Ad Code

Responsive Advertisement

விடுமுறை '' நாட்களுக்கு பதில், வேறு நாளில் பணிபுரிய வேண்டும், பணிபுரியாவிட்டால் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும்...

மழைக்கால விடுமுறையிலிருந்த பகுதி நேர ஆசிரியர்கள், அதற்குப் பதில், மாற்று நாட்களில் பணியாற்ற வேண்டும்' என, உத்தரவிடப்பட்டுள்ளது. அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டமான,எஸ்.எஸ்.ஏ., இயக்குனரகக் கட்டுப்பாட்டில், கணினி, ஓவியம், உடற்கல்வி உட்பட, பலபகுதி நேர பாடப் பிரிவுகளுக்கு, 16 ஆயிரம் சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


வாரத்துக்கு மூன்று வகுப்புகள் பாடம் எடுக்க வேண்டும். ஆனால், பெரும்பாலும் பள்ளிகளில், முழு நேர ஆசிரியர்களாகவே பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு, ஒவ்வொரு மாதமும், பணிபுரியும் நாட்களுக்கு மட்டுமே சம்பளம்வழங்கப்படும். மே மாத விடுமுறை காலத்தில் மாத சம்பளம் கிடையாது. தற்போது மழை காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலுார் மாவட்டங்களில், 12 வேலை நாட்கள் வரை விடுமுறை விடப்பட்டது. ''இந்த நாட்களுக்கு பதில், வேறு நாளில் பணிபுரிய வேண்டும். அவ்வாறு பணிபுரியாவிட்டால் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும், ''என, அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி உத்தரவிட்டுள்ளார். 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement