Monday, November 30, 2015
விடுமுறை '' நாட்களுக்கு பதில், வேறு நாளில் பணிபுரிய வேண்டும், பணிபுரியாவிட்டால் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும்...
மழைக்கால விடுமுறையிலிருந்த பகுதி நேர ஆசிரியர்கள், அதற்குப் பதில், மாற்று நாட்களில் பணியாற்ற வேண்டும்' என, உத்தரவிடப்பட்டுள்ளது. அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டமான,எஸ்.எஸ்.ஏ., இயக்குனரகக் கட்டுப்பாட்டில், கணினி, ஓவியம், உடற்கல்வி உட்பட, பலபகுதி நேர பாடப் பிரிவுகளுக்கு, 16 ஆயிரம் சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
CPS: பங்களிப்பு ஓய்வுதியத் திட்டத்தில் (CPS) உள்ளோர் கவனத்திற்கு...
*பங்களிப்பு ஓய்வுதியத் திட்டத்தில் (CPS) உள்ளோர் கவனத்திற்கு.
* 2013 மார்ச் மாதம் முதல் 2015 பிப்ரவரி மாதம் வரை உள்ள கணக்கீட்டுத்தாள்(Account slip) மாநிலப் புள்ளி விபர மையத்தால் (Govt Data centre) வெளியிடப்பட்டுள்ளது.
NMMS EXAMINATION - 2016
- NMMS Examination - 2016 - Instructions & Application Format
- NMMS EXAM-APPLICATION & INSTRUCTION -LINK 2
தற்போது எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் எழுதலாம்SC / ST மாணவர்கள் 7ம் வகுப்பில் 50 சதவீத மதிப்பெண்களும், மற்ற மாணவர்கள் 55% மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.
Flash News - கனமழை : 14 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு.
- தருமபுரி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
- தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
- அரியலூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
- தஞ்சாவூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை: இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை!
'வங்கக்கடலில், மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால், இன்று முதல், ஐந்து நாட்களுக்கு கனமழை நீடிக்கும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.தமிழகத்தில், வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இரண்டு வாரங்களுக்கும் மேலாக வெளுத்து வாங்கிய மழை, கடந்த சில நாட்களாக சற்று குறைந்துள்ள நிலையில், பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.
மழை விடுமுறை ,ஆசிரியர்களுக்கு கூடுதல் பணி
'மழைக்கால விடுமுறையிலிருந்த பகுதி நேர ஆசிரியர்கள், அதற்குப் பதில், மாற்று நாட்களில் பணியாற்ற வேண்டும்' என, உத்தரவிடப்பட்டுள்ளது. அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டமான, எஸ்.எஸ்.ஏ., இயக்குனரகக் கட்டுப்பாட்டில், கணினி, ஓவியம், உடற்கல்வி உட்பட, பலபகுதி நேர பாடப் பிரிவுகளுக்கு, 16 ஆயிரம் சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பள்ளிகளுக்கு ரூ.125 கோடி சேதம்
தமிழகத்தில், தொடர் மழையால், பள்ளிக்கல்வித் துறைக்கு, 125 கோடி ரூபாய் சேதம் மற்றும் செலவு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில், 6ம் தேதி முதல், 25ம் தேதி வரை கனமழை பெய்ததால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலுார் போன்ற மாவட்டங்களின், பள்ளி, கல்லுாரி கட்டடங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
5 நாட்கள் பணி 10 ஆயிரம் சம்பளம் பகுதி நேர ஆசிரியர்கோரிக்கை.
வாரத்தில் ஐந்து முழு நாட்கள் வேலை, ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும், என பகுதி நேர ஆசிரியர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகம் முழுவதும் 2012 மார்ச்சில் 16,549 பகுதி நேர கலை, ஓவியம், உடற்பயிற்சி, தையல், இசை ஆசிரியர்கள் பணியில் சேர்க்கப்பட்டனர். வாரத்தில் மூன்று அரை நாட்கள் பணி, மாதம் ரூ.5 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டது.
ஆசிரியர்களுக்கு கல்வித்துறை எச்சரிக்கை
'பொதுத் தேர்வு எழுதும் மாணவர் பட்டியலில் தவறுகள் இருந்தால், ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, கல்வித்துறைஎச்சரித்துள்ளது.பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான ஆயத்த பணிகள் நடந்து வருகின்றன. மாவட்டம் தோறும், தேர்வு மையங்களின் எண்ணிக்கை, மாணவர் எண்ணிக்கை விவரங்கள், பள்ளிகளிலிருந்து சேகரிக்கப்படுகின்றன.
10ம் வகுப்பு பொது தேர்வு செய்முறை தேர்வு உண்டு...
'பத்தாம் வகுப்புக்கு பொதுத் தேர்வில், அறிவியல் பாட செய்முறைத் தேர்வு, கண்டிப்பாக உண்டு' என, பள்ளிக்கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. சில ஆண்டுகளாக, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், பிளஸ் 2 மாணவர்களுக்கு நடத்தப்படுவது போல், அறிவியல் பாடத்தில் செய்முறைத் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கு, 25 மதிப்பெண்கள் தனியாக வழங்கப்படுகின்றன. இத்தேர்வுக்கு, இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியலுக்கு தலா, நான்கு செய்முறைப் பயிற்சிகள் வழங்கப்படும். பின், அவற்றில், தலா ஒரு பயிற்சி, செய்முறைத் தேர்வில் வினாவாக வரும்.
கல்விச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை அறிய உத்தரவு: அரசு கல்லூரி பேராசிரியர்கள் அதிருப்தி
போலி கல்விச் சான்றிதழ்கள் கொடுத்து பணியில் சேர்ந்துள்ளனரா என்பதைக் கண்டறிவதற்காக, அரசுக் கல்லூரி பேராசிரியர்களின் அனைத்துச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை அறிய உயர் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னைப் பல்கலைக்கழக தொலைதூர கல்வி நிறுவனத்தில் சேர கால அவகாசம் நீட்டிப்பு..
சென்னைப் பல்கலைக்கழக தொலைதூர கல்வி நிறுவனத்தில், 2015-16 கல்வியாண்டுக்கான பல்வேறு படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது
கல்வி உதவித் தொகை தேர்வு(NMMS): விண்ணப்பங்களை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்...
தேசிய வருவாய் வழி- திறன் கல்வி உதவித் தொகை (என்.எம்.எம்.எஸ்.) தேர்வுக்கான விண்ணப்பங்களை திங்கள்கிழமை (நவ. 30) முதல் பதிவிறக்கம் செய்யலாம்.
Flash News-கனமழை :8 மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு.
*தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
Sunday, November 29, 2015
Flash News : பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை (30/11/2015) விடுமுறை
- கடலூர் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
- புதுச்சேரி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
அழகான கையெழுத்தும் - அழகற்ற கையெழுத்தும்....
சில மாணவர்களுக்கு, இயல்பிலேயே அழகான கையெழுத்து அமையப் பெற்றிருக்கும். சிலருக்கு சுமாராகவும், சிலருக்கு மோசமான நிலையிலும் இருக்கும்.
"எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி' கொள்கையை ரத்து செய்ய வலியுறுத்தல்
பள்ளி மாணவர்களுக்கு எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி அளிக்கும் கொள்கையை ரத்து செய்யும் வகையில், கல்வி உரிமைச் சட்டத்தில் (ஆர்டிஇ) திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பஞ்சாப் உள்ளிட்ட 13 மாநிலங்கள், மத்திய அரசை வலியுறுத்தியுள்ளன.
திருக்குறள் போட்டியில் சாதனை: மாணவர்களுக்கு பார்லி., யில் பாராட்டு
மாநில அளவில் நடந்த திருக்குறள் ஒப்புவித்தல், கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பார்லிமென்டில் டிச.,17ல் பாராட்டு விழா நடக்கிறது.பா.ஜ., எம்.பி., தருண் விஜய் முயற்சியால் மாநில அளவில் பள்ளி,
கல்லுாரி மாணவர்களுக்கு திருக்குறள் ஒப்புவித்தல், கட்டுரை போட்டி நடந்தது. நவ., 1ல் திருவள்ளுவர் மாணவர் இளைஞர் மன்றம் சார்பில் தமிழக அளவில் போட்டிகள் மதுரையில் நடத்தப்பட்டன.
வேலூர் மாவட்டத்தில் - பள்ளியின் பூட்டை உடைத்து கணினி, தொலைக்காட்சி பெட்டிகள் திருட்டு
ஆம்பூர் அருகே ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் பூட்டை உடைத்து கணினி, தொலைக்காட்சிப் பெட்டிகள் திருடுபோனது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
உதவி பேராசிரியர் தேர்வு:பட்டதாரிகள் ஓராண்டு காத்திருப்பு
அரசு இன்ஜி., கல்லுாரி உதவி பேராசிரியர் பணிக்கு எழுத்து தேர்வு அறிவித்து ஓராண்டாகியும் தேர்வு நடத்தாததால், விண்ணப்பதாரர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.தமிழகத்திலுள்ள இன்ஜி., மற்றும் பாலிடெக்னிக் கல்லுாரிகளில், காலியாக இருந்த, 139 உதவி பேராசிரியர் பணியிடத்தை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் கடந்த, ஜூலையில் அறிவிப்பு வெளியிட்டது.
தகுதி தேர்வு விண்ணப்பம் நாளை வெளியீடு
தமிழகத்தில், 8ம் வகுப்பு மாணவர்களுக்கு, தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி திட்டம் கீழ், உதவித்தொகை வழங்கப்படுகிறது.இதை பெறுவதற்கு, தகுதி யான மாணவர்களை தேர்வு செய்ய, அனைத்து வட்டார அளவில், தேர்வு மையம் அமைக்கப்பட்டு, ஜன., 23ல், தேர்வு நடக்க உள்ளது.
'மின் கட்டணம்உயராது'
தமிழ்நாடு மின் வாரியம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், 'மின் கட்டணத்தை உயர்த்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. அதுபோன்ற எந்த திட்டமும்இல்லை' என கூறப்பட்டு உள்ளது.
இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு.குவிகிறது அடுத்த ஆண்டு முதல் மீண்டும் அட்மிஷன் சூடு பிடிக்கும்
தமிழக இன்ஜினியரிங் கல்லுாரிகளில், 90 ஆயிரம் இடங்கள் காலியாகி, இன்ஜி., படிப்புக்கு மவுசு குறைந்தது போன்ற தோற்றம் ஏற்பட்டது. ஆனால், இந்த ஆண்டு ஏராளமான இன்ஜி., மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதால் நிலைமை மாறி உள்ளது. இதன் மூலம், வரும் கல்வி ஆண்டில் இன்ஜி., படிப்புகளுக்கு மீண்டும் பிரகாசமான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
30 லட்சம் பேருக்கு காஸ் மானியம் 'கட்!'
இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்களுக்கு, தமிழகத்தில், 1.60 கோடி வீட்டு சமையல்காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர் உள்ளனர். மத்திய அரசு, மானிய செலவை குறைக்க, ஜனவரி மாதம், நேரடி மானிய திட்டத்தை அறிமுகம் செய்தது.இத்திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர், சந்தை விலையில், சிலிண்டர் வாங்க வேண்டும். பின், அதற்கான மானியம், அவரின் வங்கி கணக்கில் வரவுவைக்கப்படும். தற்போது, ஆண்டுக்கு, 12 சிலிண்டர்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது.
பிளஸ் 2 இடைநிலைத் தேர்வில் ஆங்கிலம், கணிதத்தில் அதிகமானோர் தோல்வி: ஆசிரியர்களுக்கு சிறப்பு கற்பித்தல் பயிற்சி
மதுரை மாவட்டத்தில் சமீபத்தில் நடைபெற்ற இடைநிலைத் தேர்வுகளில் ஆங்கிலம், கணிதத்தில் அதிகமான மாணவர்கள் தோல்வியடைந்திருப்பது தெரியவந்துள்ளது. மதுரை மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு, கடந்த 16 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை இடைநிலைத் தேர்வுகள் நடைபெற்றன.
Saturday, November 28, 2015
விசாலினி என்னும் விருட்சம் !!!
அல்வாவுக்கு மட்டுமல்ல, அறிவுக்கும் திருநெல்வேலி தான் என்று, உலக அரங்கில் உரக்கச் சொல்லியவர். 13 வயதிற்குள், 5 உலக சாதனைகள், 12 சர்வதேச கணினிச் சான்றிதழ்கள் பெற்றவர். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்களின் பாராட்டை, தன் 3 வயதிலேயே பெற்றவர். தன் வீடு முழுவதையும் பரிசுக்கோப்பைகள், கேடயங்கள், சான்றிதழ்கள், மற்றும் பதக்கங்களால் நிறைத்து இருப்பவர்.
Google நிறுவனத்தின் சர்வதேச உச்சி மாநாட்டில் ஒருமணி நேரம் சிறப்புரை ஆற்றிய இக்குழந்தையைப் பார்த்து, பன்னாட்டு அறிஞர்கள் வாயடைத்துப் போயினர். அங்கு The Youngest Google Speaker என்ற பட்டமும் பெற்றார் விசாலினி.
Google நிறுவனத்தின் சர்வதேச உச்சி மாநாட்டில் ஒருமணி நேரம் சிறப்புரை ஆற்றிய இக்குழந்தையைப் பார்த்து, பன்னாட்டு அறிஞர்கள் வாயடைத்துப் போயினர். அங்கு The Youngest Google Speaker என்ற பட்டமும் பெற்றார் விசாலினி.
31.12.2015 இல் D.A 119%
01-01-2016 - ல் அகவிலைப்படி உயர்வு 6%
கூடுதல் (119% + 6%) = D.A 125%.
கணக்கீட்டுக்காக எடுத்துக்கொள்ளும் ஊதியம்:
Pay 100% + D.A 125% (அதாவது 01.01.2016 இல் ஊதியம்)
அறிவித்தபடி அரையாண்டுத் தேர்வு மற்றும் பருவத் தேர்வை முடித்து, அரையாண்டு விடுமுறை விட, பள்ளிகளுக்கு உத்தரவு
அரையாண்டுத் தேர்வு மற்றும் பருவத் தேர்வை ஏற்கனவே அறிவித்தபடி முடித்து, அரையாண்டு விடுமுறை விட, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், 12 வேலை நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு, வெள்ளிக்கிழமை பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
பணிநிரவலால் பதறும் 2 ஆயிரம் ஆசிரியர்கள்: 'கவுன்சிலிங்' நடத்தப்படுமா
மாநிலம் முழுவதும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்- மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப, உபரி ஆசிரியர்கள் 2 ஆயிரம் பேர், கலந்தாய்வு இல்லாமல் விரைவில் பணிமாற்றம் செய்யப்பட உள்ளதால் கலக்கமடைந்துள்ளனர்.
கனமழையின் காரணமாக விடப்பட்ட விடுமுறையை ஈடுகட்ட சனிக்கிழமைகளில் வகுப்புகள்; தலைமை ஆசிரியர்கள் முடிவு
தமிழ்நாட்டில் தீபாவளிக்கு பின்னர் கனமழை பெய்தது. இதன் காரணமாக பள்ளிக்கூடங்களுக்கு 19 நாட்கள் தொடர்ந்து விடுமுறைவிடப்பட்டது. குறிப்பாக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ததால் விடுமுறைவிடப்பட்டது. மற்றும் கடலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களிலும் சில நாட்கள் விடுமுறைவிடப்பட்டது.
தேர்வு நேரத்தில் இடமாற்றம் ஆசிரியர்கள் கடும் அதிர்ச்சி
அரையாண்டுத் தேர்வு நேரத்தில், அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்ய முடிவெடுத்துள்ளதால், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளில் ஆசிரியர்களின் வருடாந்திர பணியிட மாற்றம் மற்றும் உபரி ஆசிரியர்கள் கலந்தாய்வு கடந்த மாதம் தான் முடிந்தது. ஆசிரியர்கள் புதிய இடத்துக்கு சென்று, பாடங்களை நடத்துகின்றனர்.
செய்முறை பயிற்சி தேர்வு உண்டா 10ம் வகுப்பு மாணவர்கள் குழப்பம்
அறிவியல் செய்முறை புத்தகம் வழங்காததால், அதற்கான பயிற்சி தேர்வு நடைபெறுமா என்ற குழப்பம், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.சமச்சீர் கல்வி பாடத்திட்டம் துவங்கிய பின், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, அறிவியல் ஆய்வகத்தில், செய்முறை பயிற்சியும், செய்முறை தேர்வும் நடத்தப்படுகிறது. இதற்காக, 75 மதிப்பெண், 'தியரி'க்கும், 25 மதிப்பெண் அறிவியல் செய்முறை பயிற்சிக்கும் தரப்படுகிறது.
இடை நின்ற மாணவர்களின் பட்டியல் தயாரிக்க உத்தரவு
பள்ளிகளில், 8ம் வகுப்புக்குள் படிப்பை நிறுத்திய மாணவர் பட்டியலை கணக்கெடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய அரசின், கட்டாய இலவச கல்வி உரிமை சட்டத்தின் படி, 14 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும், இலவசமாக, கட்டாயம் கல்வி வழங்க வேண்டும்; இதற்கு மத்திய அரசு மூலம் நிதி உதவி அளிக்கப்படுகிறது.
மின் கட்டணம் உயருமா? நவ.,30ல் தெரியும்
மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து, வரும், 30ம் தேதி நடக்கும், மின் வாரிய இயக்குனர் குழு கூட்டத்தில், முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது. மின் வாரிய தலைவர், தொழில், நிதி, எரிசக்தி துறைகளின் செயலர்கள், மின் உற்பத்தி, மின் பகிர்மானம், மின் திட்டம் ஆகியவற்றின் இயக்குனர்கள், தமிழ்நாடு மின் வாரிய இயக்குனர் குழுவில் உள்ளனர்.
தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு அடுத்த மாதம் SLAS தேர்வு
Conduct of SLAS for the Classes III & V 17.12.2015 &18.12.2015
Conduct of SLAS for the Classes VIII 21.12.2015 &22.12.2015
நாளை முதல் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு; தென் மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இது மேற்கு நோக்கி நகரும்போது நாளை(ஞாயிற்றுக்கிழமை) முதல் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
அரசு பள்ளிகளில் 3 வகை பயிற்சி
பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு, மார்ச் முதல் வாரம் துவங்க உள்ளது. பிளஸ் 2 தேர்வில், நான்கு ஆண்டுகளாக அரசு பள்ளி மாணவர்கள், மாநில ரேங்க் பெறவில்லை; தேர்ச்சி சதவீதத்திலும், பின்தங்கினர். 10ம் வகுப்பு தேர்வில் மட்டும், மாநில ரேங்க் பெற்று, ஆறுதல் அளித்தனர்.ஒவ்வொரு ஆண்டும், 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்தும், அரசு பள்ளிகள் தேர்ச்சியில் பின்தங்குவது, பள்ளி கல்வித் துறை அதிகாரிகளுக்கு, தலை
குனிவை ஏற்படுத்தியது.
92 ஆசிரியர் பணியிடம்விண்ணப்பங்கள் வரவேற்பு
மாற்றுத்திறனாளிகளுக்காக நடத்தப்படும், அரசு சிறப்பு பள்ளிகளில், 92 ஆசிரியர் பணியிடங்கள் உட்பட, 105 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மாணவர்களிடம் உறுதிமொழிஎழுதி வாங்கும் கல்வித்துறை
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடர்பாக, மாணவர்களிடம், புதிதாக உறுதிமொழி எழுதி வாங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, மார்ச் முதல் வாரத்தில் பொதுத்தேர்வு நடக்க உள்ளது. இதற்காக, மாணவர்களிடம், புதிதாக உறுதிமொழி படிவத்தில் கையெழுத்து வாங்கி, தேர்வுத் துறைக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டு உள்ளது.
பிளஸ் 2 மாணவர்களுக்கு புது கட்டுப்பாடு
அரசு பள்ளிகளில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், தேர்வில் அதிக மதிப்பெண் பெற, மூன்று வகை சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு, மார்ச் முதல் வாரம் துவங்க உள்ளது. பிளஸ் 2 தேர்வில், நான்கு ஆண்டுகளாக அரசு பள்ளி மாணவர்கள், மாநில ரேங்க் பெறவில்லை; தேர்ச்சி சதவீதத்திலும், பின்தங்கினர்.
ஜே.இ.இ., மெயின் தேர்வு அறிவிப்பு
பிளஸ் 2 மாணவர்கள் தேர்வுக்கு பின், மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எம்., - ஐ.ஐ.எஸ்., மற்றும் ஐ.ஐ.ஐ.டி., உள்ளிட்டவற்றில் சேர, ஜே.இ.இ., எனப்படும் ஒருங்கிணைந்த பொது நுழைவுத் தேர்வை, இரண்டு கட்டமாக எழுத வேண்டும்.முதல் கட்டமாக, பிரதானத் தேர்வையும், பின், 'ஜே.இ.இ., அட்வான்ஸ்டு' தேர்வையும் எழுத வேண்டும்.
நவ. 30ல் பாலிடெக்னிக் தேர்வு முடிவு
பாலிடெக்னிக் மாணவர்களுக்கு, தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அக்டோபரில் நடத்திய, பட்டயத் தேர்வு முடிவுகள், நவ., 30ல் வெளியாக உள்ளது. தேர்வு முடிவுகளை, www.tndte.com மற்றும் http:/intradote.tn.nic.in(nic e-portal) இணையதளங்களில் பார்க்கலாம்.
ஆன்லைனில் மார்க்!: சி.பி.எஸ்.இ., அறிமுகம்
பிரதமரின், 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தில், அனைத்து துறைகளையும் கணினிமயமாக்க, நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதன் படி, கல்வித் துறையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினி சேவை பிரிவைத் துவக்கி, பாடம் நடத்துதல்; மாணவர்களின் கல்வித் திறனை ஆய்வு செய்தல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
சென்னை பல்கலை தேர்வுகள் தேதி அறிவிப்பு
சென்னை, காஞ்சி மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 12 தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. இதனால், சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்பு கல்லூரிகளில் அன்றைய தினம் தேர்வு நடைபெறவில்லை.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை நாள்களிலும் நுழைவுத் தேர்வுப் பயிற்சி
அரசுப் பள்ளி மாணவர்கள் உயர் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுப் பயிற்சி வகுப்புகள் அரையாண்டு, முழு ஆண்டுத் தேர்வு விடுமுறை நாள்களிலும் நடத்தப்பட உள்ளன. அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் சார்பில், தமிழகம் முழுவதும் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வு பயிற்சி வகுப்புகள் கடந்த மாதம் தொடங்கப்பட்டன.
பிளஸ் 2: தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்க டிச. 4 வரை கால அவகாசம்
வரும் 2016 மார்ச் மாதம் நடைபெற உள்ள பிளஸ் 2 தேர்வுக்கு தனித் தேர்வர்கள் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 4-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு அரசுத் தேர்வுகள் சேவை மையத்தின் மூலம் தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்க நவம்பர் 16 முதல் 27 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.
விஐடி பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு விண்ணப்ப விநியோகம் தொடக்கம்
விஐடி பி.டெக் பொறியியல் பட்டப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு விண்ணப்ப விநியோகத்தை வேந்தர் ஜி.விசுவநாதன் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார். விஐடி பல்கலைக்கழகத்தின் வேலூர், சென்னை வளாகங்களில் நிகழாண்டு பி.டெக் பொறியியல் பட்டப்படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு விண்ணப்பங்கள் நாடு முழுவதிலும் 92 தலைமை தபால் நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.
5,000 சத்துணவு கூடம் மழையால் 'அவுட்'
கனமழையால், 32 மாவட்டங்களில், 5,000 சத்துணவு கூடங்கள் சேதமடைந்துள்ளன. பத்து நாட்களுக்கும் மேலாக, கொட்டித் தீர்த்த மழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலுார் உள்ளிட்ட மாவட்டங்களில், சத்துணவு கூடங்களில் தண்ணீர் புகுந்தது. மேற்கூரையில் தேங்கிய தண்ணீரால், சுவர்களில் கசிவு ஏற்பட்டது. இதனால், அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்கள்சேதமடைந்தன.
Friday, November 27, 2015
ஐ.ஏ.எஸ்., அதிகாரியை எதிர்த்து பேச்சு: 22 தலைமை ஆசிரியருக்கு 'மெமோ'
கல்வி ஆய்வு கூட்டத்தில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி பூஜா குல்கர்னியை எதிர்த்து பேசி, வெளிநடப்பு செய்த, 22 தலைமை ஆசிரியர்களுக்கு, ஒழுங்கு நடவடிக்கை குற்றச்சாட்டின் கீழ், 'நோட்டீஸ்' கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் கற்றல் திறன் குறித்த ஆய்வு கூட்டம், திருவண்ணாமலை மாவட்டம்,செய்யாறில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த மாதம் நடந்தது; 100 தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
7-வது ஊதியக் குழு பரிந்துரைக்கு எதிராக ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்...
தஞ்சாவூர்: 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அண்மையில் வழங்கப்பட்ட 7வது ஊதியக் குழுவின் பரிந்துரையில் குறைந்தபட்ச ஊதியம் அறிவிக்க்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே நடைமுறையில் இருந்த வீட்டு வாடகைப்படி உள்ளிட்டவையும் குறைக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு ஊழியர்கள் குற்றம் சாட்டினர்.
"wi-fi"ஐ விட நூறு மடங்கு அதிவிரைவான வயர்லெஸ் டெக்னாலஜி "li-fi"
தற்போது பயன்படுத்தும் "wi-fi"ஐ விட நூறு மடங்கு அதிவிரைவான வயர்லெஸ் இன்டர்நெட் டெக்னாலஜி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் பெயர் "li-fi" ஆகும். இதன் சிறப்பு, ஒரு நொடிக்கு 1ஜிகாபைட் டேட்டாக்களை அனுப்பக்கூடியது என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா? இந்த வேகத்தை பயன்படுத்தி மிகப்பெரிய ஆல்பம், அதிக டெஃபனிஷன் கொண்ட படங்கள் மற்றும் வீடியோக்களை கண்ணிமைக்கும் நொடியில் டவுன்லோடு செய்யலாம்.
DECEMBER MONTH TRAINING FOR PRIMARY AND UPPER PRIMARY TEACHERS.
டிசம்பர் மாதம் Training.. மாதம்....
*.IED Training: -
(30.11.2015)to (4.12.2015) - 5 days
IED TRAINING for primary teachers
Another 5 days IED training for upper primary teachers
Another 5 days IED training for Angan wadi
*.SMC Training:-
30.11.2015,1.12.2015 - 2 days SMC RPtraining
9.12.2015 to 13.12.2015 - 3days SMC TRAINING (1st Batch)
14.12.2015 to 16.12.2015 - 3 days SMC training (2nd Batch)
தமிழக கல்வித்துறைக்கு 4 ஆண்டுகளில் ரூ.85,680 கோடி ஒதுக்கீடு:அமைச்சர் கே.சி.வீரமணி
நாட்டில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழக அரசு கல்வித்துறை வளர்ச்சிக்காக, கடந்த நான்கு ஆண்டுகளில் இதுவரை ரூ.85,680 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி குறிப்பிட்டார்.
அரையாண்டு தேர்விலும் விடுமுறையிலும் மாற்றமில்லை கல்வி அதிகாரிகள் சுற்றறிக்கை
அரையாண்டுத் தேர்வு மற்றும் பருவத் தேர்வை ஏற்கனவே அறிவித்தபடி முடித்து, கிறிஸ்துமஸ் விடுமுறை விட, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.மழை வெள்ளத்தால், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், 12 வேலை நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு, இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
ஆசிரியர்கள் பி.எப்., கணக்கு மாயம் 81 அதிகாரிகளுக்கு 'நோட்டீஸ்'
மதுரை, காஞ்சிபுரம் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில், ஆசிரியர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கு விவரம் காணாமல் போனதாக புகார் எழுந்துஉள்ளது.தொடக்கக் கல்வித் துறையில், மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சிபகுதிகளில், 5ம் வகுப்பு வரையுள்ள பள்ளிகளில், 1.20 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.
குறைந்த மதிப்பெண் மாணவர்களுக்காக வெற்றிப்படி! மாநகராட்சி பள்ளிகளில் சிறப்பு வகுப்பு
கோவை மாநகராட்சி பள்ளிகளில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்தில், குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்களுக்காக, 'வெற்றிப்படி' என்ற, சிறப்பு வகுப்பு துவங்கப்பட்டுள்ளது.
பாடம் முடிக்காமல் தேர்வா?
வட கிழக்குப் பருவ மழை காரணமாக, 9ம் தேதி முதல், பல்கலை, கல்லுாரிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது; தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.இந்நிலையில், முதலாம் ஆண்டு பி.இ., - பி.டெக்., செமஸ்டர் தேர்வுடிச., 7ல் துவங்கும் என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.
தென் கிழக்கு வங்கக் கடலில் மேலடுக்கு சுழற்சி: நாளை முதல் 2 நாள்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்பு
தென் கிழக்கு வங்கக் கடல், அதை ஒட்டிய பகுதியில் நீடிக்கும் மேலடுக்குச் சுழற்சியானது, அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுப்பெறும் வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இதுகுறித்து மைய அதிகாரிகள் கூறியதாவது:
கலை கல்லூரிகளுக்கு தரவரிசை: யு.ஜி.சி.,
நாட்டில் உள்ள அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளுக்கும், தரவரிசை திட்டத்தை கட்டாயப்படுத்தி, யு.ஜி.சி., சேர்மன் வேத் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார்.அனைத்து கல்லுாரிகளும், மூன்று ஆண்டுகளின் தேர்ச்சி விகிதம், மாணவர் எண்ணிக்கை, ஆராய்ச்சி எண்ணிக்கை, பேராசிரியர் திறன் மேம்பாடு, உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல புள்ளி விவரங்களை, https://www.nirfindia.org/Home இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என, அவர் உத்தரவிட்டு உள்ளார்.
Thursday, November 26, 2015
மாணவர் தரம் உயர ஆசிரியர் தரம் உயர வேண்டும்
அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் பயிற்சி மைய இயக்குநர் டாக்டர் மோகன் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
மாணவர்கள் வகுப்பறையை விருப்பமுடன், ஆர்வமுடன் கவனிக்கும் அளவிற்கு ஆசிரியர்கள் வகுப்பிற்கு தகுந்த பயிற்சியுடன் செல்ல வேண்டும். ஆசிரியர்கள் வகுப்பு எடுக்கும்போது எந்த கர்வமும் கொள்ளக் கூடாது. மாணவர்கள் வகுப்பை விருப்பத்துடன் அனுபவிக்கும் விதத்தில் ஆசிரியர்கள் பாடம் கற்பிக்க வேண்டும். ஆசிரியர்கள் திட்டமிட்டு பயிற்சியுடன் வகுப்பறைக்குச் சென்றால்தான், சிறந்த கல்வித் தரத்தைத் தர இயலும் என்றார் அவர்.
அன்பாசிரியர் 8 - நேசமணி: கணினி மூலம் தேர்வும் மதிப்பீடும்!
போதிப்பவர் எல்லாம் ஆசிரியர் ஆவதில்லை; யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர்.
அன்பாசிரியர் நேசமணி, ஆசிரியர் பயிற்சியில் சேர ஆசைப்பட்டு, அதற்கான மதிப்பெண்கள் போதாததால் பொறியியல் படிப்பைத் தேர்ந்தெடுத்தவர். எதிர்பாராத விதமாக ஆசிரியர் பயிற்சிக்கு இடம் கிடைக்க, பொறியியல் படிப்பைக் கைவிட்டு ஆசிரியரானவர். தொழில்நுட்பத்தின் மேல் தீராத ஆர்வம் கொண்டவர். தகவல் மற்றும் தொலைதொடர்புக்கான தொழில்நுட்ப சாதனையாளர் விருது பெற்றவர். திருப்பூர் கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு வழங்கிய, 'சாதனை ஆசிரியர்' விருதுக்கு சொந்தக்காரர். செயல்வழிக் கற்றல், கணினிவழிக் கற்றல் என இரண்டையுமே பயன்படுத்திக் கற்பித்தலைச் சிறப்பிக்கும் ஆசிரியர்!
அரையாண்டு தேர்விலும் விடுமுறையிலும் மாற்றமில்லை
அரையாண்டுத் தேர்வு மற்றும் பருவத் தேர்வை ஏற்கனவே அறிவித்தபடி முடித்து, கிறிஸ்துமஸ் விடுமுறை விட, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. மழை வெள்ளத்தால், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், 12 வேலை நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு, இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
பள்ளி, கல்லூரிகள் திறந்தாச்சு: ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க தடை
சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில், 18 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பின், இன்று பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்படுகின்றன. வெள்ளம் தேங்கிய சில இடங்களுக்கு மட்டும், இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், நவ., 9 முதல் மழை விடுமுறை துவங்கியது. தீபாவளிக்கு மறுநாள், 11ம் தேதி, சில பள்ளி, கல்லுாரிகள் திறந்தாலும், மழை தொடர்ந்ததால் அரை நாள் மட்டுமே இயங்கின. தொடர்ந்து விடுமுறைமழையின் சீற்றம் அதிகரித்ததால், ஒவ்வொரு நாளும் தொடர்ந்து விடுமுறை அறிவிக்கப்பட்டது.
அரசு ஊழியர்கள் சம்பளம் வாங்க 'ஆதார்' எண் கட்டாயம்? - இல்லாவிடில், 'நவ., மாத சம்பளம் அளிப்பது தாமதமாகும்'
'தமிழக அரசு ஊழியர்கள், நவ., மாத சம்பளம் வாங்க, 'ஆதார்' எண்ணை இணைக்க வேண்டும்' என, சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.தமிழக அரசு ஊழியர்கள், பள்ளி, கல்லுாரி ஆசிரியர்களின் நவம்பர் மாத சம்பள பட்டியல், இன்று தயார் செய்யப்பட்டு, கருவூலங்களுக்கு அனுப்பப்படும். இந்த நிலையில், 'ஆதார் எண் அல்லது ஆதார் எண்ணுக்கு விண்ணப்பம் செய்ததற்கு பெற்ற ஒப்புகை ரசீதை, சம்பள பட்டியல் தயார் செய்யும் அலுவலரிடம், இன்று அளிக்க வேண்டும்' என, அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இல்லாவிடில், 'நவ., மாத சம்பளம் அளிப்பது தாமதமாகும்' என்றும் கூறப்பட்டுள்ளது.
ஊதியக்குழு பரிந்துரைகளைஅமல்படுத்த குழு
ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த, குழு ஒன்றை, மத்திய நிதியமைச்சகம் நியமித்து உள்ளது.ஓய்வுபெற்ற நீதிபதி, ஏ.கே.மாத்துார் தலைமையிலான, ஏழாவது ஊதியக்குழு, தன் பரிந்துரைகளை, மத்திய நிதியமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளது. அதில், மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு, 23 சதவீத ஊதிய உயர்வு வழங்க
பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சீன உப்பில் கலந்துள்ளது பிளாஸ்டிக்!
சீனாவிலிருந்து வரும் அரிசியில், பிளாஸ்டிக் அரிசிகள் கலப்படம் செய்யப்படுவது உறுதியான நிலையில், தற்போது, சீன உப்பில், பிளாஸ்டிக் துகள்கள் கலந்திருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
27, 28, 29–ந்தேதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு?
சென்னை வானிலை மைய அதிகாரி கூறியதாவது:– தென்மேற்கு வங்க கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து விட்டது. தற்போது தெற்கு அந்தமான் கடலில் புதிதாக கடந்த 2 நாட்களாக மேல் அடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.
விருப்ப மொழிப்பாட மதிப்பெண்ணையும் சராசரியில் கணக்கிட முடிவு: பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை
மெட்ரிக் பள்ளி 10ம் வகுப்பு தேர்வுகளில் சிறுபான்மை(விருப்ப)மொழித்தாள் மதிப்பெண்ணையும் சராசரிகணக்கிட பள்ளிக்கல்வித்துறை ஒப்புதல் வழங்க ஆலோசித்து வருகிறது. தமிழகத்தில் மெட்ரிக் பள்ளிகளின் 10ம் வகுப்பு தேர்வில் பகுதி ஒன்று மற்றும் இரண்டில் முறையே ஆங்கிலம், தமிழ் மொழித்தாள்கள், பகுதி 3ல் இதர பாடங்களும், 4ல் விருப்ப (விருப்ப) சிறுபான்மை மொழிப் பாடமும் உள்ளன.
வெள்ளத்திலும் வேலைஆசிரியைகள் அதிருப்தி
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்வதால், மாணவர்களின் பாதுகாப்பு கருதி, சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு, கடந்த சில நாட்களாக விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வர வேண்டும் என, பல தனியார் பள்ளி நிர்வாகங்கள் கட்டாயப்படுத்தி உள்ளன.
சென்னை, காஞ்சி, திருவள்ளூரில் இன்று பள்ளிகள் திறப்பு
கனமழை காரணமாக சென்னை, காஞ்சி, திருவள்–்ளுர் மாவட்டங்களில் 19 நாட்களுக்கு பிறகு பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. இருப்பினும் மழை நீர் சூழ்ந்த பள்ளிகள் இயங்காது என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
சென்னை மாவட்டத்தில் 24 பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை
சென்னை மாவட்டத்தில் உள்ள 24 பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சுந்தரவள்ளி உத்தரவு பிறப்பித்துள்ளார். மற்ற பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல் செயல்படும் என அவர் அறிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற உத்தரவுக்கு மாறாக வி.ஏ.ஓ., தேர்வுக்கு வயது வரம்பு: வேலையில்லா பட்டதாரிகள் ஏமாற்றம்
பட்டதாரிகள் அரசு தேர்வு எழுதுவதற்கு வயது உச்சவரம்பு தேவையில்லை என்ற உச்சநீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை, வி.ஏ.ஓ., தேர்வில் நடைமுறைப்படுத்தாததால், வேலையில்லா பட்டதாரிகள் ஏமாற்றமடைந்து உள்ளனர்.
பாடத்தை கவனிக்காமல் மொபைல்போனில் விளையாட்டு: ஆசிரியர் சோதனையில் சிக்கினர் பள்ளி மாணவியர்
கோவை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது, மொபைல்போனில் விளையாடிக் கொண்டிருந்த மாணவியர் ஐந்து பேர், கையும் களவுமாக சிக்கினர்.
3 நாட்களுக்கு கன மழை
'வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்று அழுத்த தாழ்வு, குறைந்த காற்று அழுத்த தாழ்வு நிலையாக மாறுவதால், தமிழகம், புதுச்சேரியில், நாளை முதல் மூன்று நாள்களுக்கு கன மழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
பிளஸ் 2 தேர்வு தேதி அடுத்த வாரம் அறிவிப்பு
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, 2016 மார்ச்சில், பொதுத்தேர்வு நடத்தப்பட வேண்டும்; ஏப்ரலில், சட்டசபை தேர்தல் வருவதால், பிப்., 29ம் தேதி தேர்வுகளை துவங்க, பள்ளிக்கல்வித் துறைதிட்டமிட்டு உள்ளது. இதன்படி, பொதுத்தேர்வுக்கான இறுதி வினாத்தாள் தேர்வு பணி நடக்கிறது.
சென்னை பல்கலையில் நவ., 28 வரை தேர்வு ஒத்திவைப்பு
மழை எச்சரிக்கையால் நவ., 28 வரை, சென்னை பல்கலை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சட்ட பல்கலையில், இன்று முதல் தேர்வுகள் துவங்குகின்றன.
Wednesday, November 25, 2015
மாண்புமிகு புரட்சித்தலைவி "அம்மா" அவர்கள் வாழ்த்துக்கடிதம் ...
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை - இன் மாநிலப் பொதுச் செயலாளர் திரு.ஜார்ஜ் அவர்களின் மகள் திருமணதிற்கு வாழ்த்து தெரிவித்து இதய தெய்வம் மாண்புமிகு புரட்சித்தலைவி 'அம்மா" அவர்கள் வாழ்த்துக்கடிதம் அனுப்பியுள்ளார். மாண்புமிகு புரட்சித்தலைவி "அம்மா" அவர்களுக்கு அனைத்திந்திய ஆசிரியர் பேரவை - இன் சார்பிலும் என் சார்பிலும் கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவன்
"அம்மாவின் தொண்டன்"
செ.ஜார்ஜ்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை.
தொடர் கனமழை எதிரொலி; பள்ளிகள் தொடர் விடுமுறையால் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு? கல்வித்துறை அதிகாரிகள் தீவிர ஆலோசனை
தொடர் கனமழை காரணமாக பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்க கல்வித்துறை அதிகாரிகள் தீவிரமாகஆலோசனை நடத்தி வருகின்றனர்.
Flash News : 5 மாவட்டத்தில் இன்று (25.11.2015) விடுமுறை
*தூத்துக்குடி தாலுக்காவில் பள்ளிகளுக்கு விடுமுறை
*சென்னை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
*சென்னை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
7th Pay: ஊதியக் குழு பரிந்துரை-225 மடங்கு உயர்வு
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 7-வது ஊதியக் குழு பரிந்துரையின்படி சம்பளம் மற்றும் ஓய்வூதியம் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் அளிக்கப்பட உள்ளது. ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ரூ.90 ஆயிரமாக இருந்த சம்பளம் ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஏழாவது சம்பள கமிஷன் சம்பள உயர்வு பரிந்துரையால் பணித்திறன் அதிகரிக்கலாம்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரை மகிழ்ச்சி அளிக்கும். மத்திய அரசு ஊழியர்கள், 48 லட்சம் பேர் மட்டுமின்றி, பென்ஷன் பெறுவோரும் பயனடைவர். இந்த பரிந்துரையை அரசிடம் தயாரித்து சமர்ப்பித்த நீதிபதி மாத்துாரின் நுாற்றுக்கணக்கான பக்கங்கள் கொண்ட அறிக்கையில், சில புதிய அணுகுமுறைகள் பரிந்துரைக்கப் பட்டுள்ளன.
10ம் வகுப்பு துணைத்தேர்வுஇன்று மறுகூட்டல் 'ரிசல்ட்'
பத்தாம் வகுப்பு துணைத்தேர்வுக்கான மறுகூட்டல் முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன.இதுகுறித்து, தேர்வுத் துறை இயக்குனர் (பொறுப்பு) வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இளைஞர் படையினருக்குநவ.29ல் எழுத்துத்தேர்வு
தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படையினருக்கு, 29ம் தேதி, எழுத்துத்தேர்வு நடக்கிறது.தமிழக போலீசில், போலீசாருக்கு உறுதுணையாக செயல்பட, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட, சிறப்பு காவல் இளைஞர் படையினர் தேர்வு செய்யப்பட்டனர்.
மழை விடுமுறையை ஈடுகட்ட பள்ளிகள் செய்யப் போவது என்ன?
சென்னை உட்பட தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் மழை காரணமாக கடந்த 15 நாட்களுக்கும் மேலாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.பொதுவாகவே, எதிர்பாராத விடுமுறைகளை ஈடுகட்ட, பள்ளிகள் சனிக்கிழமைகளில்இயங்குவது வழக்கம்.
வேலூரில் 1,317 பள்ளிக் கட்டிடங்கள் மழையால் பலத்த சேதம்: அரசுக்கு கல்வித் துறை அறிக்கை
வேலூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் 1,317 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிக் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாக அரசுக்கு பள்ளிக்கல்வித் துறை அறிக்கை அனுப்பியுள்ளது.
இறுதி வாக்காளர் பட்டியல் இணையத்தில் வெளியீடு : தேர்தல் அலுவலர் அறிவிப்பு
தமிழகத்தில் பெயர் சேர்த்தல் திருத்தம் குறித்த வாக்காளர் பட்டியல் இறுதிபடுத்தபட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வீடு தோறும் சோதனைக்கு வரும் வாக்கு சாவடி அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என தேர்தல் அலுவலர் கேட்டு கொண்டுள்ளார். இது குறித்து மாநில தேர்தல் அலுவலர் அறிவிப்பு:
Tuesday, November 24, 2015
7th Pay Commission - Pension Calculation in 5 Easy Steps
7 வது ஊதியக்குழுவில் பென்ஷன் ( இந்த 5 steps for calculation உங்களுக்கு மிக உதவியாக இருக்கும்) ...
Subscribe to:
Posts
(
Atom
)