30/12/2014 அன்று "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இன் மாநில நிர்வாகிகள் தலைமையில் பள்ளிக்கல்வி இயக்குநர் முனைவர் திரு.கண்ணப்பன் அவர்களை சந்தித்தனர். மாநிலத் தலைவர் திரு.பாலமுருக பாண்டியன், மாநிலப் பொதுச் செயலாளர் திரு.செ.ஜார்ஜ், மாநிலப் பொருளாளர் திரு.இளஞ்செழியன் ஆகியோர் தலைமையில் மாவட்டப் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் சந்தித்தனர் . சந்திப்பின் போது ஆசிரியர்களின் கோரிக்கைகள் இயக்குநரிடம் வலியுறுத்தப்பட்டது.
Wednesday, December 31, 2014
இரவில் அழைப்பு; காலையில் 'கவுன்சிலிங்'; அடித்து பிடித்து பங்கேற்ற ஆசிரியர்கள்
மதுரையில் தொடக்க கல்வித் துறையில் இரவு அழைப்பு விடுக்கப்பட்டு மறுநாள் காலை 'கவுன்சிலிங்' நடத்தப்பட்டதால் ஆசிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
பள்ளி மாணவர் ஆதார் எண்ணை பெற்று பதிவு செய்யுங்கள்: தலைமை ஆசிரியர்களுக்கு கல்வி துறை உத்தரவு
'பள்ளி மாணவர்களின் ஆதார் எண்களை பெற்று, அதை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்' என, தமிழகத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
ஆசிரியர் போட்டி தேர்வு: புதிய விடைத்தாள் அறிமுகம்
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும், முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு, ஜன., 10ல் நடக்க உள்ளது. இதை கண்காணிக்க, மாவட்டங்களில் கலெக்டர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது.
தமிழக மாணவர்களுக்கு 17 தங்க பதக்கம்
தேசிய அளவில், பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன. இந்தாண்டு, இப்போட்டிகளை தமிழகம் நடத்துகிறது. சேலத்தில் நடக்கும் இதில், மேஜைப்பந்து, பேட்மிட்டன் உள்ளிட்ட போட்டிகள், பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்படுகின்றன.
அழகப்பா பல்கலை., தொலை நிலை கல்வி சான்றிதழில் குளறுபடி:மாணவர்கள் புகார்
காரைக்குடி அழகப்பா பல்கலை கழகத்தின் சார்பில் மாணவர்களுக்கு அனுப்பிய மதிப்பெண் பட்டியல், பட்டய சான்றிதழில் படித்து தேர் வெழுதிய "கோர்ஸ்' பெயர் தவறுதலாக அச்சிடப்பட்டதாக மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
TNPSC : குரூப் 1 முதல் நிலைத் தேர்வு முடிவுகள் 15 நாள்களில் வெளியாகும்
குரூப் 1 முதல் நிலைத் தேர்வின் முடிவுகள் அடுத்த 15 நாள்களில் வெளியாகும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் சி.பாலசுப்பிரமணியன் (பொறுப்பு) தெரிவித்தார்.
பிப். 22-இல் சைனிக் பள்ளி நுழைவுத் தேர்வு
உடுமலையை அடுத்த அமராவதிநகர் சைனிக் பள்ளியில் வரும் ஜனவரி 4-ஆம் தேதி நடைபெறவிருந்த நுழைவுத் தேர்வுகள் பிப்ரவரி 22-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
Tuesday, December 30, 2014
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் சிறப்பு பொதுக்குழு கூட்டம்...
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் 30.12.2014 செவ்வாய் அன்று காலை 09.00 மணிக்கு சென்னை பெரியமேடு "ஹோட்டல் சுபாஷினி இன்டர்நேஷனலில்" நடைபெறும். அவ்வமயம் மாவட்டங்களின் முக்கிய பிரச்சனைகள் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும்,குறிப்பாக இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்து கல்வி அமைச்சரை நேரில் சந்தித்து ஊதிய முரண்பாட்டை சரிசெய்ய கோரிக்கை மனு அளிக்கப்பட உள்ளது.இக்கூட்டத்தில் அணைத்து மாநில நிர்வாகிகளும்,மாவட்ட நிர்வாகிகளும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
இவண்,
செ.ஜார்ஜ்.
மாநில பொதுசெயலாளர்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை
பொங்கல் பரிசாக நிலுவை தொகை? பகுதி நேர ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு
முன் தேதியிட்டு அறிவிக்கப்பட்ட சம்பள உயர்வு, கடந்த மாதம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நிலுவை தொகை வரும் பொங்கல் பண்டிகைக்கு முன் வழங்கப்படுமா என, பகுதி நேர ஆசிரியர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
ஆசிரியர் செயல்திறன் மதிப்பீடு: ஆன்-லைனில் பதிவு தீவிரம்
ஒன்று முதல் எட்டாம் வகுப்பில், ஆசிரியர் செயல்திறன் மதிப்பீடு முடிந்து, அந்த விபரங்கள் அனைத்தும் ஆன்-லைனில் பதிவு செய்யும் பணி, வட்டார வளமையங்களில் தீவிரமாக நடக்கிறது.
தமிழக அரசுப் பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்துகொள்வதற்கான வழிமுறைகள்
வீட்டில் ஒரு பெயர் வைத்திருப்பார்கள், விரும்புவது வேறு பெயராக இருக்கும். சிலர் பெற்றோர் வைத்த பெயரை மாற்ற நினைப்பதும் உண்டு. தவிர, ஒருவர் தன் பெயரை நியூமராலஜிப்படியோ, ஜாதகப்படியோ அல்லது ஒரு நல்ல தமிழ்ப் பெயரையோ சூட்டிக்கொள்ளவும் விரும்பலாம். சரி, அதற்குரிய வழிமுறைகள் என்ன, தமிழக அரசுப் பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்வது எப்படி?
மாணவர்கள் தொழில்நுட்ப அறிவுக்கு முக்கியத்துவம், கணினி இனி அவசியம்
போட்டிகள் நிறைந்த இன்றைய தொழில்நுட்ப உலகில், கம்ப்யூட்டர் சார்ந்த பயிற்சிகள் முற்றிலும் அல்லாமல், அரசு பள்ளி மாணவர்கள் வேலைவாய்ப்பில் பின்தங்குவதாக சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
பள்ளி மாணவர் தற்கொலை: மறு பிரேத பரிசோதனைக்கு உத்தரவு
தனியார் பள்ளி விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட பிளஸ் 1 மாணவரின் உடலை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இந்தப் பிரேதப் பரிசோதனையை விடியோ எடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
Monday, December 29, 2014
"பின் நோக்கிய நினைவுகள் 2014” - சொதப்போ சொதப்பென்று சொதப்பி மன்னிப்பு கேட்ட பேஸ்புக்!
உலக மக்கள் அனைவரையும் கட்டிப் போட்டுள்ள பிரபல சமூக வலைதளமான பேஸ்புக், தன்னுடைய ஒரே ஒரு சொதப்பலால் பயனர்களிடம் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுதான் "2014 ஆம் ஆண்டின் பின்னோக்கிய நினைவுகள்".
ஆபாச தகவல் தேடலில் வராமல் Lock செய்வது எப்படி..? அதிகமாக ஷேர் செய்யவும்…!!
நாம் வீட்டில் இல்லாத போது குழந்தைகள் ஆபாச தளங்கள் பார்க்காமல் இருக்க சிறந்த வசதி google வழங்குகிறது அது எப்படி?
1. முதலில் கூகிள் தளம் சென்று உங்கள் User name, password கொடுத்து Login செய்யுங்கள்.
PG TRB- ஆசிரியர் தேர்வு வாரியம் அதிரடி!
தமிழகத்தில், வரும் ஜன., 10ம் தேதி முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித்தேர்வு நடக்கவுள்ளது. இத்தேர்வுகளில், முறைகேடுகளை தவிர்க்கும் நோக்கில், முதன் முறையாக,புகைப்படத்துடன் கூடிய ஓம்.எம்.ஆர்., சீட் தேர்வர்களுக்கு வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.
ஒன்பதின் தத்துவம்,என்ன என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்
9ன் சிறப்பு தெரியுமா?
எண்களில் விசேஷமான எண்ணாக கருதப்படுவது ஒன்பது. அந்த எண்ணில்
நீண்ட வாழ்வு எனும் அர்த்தம் பொதிந்திருப்பதாகச் சொல்கின்றனர், சீனர்களின் சொர்க்க கோபுரம், ஒன்பது வளையங்களால் சூழப்பட்டுள்ளது.
எகிப்து, ஐரோப்பா, கிரீக் முதலான நாடுகளும் 9-ஆம் எண்ணை விசேஷமாகப் பயன்படுத்திப் போற்றுகின்றன. புத்த மதத்தில், மிக முக்கியமான சடங்குகள் யாவும் ஒன்பது துறவிகளைக் கொண்டே நடைபெறும். தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினத்தின் சுத்தத்தை 999 என்று மதிப்பிடுவார்கள்.
சராசரி தேர்ச்சிக்கு குறைவான பள்ளிகளில் எஸ்எஸ்எல்சி, பிளஸ்2 மாணவர்கள் தேர்ச்சியை அதிகரிக்க நடவடிக்கை - தலைமை ஆசிரியர்களுக்கு இயக்குநர் உத்தரவு
எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவர் தேர்ச்சியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சராசரி தேர்ச்சிக்கு குறைவான பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
போட்டி தேர்வில் வெற்றி பெற நினைவில் கொள்ளுங்கள்
• பொது அறிவை வளர்க்க ஒரு எல்லை இல்லை. எனவே பார்ப்பது,படிப்பது,கேட்பது அனைத்துமே இதில் அடங்கும். ஒரு குறிப்பிட்ட புத்தகம் என்று எதுவும் இல்லை. அப்படி ஒன்று இருந்திருந்தால் அப்புத்தகம் அனைவரும் கையில் வைத்திருப்பர். Best Seller வரிசையில் விவிலியத்திற்கு அடுத்தபடியாக அப்புத்தகம் விற்று தீர்ந்திருக்கும்.
மாணவர்களுக்கு ஆதார் அட்டை பள்ளிகளில் சிறப்பு ஏற்பாடு
பள்ளி மாணவர்களுக்கு ஆதார் அட்டை வழங்க, மண்டல அளவில் சிறப்பு முகாம்களை நடத்த அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனர், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
TET Posting...அரசுக்கு கோரிககை
கலப்பு திருமணம் மற்றும் முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட2010-2011 ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரியிடையாக தேர்ந்து எடுக்கப்பட்ட ஆசிரியர்கள் மத்தியில் பீதி...மிகுந்த மன வேதனையில் ஆசரியர்கள்..... பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களை கவனிக்க முடியாமல் மனவேதனை..
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையில் மாற்றம் வருமா? - எதிர்பார்ப்பு
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை - கிராமப்புற மாணவர்கள் பாதிப்பு
கடந்த சில நாட்களுக்கு முன் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்டது. இந்த அட்டவணை ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
இடஒதுக்கீட்டை 8% ஆக உயர்த்த மாற்றுத்திறனாளிகள் வலியுறுத்தல்
இடஒதுக்கீட்டை 5 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகளின் மாநில மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கான சக்ஷம் தொண்டு நிறுவனம் சார்பில் சக்ஷம் தக்ஷின் தமிழ்நாடு என்ற மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில மாநாடு திருப்பூர் காமாட்சியம்மன் மண்டபத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றது.
NMMS தேர்வு தேதி மீண்டும் மாற்றம்
எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, தேசிய வருவாய்வழி திறனறி தேர்வு தேதி, மீண்டும் மாற்றப்பட்டுள்ளது.தேசிய வருவாய்வழி திறனறி தேர்வில் வெற்றி பெறுவோருக்கு மாதம், 500 ரூபாய் வீதம், நான்கு ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.
அண்ணா பல்கலை. நடத்தும் வளாக நேர்காணல்
சென்னை அண்ணா பல்கலைக்கழகமும், இன்போசிஸ் நிறுவனமும் இணைந்து நடத்தும் பொறியியல் இறுதியாண்டு மாணவர்களுக்கான வளாக நேர்காணல் தேர்வு பெருங்களத்தூர் ஜி.கே.எம்.பொறியியல் கல்லூரியில் திங்கள், செவ்வாய்க் கிழமைகளில் நடைபெறுகிறது.
அஞ்சல் துறை தேர்வு: 76,813 பேர் பங்கேற்பு
அஞ்சல் துறையில் தமிழகத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எழுத்துத் தேர்வில் 76 ஆயிரத்து 813 பேர் கலந்து கொண்டு தேர்வெழுதினர்.
கவுரவ விரிவுரையாளர்களுக்குசம்பளம் வழங்க உத்தரவு
அரசுக்கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஐந்து மாத சம்பள நிலுவை தொகையை வழங்க கல்லுாரிக்கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 72 அரசுக் கலைக் கல்லுாரிகள் உள்ளன. விரிவுரையாளர் பற்றாக்குறையை தவிர்க்க ரூ.10 ஆயிரம் சம்பளத்தில் கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். வகுப்புகள் நடக்கும் ஜூன் முதல் ஏப்ரல் வரை இவர்களுக்கு சம்பளம் வழங்கப்படும்.இரண்டாவது 'ஷிப்ட்'டில் இவர்கள் வகுப்பு எடுக்கின்றனர்.
அடுத்த கல்வியாண்டு முதல் கேரளாவில் டிஜிட்டல் புத்தகங்கள்
கேரள பள்ளிகளில், 'டிஜிட்டல்' பாடபுத்தகங்கள், அடுத்த கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. நாட்டிலேயே முதல் முறையாக, பள்ளிப் பாடங்கள் அனைத்தும், மல்டிமீடியா பாடங்களாக மாற்றப்பட்டு, காட்சிகள் மற்றும் ஒலிகள் மூலம் பாடங்கள் கற்றுக் கொடுக்கப்பட உள்ளன.
Sunday, December 28, 2014
TET: வரும் 19.01.2015 சுப்ரீம் கோர்ட்டில் GO 71& GO 25 & GO 29 எதிராக பதியப்பட்ட வழக்கில் விசாரணை நடைபெற உள்ளது.
வரும் 19.01.2015 சுப்ரீம் கோர்ட்டில் GO 71& GO 25 & GO 29 எதிராக பதியப்பட்ட வழக்கில் முக்கிய விசாரணை நடைபெற உள்ளது.இருதரப்பும் கட்டாயம் ஆஜராக கடிதம் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விதிகள்!
முதல் விதி:
திருமணம் மல மாதத்தில் இடம்பெறக்கூடாது. (மலமாதம் என்பது இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி ஒரே மாதத்தில் வருவது).
பள்ளிகளில் திருடு போன 'லேப்டாப்'புக்கு தலைமை ஆசிரியரே பொறுப்பு
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவசமாக 'லேப்டாப்' வழங்கப்படுகிறது. பல பள்ளிகளில் இரவு காவலர் இல்லாததால் லேப்டாப் திருடு போனது.
அடுத்த கல்வியாண்டில் 10ம் வகுப்புக்கு முப்பருவ கல்வி: பொதுத்தேர்வு முறையில் மாற்றம் வர வாய்ப்பு?
வரும், 2015 - 16ம் கல்வியாண்டில், எஸ்.எஸ்.எல்.சி., எனப்படும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, முப்பருவ கல்வி முறையை அமல்படுத்த, மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இந்த திட்டம் அமலுக்கு வந்தால், பொதுத்தேர்வு முறையில் மாற்றம் உட்பட பல பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறி, கல்வி அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.
10ம் வகுப்பு தமிழ் மாதிரி வினாத்தாள் வெளியீடு
தமிழ் சங்கம் வெளிட்டுள்ள அறிக்கையில், தலைவர் தாமோதரன், செயலர் ஸ்ரீதரன், காமராஜர் உயர்நிலைப் பள்ளி தாளாளர் இராசுமாறன் கூறியிருப்பதாவது:
இருப்பிடம், ஜாதி, வருவாய் உட்பட 5 சான்றிதழ்: கூட்டுறவு சங்கம் மூலம் விரைவில் வழங்க முடிவு
ஆன் - லைன் மூலம் ஜாதி, வருவாய், இருப்பிடம் உட்பட, 5 சான்றிதழ்களை பெற்று தரும் பணியை, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம், விரைவில் துவங்க உள்ளது. இதன் மூலம் வருவாய் துறை அலுவலகத்தில் சான்றிதழுக்காக கிராமப்புற மக்கள் அலைக்கழிக்கப்படுவது தவிர்க்கப்படும்.
அண்ணாமலை பல்கலைக்கு 'ஏ' கிரேடு
அண்ணாமலைப் பல்கலைக்கு, தேசிய தர மதிப்பீட்டுக் குழு, 'ஏ' கிரேடு வழங்கி உள்ளது. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில், நிதி நெருக்கடி மற்றும் நிதி முறைகேடு ஏற்பட்டதால், கடந்த, 2013 ஏப்ரல் மாதம், பல்கலை நிர்வாகத்தை, தன் கட்டுப்பாட்டிற்குள் அரசு கொண்டு வந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில், பல்வேறு சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
Saturday, December 27, 2014
பள்ளி கல்வித்துறை துணை செயலாளர் மாற்றம் - தமிழக அரசு உத்தரவு
அரசு பள்ளி கல்வித்துறை துணை செயலாளராக இருக்கும் எஸ்.பழனிச்சாமி அவர்கள் நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.
"ஸ்மார்ட்' வகுப்பறை உருவாக்க பரிசீலனை
கல்வி திட்டத்தில் புதுமையை ஏற்படுத்தும் வகையில், அரசு பள்ளிகளில் "ஸ்மார்ட்' வகுப்பறை உருவாக்குவது குறித்து பரிசீலிக்கப்படுகிறது.பள்ளிகளில் கற்றல் - கற்பித்தலில் புதுமையை ஏற்படுத்தவும், மாணவர்கள் படிக்கும் சூழலை மாற்றும் வகையில் தொழில்நுட்பம் நிறைந்த வகுப்பறைகளை உருவாக்கவும் ஆலோசிக்கப்படுகிறது.
பிளஸ் 2 மாணவர்களுக்குதொடர் தேர்வுகள் அறிவிப்பு:மாற்றம் செய்ய வலியுறுத்தல்
மதுரை மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு தொடர்ந்து தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதில் மாற்றம் செய்ய வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.
RH LIST - 2015
JANUARY
1(Thu)- Vaigunda Egadesi5(Mon)-Arudthra Darisanam
14(Wed)-Bohi
31(Sat)-Giarveen Mugaideen Abdul Kadhar
எங்கே செல்கிறது மாணவ சமுதாயம்: தலைமை ஆசிரியரை தாக்கிய மாணவன்
பரமக்குடி அருகே நயினார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரை, மாணவர் ஒருவர் தாக்கியதாக புகார் செய்யப்பட்டு உள்ளது. பரமக்குடி அருகே பகைவென்றியை சேர்ந்த மணி, 20, நயினார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார்.
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு: 20 லட்சம் மாணவர்கள் எழுதுகிறார்கள்
இந்த ஆண்டு பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 20 லட்சம் பேர் வரை எழுத உள்ளனர். பத்தாம் வகுப்புத் தேர்வில் 11 லட்சம் பேரும், பிளஸ் 2 தேர்வில் 9 லட்சம் பேரும் பங்கேற்க உள்ளனர். இதுகுறித்த முழுமையான விவரங்கள் சில நாள்களில் கிடைக்கும் என தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
பாரதியார் பல்கலை: எம்.பில் தேர்வு முடிவுகள் வெளியீடு
பாரதியார் பல்கலைக்கழகத்தில் எம்.பில் படிப்புக்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த அக்டோபர் மாதத்தில் எம்.பில் படிப்பில் பல்வேறு பாடப்பிரிவிகளுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டன. இதற்கான தேர்வு முடிவுகள் வெளியிட்டுள்ளன.
தேர்வு முடிவுகளை அறிய.....
வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க வாய்ப்பு
வேலைவாய்ப்பு பதிவினை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு புதுப்பித்தல் சலுகை வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் எ. சுந்தரவல்லி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:
மீண்டும் வருகிறது ஒரு ரூபாய் நோட்டு
இருபது ஆண்டுகளுக்கு பின், வரும், 2015ம் ஆண்டு, ஜனவரி முதல், மீண்டும் ஒரு ரூபாய் நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, 'ஒரு ரூபாய் கரன்சி நோட்டுகள் அச்சடிப்பு விதிகள், 2015' என்ற அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஒரு ரூபாய் நோட்டு அச்சடிக்க ஆகும் செலவு அதிகரித்ததாலும், அப்பணிக்கு நிகராக, அதிக மதிப்புள்ள கரன்சிகளை கூடுதலாக அச்சிடலாம் என, 1994ம் ஆண்டு, மத்திய அரசு முடிவு செய்தது.
Friday, December 26, 2014
TNPSC-GROUP 4- எதிர்பார்க்கப்படும் Cut - Off Mark
Group 4 cutoff ( Questions)
GENERAL : 155 ( + 2 OR -2 )
BC Community : 152 ( + 2 OR -2 )
MBC Community : 150
GENERAL : 155 ( + 2 OR -2 )
BC Community : 152 ( + 2 OR -2 )
MBC Community : 150
வருங்கால வைப்பு நிதி வட்டியை கூட்டலாமே !
மனிதர்கள் யாரும் என்ன நினைத்தாலும் தப்ப முடியாதது முதுமைதான். ஆண்டொன்று போனால் நிச்சயமாக வயது ஒன்று போய்விடும். அதேபோல இளமையில் மேற்கொள்ளும் உடல் உழைப்பு போல முதுமையில் உழைக்க முடியாது. வயதுக்கு ஏற்றபடி உடலில் பல உடல் நலக்குறைவுகள் ஏற்படும். ஆக முதுமையில் உழைத்து வருமானம் ஈட்டவும் முடியாது.
அரசு ஊழியர்கள் சொத்து விவரம் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு மீண்டும் நீட்டிப்பு
லோக்பால், லோக் ஆயுக்த சட்டத்தின்படி, மத்திய அரசு ஊழியர்கள், அதிகாரிகள் தங்களின் சொத்து விவரங்களை கட்டாயமாகத் தாக்கல் செய்ய டிசம்பர் 31-ஆம் தேதி வரை நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு, தற்போது அடுத்த ஆண்டு (2015) ஏப்ரல் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மத்திய பணியாளர் துறை வியாழக்கிழமை பிறப்பித்துள்ளது.
மது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்தச்தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே, மது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்த தலைமை ஆசிரியர் வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
ஆலோசனை மையத்தில் மாணவ, மாணவியருக்கு உளவியல் நிபுணர்கள் தனித்தனியே அவசியம்
தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்காக தொடங்கப்பட்டுள்ள உளவியல் ஆலோசனை மையத்தில், மாணவ, மாணவியருக்கு தனித்தனியே ஆண், பெண் என 2 உளவியல் நிபுணர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பள்ளி மாணவர்களின் மனஅழுத்தம், உளவியல் ரீதியான பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், தமிழகம் முழுவதும் அரசு சார்பில் ‘நடமாடும் உளவியல் ஆலோசனை மையங்கள்‘ தொடங்கப்பட்டு, கடந்த 2 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
எஸ்எஸ்எல்சி மாணவர்களின் பெயர் பட்டியல் பிரவுசிங் சென்டரில் தயாரிக்க பள்ளிகளுக்கு தடை
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுக்கு மாணவர் பெயர் பட்டியல் தயாரிக்கும் பணிகளை தனியார் பிரவுசிங் சென்டரில் மேற்கொள்ள பள்ளிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் மார்ச் மாதம் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளன. இதற்காக தகுதியுள்ள மாணவ-மாணவியர் கொண்ட பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
பணிபுரிந்த அரசு பள்ளியில் கே.பி.க்கு நினைவஞ்சலி
சென்னை முத்துபேட்டை பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மறைந்த திரைப்பட இயக்குனர் கே.பாலசந்தருக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
2014-ம் ஆண்டிற்கான சிறந்த விஞ்ஞானி : ராதாகிருஷ்ணன் முதலிடம்
2014-ம் ஆண்டிற்கான உலகி்ன் சிறந்த 10 விஞ்ஞானிகள் பட்டியலில் இந்திய விஞ்ஞானி ராதாகிருஷ்ணனுக்கு முதலிடம் கிடைத்துள்ளது. லண்டனில் இருந்து வெளிவரும் நேச்சர் எனப்படும் அறிவியல் இதழ் ஒவ்வொரு ஆண்டும் உலகின் முதல் 10 இடங்களை பெறும் விஞ்ஞானிகளை பட்டியலிட்டு வருகிறது. இந்த வரிசையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தை(இஸ்ரோ) சேர்ந்த விஞ்ஞானி ராதாகிருஷ்ணனுக்கு முதலிட்டத்தை அளித்துள்ளது. மேலும் இந்தியாவை சேர்ந்த ஒருவரை தேர்வு செய்திருப்பது இதுவே முதல் முறையாகும்.
Thursday, December 25, 2014
ஆசிரியர்கள் பிஎப் தணிக்கை விவகாரம் 63 தொடக்க கல்வி அலுவலர்களுக்கு நோட்டீஸ்
ஊரா ட்சி மற்றும் நகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் சேமநல நிதி கணக்கு தொடர்பாக, அரசு தகவல் தொகுப்பு விவர மையத்தில் பதிவு செய்யும் பணி நடக்கிறது. ஆனால், தொடக்க கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளிலும் பணியாற்றும் ஆசிரியர்களின் சேமநல நிதி கணக்குகள் 2013-14ம் ஆண்டு வரை உள்ள விவரங்களை ஒன்றியம் வாரியாக தகவல் தொகுப்பு ஆணையருக்கு அனுப்பி வைக்கின்றனர்.
TNPSC : அரசு இயந்திரம் சுறுசுறுப்பாக தேர்வு முடிவுகள் அமையட்டும்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் - 4 பணிகளுக்கான தேர்வுகளில், 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்று இருக்கின்றனர்.அரசுப் பணிகள் தேர்வு என்றாலே, லட்சக்கணக்கில் பங்கேற்கும் போக்கு அதிகரித்திருப்பதன் அடையாளம் இது; வேலைவாய்ப்பும் குறைவாக உள்ளது என்பதையும் காட்டுகிறது.
குரூப் 2A காலி பணியிட தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வுக்கு விண்ணப்பதாரர்களுக்கு அழைப்பு: தரவரிசை பட்டியல் வெளியீடு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நேற்று வெளியிட்ட அறிக்கை: குரூப் 2 பதவியில் அடங்கிய உதவியாளர், கீழ்நிலை எழுத்தர், கணக்காளர் மற்றும் நேர்முக எழுத்தர் ஆகிய பதவியில் காலியாக உள்ள இடங்களுக்கான எழுத்து தேர்வை டிஎன்பிஎஸ்சி கடந்த ஜூன் 29ம் தேதி நடத்தியது. இத்தேர்வு தொடர்பான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு பிராட்வே பேருந்து நிலையம் அருகே உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் வரும் 29ம் தேதி நடக்கிறது.
தபால்காரர், தபால் காப்பாளர் தேர்வு: இணையதளத்தில் அனுமதிச் சீட்டு வெளியீடு
தபால்காரர், தபால் காப்பாளர் (மெயில் கார்டு) தேர்வுக்கான அனுமதிச் சீட்டு (ஹால் டிக்கெட்) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என தமிழக அஞ்சல் வட்டம் தெரிவித்துள்ளது.
தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்ய நீதிபதி நியமனம்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
தனியார் கல்லூரிகளில் பாலிடெக்னிக் படிப்புகளுக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்ய நீதிபதி என்.வி.பாலசுப்பிரமணியன் தலைமையிலான குழுவை நியமித்துள்ளதாக தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
பிளஸ் 2 மாணவர்களின் பெயர்ப்பட்டியல் இன்று சரிபார்ப்பு
மாவட்டத்தில், அரசு பொதுத்தேர்வு எழுதும் பிளஸ் 2 மாணவ, மாணவியரின் திருத்தம் செய்யப்பட்ட இறுதிப்பட்டியல் சரிபார்ப்பு (டிச.24) புதன்கிழமை மதுரையில் முதன்மைக் கல்வி அலுவலர் இ.ஆஞ்சலோ இருதயசாமி முன்னிலையில் நடைபெறுகிறது.
கையால் எழுதிய, காலாவதி தேதி நெருங்கிய பாஸ்போர்ட்தாரர்களுக்கு சென்னையில் 27ம் தேதி சிறப்பு முகாம்
கையால் எழுதப்பட்ட, குறைந்த பக்கங்கள் கொண்ட மற்றும் காலாவதி தேதி நெருங்கிய பாஸ்போர்ட்தாரர்களுக்கான சிறப்பு முகாம் சென்னையில் வரும் 27ம் தேதி நடக்கிறது. கையினால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டுகள், ஒட்டப்பட்ட புகைப்படம் கொண்ட பாஸ்போர்ட்டுகள் சர்வதேச அளவில் கடந்த மாதம் 24ம் தேதி முதல் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
181 வனப் பணியாளர்கள் விரைவில் நேரடியாக நியமனம்
தமிழக அரசின் வனத்துறையில் 181 பணியாளர்கள் விரைவில் நேரடியாக நியமிக்கப்பட உள்ள தாக மாநில வன சீருடைப் பணியாளர் தேர்வுக்குழு அறிவித்துள்ளது. தமிழக அரசின் வனத்துறையில் வனவர் (ஃபாரஸ்டர்), வன காப்பாளர் (ஃபாரஸ்ட் கார்டு), வனக்காவலர் (ஃபாரஸ்ட் வாட்சர்) ஆகியோர் இதுவரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு பட்டியல் பெறப்பட்டு அதில் இடம் பெற்றவர்களுக்கு தேர்வு மற்றும் உடல்திறன் தேர்வு நடத்தப்பட்டு தேர்வு செய்யப்பட்டு வந்தனர்.
Wednesday, December 24, 2014
புதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ?
☉புதிய குடும்ப அட்டை பெற தகுதியுடையோர் யார் ?
தனிக் குடும்பமாக உள்ள இந்திய குடிமக்கள்கள் அனைவர்களும் தகுதியுடையோர் ஆவார்கள்.
காஸ் மானியத்துக்கு வங்கி கணக்கு இணைப்பை அறிவது எப்படி?
Dial *99*99# from your Mobile handset
சமையல் காஸ் மானியம் பெற, வங்கிக்கணக்கு இணைக்கப்பட்டு விட்டதா என்பதை அறிய,பி.எஸ்.என்.எல்., நிறுவனம், இலவச எஸ்.எம்.எஸ்.,சேவையை அறிமுகம் செய்துள்ளது.இச்சேவையை, ஆதார் எண் உள்ளவர்கள் மட்டுமேபயன்படுத்த முடியும்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு பாரதரத்னா விருது அறிவிப்பு
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் கல்வியாளர் மதன் மோகன் மாளவியா ஆகியோருக்கு மத்திய அரசு பாரதரத்னா விருது அறிவித்துள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான வாஜ்பாய் இருமுறை பிரதமராக இருந்தவர். மக்களவைக்கு 9 முறையும், மாநிலங்களவைக்கு 2 முறையும் அவர் தேந்தெடுக்கப்பட்டுள்ளார். இதே போல் கல்வியாளர் மதன் மோகன் மால்வியாவுகும் பாரதரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
காலத்தை வென்றவன் - "இதய தெய்வம்" எம்.ஜி.ஆர் நினைவு தினம் இன்று
இன்றும்கூட அவருடன் புதைக்கப்பட்ட, இன்னும் தன் இயக்கத்தை நிறுத்திக்கொள்ளாத அவரது கைக்கடிகாரத்தின் டிக் டிக் ஒலியைக் கேட்பதற்காக கடற்கரையில் உள்ள அவரது சமாதியின் வழவழப்பான மேற்பரப்பின் மீது சாய்ந்தபடி தம் ஒரு காதை அதன் மீது வைத்துக் காத்திருக்கும் மக்களுக்கு அவர் தெய்வமாகவேதான் தென்படுகிறார். அவர் அவர்களுடைய இதய தெய்வம். கேட்கும் சத்தம் இன்னும் அடங்கியிராத அவரது இதயத்தின் துடிப்பு. அவர்களைப் பார்க்கும்போது இன்னும் பல வருடங்களுக்கு அது தன் துடிப்பை நிறுத்திக்கொள்ளப் போவதில்லை என்று தோன்றும்.
ரூ.500,1000 நோட்டுகளை மாற்ற அவகாசம் நீட்டிப்பு
ரூ.500,ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளும் வசதியை மேலும் ஆறு மாத காலத்திற்கு நீடித்துள்ளது ரிசர்வ் வங்கி. இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டு்ள்ள செய்தி குறிப்பில் குறிப்பிட்டு இருப்பதாவது:
பிளஸ் 2 மாணவர்களுக்கு பிப்ரவரி முதல் வாரம் செய்முறைத் தேர்வு: கல்வித் துறை திட்டம்
பிளஸ்2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு பிப்ரவரி 7ம் தேதி தொடங்க தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பட்டியல்கள் தேர்வுத்துறைக்கு வந்து சேர்ந்துள்ளது. தற்போது அவற்றை சரிபார்க்கும் பணியில் தேர்வுத்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
தொலைதூர கல்வி மையங்கள் படிப்படியாக மூட நடவடிக்கை - யுஜிசி துணைத்தலைவர் தகவல்
திருச்சி பாரதிதாசன் பல்கலை. 31வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. விழாவில், 606 பேருக்கு தமிழக கவர்னர் ரோசய்யா பட்டம் வழங்கினார். இந்த பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 72,720 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. விழாவில், டெல்லி பல்கலைக்கழக நிதி நல்கைக்குழு (யுஜிசி) துணைத்தலைவர் பேராசிரியர் தேவராஜ் பேசியதாவது:
மறைந்த இயக்குனர் கே.பாலச்சந்தரின் வாழ்க்கை குறிப்பு - பள்ளி ஆசிரியராக வாழ்கையை தொடங்கியவர்
விதியோடு நான் ஆடும் விளையாட்டை பாரு!
பழம்பெரும் திரைப்பட இயக்குனர் கே.பாலசந்தர், 84, உடல் நலக்குறைவால், நேற்று காலமானார். சில மாதங்களுக்கு முன், அவர் மகன் கைலாசம் இறந்தார். இதனால், பாலசந்தர் மன ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தார். பத்து நாட்களுக்கு முன், காய்ச்சல், மூச்சுத்திணறலால் சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
8ம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வு: ஜன.3க்கு ஒத்திவைப்பு
தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவி திட்டத்தின் கீழ் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக 8ம் வகுப்பு மாணவர்களுக்கு, தேசிய திறனாய்வுத் தேர்வு நடத்தப்படுகிறது.
தொடக்கக் கல்வி டிப்ளமோ தேர்வு: இன்று முதல் மதிப்பெண் சான்றிதழ்
தொடக்கக் கல்வி டிப்ளமோ படிப்பில் முதலாண்டு, இரண்டாமாண்டு தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை புதன்கிழமை முதல் பெற்றுக்கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
அண்ணா பல்கலை.யில் இலவச 6 மாத கால குளிர்சாதனப் பெட்டி தொழில் நுட்ப பயிற்சி
அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 மாத கால குளிரூட்டி, குளிர்சாதனப் பெட்டி தொழில்நுட்பப் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் தொழில்முனைவோர் மேம்பாட்டு மையமும், சென்னை தெற்கு ரோட்டரி சங்கமும் இணைந்து பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்காக வழங்கும் இந்த இலவசப் பயிற்சியில் சேர குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
காமராஜர் பல்கலை: இளங்கலை, முதுகலை தேர்வு முடிவுகள் வெளியீடு
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு (சிபிசிஎஸ்) பருவமுறை நவம்பர் 2014 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக தேர்வாணையர் பெ.விஜயன் தெரிவித்துள்ளார்.
பள்ளிகளில் தேர்வு மையம் அரசுக்கு ஐகோர்ட் 'நோட்டீஸ்'
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்க கோரிய வழக்கில் அரசுக்கு 'நோட்டீஸ்' அனுப்ப மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
வரும் ஆண்டில் அனைத்து அரசு நர்சிங் பள்ளிகளிலும் தலா 100 மாணவிகளை சேர்த்து கொள்ள அரசு அனுமதி
வரும் ஆண்டில் அனைத்து அரசு நர்சிங் பள்ளிகளிலும் தலா 100 மாணவிகளை சேர்த்து கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் 23 அரசு நர்சிங் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. 11 பள்ளிகளில் 50 இடங்கள், மற்ற பள்ளிகளில் 60 முதல் 90 இடங்கள் அனுமதிக்கப்பட்டிருந்தன. தேவை காரணமாக சென்னை, மதுரை உள்ளிட்ட நர்சிங் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட இடங்களை விட கூடுதலான மாணவிகள் சேர்க்கப்பட்டு வந்தனர்.
யுஜிசி வழங்கும் கல்வி ஆராய்ச்சி உதவித்தொகை அதிகரிப்பு
கல்வி மற்றும் ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்காக பல்வேறு உதவித்தொகை திட்டங்களை மத்திய அரசு, பல்கலைக்கழக மானியக்குழு மூலம் செயல்படுத்தி வருகிறது.
அரசு நர்சிங் பள்ளிகளில் 100 இடங்களுக்கு அனுமதி
வரும் ஆண்டில் அனைத்து அரசு நர்சிங் பள்ளிகளிலும் தலா 100 மாணவிகளை சேர்த்து கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் 23 அரசு நர்சிங் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. 11 பள்ளிகளில் 50 இடங்கள், மற்ற பள்ளிகளில் 60 முதல் 90 இடங்கள் அனுமதிக்கப்பட்டிருந்தன.
Tuesday, December 23, 2014
வேலூரில் பள்ளி மாணவர்கள் செல்போன் பயன்படுத்த தடை: கலெக்டர் உத்தரவு!!!
வேலூர் கலெக்டர் நந்தகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைத்து வகை தொடக்க நகராட்சி உயர்நிலை மேனிலைப் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் அனைத்து வகுப்பு மாணவர்களும் பள்ளிகளுக்கு செல்போன் கொண்டு வருவது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
டிஎன்பிஎஸ்சி குரூப்-IV: பொதுத்தமிழுக்கான விடை- தினமணி நாளிதழ் வெளியீடு
21.12.2014 அன்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-IV தேர்வின் பொதுதமிழ் பகுதி வினாவுக்கான விடைகள்
CLICK HERE - டிஎன்பிஎஸ்சி குரூப்-IV: பொதுத்தமிழுக்கான விடை
14,443 பேருக்கு போலீஸ் வேலை - விரைவில் அறிவிப்பு
தமிழக காவல் துறையில், 1,365 எஸ்.ஐ.,க்கள் உட்பட, 14,443 பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. அதற்கான அறிவிப்பு, விரைவில் வெளியாக உள்ளது.தமிழகத்தில், 1,450 காவல் நிலையங்கள்; 200 போக்குவரத்து; 190 மகளிர்; 70 புறக்காவல் நிலையங்கள் உள்ளன. அதில், 1.22 லட்சம் பணியிடங்கள் உள்ளன. தற்போது, ஒரு லட்சத்து, 184 பணி இடங்களில் மட்டுமே போலீசார் பணியாற்றுகின்றனர். கூடுதல் டி.ஜி.பி., முதல் காவலர் வரை, 20,716 காலிப்பணியிடங்கள் உள்ளன.
இனி 'வணக்கத்திற்குரிய' இல்லை: 'மாண்புமிகு' மட்டும் தான் - தமிழக அரசு அரசாணை
தமிழகத்தில் உள்ள மேயர்களை இனி வணக்கத்திற்குரிய என்று அழைக்காமல், மாண்புமிகு மேயர் என அழைக்க வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
சுதந்திரம் ஆசிரியர்கள் கையில் இருக்க வேண்டும்
பாடமும் பாடதிட்டமும் இருக்கவேண்டும். ஆனால் அதை நடத்துகிற சுதந்திரம் ஆசிரியர்கள் கையில் இருக்க வேண்டும். காலகெடு இருக்க கூடாது. அனைத்து மாணவனும் முழு திறன் கிடைக்கும் வரை காலம் எடுத்துக்கொள்ள ஆசிரியர்களுக்கு வழிவகை செய்ய வேண்டும். ஆசிரியர் பணி தவிற மற்ற பணிகளில் அவர்களை ஈடுபடுத்தக்கூடாது. எந்த பள்ளியில் பணி செய்கிறார்களோ அந்த பள்ளியின் அருகில் அவர்களுக்கான இருப்பிடம் அமைத்து தரவேண்டும்.
மூன்றாம் பருவ பாட புத்தகங்கள் வினியோகிக்கும் பணி துவக்கம்!
ஏழை மற்றும் நடுத்தர மாணவர்கள் கல்வி பயிலும் வகையில், அரசுப்பள்ளிகள் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில், பயிலும் மாணவர்களின் கல்வித்தரம் மேம்பட அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. செயல்வழி கற்றல், படைப்பாற்றல் கல்வி போன்ற பல்வேறு புதிய யுக்திகளையும் புகுத்தி வருகிறது.
10ம் வகுப்பு தனித்தேர்வர்கள் டிசம்பர் 24 வரை விண்ணப்பிக்கலாம்: தேர்வுத்துறை
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்கள், இன்று முதல், 24ம் தேதி வரை, விண்ணப்பித்துக் கொள்ளலாம் என, அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
பத்தாம் வகுப்பு தேர்வு அட்டவணையில் மாற்றம் இல்லை: தேர்வுத்துறை அறிவிப்பு
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடர்பாக தேர்வுத்துறை வெளியிட்ட அட்டவணையில் திருத்தமோ மாற்றமோ செய்யவில்லை என்று தேர்வுத் துறை இயக்குநர் அறிவித்துள்ளார். பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 5ம் தேதியும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 19ம் தேதியும் தொடங்கும் என்று கடந்த 4ம் தேதி அரசுத் தேர்வுகள் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது.
அரையாண்டு தேர்வு இன்று முடிகிறது விடுமுறைக்கு பின் ஜன.2ல் பள்ளி திறப்பு
தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரை முப்பருவ பாடத்திட்டம் அமலில் உள்ளது. 2ம் பருவத்திற்கான தேர்வுகள் கடந்த 10 நாட்களாக நடந்து வருகின்றன. இன்று (செவ்வாய்) கடைசி தேர்வு நடக்கிறது. இதுபோல் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்2 மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு போல் பொது வினாத்தாள் தயாரித்து வழங்கப்பட்டு அரையாண்டுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
திருவள்ளுவர் பிறந்த நாள் - மாணவர்களுக்கு கட்டுரை- ஓவியப் போட்டி
திருவள்ளுவர் பிறந்த நாளையொட்டி மாணவர்கள் கட்டுரை, ஓவியங்களை வரைந்து அனுப்பலாம். அதில் பங்குபெறும் மாணவர்கள் தங்ளுக்குப் பிடித்த இரண்டு திருக்குறளையும், அதற்கான விளக்கங்களையும் உரைநடையாக எழுதி அனுப்ப வேண்டும். அதேபோல, ஓவியம் வரைபவர்கள், ஒரு வெள்ளை காகிதத்தில் திருவள்ளுவரின் முழு உருவப் படத்தை வரைந்து அனுப்ப வேண்டும்.
Monday, December 22, 2014
SSLC 2012 - 2014 ENGLISH PUBLIC EXAM QUES WITH ANS WITH TAMIL DESCRIPTION
CLICK HERE - 10 th STD ENGLISH PUBLIC EXAM QUES WITH ANS WITH TAMIL DESCRIPTION
Thanks... M.Muthuprabakaran M.A.,B.Ed.,
Graduate English Teacher,Govt. Hr. Sec. School,
Puzhuthipatti,
Sivagangai (DT)-630309.
Mob : 8148222741
புதிய குடும்ப அட்டை விண்ணப்பித்தோர் கவனத்துக்கு...
குடும்ப அட்டை கோரி மனு செய்தவர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தகவல்கள் கிடைக்கப் பெறவில்லையெனில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையாளர் அலுவலக இ-மெயில் முகவரிக்கு கோரிக்கை அனுப்பலாம் என்று உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
கணினி ஆசிரியர் பணிக்கு பி.எஸ்சி. படிப்பை பதிவு செய்யாமல் எம்.எஸ்சி., பி.எட். படிப்பை பதிவு செய்து இருந்தாலும் பரிந்துரைக்க வேண்டும்
வேலைவாய்ப்பு அதிகாரிக்கு ஐகோர்ட்டு உத்தரவு
கணினி ஆசிரியர் பணிக்கு பி.எஸ்சி., படிப்பை பதிவு செய்யாமல் எம்.எஸ்சி., பி.எட்., படிப்பை பதிவு செய்து இருந்தாலும் பரிந்துரைக்க வேண்டும் என்று வேலைவாய்ப்பு அதிகாரிக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
குறுகிய காலத்தில் பல கணித உண்மைகளைக் கண்டறிந்த கணிதமேதை ராமானுஜன் பிறந்தநாள் இன்று (டிசம்பர் 22)
22/12/2014. இன்று கணிதமேதை ராமானுசர் பிறந்த நாள்:-
*********************************************************************
சீனிவாச இராமானுஜன்
-------------------------------------------+-----+------
பிறப்பு திசம்பர் 22, 1887
பிறப்பிடம் ஈரோடு, சென்னை மாகாணம்
இறப்பு ஏப்ரல் 26, 1920 (அகவை 32)
இறப்பிடம் சேத்துப்பட்டு (சென்னை), சென்னை, சென்னை மாகாணம்
வாழிடம் கும்பகோணம்
தேசியம் இந்தியர்
துறை கணிதம்
கல்வி கற்ற இடங்கள் கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி
பச்சையப்பன் கல்லூரி
அறியப்படுவது Landau–Ramanujan constant
Mock theta functions
Ramanujan conjecture
Ramanujan prime
Ramanujan–Soldner constant
Ramanujan theta function
இராமானுசன் கூட்டு
Rogers–Ramanujan identities
Ramanujan's master theorem
தாக்கம் ஜி. எச். ஹார்டி
சமயம் இந்து சமயம்
தமிழ் ஆசிரியர்களுக்கு பணி வரன்முறை
மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு பள்ளிக்கல்வி இணை இயக்குநரகம் சார்பில் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், 2010-11 மற்றும் 2012ம் ஆண்டுகளில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர்.
தேனியில் தீக்குளித்த பள்ளி மாணவர் சாவு
தேனியில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற அரசுப் பள்ளி மாணவர் ர.ஜீவானந்தம் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். தேனி அல்லிநகரம் காந்திநகர் காலனியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் ஜீவானந்தம். இவர், இங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தார்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: 2 லட்சம் பேர் ஆப்சென்ட் - இரண்டரை மாதங்களில் முடிவுகள்
தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப் 4 தேர்வை 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். இந்தத் தேர்வு முடிவுகள் இரண்டரை மாதங்களில் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் தெரிவித்தார்.
பிளஸ் 2 மாணவர்களுக்கான தட்டச்சுத் தேர்வை செய்முறைத் தேர்வுகளோடு நடத்த வேண்டும்: அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவு
பிளஸ் 2 தொழில்கல்வி பாடப்பிரிவு மாணவர்களுக்கான தட்டச்சுத் தேர்வை செய்முறைத் தேர்வுகளோடு நடத்த வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு, அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
அரசு போக்குவரத்து கழகத்தில் ஜனவரி 3ம் தேதி புதிதாக 2,500 பேர் நியமனம்: எழுத்துத் தேர்வு பற்றி ஆலோசனை
சென்னை உள்பட 8 அரசு போக்குவரத்து கழகங்களில் ஓட்டுனர், நடத்துனர், தொழில்நுட்ப பணியாளர்கள் என 2,500 பேரை அடுத்த மாதம் 3ம் தேதி நியமனம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், இவர்களுக்கான எழுத்துத் தேர்வு நடத்துவது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
அரையாண்டு விடுமுறை: இரு செவ்வாய்க்கிழமைகளில் வண்டலூர் பூங்கா திறந்திருக்கும்
அரையாண்டு தேர்வு முடிந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், அடுத்த இரு செவ்வாய்க்கிழமைகளில் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா பொது மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
NIT, IIT போன்ற ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு: விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு
என்.ஐ.டி., ஐஐடி போன்ற மத்திய அரசு நிதியுதவியுடன் இயங்கும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர்வதற்காக நடத்தப்படும் 2015-ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வுக்கு (ஜே.இ.இ.) விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
Sunday, December 21, 2014
கருணை அடிப்படையில் பணி நியமனம்: 18 வயது நிரம்பாதோர் மனுக்களைப் பரிசீலிக்க புதிய உத்தரவு
கருணை அடிப்படையிலான பணி நியமனத்தில், 18 வயதை நிறைவு செய்யாமல் பணியில் சேர்ந்தவர்களின் மனுக்களையும் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு புதிய உத்தரவு பிறப்பித்தது.
ஆசிரியர் தகுதித் தேர்வை ஆண்டுதோறும் நடத்த வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
அரசு பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகள், உள்ளாட்சி அமைப்பு பள்ளிகளில் ஏற்படும் காலியிடங்களை நிரப்ப, அதிக அளவில் ஆசிரியர் தகுதி தேர்வை நடத்த வேண்டும்' என, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தயாராகிறது புதிய திட்டம் : சந்தாதாரர்கள் வீடு வாங்க பிஎப் நிறுவனம் உதவ முடிவு
சந்தாதாரர்கள் வீடு வாங்க உதவுவதற்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பான திட்டம் வரையறை செய்ய நிபுணர் குழு பரிந்துரைக்கு அனுப்பப்பட்டுள்ளது. வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இபிஎப்ஓ) சார்பில் 2 நாள் முன்பு டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் பெயர் பட்டியல் தயாரிப்பு பணி தீவிரம்
மாநிலம் முழுவதும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கும் பணி, தீவிரமாக நடந்து வருகிறது. இப்பணிகளை எக்காரணங்கள் கொண்டும், பிரவுசிங் சென்டரில் மேற்கொள்ள தலைமையாசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை தடை விதித்துள்ளது.
இன்று குரூப் 4 தேர்வு- வீடியோவில் கண்காணிக்க தேர்வுத் துறை உத்தரவு
தமிழகத்தில் இன்று குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு பல்வேறு இடங்களில் நடைபெறுகிறது. அனைத்து தேர்வு மையங்களையும் ஆன்லைன் மூலம் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Saturday, December 20, 2014
பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் - மாணவர்களுக்கான எளிய கையேடு
CLICK HERE - SSLC SOCIAL SCIENCE SHORT GUIDE STUDY MATERIAL
நன்றி
க. சந்தோஷ சபரிஷ்
பட்டதாரி ஆசிரியர்
அரசு உயர்நிலைப் பள்ளி
அரங்கல்துருகம் - 635811
வேலூர் மாவட்டம்.
பத்தாம் வகுப்பு 2014 அரையாண்டுப் பொதுத் தேர்வின் கணிதப் பாடத்திற்கான விடைக்குறிப்பு
CLICK HERE - 10 th HALF-YEARLY DEC/14 MATHS EXAM ANSWER KEY
நன்றி..
க. நாகராஜன்,
பட்டதாரி ஆசிரியர்,
அஞ்சுகம் முத்துவேலர் அரசினர் மேல்நிலைப்பள்ளி,
திருக்குவளை - 610204,
நாகப்பட்டினம் மாவட்டம்.
7598868760, 9524302724.
தமிழகத்தில் பிளஸ் 2 அரசு பொது தேர்வில் தட்டச்சு பாடம் செய்முறைத் தேர்வு பாடமாக மாற்றம்
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தொழிற்கல்வி பாடமான தட்டச்சுப் பாடம் கடந்த 1978–1979 ஆம் கல்வியாண்டு முதல் எழுத்துப் பாடமாக இருந்தது. தற்போது மார்ச் 2015ல் நடைபெற உள்ள அரசு பொதுத் தேர்வில் தட்டச்சு பாடத்தை செய்முறை பாடமாக மாற்றி பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் சபீதா உத்தரவிட்டுள்ளார்
கணினி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நிறுத்திவைப்பு
தமிழகத்தில் 652 கணினி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தாற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் 652 கணினி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர் என அறிவிக்கப்பட்டது.
ஆசிரியரை கேலி செய்த புகார்: மாணவனை பள்ளியில் சேர்க்க அனுமதி
கமுதி அருகே கீழபருத்தியூர் பிச்சை தாக்கல் செய்த மனு: எனது மகன் திருச்சுழி அருகே வீரசோழன் அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ் 2 படித்தார். அரையாண்டு தேர்வின் போது கண்காணிப்பாளரான ஒரு ஆசிரியரை சில மாணவர்கள் கேலி செய்தனர்.
பாலிடெக்னிக் புதிய பாடத் திட்டம்: கருத்துகள் வரவேற்பு
பாலிடெக்னிக்குகளுக்கான பாடத் திட்டத்தை வருகிற 2015-16-ஆம் கல்வியாண்டில் மாற்றியமைக்க தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகம் முடிவு செய்துள்ளது.
அரசுப் போக்குவரத்துக் கழக பணி நியமனம்: நேர்முகத் தேர்வு மூலம் மட்டுமே நிரப்பக் கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு
தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் பணி நியமனங்கள் நேர்முகத் தேர்வு மூலமாக மட்டுமே நடைபெறக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டது.
மாணவர்களுக்கு என்.சி.சி., கட்டாயமில்லை: மத்திய அரசு
கல்வி நிறுவனங்களில், தேசிய மாணவர் படை எனப்படும் என்.சி.சி., மாணவர்களின் பலத்தை, 2 லட்சத்திலிருந்து, 15 லட்சமாக அதிகரிக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக, மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், லோக்சபாவில் தெரிவித்தார்.
பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் 22ல் வெளியீடு
பாலிடெக்னிக் அக்டோபர் பட்டயத் தேர்வு முடிவுகள், வரும், 22ம் தேதி, இணைய தளத்தில் வெளியிடப்பட உள்ளன. தற்போது பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வரும் மாணவர்களுக்கு, தொழில்நுட்ப கல்வி இயக்ககம், அக்டோபரில் நடத்திய, பட்டயத் தேர்வு முடிவு கள், வரும், 22ம் தேதி, www.tndte.com, http://intradote.tn.nic.in ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட உள்ளது.
Friday, December 19, 2014
எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன்; ஆண்களின் மச்ச பலன்கள்
இயற்கையாகவே சருமத்தில் தோன்றுவது தான் மச்சம். இத்தகைய மச்சம் உடலில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் ஏற்படலாம். இவ்வாறு உடலில் தோன்றும் மச்சத்தை அதிர்ஷ்டம் என்று சொல்வார்கள். மேலும் மச்சத்தைப் பற்றி பல நம்பிக்கைகள் மக்கள் மனதில் உள்ளன. அதுமட்டுமல்லாமல், ஜோதிடத்தில் மச்சத்தை வைத்தும் ஒருவரின் வாழ்க்கையைப் பற்றியும் கூறுவார்கள்.
ஆண்களும் மச்சங்களும்:
வலது பொட்டில் மச்சம் இருந்தால் திடீரென பெரும் செல்வமும் புகழும் கிடைக்கும்.
இடது புருவத்தில் மச்சமிருந்தால் பணக்கஷ்டமான வாழ்க்கை அமையும்.
இரு புருவங்களுக்கு மத்தியில் மச்சம் இருந்தால் தீர்காயுள் இருக்கும்.
"அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" - யின் மாநில அமைப்புச் செயலாளர் திரு.குமார்.ஈ.வே.ரா.அவர்களின் சாரணர் இயக்க செயல்பாடுகளை மதுரை ஆட்சியர் மற்றும் மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பாராட்டு
மதுரை மாவட்டம், மேலூர் வட்டம் , கீழையூர் நடுநிலைப்பள்ளியில் நடைப்பெற்ற விழாவில் மதுரை மாவட்ட ஆட்சியர் திரு.சுப்ரமணியன், மேலூர் சட்ட மன்ற உறுப்பினர் திரு. சாமி ஆகியோர் கலந்துக் கொண்டனர். இவ்விழாவில் நம் "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" - யின் மாநில அமைப்புச் செயலாளர் திரு.குமார்.ஈ.வே.ரா. அவர்கள் தலைமையில் பள்ளி சாரணர் மாணவர்கள் அணிவகுப்பு மற்றும் சாரணர் செயல்பாடுகள் செய்துக்காட்டினர். அவர்களின் சிறப்பான செயல்பாடுகளை ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் விழா சிறப்பு அழைப்பாளர்கள் பாராட்டினர்.
652 கணினி பயிர்றுநர்களுக்கான சான்றிதழ் சரிப்பார்ப்பு பணி தற்காலிகமாக நிறுத்திவைப்பு; மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
தமிழ்நாடு அமைச்சுப் பணி - பிரிவு கண்காணிப்பாளர்களுக்கான பணி மாறுதல் (வ.எண்.1 முதல் 74 வரை) கலந்தாய்வு 20.12.2014 அன்றும் இருக்கைப் பணி கண்காணிப்பாளர் பதவி உயர்விற்கு தகுதி வாய்ந்த உதவியாளர்களுக்கு தேர்ந்தோர் பட்டியலில் (வ.எண். 1 முதல் 80 வரை) உள்ளவர்களுக்கு 21.12.2014 அன்றும் சென்னை, பெற்றோர் ஆசிரியர் கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.
CTET-தயாரா? தமிழ்நாட்டில் கேந்திரிய பள்ளிகளின் பட்டியல்
Chennai
1. Chennai (CLRI)2. Chennai (Anna Nagar)
3. Chennai (K.K.Nagar)
4. Chennai (DGI Complex)
5. Chennai (Gill Nagar)
6. Chennai (IIT)
7. Chennai (Island Grounds)
8. Chennai (Menambakkam)
9. Chennai (Tambaram -1)
10. Chennai (Tambaram -2)
மாணவரின் கற்றலை உறுதி செய்யும் திறன் ஒரு ஆசிரியரின் தொழில்திறனை சார்ந்தே இருக்கிறது - பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா
பள்ளிக் குழந்தைகளை 21ம் நூற்றாண்டு குடிமக்களாக உருவாக்க உதவும் சிறப்பு வகுப்பறை நிகழ்வுகள் மற்றும் பயிற்சிகள் சென்னையில் நேற்று தொடங்கியது. மாநில கல்வியியல் மேலாண்மை மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் மேற்கண்ட பயிற்சி மற்றும் மாநாடு 2 நாட்கள் டிபிஐ வளாகத்தில் நடக்கிறது. இதை தொடங்கி வைத்து, பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா பேசியதாவது:
பொதுத்தேர்வு நெருங்குவதால் ஆசிரியர் பணியிடமாற்றங்கள் நிறுத்தம்: அரசு உத்தரவு
பொதுத்தேர்வு நெருங்குவதால் நடப்பு கல்வியாண்டில் இனி ஆசிரியர்கள் பணியிட மாறுதல்கள் எதனையும் மேற்கொள்ளக்கூடாது என்று பள்ளி கல்வி செயலாளர் சபிதா உத்தரவிட்டுள்ளார். ஆசிரியர்கள் கலந்தாய்வு நடந்து முடிந்த பின்னரும் ஆசிரியர்கள் பணியிட மாறுதல்கள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. இதனால் மாணவ - மாணவியரின் கல்வி பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
கல்வித்துறையில் ரூ. 37 லட்சம் மோசடி:அதிகாரிகள், ஆசிரியர்கள் மீது வழக்கு
திருநெல்வேலி மாவட்ட கல்வித்துறையில் ௩7 லட்ச ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் அதிகாரிகள், தலைமை ஆசியர்கள் மீது வழக்குப் பதியப்பட்டது.
திருநெல்வேலியில் 2013 அக்., 26ல் தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற தனித்திறன் போட்டி பரிசளிப்பு விழா நடந்தது. உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன், அறநிலையத்துறை அமைச்சர் செந்துார்பாண்டியன், என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் உஷாராணி, அப்போதைய பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வரமுருகன் பங்கேற்றனர்.
சமூக வலைதளங்களில் இ - மெயிலில் கருத்து பதிவு செய்தால் கைது இல்லை: கருத்து சுதந்திரத்திற்கு ஆபத்தில்லை என மத்திய அரசு விளக்கம்
தகவல் தொழில்நுட்ப சட்டத்தின், 66 - ஏ பிரிவு, உடல் ரீதியாகவோ அல்லது கலாசார ரீதியாகவோ பிறரை மிரட்டி, இடையூறு செய்ய நினைப்பவர்கள் மேல் தான் பாய வேண்டுமே தவிர, சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிப்பவர்கள் மீது பாயக் கூடாது' என, சுப்ரீம் கோர்ட்டில், மத்திய அரசு தன் தரப்பு கருத்தை பதிவு செய்தது.
10ம் வகுப்பில் மாநிலத்தில் 3ம் இடம் பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு சாவு
கோவை மாவட்டம் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் நேரு காலனியை சேர்ந்தவர் தேவதாஸ். கோவை அரசு போக்குவரத்து கழக மேலாளர். இவரது மனைவி சாந்தி. தனியார் பள்ளி ஆசிரியை. இவர்களது மகள் கீர்த்தனா(17). பொள்ளாச்சி-கோவை ரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவர், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் 3வது இடம் பிடித்தவர் ஆவார்.
10ம் வகுப்பு தனித்தேர்வர்கள் 22 முதல் 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் : தேர்வுத்துறை அறிவிப்பு
10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்கள் 22ம் தேதி முதல் 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு பழைய பாடத்திட்டத்தில் தோல்வியுற்றவர்கள், தோல்வியுற்ற பாடங்களை மட்டும் தற்போதுள்ள பாடத்திட்டத்தில் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம்.
கும்பகோணம் பள்ளி விபத்து வழக்கில்தண்டனையை நிறுத்தி வைக்க மறுப்பு
கும்பகோணம் பள்ளி தீ விபத்தில், 94 குழந்தைகள் பலியான வழக்கில், கீழ்கோர்ட் விதித்த தண்டனையை நிறுத்தி வைக்க, ஐகோர்ட் மறுத்து விட்டது.கும்பகோணம், கிருஷ்ணா அரசு உதவி பெறும் பள்ளியில், 2004 ஜூலை 16ம் தேதி, ஏற்பட்ட தீ விபத்தில், 94 குழந்தைகள் கருகி பலியாயினர்; 18 பேர் காயம் அடைந்தனர்.
குரூப் - 2: 5ம் கட்ட கலந்தாய்வு 24ல் துவக்கம்
கடந்த, 2012ல் எழுத்து தேர்வு நடத்தப்பட்ட, குரூப் -- 2 பணிகளுக்கான, ஐந்தாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு, 24ம் தேதியில் இருந்து துவங்குகிறது. இதுகுறித்த அறிவிப்பு:
2016ல் சி.ஏ., படிப்புக்கு புதிய பாடத்திட்டம்
சி.ஏ., படிப்புக்கு, முற்றிலும் மாற்றியமைக்கப்பட்ட பாடத்திட்டம், 2016ல் அறிமுகம் செய்யப்படுகிறது,'' என, ஐ.சி.ஏ.ஐ., பாடத்திட்டக்குழு தலைவர், ஆடிட்டர் தேவராஜ் ரெட்டி தெரிவித்தார்.இந்திய பட்டயக் கணக்காளர் கூட்டமைப்பு (ஐ.சி.ஏ.ஐ.,), கோவை கிளை மற்றும் சி.ஏ., மாணவர்கள் சங்கம் சார்பில், இரண்டு நாள் கருத்தரங்கு, கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில், நேற்று துவங்கியது.
Thursday, December 18, 2014
பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் பத்தாம் / பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான கையேடு வெளியீடு:
10TH 12 TH STUDY MATERIALS ALL SUBJECT PUBLISHED BY SCHOOL EDUCATION
அரசுப்பள்ளிகளின் 10, 12ம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு விடைத்தாள்கள் பொதுத்தேர்வைப்போல மைய மதிப்பீட்டு முறையில் திருத்தம்
அரசுப்பள்ளிகளின் 10, 12ம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு விடைத்தாள்கள் பொதுத்தேர்வைப்போல மைய மதிப்பீட்டு முறையில் திருத் தும் பணி நேற்று துவங்கியது.
உதவித் தொகைக்கான விண்ணப்பங்கள் டிமாண்ட் ! : ஆதிதிராவிட மாணவ, மாணவியர் தவிப்பு
தமிழக அரசின் சிறப்பு உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பம் இல்லாத காரணத்தினால், மாவட்டத்தில் 14 ஆயிரம் ஆதிதிராவிட மாணவ, மாணவிகள் தவித்து வருகின்றனர். தமிழகத்தை அனைத்து துறையிலும் முதன்மை மாநிலமாக மாற்றிட தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக கல்விக்கு முன்னுரிமை அளித்து சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று உயர் கல்வியைத் தொடர தமிழக அரசு சிறப்பு உதவித் தொகை வழங்கி வருகிறது.
Subscribe to:
Posts
(
Atom
)