டாரம் தெரிவித்தது

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement