Tuesday, May 31, 2016
புதியதோர் சமுதாயம் உருவாக்கிட தயாராவோம்.... நல்ல பாதையை உருவாக்குவோம்... நாம் விதைக்கும் ஒவ்வொரு விதைகளும் ஒவ்வொரு பயன்தரும் நன்விருட்சமாக வளர அயராது உழைப்போம்... நம் தேசம் நம் கையில்.
புதிய
கல்வியாண்டில்
பதிய
காத்திருக்கும்
ஆசிரிய ஏணிகளே!
மாணவ
கூட்டங்களை
கரைசேர்க்க
காத்திருக்கும்
தோணிகளே!
இருக்கும்
பிள்ளைகளை
ஈன்ற
பிள்ளைகளாய்
பாருங்கள்
கற்பித்தல்
சுகமாகும்!
பெற்றோர்கள்
சுவாசிக்க
காற்று கொடுக்க..
நாமோ
வாசிக்க
கற்றுக்கொடுக்கும்
வாத்தியார்கள்..
கடந்த கால
தேர்ச்சி
விழுக்காட்டில்
விழுந்து கிடக்காமல்
புதிய தேர்ச்சிக்காக
எழுந்து நில்லுங்கள்.
கடந்த கால
கசப்புகளை
கசக்கி எறியுங்கள்
பாகற்காய் கூட
பால்கோவா
ஆகும்.
இந்த
சமூகம் நம்மை
மதிக்காமல் இருக்கலாம்
ஆனால் நாம்
சமூகத்தை
மதித்தாகவேண்டும்.
அப்போதுதான்
நாம்
முழு முதல்
ஆசிரியராகிறோம்.
ஏழையைத்
தூக்கி விடும்
ஏகலைவன் நாம்.
பாமரனை
பண்படுத்தும்
பகலவன் நாம்.
கரடு முரடு
கல்லையும
சிலையாக்கும்
சிற்பி நாம்.
மாணவனின்
நடவடிக்கை
நம்மை
சினம் கொள்ளத்
தூண்டும்.
கோபம் மட்டும்
கொடி
பிடிக்க கூடாது.
மாணவன் நம்மை
எதிரியாய்ப்
பார்க்கலாம்
நாம்
மாணவனை
மகனாகப்
பார்க்கலாமே.
கடமையில்
குறை வேண்டாம்
காலத்தில்
தாமதம் வேண்டாம்
கற்பித்தலில்
தயக்கம் வேண்டாம்.
நாம்
நம்மில் உள்ள
நம்பிக்கையை
நம்புவோம்.
இந்தாண்டு
நல்ல ஆசிரியராக
நல்ல மனிதர்களை
உருவாக்கிய
நாயகனாகண
நீங்கள்
மாற்றம் பெற்று
கல்விக்கடவுளாக
வலம் வர
உளமார
வாழ்த்துகிறோம்.....
கல்வியாண்டில்
பதிய
காத்திருக்கும்
ஆசிரிய ஏணிகளே!
மாணவ
கூட்டங்களை
கரைசேர்க்க
காத்திருக்கும்
தோணிகளே!
இருக்கும்
பிள்ளைகளை
ஈன்ற
பிள்ளைகளாய்
பாருங்கள்
கற்பித்தல்
சுகமாகும்!
பெற்றோர்கள்
சுவாசிக்க
காற்று கொடுக்க..
நாமோ
வாசிக்க
கற்றுக்கொடுக்கும்
வாத்தியார்கள்..
கடந்த கால
தேர்ச்சி
விழுக்காட்டில்
விழுந்து கிடக்காமல்
புதிய தேர்ச்சிக்காக
எழுந்து நில்லுங்கள்.
கடந்த கால
கசப்புகளை
கசக்கி எறியுங்கள்
பாகற்காய் கூட
பால்கோவா
ஆகும்.
இந்த
சமூகம் நம்மை
மதிக்காமல் இருக்கலாம்
ஆனால் நாம்
சமூகத்தை
மதித்தாகவேண்டும்.
அப்போதுதான்
நாம்
முழு முதல்
ஆசிரியராகிறோம்.
ஏழையைத்
தூக்கி விடும்
ஏகலைவன் நாம்.
பாமரனை
பண்படுத்தும்
பகலவன் நாம்.
கரடு முரடு
கல்லையும
சிலையாக்கும்
சிற்பி நாம்.
மாணவனின்
நடவடிக்கை
நம்மை
சினம் கொள்ளத்
தூண்டும்.
கோபம் மட்டும்
கொடி
பிடிக்க கூடாது.
மாணவன் நம்மை
எதிரியாய்ப்
பார்க்கலாம்
நாம்
மாணவனை
மகனாகப்
பார்க்கலாமே.
கடமையில்
குறை வேண்டாம்
காலத்தில்
தாமதம் வேண்டாம்
கற்பித்தலில்
தயக்கம் வேண்டாம்.
நாம்
நம்மில் உள்ள
நம்பிக்கையை
நம்புவோம்.
இந்தாண்டு
நல்ல ஆசிரியராக
நல்ல மனிதர்களை
உருவாக்கிய
நாயகனாகண
நீங்கள்
மாற்றம் பெற்று
கல்விக்கடவுளாக
வலம் வர
உளமார
வாழ்த்துகிறோம்.....
ஜூன் கடைசி வாரத்தில் 7 வது ஊதியக்குழுவிற்கு அமைச்சரவையில் ஒப்புதல் கிடைக்கும்.
Central government employees can expect to get some good news trickling in from government sources towards the end of June.

As per reports, the Finance Ministry is likely to table the 7th Pay Commission report to the Cabinet for approval in the last week of June.
The 7th pay panel headed by AK Mathur had recommended the minimum salary for central government employees at Rs 18,000 and maximum salary at Rs 2,50,000. As employees protested against the wage hike calling it the “lowest ever” raise, the government set up the Empowered Committee of Secretaries group to review the AK Mathur-panel’s recommendations.

As per reports, the Finance Ministry is likely to table the 7th Pay Commission report to the Cabinet for approval in the last week of June.
The 7th pay panel headed by AK Mathur had recommended the minimum salary for central government employees at Rs 18,000 and maximum salary at Rs 2,50,000. As employees protested against the wage hike calling it the “lowest ever” raise, the government set up the Empowered Committee of Secretaries group to review the AK Mathur-panel’s recommendations.
அரசு பள்ளிகள் நாளை திறப்பு
தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், நாளை திட்டமிட்டபடி திறக்கப்படுகின்றன. தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆண்டு இறுதி தேர்வுகள் முடிந்து, ஏப்., 22ம் தேதி, கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. அரசு தொடக்க பள்ளிகளுக்கு, மே 1 முதல் விடுமுறை விடப்பட்டது. விடுமுறை முடிந்து, நாளை பள்ளிகள் திறக்கப்படும் என, அறிவிக்கப்பட்டு இருந்தது.
பி.இ., 'ஆன்லைன்' பதிவு: இன்றே கடைசி நாள்
பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர, இதுவரை, 1.76 லட்சம் பேர், அண்ணா பல்கலைக்கு விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பங்களை, 'ஆன்லைனில்' பதிவு செய்ய, இன்று கடைசி நாள். சென்னை, அண்ணா பல்கலையின் இணைப்புக்கு உட்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., - பி.ஆர்க்., போன்ற படிப்புகளில் சேர, தமிழக அரசு சார்பில், அண்ணா பல்கலையில் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்கள், ஏப்., 15 முதல், ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
பஸ்களின் படிக்கட்டுகளில் பயணம் செய்யக்கூடாது: மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடத்திற்கு செல்போன் எடுத்துவர தடை பள்ளிக் கல்வி இயக்குனர் அறிவிப்பு
பள்ளி மாணவ-மாணவிகள் பஸ்களில் படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்யக்கூடாது என்றும், பள்ளிக்கூடத்திற்கு செல்போன்களை எடுத்துவர தடை செய்யப்பட்டுள்ளது என்றும் பள்ளிக் கல்வி இயக்குனர் எஸ். கண்ணப்பன் அறிவித்துள்ளார். இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குனர் எஸ். கண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
கட்டாயக் கல்விச் சட்டத்தில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பள்ளிகளுக்கு விண்ணப்பிக்க செவ்வாய்க்கிழமை (மே 31) கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீத இடங்களை நிரப்ப அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அரசு நிர்ணயித்துள்ள பொருளாதாரத் தகுதி உடையவர்கள் தங்கள் வசிப்பிடங்களுக்கு அருகே உள்ள தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.
10-ஆம் வகுப்பு சிறப்பு துணை பொதுத் தேர்வு: நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் சிறப்பு துணைப் பொதுத் தேர்வுக்கு புதன்கிழமை (ஜூன் 1) முதல் சனிக்கிழமை (ஜூன் 4) வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.
Monday, May 30, 2016
PF என்றால் என்ன,அது எதற்கு,ஏன்,,எவ்வளவு, பிடிக்கிறார்கள்,என தொிந்து கொள்ள!!!.
மாதச் சம்பளம் வாங்கும் பலருக் கும் தங்களது சம்பளம்
எவ்வளவு என்று துல்லியமாகத் தெரியாது. சம்பளத்தில் பிடித்தம் போக இவ்வளவு கையில் கிடைக்கும் என்று சொல்வார்களே தவிர,
மொத்த சம்பளம் எவ்வளவு?
ஆசிரியர்களுக்கு வாசித்தல் பழக்கம் இல்லை-பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன்
ஆசிரியர்களுக்கு வாசித்தல் பழக்கம் இல்லாதது கவலைக்குரியது' என, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.கோடை விடுமுறை முடிந்து, ஜூன் 1ல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. புதிய கல்வி ஆண்டில்,ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பது குறித்த வழிமுறைகளை, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், சுற்றறிக்கையாக அனுப்பி உள்ளார்.
அதன் முக்கிய அம்சங்கங்கள்:
7th Central Pay Commission Report to be put up before Cabinet in June
7th Pay Commission report to be put up before Cabinet in June – 7th CPC implementation Notification to come at the earliest Central government employees can expect to get some good news trickling in from government sourcestowards the end of June.As per reports, the Finance Ministry is likely to table the 7th Pay Commission report to the Cabinet for approval in the last week of June.
பள்ளியில் நீதி போதனை வகுப்பு நடத்த...உத்தரவு!தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்.
பள்ளிகளில், நீதி போதனை வகுப்பு கட்டாயம் நடத்த வேண்டும்' என, தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.கோடை விடுமுறைக்கு பின், நாளை மறுதினம் (ஜூன், 1), அரசு பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அதற்கான ஆயத்த பணிகள் குறித்து, பள்ளி கல்வித்துறை, மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
கணினி வழிக் கல்வியில் சிறப்பாகச் செயல்படும் ஆசிரியர்களை தேர்வு செய்ய கல்வித் துறை உத்தரவு.
அரசுப் பள்ளிகளில் சிறப்பாகப் பணியாற்றும், கணினி வழிக் கல்வியில் ஆர்வமுடன் செயல்படும் ஆசிரியர்களின்பட்டியலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் செவ்வாய்க்கிழமைக்குள் (மே 31) அனுப்ப வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
பி.இ. சேர்க்கை: 2,45,217 பேர் ஆன்லைனில் பதிவு ;விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய நாளை கடைசி.
அண்ணா பல்கலைக்கழகம், அதன் உறுப்புக் கல்லூரிகளில் பி.இ. படிப்பில் சேருவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை ஞாயிற்றுக்கிழமை வரை 2,45,217 பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். 2016-17ஆம் கல்வியாண்டுக்கான பொறியியல் சேர்க்கைக்கு ஆன்-லைன் மூலம் மட்டுமே பதிவு செய்து விண்ணப்பிக்கும் நடைமுறையை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகம் செய்தது...
எம்.பி.பி.எஸ்.: 4 நாள்களில் 13,725 விண்ணப்பங்கள் விநியோகம்
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்களை கடந்த 4 நாள்களில் 13,725 மாணவர்கள் பெற்றுள்ளனர்.எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்புகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான விண்ணப்ப விநியோகம் வியாழக்கிழமை (மே 26) தொடங்கியது.
ஜூலை இரண்டாம் வாரத்தில் சி.பி.எஸ்.இ. சிறப்புதுணைத் தேர்வு.
சி.பி.எஸ்.இ. பிளஸ் 2, பத்தாம் வகுப்புத் தேர்வுகளுக்கான சிறப்பு துணைத் தேர்வுகள் ஜூலை இரண்டாம் வாரத்தில் நடைபெறுகின்றன.இதுகுறித்து சி.பி.எஸ்.இ. தேர்வு நெறியாளர் கே.கே.சௌத்ரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:-
நல்ல புத்தகங்களை மாணவர்கள் வாசிக்க ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும்:பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் வலியுறுத்தல்
பாடப் புத்தகங்களைத் தாண்டி நல்ல புத்தகங்களை வாசிக்க மாணவர்களை ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் எஸ்.கண்ணப்பன் கூறினார்.பள்ளிகள் திறக்கப்பட்ட பின், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விளையாட்டு பல்கலை பணி:15க்குள் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைகளில்,காலியாக உள்ள பணியிடங்களுக்கு, ஜூன், 15க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, பல்கலை பதிவாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
Sunday, May 29, 2016
தமிழில் பிரதமர் அலுவலக இணைய சேவை தொடக்கம்
பிரதமர் நரேந்திர மோடி இணையதளம் மற்றும் சமூக வலைத்தளங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார். ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் மக்களுடன் தகவல்களை பகிர்ந்து வருகிறார்.
பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளன்றே மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தங்கள், நோட்டு புத்தகங்கள், சீருடைகள் உள்ளிட்டவற்றை வழங்குவதற்கான பணிகள் துரிதம்
முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி, பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளன்றே மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தங்கள், நோட்டு புத்தகங்கள், சீருடைகள் உள்ளிட்டவற்றை வழங்குவதற்கான பணிகள் துரிதம் : மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய அனைத்து உள்கட்டமைப்பையும் சீர்செய்து வைத்திருக்கவும் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்
தமிழகத்தில், அரசு பள்ளிகளும், அரசு உதவிபெறும் பள்ளிகளும் கோடை விடுமுறை முடிந்து, ஜுன் 1-ம் தேதி திறக்கப்படுகின்றன.
'அரசு பள்ளிகள், திட்டமிட்டபடி ஜூன், 1ம் தேதி திறக்கப்படும்' என, தமிழக பள்ளி கல்வி இயக்ககம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
கோடை கால வெப்பம், இன்னும், மூன்று நாட்களுக்கு இருக்கும்' என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், 'அரசு பள்ளிகள், திட்டமிட்டபடி ஜூன், 1ம் தேதி திறக்கப்படும்' என, தமிழக பள்ளி கல்வி இயக்ககம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 'பள்ளிகள் திறப்பை ஒத்தி வைக்க வேண்டும்' என, பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் விடுத்த கோரிக்கையை நிராகரித்துள்ளது.
அரசுப்பள்ளியில் பணியாற்றும் நம்மிடம் இருந்து வர வேண்டிய மாற்றங்களும், ஏற்றங்களும்!!!
1. ஆசிரியர்கள் தங்களை ஒரு சமூக மாற்றத்திற்கான விதைகள் என்பதை உணரவேண்டும்.
2. ஒரு சிறந்த ஆசிரியர் தொடர்ந்து தம்முடைய வாசிப்பின் மூலம் தன்னை வளப்படுத்திக் கொண்டே இருக்கவேண்டும்.
3.வகுப்பறையில் தாம் மட்டுமே பேசிக்கொண்டிருக்காமல், மாணவர்களுக்கு தங்கள் கருத்துக்களை கூற வாய்ப்பு தரவேண்டும்.
சேவை வரி 15 சதவீதமாக அதிகரிப்பு ஓட்டல், போன் கட்டணம் உயரும்.
அடுத்த மாதம் முதல், சேவை வரி விகிதம் உயர்த்தப்படுவதால், ஓட்டல், பார்களுக்கு செல்வோர், மொபைல் போன் வாடிக்கையாளர்கள் என, பல தரப்பினரும், கூடுதலாக செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.கடந்த, 2015ல், மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, சேவை வரியை, 12.36சதவீதத்தில் இருந்து, 14 சதவீதமாக உயர்த்துவதாக அறிவித்தார்.
புதிய பஸ் பாஸ் வழங்கும் வரை பள்ளி மாணவ, மாணவிகள் பழைய பாஸ் பயன்படுத்தலாம்
பள்ளி மாணவர்களுக்கு புதிய பாஸ் வழங்கும் வரையில் தற்போதுள்ள பழைய பஸ் பாஸை பயன்படுத்தலாம். நடத்துநர்கள் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது என போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.
சம்பளம் வழங்க கோரி மகனுடன் தலைமை ஆசிரியை உண்ணாவிரதம்
மருத்துவ விடுப்பு நாட்களை, பணி நாட்களாக கருதி, எட்டுமாதம் சம்பளம் வழங்க கோரி, தேனி மாவட்ட தொடக்கக் கல்விஅலுவலகம் முன், பள்ளி தலைமை ஆசிரியை, மகனுடன் உண்ணாவிரதம் இருந்தார்.தேனி மாவட்டம், போடி ஒன்றியம், கூழையனுார் அரசு நடுநிலைப் பள்ளி தலைமைஆசிரியை கற்பகம், 46. இதற்கு முன், இவர் குண்டல்நாயக்கன்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில், தலைமை ஆசிரியையாக பணிபுரிந்தார்.
மாணவர்களுக்கான திட்டங்களுக்கு ரூ.3,300கோடி ஒதுக்கீடு.
பள்ளி மாணவர்களுக்கான, 14 வகை நலத் திட்டங்களுக்கு, 3,300கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறையின், புதிய அமைச்சர் பெஞ்சமின் தலைமையில், துறை ரீதியான முதல் ஆய்வுக் கூட்டம் சென்னையில் நடந்தது.
Saturday, May 28, 2016
சுட்டெரிக்கும் கோடை வெப்பத்தால் பள்ளிகள் திறக்கப்படுவது தள்ளிப்போகுமா?- அக்னி வெயில் முடிந்ததும் அரசு பரிசீலிக்கும் என தகவல்
சுட்டெரிக்கும் கோடை வெப்பத்தால் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகுமா? என்று மாணவர்களும், பெற்றோர்களும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ள நிலையில், அக்னி வெயில் முடிந்ததும் இதுகுறித்து பரிசீலிக்க இருப்பதாக அரசு வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் பள்ளிகள் ஜுன் 1 ம் தேதி திட்டமிட்டபடியே துவங்கும்
தமிழகத்தில் பள்ளிகள் ஜுன் 1 ம் தேதி திட்டமிட்டபடியே துவங்கும் . பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பெஞ்சமின் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு
புதுச்சேரியில் பள்ளிகளின் கோடை விடுமுறை: ஜூன் 6-ம் தேதி வரை நீட்டிப்பு
புதுச்சேரியில் கடும் கோடை வெப்பம் நிலவி வருவதால் பளளிகளின் விடுமுறைக்காலம் வரும் ஜூன் 6-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கல்வித்துறை இயக்குநர் ல.குமார் வெளியிட்ட அறிக்கை:
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை முன்னதாக வெளியிட்ட அரசு ஊழியர் பணியிடை நீக்கம்
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாகவே வெளியிட்ட அரசு ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பிளஸ்-2 தேர்வு முடிவு கடந்த 17-ம் தேதி காலை 10.31 மணிக்கு வெளியிடப்படும் என்று அரசு தேர்வுத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
மாணவர்களை கண்காணிக்கும் 'ஆப்ரேட்டிங் சிஸ்டம்'
பள்ளி வாகனங்களில் மாணவர்கள் செல்வதை பெற்றோர் வீட்டில் இருந்தே எஸ்.எம்.எஸ்., மூலம் அறிந்து கொள்வதற்கான ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை காரைக்குடி கிட் அன்ட் கிம் இன்ஜி., கல்லுாரி கணிப்பொறியியல் துறை மாணவிகள் நாச்சம்மை, விஜயராணி பேராசிரியர்கள் சுசில்குமார் உதவியுடன் கண்டுபிடித்துள்ளனர். 'ஜி.பி.எஸ்., ஜி.எஸ்.எம் அன்ட் கிளவுட் மெசேஜிங்' தொழில் நுட்பத்தில் இயங்குகிறது.
எம்.பி.பி.எஸ்., விண்ணப்பத்தில் குளறுபடி?பதிவு எண் குழப்பம்; மாணவர்கள் தவிப்பு
எம்.பி.பி.எஸ்., விண்ணப்ப படிவத்தில், பதிவு எண் எழுதுவது தொடர்பாக குளறுபடி ஏற்பட்டுள்ளதால், பெற்றோர், மாணவர் குழப்பம் அடைந்துள்ளனர். மத்திய அரசின், அவசர சட்டம் காரணமாக, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் மாணவர் சேர்க்கை சிக்கல் தீர்ந்ததால், தமிழகத்தில், மே, 26 முதல், அரசு மருத்துவ கல்லுாரிகளில், விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. மாணவர்களும் ஆர்வமுடன் விண்ணப்பங்கள் பெற்று வருகின்றனர்.
இன்ஜி., கவுன்சிலிங்: மூன்று நாட்களே அவகாசம்
அண்ணா பல்கலை இணைப்பிலுள்ள இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர, அண்ணா பல்கலையின் இன்ஜி., கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும். இந்த ஆண்டு கவுன்சிலிங்குக்கான விண்ணப்ப பதிவு ஏப்ரல், 15ல் துவங்கியது. இதுவரை, 'ஆன்லைன்' மூலம், 2.38 லட்சம் பேர் தங்கள் பெயர், விவரங்களை பதிவு செய்துள்ளனர்.
அரசு ஐ.டி.ஐ., மாணவர் சேர்க்கை
அரசு தொழிற்பயிற்சி நிலையமான, ஐ.டி.ஐ.,க்களில் சேர, ஜூன் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
Friday, May 27, 2016
நீங்கள் NHIS(New Health Insurance Scheme) சந்தாதாரரா/சார்ந்தவரா...அவசரத்திற்கு மருத்துவ மனையில் சேர்க்க மருத்துவமனை நிர்வாகம் ஒத்துழைப்பு தரவில்லை என்றால் நீங்கள் தொடர்பு கொள்ளவேண்டியது அந்தந்த மாவட்ட(NHIS) ஒருங்கிணைப்பாளர்களைத்தான்...
1 Ariyalur The District Collector Office, Md India Health Care Services (Tpa) Pvt., Ltd , Jayankondam Main Road, Ariyalur.621 704. Mr.Dhavabalan 7373703101
2 Chennai #27, Lakshmi Towers, Dr.Rk Salai, Mylapore, Chennai 6000004 Mr.Jayaraj 7373703102
3 Coimbatore 89,Grey Town, Near Nehru Stadium, Gandhipuram, Coimbatore-641018. Mr.Thangarasu 7373703104
4 Cuddalore No.10 A/1, Siva Complex (Basement), Imperial Road,Cuddalore – 607 002, Mr.Selvakumar 7373703105
2 Chennai #27, Lakshmi Towers, Dr.Rk Salai, Mylapore, Chennai 6000004 Mr.Jayaraj 7373703102
3 Coimbatore 89,Grey Town, Near Nehru Stadium, Gandhipuram, Coimbatore-641018. Mr.Thangarasu 7373703104
4 Cuddalore No.10 A/1, Siva Complex (Basement), Imperial Road,Cuddalore – 607 002, Mr.Selvakumar 7373703105
100 யூனிட் இலவச மின்சார திட்டம் அமலுக்கு வந்தது தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மின் கட்டண சலுகை எவ்வளவு கிடைக்கும்? அதிகாரி விளக்கம்
தமிழக முதல்- அமைச்சராக 6-வது முறையாக ஜெயலலிதா கடந்த 23-ந் தேதி பதவி ஏற்றார்.
இலவச மின்சாரம்
பதவி ஏற்ற உடன் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் 5 முக்கிய அறிவிப்புகளுக்கு ஒப்புதல் அளித்து, அதற்கான கோப்புகளில் கையெழுத்திட்டார்.
அதில் ஒன்று, அனைத்து குடும்பங்களுக்கும் 100 யூனிட் மின்சாரம் கட்டணம் ஏதும் இல்லாமல் இலவசமாக வழங்கப்படும் என்பதாகும். இந்த இலவச மின்சார திட்டம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த இலவச மின்சார திட்டத்தை அமல்படுத்துவதால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1,607 கோடி கூடுதல் செலவு ஆகும்.
TNPSC Departmental Examination - Study Materials & Details
- CLICK HERE - TNPSC Departmental Exam - Subject Codes for SG, BT, PGT
- CLICK HERE - TNPSC Departmental Exam - May 2016 Notification
- CLICK HERE - TNPSC Departmental Exam - Syllabus
- CLICK HERE - TNPSC Departmental Exam - Study Materials
- CLICK HERE - TNPSC Departmental Exam - Old Questions
- CLICK HERE - TNPSC Departmental Exam - Apply online
- CLICK HERE - TNPSC Departmental Exam - Fees details
- CLICK HERE - TNPSC Departmental Exam - Bulletins
- CLICK HERE - TNPSC Departmental Exam - Text Books
TNPSC Departmental Exam - Text Books
List of Books |
---|
Constitution Of India |
Fundamendal Rules of Tamilnadu |
Tamil Nadu State and Subordinate Rules |
Travelling Allowance Rules-2005 (Annexure I) |
Tamil Nadu Budget Manual - Volume I (Pages 1-96, 97-218) |
Tamil Nadu Pension Rules, 1978 (Pages 1-80, 81-150, 151-270, 271-340 ) |
Tamil Nadu Treasury Code - Volume I (Pages 1-76, 77-150, 151-220, 221-296, 297-380, 381-423 ) |
Tamil Nadu Treasury Code - Volume II (Pages 1-102, 103-300, 301-357 ) |
Tamil Nadu Account Code- Volume I (Pages 1-88, 89-152) |
Tamil Nadu Account Code- Volume II (Pages 1-86, 87-175) |
Tamil Nadu Account Code- Volume III (Pages 1-88, 89-188, 189-288, 289-388, 389-511) |
Tamil Nadu Financial Code - Volume I (Pages 1-100, 101-190, 191-290, 291-400, 401-520, 521-641 ) |
Tamil Nadu Financial Code - Volume II (Pages 1-180, 181-340, 341-490, 491-600 ) |
பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பா?
தமிழகத்தில் ஜூன் 1ம் தேதி அனைத்து அரசு பள்ளிகளும் மீண்டும் திறக்கப்பட உள்ளன. தனியார் பள்ளிகள் ஜூன் 2ம் தேதி முதல் 8ம் தேதி வரை பல்வேறு தேதிகளில் திறக்கப்படுகின்றன.சில நாட்களாக தமிழகத்தில் பல நகரங்களில் வெயில் 38 டிகிரி செல்சியசை தாண்டியுள்ளது.
100 யூனிட் மின்சாரம் இலவசம்: கணக்கீடு எவ்விதம்? மின்சார வாரியம் அறிவிப்பு
தமிழகத்தில் வீடுகளுக்கு 100 யூனிட் மின்சார இலவசம் என்ற அறிவிப்பையடுத்து, மின்கட்டணம் எவ்வாறு கணக்கிடப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தகவல் வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள அனைத்து வீட்டு மின்நுகர்வோருக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வு: விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்த, வருகை தராத மாணவர்கள் சிறப்பு துணைத் தேர்வை எழுத வெள்ளிக்கிழமை (மே 27) வரை விண்ணப்பிக்கலாம். பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்த, வருகை தராத மாணவர்களுக்காக வரும் ஜூன் 22-ஆம் தேதி தொடங்கி ஜூலை 4-ஆம் தேதி வரை சிறப்பு துணைத் தேர்வு நடைபெறுகிறது.
பள்ளிகளில் சாதி, மதத்தை தெரிவிக்க வற்புறுத்தக் கூடாது என வழக்கு: அரசு பதிலளிக்கும்படி உயர் நீதிமன்றம் உத்தரவு
பள்ளி சான்றிதழில் சாதி, மதத்தைத் தெரிவிக்கும்படி மாணவர்களை வற்புறுத்தக் கூடாது என தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், ஜூன் 15 ஆம் தேதிக்குள் அரசின்கருத்தை தெரிவிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ஜி.பாலகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில்,
இரண்டாம் கட்ட 'நீட்' தேர்வு அறிவிப்பு: ஜூன் 21 வரை விண்ணப்பிக்க அவகாசம்
நாடு முழுவதும் மாணவர்களிடம் பரபரப்பை ஏற்படுத்திய மருத்துவ நுழைவுத் தேர்வான, 'நீட்' இரண்டாம் கட்ட தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. 'அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்பில் சேர, மருத்துவ நுழைவுத் தேர்வான, நீட் தேர்வை கட்டாயம் எழுத வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது.
கலை கல்லூரிகளில் விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் தர கோரிக்கை
கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், விண்ணப்பம் வழங்குவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் சேர, விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. விண்ணப்பத்தை பெற்ற மாணவர்கள், பிளஸ் 2 தேர்வு வெளியான, 10 நாட்களுக்குள் கல்லுாரிகளில் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Thursday, May 26, 2016
வீடுகளில் 100 யூனிட் இலவச மின்சாரம்: இரு மாதத்திற்கு ரூ.350 மிச்சம்
வீடுகளில், 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதன் மூலம், இரண்டு மாதங்களில், 500 யூனிட் மேல் மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளில், 350 ரூபாய் மட்டும் மிச்சம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தமிழ்நாடு மின் வாரியம், வீடுகளில்,
* 0 - 100 யூனிட்
* 0 - 200 யூனிட்
* 201 - 500 யூனிட்
* 500 யூனிட் மேல் என்ற பிரிவுகளில், இரண்டு
மாதங்களுக்கு, ஒரு முறைகட்டணம் வசூலிக்கிறது.
பள்ளி திறந்த முதல் நாளில்நோட்டு - புத்தகம், சீருடை
'தமிழகத்தில், கோடை விடுமுறை முடிந்து ஜூன், 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. கடும் கோடையால், இந்த தேதியை தள்ளி வைக்க, பெற்றோர், ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதிய மின்கட்டண அட்டவணை வெளியீடு!
100 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து மாற்றியமைக்கப்பட்ட மின்கட்டண விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி முதல் 100 யூனிட்கள் இலவசம் என்பதால், அதற்கு கட்டணமில்லை. அதற்கு மேல் ஒரு யூனிட் 1.5 ரூபாய் வீதத்தில் கணக்கிடப்பட்டு, 120-வது யூனிட்டில் இருந்து கட்டணம் வசூலிக்கப்படும்.
எம்.பி.பி.எஸ்., விண்ணப்பம் இன்று முதல் வினியோகம் ஜூன் 20ல் முதல் கட்ட கலந்தாய்வு
பொது நுழைவுத் தேர்வுக்கான சிக்கல் தீர்ந்ததால், தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, இன்று முதல் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படுகின்றன. 'ஆன்லைன்' வழியேயான விண்ணப்ப வினியோகம், நேற்று துவங்கியது.
அரசு ஊழியர்களுக்கான வாடகை வீடு ஒதுக்கீட்டை புதுப்பிப்பதில் மாற்றம்
தமிழகத்தில், அரசு ஊழியர்களுக்கான வாடகை வீடு ஒதுக்கீட்டை புதுப்பிக்க, 'ஆன்லைன்' முறை கட்டாயமாகிறது. இதற்கான நடவடிக்கையை வீட்டுவசதி வாரியம் துவக்கி உள்ளது. தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்காக, பிரத்யேக வாடகை குடியிருப்பு திட்டத்தை வீட்டுவசதி வாரியம் செயல்படுத்தி வருகிறது. சென்னையில், 17 இடங்களிலும், மாவட்ட தலைநகரங்களிலும், இத்திட்டத்துக்காக கட்டப்பட்ட வீடுகள் பயன்பாட்டில் உள்ளன.
மாநில முதல் மாணவர்களின் 'டிப்ஸ்'
பத்தாம் வகுப்பு தேர்வில் விருதுநகர் பெரிய வள்ளிக்குளம் நோபிள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் ஆர். சிவகுமார் 499 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தார்,இவர் தமிழில் 99, மற்ற பாடங்களில் 1௦௦ மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவரது சொந்த ஊர் அருப்புக்கோட்டை. தற்போது விருதுநகரில் வசிக்கிறார்.அவர் கூறியதாவது:
Wednesday, May 25, 2016
பள்ளிக்கல்வித் துறையின் 25 ஆசிரியர்களுக்கு 3 நாள் பயிற்சி இன்று தொடக்கம்: அனைத்துப் பாடங்களும் டிஜிட்டல்மயமாகிறது.
தமிழக பள்ளிக்கல்வித் துறையின் பாடத்திட்டங்கள் அனைத்தையும் மின்னியம் (டிஜிட்டல்) ஆக்குவதற் கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்தப் பணிகளை விரைந்து முடிப்பதற்காக தமிழகம் முழுவதும் இருந்து தேர்வு செய்யப்பட்ட 25 ஆசிரியர்களுக்கு 3 நாள் பயிற்சி வகுப்புகள் இன்று திருச்சியில் தொடங்குகின்றன. அனைத்து மாநில பள்ளிக்கல்வித் துறைகளின் பாடத்திட்டங்களை மின்னியமாக்கும் திட்டத்தை தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (என்சிஇஆர்டி) கடந்த ஆண்டு அறிவித்தது.

சீட்டுக்காக சிபாரிசு... அட்மிஷனுக்கு அலைபாயும் பெற்றோர்... அசரடித்து வரும் அரசுப் பள்ளி!
கல்வியாளர்கள், சமூக நல ஆர்வலர்கள் என பல்வேறு மட்டங்களிலிருந்தும் அரசு பள்ளிகளுக்கு ஆதரவாக எழுந்த குரல்கள், தரம் உயர்த்த வேண்டும் என்ற அக்கறையான பேச்சுகள் போன்றவை சமீப ஆண்டுகளாக தமிழக அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்களையும் கல்வித் துறை அதிகாரிகளையும் உசுப்பிவிட்டு, அரசுப்பள்ளி மாணவர்களையும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக 10ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு தேர்வுகளில் ஸ்கோர் செய்ய வைக்கிறது.
10-ம் வகுப்பில் 1,038 அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி
10-ம் வகுப்பு தேர்வில் 1,038 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளதாக பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் கூறியுள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''தமிழக அரசின் பல்வேறு சிறப்புத் திட்டங்களின் மூலம் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை ஊக்குவித்து கல்வி அளித்ததன் விளைவாகவும், ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்ட சிறப்புப் பயிற்சிகளாலும், இந்த ஆண்டு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசுப்பள்ளிகள் 90.2 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை புரிந்துள்ளன.
10 TH APRIL -2016 Exam Result
நடைபெற்ற ஏப்ரல் 2016 10 வகுப்பு பொதுத்தேர்வினை எழுதிய மாணாக்கர்/தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 25.05.2016 அன்று காலை வெளியிடப்படுகிறது.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதம்.. ஈரோடு மாவட்டத்திற்கு முதலிடம், வேலூருக்கு கடைசி இடம்
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் அடிப்படையில், 98.48 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் ஈரோடு மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. வேலூர் மாவட்டம் 86.49 சதவீதத்துடன் கடைசி இடம் பிடித்துள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 15 முதல் ஏப்ரல் 13ஆம் தேதி வரை நடைபெற்றது. தமிழகம், புதுவையில் 10.72 லட்சம் பேர் எழுதினர். தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது.
பத்தாம் வகுப்பு ரிசல்ட் வெளியானது : முதல் இடம் ராசிபுரம், 2வது இடம் கரூர்
தமிழகம் முழுவதும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின. இதில் ராசிபுரம் எஸ்.ஆர்.வி., எக்செல் பள்ளி 499 மதிப்பெண்கள் பெற்று மாநில முதலிடமும், கரூர் ஸ்டார் மெட்ரிக் பள்ளி மாணவி பிரதீபா 498 மதிப்பெண் பெற்று 2வது இடமும் பெற்றுள்ளனர்.
சதம் அடித்த மாணவர்கள்...
- ஆங்கில பாடத்தில் 51 மாணவர்கள்
- தமிழ் பாடத்தில் 73 மாணவர்கள்.
- கணித பாடத்தில் 18,754 மாணவர்கள்.
மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை: கல்வி இயக்குநர் உத்தரவு
பள்ளிக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தூய்மையான பள்ளி வளாகம், காற்றோட்டத்துடன் கூடிய சுத்தமான வகுப்பறைகள், பாதுகாக்கப்பட்ட சுத்தமான குடிநீர், சுகாதாரமிக்க கழிப்பறைகள் போன்றவற்றை உறுதி செய்யவேண்டும்.
'பள்ளிகளை திறக்க வேண்டாம்'அதிர வைத்த முதல் மனு!
புதிய பள்ளிக்கல்வி அமைச்சரிடம் முதல் கோரிக்கையாக, பள்ளிகள் திறப்பை தள்ளிப் போட ஆசிரியர் சங்கத்தினர் மனு அளித்தனர். பள்ளிக்கல்வி அமைச்சர் பெஞ்சமின், நேற்று காலை பதவியேற்று கொண்டதும் அவருக்கு, கட்சியினர், அதிகாரிகள் மற்றும் ஆசிரியர் சங்கத்தினர் சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தனர்.
பத்தாம் வகுப்பு: விடைத்தாள் மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களது விடைத்தாளை மறுகூட்டல் செய்ய புதன்கிழமை முதல் சனிக்கிழமை (மே 28) வரை விண்ணப்பிக்கலாம்.இந்தத் தேர்வுக்கான முடிவுகள் புதன்கிழமை காலை 9.31 மணிக்கு வெளியிடப்படுகிறது. அதைத் தொடர்ந்து, தேர்வர்கள் தங்களது விடைத்தாளை மறுகூட்டல் செய்ய சனிக்கிழமை வரை விண்ணப்பிக்கலாம்.
எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட இளங்கலை மருத்துவ படிப்புக்கான, தேசிய நுழைவுத் தேர்வில் இருந்து, மாநிலங்களுக்கு ஓராண்டுக்கு விலக்கு அளிக்கும் அவசர சட்டத்திற்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று ஒப்புதல்.
எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட இளங்கலை மருத்துவ படிப்புக்கான, தேசிய நுழைவுத் தேர்வில் இருந்து, மாநிலங்களுக்கு ஓராண்டுக்கு விலக்கு அளிக்கும் அவசர சட்டத்திற்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று ஒப்புதல் அளித்தார்.இதையடுத்து, இந்த ஆண்டு, தமிழக மாணவர்களுக்கு பொது நுழைவுத் தேர்வு இல்லைஎன்பது அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பத்தாம் வகுப்பு 'ரிசல்ட்' '104'ல் சிறப்பு ஆலோசனை
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாவதால்,'104' சேவை மையத்தில் மாணவர்கள், பெற்றோருக்கு இன்றும், நாளையும் சிறப்பு ஆலோசனை வழங்கப்படுகிறது. இதுகுறித்து, சேவை மைய விழிப்புணர்வு மேலாளர் பிரபுதாஸ் கூறியதாவது:
சென்னை பல்கலை தேர்வு அறிவிப்பு
சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வித் தேர்வுகள், மே, 28ல் துவங்க உள்ளன.சென்னை பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி திருமகன், நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:சென்னை பல்கலையின் இளங்கலை, முதுகலை படிப்புகளுக்கான தேர்வுகள், மே, 28ல் துவங்க உள்ளன.
Tuesday, May 24, 2016
சம்பளத்தை அள்ளிக்கொடுப்பது ஐடி துறை மட்டுமல்ல... இந்த படிப்புகளும்தான்!
நவீனத்தையே நடைமுறையாக்கிவிட்ட இன்றைய ட்ரெண்டியான வாழ்க்கைக்கு ஏற்ப, நவீனரக அழகுப் பொருட்களைப் பயன்படுத்தி, நமக்கு நாமே லைக் போட்டுக்கொள்ளும் காலம் இது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் உடைகள், தோள் பை, செருப்பு, செல்போன் உறை என அனைத்திலும் புதுவிதமான ஃபேஷன் வந்துள்ளதை சொல்லித் தெரியவேண்டியதில்லை. தலைமுடி, உடை, ஒப்பனை என நவீன ரகக் கண்டுபிடிப்பபில் நம்மை நாம் இணைத்துக்கொண்டுள்ளோம் என்பதற்கு, இன்றைய ஃபேஷன் டெக்னாலஜி வெளிப்படுத்தும் புத்தம் புது கண்டுபிடிப்புகளே சான்று.
பணத்தை எண்ணித் தரமால், அள்ளித் தரக்கூடிய துறை தகவல் தொழில் நுட்பத் துறை மட்டுமல்ல, வேறு பல படிப்புகளும் உள்ளன. கை நிறைய சம்பளத்துடன் உடனடி வேலை என்ற உத்தரவாதத்துடன் இருக்கும் சில படிப்புகள் குறித்த விவரங்கள் இங்கே....
தமிழகத்தில் இந்த ஆண்டு மருத்துவ நுழைவுத்தேர்வு இருக்காது..
மருத்துவ படிப்பு நுழைவுத் தேர்வு இந்த ஆண்டு ரத்து..
மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டாவின் விளக்கத்தை ஏற்று குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி அவசர சட்டத்தில் கையெழுத்திட்டார்...
மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டாவின் விளக்கத்தை ஏற்று குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி அவசர சட்டத்தில் கையெழுத்திட்டார்...
100 யூனிட் மின்சாரம் இலவசம் என்பதை கட்டணத்தை எப்படி கணக்கிடுவது?
தமிழக முதல்வராக பொறுப்பேற்றவுடன் ஜெயலலிதா அனைவருக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவில், “ மின்சாரம் அனைவருக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒன்று என்பதால் தற்போதைய கணக்கீட்டு முறைப்படி 100 யூனிட் மின்சாரம் கட்டணம் ஏதுமில்லாமல் வீடுகளுக்கு வழங்கப்படும். இதன் காரணமாக அரசு ஆண்டு ஒன்றுக்கு கூடுதலாக 1,607 கோடி ரூபாய் மின் வாரியத்திற்கு மானியமாக வழங்கும். இந்தச் சலுகை 23.5.2016 முதல் நடைமுறைப்படுத்தப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சிப் பள்ளியில் மாணவியர் சேர்க்கைக்கு அலைமோதிய கூட்டம்! தனியார் பள்ளிகளை விஞ்சியது
திருநெல்வேலி மாநகராட்சி மகளிர் பள்ளியில் மாணவிகள் சேர்க்கைக்கு தனியார் பள்ளிகளை விஞ்சும் வகையில் பெற்றோர், மாணவிகள் கூட்டம் திங்கள்கிழமை அலைமோதியது. திருநெல்வேலி மாநகராட்சியின் கட்டுப்பாட்டின் கீழ், கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையில் 5 ஆயிரம் மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
நாளை பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் புதன்கிழமை (மே 25) காலை 9.31 மணிக்கு வெளியிடப்படுகின்றன. இந்தப் பொதுத்தேர்வு மார்ச் 15 முதல் ஏப்ரல் 13-ஆம் தேதி வரை நடைபெற்றது. தமிழகம், புதுவையில் 10.72 லட்சம் பேர் எழுதினர். தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்படவுள்ளன.
பத்தாம் வகுப்பு மாணவ, மாணவிகள் விடைத்தாள் மறுகூட்டலுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் தங்களது விடைத்தாளை மறுகூட்டல் செய்ய புதன்கிழமை (மே 25) முதல் 28-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் புதன்கிழமை காலை 9.31 மணிக்கு வெளியிடப்படுகிறது.
ஆசிரியர் பயிற்சி படிப்புக்கு ஜூன் 10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
தமிழகத்தில் உள்ள ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளதை அடுத்து ஜூன் 10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பி.இ., 2 ம் ஆண்டு நேரடி சேர்க்கை:'ஆன் லைனில்' விண்ணப்பம்
பி.இ., 2 ம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கு ஆன்-லைனில் இன்று (மே 24) முதல் விண்ணப்பிக்கலாம் என, காரைக்குடி பி.இ., 2 ம் ஆண்டு நேரடி சேர்க்கை செயலர் மாலா தெரிவித்தார். அவர் கூறியதாவது:
பிளஸ் 2 உடனடி துணை தேர்வு: ஜூன் 22ம் தேதி துவக்கம்
'பிளஸ் 2 மாணவர்களுக்கான உடனடி துணைத் தேர்வு, ஜூன், 22 முதல் ஜூலை, 4 வரை நடக்கும்' என, அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து, தேர்வுத் துறை இயக்குனர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஜிப்மரில் நர்சிங் நுழைவுத்தேர்வு விண்ணப்பிக்க ஜூன் 8 கடைசி
ஜிப்மரில், பி.எஸ்சி., நர்சிங் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு, வரும் ஜூலை மாதம், 10ம் தேதி நடக்கிறது.புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லுாரியில், நர்சிங் மற்றும் துணை மருத்துவப் படிப்புகளில் ஒட்டு மொத்தமாக, 154 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான, 'ஆன்லைன்' விண்ணப்பங்கள், இணையதளத்தில் வினியோகிக்கப்பட்டு வருகின்றன.
கலை பாடங்களுக்கு 'மவுசு' அதிகரிப்பு:கல்லூரிகளில் அலைமோதும் கூட்டம்
பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்கள் மற்றும் மாணவர்கள் பெறும், 'சென்டம்' எண்ணிக்கை தான், ஒவ்வொரு ஆண்டும், கல்லுாரிகளில் இடம் கிடைப்பதில் பலத்த போட்டியைஏற்படுத்துகிறது. இந்தாண்டு பிளஸ் 2வில், கணிதம், விலங்கியல், தாவரவியல், கணினி அறிவியல் மற்றும் இயற்பியல் ஆகிய பாடங்களில், கடந்த ஆண்டை விட, 'சென்டம்' எடுத்தவர்கள் எண்ணிக்கை, பலமடங்கு குறைந்துள்ளது.
வங்கி சேமிப்பு கணக்கு தொகைக்கு 24 மணி நேரத்துக்கு ஒரு முறை வட்டி
'வங்கி சேமிப்பு கணக்குக்கு தினமும் வட்டி கணக்கிட்டு, 90 நாட்களுக்கு, ஒரு முறை அளிக்கும் நடைமுறை வாடிக்கையாளருக்கு கூடுதல் பயன் அளிக்கும்; வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்' என, வங்கியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சி.பி.எஸ்.இ., 2ம் வகுப்புக்கு தமிழ் பாடம் கட்டாயம்
மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், இந்த ஆண்டு முதல், 2ம் வகுப்புக்கும் தமிழ் பாடம் கட்டாயமாகிறது. தமிழகத்தில், பல்வேறு வகை பள்ளிகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான பாடத்திட்டம் மற்றும் மொழிகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. பிற மாநில எல்லையை ஒட்டிய பகுதிகளிலுள்ள கிருஷ்ணகிரி, தர்மபுரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, நீலகிரி, தேனி போன்ற மாவட்டங்களின் சில பள்ளிகளில், அருகில் உள்ள மாநில மாணவர்கள் படிக்கும் வகையில், பிற மொழி வழி கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது.
Monday, May 23, 2016
17 ஐ.எஸ். அதிகாரிகள் மாற்றம்: முதல்வர் ஜெ., உத்தரவு....
சென்னை: ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றத்தை தொடர்ந்து 17 ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளும் அதிரடியாக மாற்றப்பட்டுளளனர். இதற்கான உத்தரவை முதல்வர் ஜெயலலிதா இன்று பிறப்பித்தார்.
மேலும் 4 புதிய அமைச்சர்கள் நியமனம்: முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையை விரிவாக்கம் செய்துள்ளார்.
தமிழகத்திற்கு மேலும் 4 புதிய அமைச்சர்களை நியமித்து முதல்வர் ஜெயலலிதா, அமைச்சரவையை விரிவாக்கம் செய்துள்ளார்.
அதன்படி, நிலோஃபர் கபில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும்,சேவூர் ராமச்சந்திரன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராகவும், நியமிக்கப்பட்டுள்ளனர்.அதே போல காதி, கிராமத் தொழில் துறை அமைச்சராக ஜி.பாஸ்கரன்,கால்நடைத்துறை அமைச்சராக பாலகிருஷ்ணா ரெட்டி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, நிலோஃபர் கபில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும்,சேவூர் ராமச்சந்திரன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராகவும், நியமிக்கப்பட்டுள்ளனர்.அதே போல காதி, கிராமத் தொழில் துறை அமைச்சராக ஜி.பாஸ்கரன்,கால்நடைத்துறை அமைச்சராக பாலகிருஷ்ணா ரெட்டி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விவசாய கடன் தள்ளுபடி, டாஸ்மாக் நேரம் குறைப்பு: அதிரடியை தொடங்கிய முதல்வர் ஜெயலலிதா - முதல் கையெழுத்திட்ட 5 கோப்புகள்
விவசாய கடன் தள்ளுபடி, டாஸ்மாக் நேரம் குறைப்பு உள்ளிட்ட உத்தரவுகள் அடங்கிய 5 கோப்புகளில் முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்டார்.
இது தொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக முதல்வராக ஆறாவது முறையாக இன்று (23.5.2016) பதவியேற்றுக்கொண்ட ஜெயலலிதா, சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ள தலைமைச்செயலகத்தில் உள்ள முதலமைச்சர் அறைக்கு வருகை தந்து தமது பணியைத் தொடங்கினார்.
முதல்வர் ஜெயலலிதா தனது முதல் பணியாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் முக்கியத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து அதற்குரிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.
ஜூன் 21ல் யோகா தினம் :பள்ளிகளுக்கு உத்தரவு
'அனைத்து பள்ளி மற்றும் கல்லுாரிகளிலும், ஜூன், 21ல், யோகா தினம் கொண்டாட வேண்டும்' என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. நாட்டின் பாரம்பரிய உடற்பயிற்சி கலையான யோகாவை, உலகம் முழுவதும் பிரபலப்படுத்த, மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டது.
பள்ளிகள் திறப்பு தள்ளி போகுமா?
'தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், கோடை விடுமுறையை நீட்டித்து, ஜூன், 1க்கு பதில், பள்ளிகள் திறப்பை, ஜூன், 8க்கு மாற்ற வேண்டும்' என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.தமிழகத்தில், ஏப்ரல், 23 முதல், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கும், மே, 1 முதல் தொடக்க, நடுநிலை பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை துவங்கியது. விடுமுறை காலம் முடிந்து, ஜூன், 1ல், பள்ளிகள் திறக்கப்படும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால், பள்ளிகள் திறப்பை நீட்டிக்க கோரிக்கை எழுந்துள்ளது.
TNPSC Departmental Exam - Study Materials
DEPT EXAM - STUDY MATERIALS |
---|
Constitution Of India |
Fundamendal Rules of Tamilnadu |
Tamil Nadu State and Subordinate Rules |
Travelling Allowance Rules-2005 (Annexure I) |
Tamil Nadu Budget Manual - Volume I (Pages 1-96, 97-218) |
Tamil Nadu Pension Rules, 1978 (Pages 1-80, 81-150, 151-270, 271-340 ) |
Tamil Nadu Treasury Code - Volume I (Pages 1-76, 77-150, 151-220, 221-296, 297-380, 381-423 ) |
Tamil Nadu Treasury Code - Volume II (Pages 1-102, 103-300, 301-357 ) |
Tamil Nadu Account Code- Volume I (Pages 1-88, 89-152) |
Tamil Nadu Account Code- Volume II (Pages 1-86, 87-175) |
Tamil Nadu Account Code- Volume III (Pages 1-88, 89-188, 189-288, 289-388, 389-511) |
Tamil Nadu Financial Code - Volume I (Pages 1-100, 101-190, 191-290, 291-400, 401-520, 521-641) |
Tamil Nadu Financial Code - Volume II (Pages 1-180, 181-340, 341-490, 491-600 ) |
Subscribe to:
Posts
(
Atom
)