Ad Code

Responsive Advertisement

பத்தாம் வகுப்பு ரிசல்ட் வெளியானது : முதல் இடம் ராசிபுரம், 2வது இடம் கரூர்

தமிழகம் முழுவதும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின. இதில் ராசிபுரம் எஸ்.ஆர்.வி., எக்செல் பள்ளி 499 மதிப்பெண்கள் பெற்று மாநில முதலிடமும், கரூர் ஸ்டார் மெட்ரிக் பள்ளி மாணவி பிரதீபா 498 மதிப்பெண் பெற்று 2வது இடமும் பெற்றுள்ளனர்.


தமிழகம் முழுவதும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச், 15ல் துவங்கி, ஏப்ரல் 13ல் முடிவடைந்தது. மொத்தம் 10.50 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வில் பங்கேற்றனர். இவர்களில், 7,000 பேர் தமிழ் அல்லாத பிறமொழியை தாய்மொழியாக கொண்டு தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் இன்று காலை, 9:31 மணிக்கு வெளியாகின. இதில் ராசிபுரம் எஸ்.ஆர்.வி., எக்செல் பள்ளி 499 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதாலிடம் பிடித்துள்ளது. மாநிலத்தின் 3வது இடத்தையும் இப்பள்ளியே பெற்றுள்ளது. மாநில 2வது இடத்தை கரூர் ஸ்டார் மெட்ரிக் பள்ளி மாணவி பிரதீபா பெற்றுள்ளார். இவர் 498 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.


தேர்வர்கள் தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி, www.tnresults.nic.in , www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணைய தளங்களில் தெரிந்து கொள்ளலாம். மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்கள், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்கள் மற்றும் பள்ளிகளிலும், மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறியலாம்.


தற்காலிக சான்றிதழ்களை, www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், ஜூன், 1 முதல் மாணவர்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலமும், பதிவிறக்கம் செய்த சான்றிதழ்கள் ஜூன், 1ல் கிடைக்கும் என, அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள், மே, 28ம் தேதிக்குள் வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement