Ad Code

Responsive Advertisement

5,000 சத்துணவு கூடம் மழையால் 'அவுட்'

கனமழையால், 32 மாவட்டங்களில், 5,000 சத்துணவு கூடங்கள் சேதமடைந்துள்ளன. பத்து நாட்களுக்கும் மேலாக, கொட்டித் தீர்த்த மழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலுார் உள்ளிட்ட மாவட்டங்களில், சத்துணவு கூடங்களில் தண்ணீர் புகுந்தது. மேற்கூரையில் தேங்கிய தண்ணீரால், சுவர்களில் கசிவு ஏற்பட்டது. இதனால், அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்கள்சேதமடைந்தன.

இதையடுத்து, அதிகம் சேதமடைந்த சத்துணவு கூடங்கள், லேசாக சேதமடைந்த, ஒழுகும் கட்டடங்கள் குறித்து, பட்டியல் தயாரிக்க, மாவட்ட சத்துணவு அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது.இதுகுறித்து, சத்துணவுத் துறை அதிகாரிகள் கூறுகையில், 'மழையால், 32 மாவட்டங்களில், 5,000 சத்துணவு கூடங்கள் சேதமடைந்து உள்ளதாக தெரிகிறது.'புதிய கட்டடம் கட்ட, திட்ட மதிப்பீடு தயாரிக்கப்படுகிறது; தற்காலிகமாக சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றனர்.

தமிழகத்தில், 43 ஆயிரம் பள்ளி சத்துணவு மையங்கள் உள்ளன. இங்கு, 55 லட்சம் மாணவ, மாணவியர் சத்துணவு சாப்பிடுகின்றனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement