Ad Code

Responsive Advertisement

பத்தாம் வகுப்பு 'ரிசல்ட்' '104'ல் சிறப்பு ஆலோசனை

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாவதால்,'104' சேவை மையத்தில் மாணவர்கள், பெற்றோருக்கு இன்றும், நாளையும் சிறப்பு ஆலோசனை வழங்கப்படுகிறது. இதுகுறித்து, சேவை மைய விழிப்புணர்வு மேலாளர் பிரபுதாஸ் கூறியதாவது:

பொதுவாக, தேர்வில் மதிப்பெண் குறைவு, தோல்வி காரணமாக, மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பர். இந்த நேரத்தில் பெற்றோர் திட்டுவது, மாணவர்களிடம் விபரீத எண்ணங்களை ஏற்படுத்தி விடும். பெற்றோர் விழிப்போடு இருக்க வேண்டும். ஆறுதல் படுத்துங்கள்; முடியாவிட்டால், ஒரு முறை, '104'ஐ அழையுங்கள்; உளவியல் ரீதியாக, இன்றும், நாளையும் சிறப்பு ஆலோசனைகளை தருகிறோம்.இது, நல்ல பலன் தரும். இதற்காக, கூடுதலாக உளவியல் ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் மட்டுமல்ல, பெற்றோரும் ஆலோசனை பெறலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement