Ad Code

Responsive Advertisement

27, 28, 29–ந்தேதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு?

சென்னை வானிலை மைய அதிகாரி கூறியதாவது:– தென்மேற்கு வங்க கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து விட்டது. தற்போது தெற்கு அந்தமான் கடலில் புதிதாக கடந்த 2 நாட்களாக மேல் அடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. 

இதன் காரணமாக தமிழ் நாட்டில் ஒரு சில இடங்களில் மட்டுமே மழை பெய்துள்ளது. தெற்கு அந்தமான் கடலில் உள்ள இந்த மேல் அடுக்கு சுழற்சி அடுத்த 48 மணிநேரத்தில் (27–ந்தேதி) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகும். அதன் காரணமாக வருகிற 27, 28, 29 ஆகிய மூன்று நாட்கள் கடலோர மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

பாபநாசம் 10 செ.மீ. இன்று காலை 8.30 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் பெய்த மழை அளவு வருமாறு:– பாபநாசம்–10 செ.மீ., மணிமுத்தாறு, அம்பாசமுத்திரம்–3 செ.மீ., திருச்செந்தூர், அறந் தாங்கி–2 செ.மீ., ராமேசுவரம், சேரன்மாதேவி, குன்னூர்– 1 செ.மீ

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement