Ad Code

Responsive Advertisement

புதியதோர் சமுதாயம் உருவாக்கிட தயாராவோம்.... நல்ல பாதையை உருவாக்குவோம்... நாம் விதைக்கும் ஒவ்வொரு விதைகளும் ஒவ்வொரு பயன்தரும் நன்விருட்சமாக வளர அயராது உழைப்போம்... நம் தேசம் நம் கையில்.

புதிய
கல்வியாண்டில்
பதிய
காத்திருக்கும்
ஆசிரிய ஏணிகளே!

மாணவ
கூட்டங்களை
கரைசேர்க்க
காத்திருக்கும்
தோணிகளே!

இருக்கும்
பிள்ளைகளை
ஈன்ற
பிள்ளைகளாய்
பாருங்கள்
கற்பித்தல்
சுகமாகும்!

பெற்றோர்கள்
சுவாசிக்க
காற்று கொடுக்க..
நாமோ
வாசிக்க
கற்றுக்கொடுக்கும்
வாத்தியார்கள்..

கடந்த கால
தேர்ச்சி
விழுக்காட்டில்
விழுந்து கிடக்காமல்
புதிய தேர்ச்சிக்காக
எழுந்து நில்லுங்கள்.

கடந்த கால
கசப்புகளை
கசக்கி எறியுங்கள்
பாகற்காய் கூட
பால்கோவா
ஆகும்.

இந்த
சமூகம் நம்மை
மதிக்காமல் இருக்கலாம்
ஆனால் நாம்
சமூகத்தை
மதித்தாகவேண்டும்.
அப்போதுதான்
நாம்
முழு முதல்
ஆசிரியராகிறோம்.

ஏழையைத்
தூக்கி விடும்
ஏகலைவன் நாம்.

பாமரனை
பண்படுத்தும்
பகலவன் நாம்.

கரடு முரடு
கல்லையும
சிலையாக்கும்
சிற்பி நாம்.

மாணவனின்
நடவடிக்கை
நம்மை
சினம் கொள்ளத்
தூண்டும்.

கோபம் மட்டும்
கொடி
பிடிக்க கூடாது.

மாணவன் நம்மை
எதிரியாய்ப்
பார்க்கலாம்

நாம்
மாணவனை
மகனாகப்
பார்க்கலாமே.

கடமையில்
குறை வேண்டாம்

காலத்தில்
தாமதம் வேண்டாம்

கற்பித்தலில்
தயக்கம் வேண்டாம்.

நாம்
நம்மில் உள்ள
நம்பிக்கையை
நம்புவோம்.

இந்தாண்டு
நல்ல ஆசிரியராக
நல்ல மனிதர்களை
உருவாக்கிய
நாயகனாகண
நீங்கள்
மாற்றம் பெற்று
கல்விக்கடவுளாக
வலம் வர
உளமார
வாழ்த்துகிறோம்.....

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement