Ad Code

Responsive Advertisement

ஆசிரியர்களுக்கு வாசித்தல் பழக்கம் இல்லை-பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன்

ஆசிரியர்களுக்கு வாசித்தல் பழக்கம் இல்லாதது கவலைக்குரியது' என, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.கோடை விடுமுறை முடிந்து, ஜூன் 1ல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. புதிய கல்வி ஆண்டில்,ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பது குறித்த வழிமுறைகளை, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், சுற்றறிக்கையாக அனுப்பி உள்ளார்.
அதன் முக்கிய அம்சங்கங்கள்:


பள்ளி திறக்கும் முன்பே வளாகத்தை சுத்தம் செய்து, பராமரித்திருக்க வேண்டும்கடந்த ஆண்டை விட, மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும். குறைவாக மாணவர் உள்ள பகுதிகளில், வீடு வீடாகச் சென்று, கல்வி கற்க வராத மாணவர்களை பள்ளியில் சேர்க்க வேண்டும்ஒவ்வொரு நாளும் என்ன பாடம் எடுக்க வேண்டும் என்பது குறித்த, பாடத்திட்டத்தை வாரத்தின் முதல்நாளே ஆசிரியர்கள் தயார் செய்து, தலைமை ஆசிரியர் பார்வைக்கு அனுப்ப வேண்டும்நீதி போதனை வகுப்புகளை தவறாமல் நடத்த வேண்டும். மாணவர்களுக்கு வாசிப்புத் திறன் மற்றும் எழுத்து பயிற்சியை அதிகரிக்க வேண்டும்ஆசிரியர்களும், தங்கள் வாசித்தல் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்; பல ஆசிரியர்கள், வாசிப்பில் ஆர்வம் காட்டாதது கவலைக்குரியது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement