Ad Code

Responsive Advertisement

'பள்ளிகளை திறக்க வேண்டாம்'அதிர வைத்த முதல் மனு!

புதிய பள்ளிக்கல்வி அமைச்சரிடம் முதல் கோரிக்கையாக, பள்ளிகள் திறப்பை தள்ளிப் போட ஆசிரியர் சங்கத்தினர் மனு அளித்தனர். பள்ளிக்கல்வி அமைச்சர் பெஞ்சமின், நேற்று காலை பதவியேற்று கொண்டதும் அவருக்கு, கட்சியினர், அதிகாரிகள் மற்றும் ஆசிரியர் சங்கத்தினர் சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தனர்.


பல்வேறு ஆசிரியர் சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.அப்போது, தமிழ்நாடு கலை ஆசிரியர் சங்க தலைவர் ராஜ்குமார், முதல் கோரிக்கை மனுவை அளித்தார். அதில், 'தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து, ஜூன், 1ம் தேதி அனைத்து அரசு பள்ளிகளும் திறக்கப்படுகின்றன. தற்போது வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. 


எனவே பள்ளிகள் திறப்பை குறைந்தது, 15 நாட்கள் தள்ளிவைக்க வேண்டும்' என, குறிப்பிடப்பட்டுள்ளது.இதுகுறித்து, ஆசிரியர் சங்கத்தினர் கூறும் போது, 'பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க வேண்டும் என, ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் விரும்புகின்றனர்.எனவே, புதிய அமைச்சர் பொறுப்பேற்றதும் அளிக்கப்பட்ட இந்த முதல் மனு மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்' என்றனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement