Ad Code

Responsive Advertisement

ஆசிரியர் பயிற்சி படிப்புக்கு ஜூன் 10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் உள்ள ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளதை அடுத்து ஜூன் 10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. 


தமிழ்நாடு ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் கீழ், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள், அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள், தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் என சுமார் 740 பள்ளிகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 30 ஆயிரம் இடங்கள் உள்ளன. இந்த ஆண்டு மேற்கண்ட பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஒற்றை சாளர முறையின் கீழ் நடக்கிறது. இதற்கான கவுன்சலிங் தமிழ்நாடு ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் நடக்க உள்ளது.


மாணவர் சேர்க்கைக்கான  விண்ணப்பங்கள் கடந்த 20ம் தேதி முதல் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அலுவலகங்கள், மாவட்ட கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. விண்ணப்ப கட்டணம் ரூ.500, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.250 நேரடியாக கொடுத்து பெற்றுக் கொள்ளலாம். மேற்கண்ட ஆசிரியர் பயிற்சியில்(டிடிஎட்) சேர்ந்து படிக்க மேனிலை வகுப்பு தேர்வில் 1200 மதிப்பெண்களுக்கு 540 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 10ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் பெற்ற இடங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement