Ad Code

Responsive Advertisement

இன்னும் 2 நாள் மழை உண்டு: மிரட்டுகிறது அடுத்த புயல்

 உருவாகியுள்ள புதிய காற்று அழுத்த தாழ்வு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும்' என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: வங்கக் கடலின் தென்மேற்கு பகுதியில் இலங்கை அருகே கடல் பரப்பில் இருந்து 1.5 கி.மீ. உயரத்தில் காற்று அழுத்த சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதே போல் அந்தமான் கடல் பகுதியில் கடல் பரப்பில் இருந்து 3.1 கி.மீ. உயரத்தில் காற்று மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இவை குறைந்த காற்று அழுத்த தாழ்வாக மாறி நாளை தீவிரமடையும்.

இதனால் தமிழகம் புதுச்சேரியில் இன்று, நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குறைந்த காற்று அழுத்த தாழ்வு தீவிரமடையும் போது நவ. 27ம் தேதி தமிழகத்தில் கனமழை பெய்யும்; மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஒருசில இடங்களில் பெய்யும்.நேற்று காலை 8:30 மணி வரை அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் பாபநாசம் - 18; காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம் - 17; சென்னை - 16; திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி - 13 செ.மீ. மழை பெய்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement