Ad Code

Responsive Advertisement

பாடம் முடிக்காமல் தேர்வா?

வட கிழக்குப் பருவ மழை காரணமாக, 9ம் தேதி முதல், பல்கலை, கல்லுாரிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது; தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.இந்நிலையில், முதலாம் ஆண்டு பி.இ., - பி.டெக்., செமஸ்டர் தேர்வுடிச., 7ல் துவங்கும் என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. 

அதனால், வெள்ளம் பாதித்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலுார், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள, 250க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இது குறித்து, அவர்கள் கூறியதாவது:மழையால், 18 நாட்களாக கல்லுாரி இயங்காமல், பாடங்கள் பாக்கி உள்ளன. புறநகரில், பல கல்லுாரிகள் இன்னும் வெள்ளத்தில் மிதக்கின்றன. பல இடங்களில், கல்லுாரிகளுக்கு செல்லும் வழிகளில், வெள்ளம் வடியவில்லை.

இந்த ஆண்டில், புதிய முறை வினாத்தாள் அறிமுகமாகிறது. இந்நிலையில், பாடங்களை முடிக்காமல், மாதிரித் தேர்வும் நடத்தாமல், செமஸ்டர் தேர்வு எழுதினால், மதிப்பெண் குறையும்; தர வரிசையில் பாதிப்பு ஏற்படும்.முதல் செமஸ்டருக்கு, 65 நாள் வகுப்புகளில் பங்கேற்க வேண்டும் என்பது கட்டாயம். ஆனால், மழை விடுமுறையால், 12 நாள் வீணாகியது.இன்னும் கல்லுாரி எப்போது திறக்கப்படும் எனத் தெரியவில்லை. எனவே,மழை விடுமுறையை கணக்கிட்டு, தேர்வை தள்ளிவைக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர். 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement