Ad Code

Responsive Advertisement

ஆசிரியர்கள் பிஎப் தணிக்கை விவகாரம் 63 தொடக்க கல்வி அலுவலர்களுக்கு நோட்டீஸ்

ஊரா ட்சி மற்றும் நகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் சேமநல நிதி கணக்கு தொடர்பாக, அரசு தகவல் தொகுப்பு விவர மையத்தில்  பதிவு செய்யும் பணி நடக்கிறது. ஆனால், தொடக்க கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளிலும் பணியாற்றும் ஆசிரியர்களின் சேமநல நிதி  கணக்குகள் 2013-14ம் ஆண்டு வரை உள்ள விவரங்களை ஒன்றியம் வாரியாக தகவல் தொகுப்பு ஆணையருக்கு அனுப்பி வைக்கின்றனர்.
இந்நிலையில், கடந்த  மாதம் 28ம் தேதி தகவல் தொகுப்பு விவர மைய ஆணையர் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் 327 உதவி தொடக்க கல்வி அலுவலகங்களின் கணக்குகள்  தணிக்கை முடிந்துவிட்டதாகவும், மீதமுள்ள 63 அலுவலகங்களின் தணிக்கை இன்னும் முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த 63 அலுவலகங்கள்  இன்னும் ஆவணங்களை அனுப்பவில்லை. மேலும், விழுப்புரம், நீலகிரி, திருவள்ளூர், திண்டுக்கல் ஆகிய மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் கீழ் வரும்  உதவி தொடக்க கல்வி அலுவலகங்களை சேர்ந்த அலுவலர்கள் கணக்கு தணிக்கையை முடிக்க ஒத்துழைக்கவில்லை.

இந்த கணக்கு தணிக்கை வரும் 26ம் தேதிக்குள் (நாளை) முடித்து அதன் விவரங்களை சென்னையில் உள்ள மாநில கணக்கு தணிக்கை தலைவரிடம் ஒப்படைக்க  வேண்டும் என்று தொடக்க கல்வித்துறை ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தும் இன்னும் மேற்கண்ட அலுவலகங்கள் விவரங்களை அனுப்பவில்லை என்று  கூறப்படுகிறது. இந்த கணக்கு தணிக்கை செய்ய போதிய கால அவகாசம் அளிக்கப்பட்டும் இன்னும் ஒத்துழைப்பு தராத அலுவலர்களை தொடக்க கல்வித்துறை  கண்டித்துள்ளது. இருப்பினும் தொடக்க கல்வி அலுவலர்கள் சிலர் இந்த பணியை முடிக்காமல் உள்ளதால் அரசுப் பணிகள் நன்னடத்தை விதியை மீறியுள்ளதாக  தொடக்க கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

அதனால், உதவி மற்றும் கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க தொடக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதையடுத்து,  அனைத்து மாவட்டத்தில் உள்ள தொடக்க கல்வி அலுவலர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நாளையுடன் கெடு முடிவதால் மேற்கண்ட அலுவலர்கள் மீது  நடவடிக்கை எடுக்கவும் தொடக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement