Ad Code

Responsive Advertisement

எம்.பி.பி.எஸ்.: 4 நாள்களில் 13,725 விண்ணப்பங்கள் விநியோகம்

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்களை கடந்த 4 நாள்களில் 13,725 மாணவர்கள் பெற்றுள்ளனர்.எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்புகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான விண்ணப்ப விநியோகம் வியாழக்கிழமை (மே 26) தொடங்கியது.

சென்னை உள்பட 20 அரசு மருத்துவக் கல்லூரிகள், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் விண்ணப்பத்தைப் பெறலாம்.முதல் நாளில் 6,123 பேரும், வெள்ளிக்கிழமை 6,051 பேரும், சனிக்கிழமை 1,381 பேரும், ஞாயிற்றுக்கிழமை 170 பேரும் என மொத்தம் 13,725 பேர் விண்ணப்பத்தைப் பெற்றுள்ளனர்.

ஆன்லைன் மூலமும்...:

இதுதவிர, சுகாதாரத் துறையின் இணையதளம் ஜ்ஜ்ஜ்.ற்ய்ட்ங்ஹப்ற்ட்.ர்ழ்ஞ் மூலமும் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.ஜூன் 6 கடைசி: விண்ணப்பத்தைப் பெற ஜூன் 6-ஆம் தேதி கடைசி நாளாகும். பூர்த்தி செய்த விண்ணப்பம் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அலுவலகத்துக்கு வந்துசேர கடைசி நாள் ஜூன் 7-ஆம் தேதியாகும்.நேரடியாக அளிக்க வசதி: சென்னை, புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்தோர் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை நேரடியாக அளிப்பதற்காக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்விதேர்வுக் குழு அலுவலக வாயிலில் பெட்டி வைக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்..

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement