சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி மையத்தில் 2014-15 கல்வி ஆண்டில் சேர்ந்து பயில மாணவ, மாணவியர்கள் விண்ணப்பிக்க டிச.15-ம் தேதி வரை தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
Sunday, November 30, 2014
புத்தக மூட்டைகளை தூக்கும் 'லோடு மேன்'களா நாங்கள்? துவக்கப்பள்ளி ஆசிரியைகள் குமுறல்
துவக்கப் பள்ளி மாணவர்களுக்கான இலவச பொருட்களை, பல கி.மீ., தூரம் பயணித்து, ஆசிரியர்கள், தங்கள் பள்ளிகளுக்கு எடுத்துச் செல்கின்றனர். 'பாடம் சொல்லிக் கொடுக்கும் நாங்கள், லோடு மேன்களா?' என, துவக்கப்பள்ளி ஆசிரியைகள் ஆதங்கப்படுகின்றனர்.
அரசுபள்ளிப் ஆசிரியர்கள்,மாணவர்கள் -அன்றும் இன்றும் - கவியாழி கண்ணதாசன்
கிராமப்புற மற்றும் நகர்புற மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு ஆரம்ப பள்ளிகளின் ஆசிரியர்களே முக்கிய பங்காற்றினார்கள் என்றால் மிகையாகாது.குறைந்த எண்ணிக்கையில் ஆசிரியர்கள் இருந்தாலும் மாணவர்கள் பள்ளிக்கு வருவதை ஊக்கப் படுத்தும் விதமாக சொந்த பணத்தில் மாணவர்களுடைய கல்விக் கட்டணத்தை செலுத்தியும் ஆசிரியர்களே அருகிலுள்ள கிராமத்திற்கு சென்று மாணவர்களை அழைத்துப் பாடம் சொல்லித்தந்தார்கள்.
குறைந்தது காலாண்டு தேர்ச்சி சதவீதம்: அதிருப்தியில் கல்வித்துறை உயர் அதிகாரிகள்
அரசுப் பள்ளிகளில், நடப்பு கல்வியாண்டுக்கான காலாண்டு தேர்ச்சி சதவீதம் குறைந்ததால், கல்வித்துறை உயர் அதிகாரிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ள நிலையில், விடைக்குறிப்பு இல்லாததால், சரியான மதிப்பெண் மதிப்பீடு செய்ய முடியவில்லை என, மாவட்ட கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொதுத் தேர்வில் மாநில தேர்ச்சியை 95 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை - அமைச்சர் உத்தரவு
10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில், மாணவர்களின் மாநில அளவிலான தேர்ச்சியை 90ல் இருந்து 95 சதவீதமாக அதிகரிக்க, அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் அமைச்சர் வீரமணி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. முதன்மை செயலர் சபீதா, இயக்குனர் ராமேஸ்வர முருகன், மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகள் கலந்து கொண்டனர். 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களின் காலாண்டு தேர்ச்சி சதவீதம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
உயர்கல்வி அனுமதி: ஏ.இ.இ.ஓ., க்களுக்கு அதிகாரம்
அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் எம்.பில்., பிஎச்.டி., போன்ற உயர்கல்வி பயில அனுமதி வழங்கும் அதிகாரம், உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு (ஏ.இ.இ.ஓ.,க்கள்) அளிக்கப்பட்டுள்ளது.
TNPSC : குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அலுவலர் பணியிடம் 117 இடங்கள் நேரடி நியமனம்
குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அலுவலர் பணியில் 117 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
திருவள்ளுவரின் பிறந்தநாள் வடஇந்தியப் பள்ளிகளில் கொண்டாடப்படும்: மத்திய அரசு
உலகப் புகழ்பெற்ற தெய்வீக கவி திருவள்ளுவரின் பிறந்தநாள், அடுத்தாண்டு, வட இந்திய பள்ளிகளில் கொண்டாடப்படுவதோடு, அவருடைய போதனைகள், பள்ளி மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் என்று மத்திய மனிதவள அமைச்சர் இரானி தெரிவித்துள்ளார்.
கல்லூரிகளில் 10 ஆயிரம் ஆசிரியர்கள் இல்லை: நிரப்ப உத்தரவிடுமா யு.ஜி.சி.,
கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்களை, தகுதியான ஆசிரியர்களை கொண்டு நிரப்ப, யு.ஜி.சி., உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது. பல்கலைகளில் உள்ள அனைத்து காலிப் பணியிடங்களை, அடுத்த கல்வி ஆண்டிற்குள் நிரப்ப வேண்டும்' என, பல்கலை மானியக் குழு - யு.ஜி.சி., சமீபத்தில் உத்தரவிட்டது.
மனப்பாடம் செய்யாமலேயே மதிப்பெண் அள்ளலாம்! 'ஜெயித்துக்காட்டுவோம்' நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் அறிவுரை
, 'தினமலர் - ஜெயித்து காட்டுவோம்' நிகழ்ச்சியில், முதல் நாளான நேற்று, காலையில் நடந்த முதல் அமர்வில், கோவை சர்வஜனா பள்ளியில் இருந்து, தமிழ் பாடம் குறித்து பங்கஜம்மாள், ஆங்கிலம் குறித்து மெஹர்நிஷா, கணிதம் குறித்து ஸ்ரீவித்யா, அறிவியல் குறித்து மீனாலோசனி, சமூக அறிவியல் குறித்து மஞ்சுளா ஆகியோர் பேசினர்.
Saturday, November 29, 2014
உயர்கல்விக்கு அனுமதி வழங்கும் அதிகாரம் தலைமையாசிரியர்களுக்கு கிடைக்குமா?
பட்டதாரி மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்களின் உயர்கல்வி படிப்பதற்கான அனுமதியை சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்களே வழங்கும் வகையில் கல்வித்துறை உத்தரவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தேசிய திறனாய்வு தேர்வுக்கான விடைகள் குறித்த கருத்துகளை தெரிவிக்கலாம்!
அரசு தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள, தேசிய திறனாய்வு தேர்வுக்கான விடைகள் குறித்த கருத்துகளை தெரிவிக்கலாம் என, தேர்வுத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் ஏன் திசைமாறுகின்றனர்?
சினிமா மற்றும் தொலைக்காட்சிகளால் மாணவர்கள் திசைமாறும் சூழல் நேர்கையில், கொலை போன்ற விபரீத சம்பவங்கள் நடக்கின்றன என கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மத்திய பாடத்திட்டத்தை பின்பற்றும் தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை அதிரடி உத்தரவு!
தமிழக அரசின் கட்டுக்குள், மத்திய கல்வி வாரிய பாடத்திட்டத்தில் இயங்கும் தனியார் பள்ளிகள், வரும் கல்வியாண்டு முதல் தமிழை கட்டாய பாடமாக நடத்த வேண்டும் என்ற உத்தரவை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிகள், அவர்களின் அங்கீகாரம் தொடர்பான விவரங்களை, வரும் 30க்குள் கல்வித்துறை அதிகாரிகளிடம் சமர்பிக்க, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கணினிப் பயிற்றுநர் நேரடி நியமனம்: பதிவு மூப்பு பட்டியல் இன்று வெளியீடு - டிசம்பர் 24-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு
கணினிப் பயிற்றுநர் நேரடி நியமனத்துக்கு தகுதி வாய்ந்தவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்புப் பட்டியலை சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சனிக்கிழமை வெளியிடுகிறது. தமிழக பள்ளி கல்வித் துறையில் 652 கணினி பயிற்றுநர் பணியிடங்கள் நேரடி நியமன முறையில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
ரயில்வே காவல்துறை அறிமுகம் : வாட்ஸ் அப்.பில் புகார் அனுப்பலாம்
ரயில்வே காவல்துறையில் புதிய முயற்சியாக ரயில் பயணிகள் புகார்களை வாட்ஸ்அப் (செயலி) மூலம் உதவி மைய எண்ணுக்கு அனுப்பும் வசதியை முதல்முறையாக இருப்புபாதை காவல்துறை சென்னை கோட்டம் இன்று முதல் அறிமுகம் செய்கிறது.
மீண்டும் பள்ளிக்கு வந்த ஆதிவாசி மாணவர்கள் : கல்வி அதிகாரிகள் முயற்சிக்கு கிடைத்த வெற்றி
"சாலை சரியில்லை' என கூறி, பள்ளி செல்லாமல் நின்ற, கூடலூர் காபிகாடு ஆதிவாசி மாணவர்கள், மீண்டும் பள்ளிக்கு வர துவங்கியுள்ளனர். கூடலூர் புளியாம்பாறையிலிருந்து இரண்டு கி.மீ., தொலைவில் அமைந்துள்ள காபிகாடு ஆதிவாசி கிராமத்தை சேர்ந்த 14 மாணவர்கள் புளியாம்பாறை பள்ளியில் படித்து வந்தனர்.
தேசிய திறனாய்வு தேர்வு: கீ - ஆன்சர் வெளியீடு
அரசு தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ள, தேசிய திறனாய்வு தேர்வுக்கான விடைகள் குறித்த கருத்துகளை தெரிவிக்கலாம் என, தேர்வுத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
'துத்தநாக சத்து குறைந்தால் மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கும்'
'நரம்பு செல்களில் துத்தநாக தாதுப்பொருளின் அளவு குறைந்தால், மாணவர்களின் கற்கும் திறன் பாதிக்கும்' என, காந்திகிராம பல்கலை ஆய்வில் தெரியவந்துள்ளது. மாணவர்களின் அறிவாற்றல் திறனை மேம்படுத்த, புது யுக்தி களை பயன்படுத்த, காந்திகிராம பல்கலை கல்வியியல் துறை திட்டமிட்டுள்ளது.
சமஸ்கிருத மொழி பாட விவகாரம்: சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 6 முதல் 8 வரையிலான வகுப்புகளில் ஜெர்மானிய மொழிக்கு பதிலாக சமஸ்கிருதத்தை மூன்றாவது மொழிப்பாடமாக சேர்க்க மனிதவள அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது.
Friday, November 28, 2014
EMIS ஆன்லைனில் பதிவிடும் முறை
emis online website address :click here www.emis.tnschools.gov.in
1, முதலில் மேலே கண்ட படத்தின்படி லாக் இன் பக்கத்திற்கு வந்து உங்கள் யூசர் நேம் பாஸ்வேர்டு எண்டர் செய்து லாக்
இன் செய்யவும்.
கனமழை : 28-11-2014 விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்
தஞ்சாவூர் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
திருவாரூர் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
காரைக்கால் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
நாகை - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
புதுக்கோட்டை - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
திருவாரூர் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
காரைக்கால் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
நாகை - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
புதுக்கோட்டை - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
ஆசிரியர்களுக்கான உயர்கல்வி அனுமதி
பட்டதாரி மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்களின் உயர்கல்வி படிப்பதற்கான அனுமதியை சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்களே வழங்கும் வகையில் கல்வித்துறை உத்தரவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் பணியில் சேர்ந்த பின் எம்.பில்., பி.எச்டி., போன்ற உயர்கல்வி படித்தால் ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்கப்படும். இதனால் பலர் உயர்கல்வி படிக்க அனுமதி கோரி ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் விண்ணப்பம் செய்வர்.
மாநில அரசின் கட்டுக்குள் மத்திய கல்வி வாரியப் பள்ளிகள்
தமிழக அரசின் கட்டுக்குள், மத்திய கல்வி வாரிய பாடத்திட்டத்தில் இயங்கும் தனியார் பள்ளிகள், வரும் கல்வியாண்டு முதல் தமிழை கட்டாய பாடமாக நடத்த வேண்டும் என்ற உத்தரவை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிகள், அவர்களின் அங்கீகாரம் தொடர்பான விவரங்களை, வரும், 30க்குள் கல்வி துறை அதிகாரிகளிடம் சமர்பிக்க, கல்வித்துறை அ உத்தரவிட்டுள்ளது.
'அரசு பள்ளி மாணவர்கள்யாருக்கும் குறைந்தவர்கள் இல்லை'
''நாம் யாருக்கும் குறைந்தவர்கள் இல்லை என்பதை, அரசு பள்ளி மாணவர்கள் உணர வேண்டும்,'' என, 'தினமலர்' ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில், எழுத்தாளர் ரமேஷ் பிரபா பேசினார்.'தினமலர்' ஜெயித்துக் காட்டுவோம் மாலை நிகழ்ச்சியில், எழுத்தாளர் ரமேஷ் பிரபா பேசியதாவது:
கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்குமதுரையில் நாளை பயிற்சி
தென் மாவட்டங்களைச் சேர்ந்த கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு மதுரையில் நாளை பயிற்சி வகுப்பு நடக்கிறது.பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள், 2015 மார்ச், ஏப்ரலில் நடக்க உள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கான வீட்டுக் கடன் உச்ச வரம்பு 50 சதவீதமாக உயர்வு
தமிழக அரசு ஊழியர்களுக்கான வீட்டுமனைக் கடன் உச்சவரம்பை 20 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உயர்த்தப்பட்ட கடன் உச்சவரம்புத் தொகையானது, மூன்று தவணைகளாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு: 2 லட்சம் பேர் விண்ணப்பம்
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வுக்கு, சுமார் 2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 1,807 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பாணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. இந்தப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு ஜனவரி 10-ஆம் தேதி நடைபெற உள்ளது.
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சமஸ்கிருதம் 3–வது மொழியாக இருக்கும் சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 6–ம் வகுப்பு முதல் 8–ம் வகுப்புவரை சமஸ்கிருதம் மூன்றாவது மொழியாக இருக்கும் என்று மத்திய அரசு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தது.
அஞ்சல் துறை பணியிடங்களுக்குவிண்ணப்பங்கள் வரவேற்பு
தமிழக அஞ்சல் துறையில் காலியாக உள்ள, 806 தபால்காரர் மற்றும் மெயில்கார்டு பணியிடங்களுக்கு, இணையம் மூலம், விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சென்னைப் பல்கலைக்கழகம் - தொலைநிலைக் கல்வி நிறுவனத் தேர்வு: நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ள அறிவுறுத்தல்
சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவன இளநிலைப் பட்டப் படிப்புகளுக்கான 2014 டிசம்பர் மாதத் தேர்வுகள் டிசம்பர் 6-ஆம் தேதி தொடங்க உள்ளன.
சென்னையில் இன்று அனைத்து ஆசிரியர் சங்கங்களின் கூட்டம்
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள லயோலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் தாக்கப்பட்டது தொடர்பாக அனைத்து ஆசிரியர் சங்கங்களின் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.
Thursday, November 27, 2014
சொத்துக் கணக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு ஊழியர்களுக்கு உத்தரவு
அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் தங்கள் சொத்து மற்றும் கடன் விவரங்களை வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என லோக்பால் சட்டத்தின் கீழ் உத்தரவிடப்பட்டுள்ளது.
TNPSC - DEPARTMENTAL EXAM
தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலை பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள்
உதவி தொடக்க கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற கீழ்க்கண்ட பாடங்களில் தேர்வுபெற வேண்டும்
வெளியே சுற்றும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பள்ளி ஆசிரியர்கள் கவலை
வகுப்புகளை புறக்கணித்து, வெளியே சுற்றும் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக, அரசு பள்ளி ஆசிரியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
B.Ed - II Counselling Selection List (Tamil Medium)
B.Ed - II Counselling Selection List (Tamil Medium)
அடுத்த கல்வியாண்டுக்குள் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப யுஜிசி உத்தரவு
பல்கலைக்கழக மானியக்குழுவின் தலைவர் வேத் பிரகாஷ் நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதா வது: பல்கலைக்கழகங்களில் பல்வேறு துறைகளில் ஏராளமான பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதும், அதை சமாளிக்க தற்காலிகமாக பகுதி நேர பேராசிரியர்களை நியமித்து வகுப்புகள் எடுக்கப்பட்டு வருவது தெரியவந்துள்ளது.
அங்கன்வாடி மையங்களின் செயல்பாடுகள் குறித்து, பொதுமக்கள் கருத்து தெரிவிக்கும் வகையில், ஆலோசனை பெட்டிகளை வைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
.தமிழகம் முழுவதும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ், அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன. குழந்தைகளின் ஊட்டச்சத்து, சுகாதாரம் மற்றும் சமூக நிலையை மேம்படுத்தும் நோக்கத்தில், இத்திட்டத்தின் மூலம், குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலுாட்டும் தாய்மார்களுக்கும் இணை உணவு வழங்கப்படுகிறது.
8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உதவித் தொகை NMMS தேர்வு
எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி-திறன் கல்வி உதவித் தொகைத் திட்டத்தின் (NMMS) கீழ் நடைபெறும் தேர்வுக்கான விண்ணப்பங்களை டிசம்பர் 4-ஆம் தேதிக்குள் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
1,807 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் குவிந்தன
1,807 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்ய எழுத்து தேர்வு நடைபெற உள்ளது. அந்த தேர்வுக்கு ஏராளமானவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
பந்தய குதிரைகளா மாணவர்கள்? - முனியாண்டி, தலைமையாசிரியர்
சமீபத்தில் நண்பரின் வீட்டிற்கு சென்றேன். இலக்கியம் பற்றி பேசினோம். அப்போது அவரது மகனை கவனித்தேன். அவன் வீட்டுப் பாடம் எழுதுவது, எழுந்து போவது, மறுபடியும் அமர்வது என இயந்திரமயமாகவே அவனது செயல்பாடுகள் இருந்தன. அச்சிறுவனை இடையிடையே நண்பர் அழைத்தும் 'ம்...ம்.....' என்று சுவாரஸ்யமே இல்லாமல் தான் பதில் அளித்தான்.
தீயணைப்பு துறையில் 1,000 காலி பணியிடங்கள்: மூன்று மாதங்களில் ஆட்களை நியமிக்க நடவடிக்கை
''தீயணைப்புத் துறையில், காலியாக உள்ள 1,000 பணியிடங்கள், மூன்று மாதங்களில் நிரப்பப்படும்,'' என, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி இயக்குனர், ரமேஷ் குடவாலா தெரிவித்தார்.
"மாணவர்கள் நாளிதழ்களை படிப்பது அவசியம்'
மாணவர்கள் தங்களது அறிவுத் திறனை வளர்த்துக் கொள்ள தினமும் நாளிதழ்களை தவறாமல் படிக்க வேண்டும் என நூலகத் துறையினர் வலியுறுத்தினர்.
அண்ணாமலைப் பல்கலை: தொலைதூரத்தில் விண்ணப்பிக்க டிச.,1 கடைசி
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி மையத்தில் மொத்தம் சுமார் 3 லட்சம் பேர் பயிலுகின்றனர். இந்த கல்வி ஆண்டில் மாணவ, மாணவியர்கள் சேர்ந்து பயில விண்ணப்பிக்க டிச.1-ம் தேதி கடைசி நாளாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெண் குழந்தை பிறந்தால் உதவித்தொகை: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
குறைந்து வரும் ஆண், பெண் விகிதத்தை சரிப்படுத்த வேண்டுமானால், பெண் குழந்தை பிறக்கும் குடும்பத்திற்கு, மாநில அரசு ஊக்கத் தொகை வழங்க வேண்டும், என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
ஆன் - லைன் கல்வி சான்றிதழ் சேமிப்பு மையம்: புதிய முயற்சியில் மும்பை பல்கலைக்கழகம்
மும்பை பல்கலைக்கழகம், மாணவர்களின் ஆன் - லைன் கல்விச் சான்றிதழ்களை பாதுகாக்கும் வகையில், தேசிய கல்விச் சான்றிதழ் சேமிப்பு மையம் (என்.ஏ.டி.,) என்ற அமைப்பை உருவாக்க திட்டமிட்டு உள்ளது.
கோவை, ஈரோடு கல்லூரி மாணவர்களால் கல்லூரி கல்வி இயக்ககம் முற்றுகை
கோவை மற்றும் ஈரோட்டில் இயங்கி வரும், அரசு உதவி பெறும் கல்லூரிகளை, அரசே ஏற்று நடத்தக் கோரி, மாணவர்கள், சென்னையில், கல்லூரிக் கல்வி இயக்ககத்தை முற்றுகையிட்டனர். கோவை, சி.பி.முத்துச்சாமி செட்டியார் கல்லூரி மற்றும் ஈரோடு சிக்கராய நாயக்கர் கல்லூரி என, இரண்டு அரசு உதவி பெறும் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள், கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக, போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Wednesday, November 26, 2014
இப்படியும் ஓர் அரசுப் பள்ளி!
விருத்தாசலத்தை அடுத்த பெ.கா.வீரட்டிக்குப்பம் கிராமத்தில் உள்ள ஊராட்சித் தொடக்கப் பள்ளி தனியார் பள்ளிகளுக்கு இணையாக செயல்பட்டு வருவதாக அந்த கிராம மக்களும், கல்வி அதிகாரிகளும் பாராட்டி வருகின்றனர். கம்மாபுரம் ஒன்றியத்துக்கு உள்பட்ட பெ.கா.வீரட்டிக்குப்பம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 45-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
"அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" - முக்கிய அறிவிப்பு
அரசு அங்கீகாரத்துடன் பல ஆண்டுகளாக பல்வேறு மாவட்டகளில் சிறப்பாக பணியாற்றி ஆசிரியர்களின் நன்மதிப்புடன் செயல்பட்டுவரும் அனைத்திந்திய ஆசிரியர் பேரவை - இன் முக்கிய அறிவிப்பு. அனைத்திந்திய ஆசிரியர் பேரவை - இன் கிளைகள் இல்லாத மாவட்டம் மற்றும் ஒன்றியங்களில் புதிய கிளைகள் துவங்க ஆர்வமுள்ள ஆசிரியர்கள் உடனடியாக மாநிலப் பொதுச்செயலாளர் அவர்களை அலைபேசியில் தொடர்புக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட செயலாளர்கள் இவ்வறிவிப்பு குறித்து மேற்கொண்ட நடவடிக்கைகளை மாநிலப் பொது செயலாளருக்கு தெரிவிக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்குக் கொள்ளப்படுகிறது.
தொடர்புக்கு,
திரு.செ. ஜார்ஜ்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை,
அலைபேசி எண் : 9486152371
ஓய்வுபெற்ற பின்னர் பி.எப். கணக்கை முடிக்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
தொழிலாளர்கள் பி.எப். கணக்கை முடித்து செட்டில்மென்ட் பெறுவதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி அடுத்த மாதம் அமலுக்கு வருகிறது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்படும் பணம், நிறுவன பங்களிப்புடன் சேர்த்து சேமிக்கப்படுகிறது.
மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு சிறப்பு பாடத்திட்டம் அறிமுகம் அனைவருக்கும் கல்வி இயக்கம் தகவல்
சராசரி குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் மாற்றுத்திறனாளி குழந்தைகளும் கல்வி கற்கும் வகையில் சிறப்பு பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது என்று அனைவரும் கல்வி இயக்கத்தின் துணை இயக்குநர் எஸ். நாகராஜன் கூறினார்.
12-ம் வகுப்பு இயற்பியல் பாடத்தில் இன்டர்நெட், இமெயில், இ-பேங்கிங், இ-காமர்ஸ், இ-டிக்கெட், சமூகவலைதளங்கள் தொடர்பான பாடங்கள் இந்த ஆண்டு புதிதாக சேர்க்கப்பட உள்ளன.
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு இயற்பியல் பாடத்தில் இன்டர்நெட், இமெயில், இ-பேங்கிங், இ-காமர்ஸ், இ-டிக்கெட், சமூகவலைதளங்கள் தொடர்பான பாடங்கள் இந்த ஆண்டு புதிதாக சேர்க்கப்பட உள்ளன. மத்திய அரசு ஊழியர்கள், ராணுவத்தினர் போன்றவர்கள் மாறி மாறி வெவ்வேறு மாநிலங்களில் பணியாற்றும் சூழல் இருப்பதால், அவர்களது குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படாமல் இருப்பதற்காக சிபிஎஸ்இ கல்வித் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. மாறி வரும் சூழலுக்கு ஏற்ப சிபிஎஸ்இ பாடத் திட்டங்கள் மாற்றி அமைக்கப்படுவதும், புதிய பாடங்கள் சேர்க்கப்படுவதும் வழக்கம்.
ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி தொடக்க கல்வி அலுவலர் கைது
கிராஜூவிட்டியை வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி தொடக்க கல்வி அலுவலர் கைது செய்யப்பட்டார். தேனி மாவட்டத்தை சேர்ந்த சந்திரசேகர் என்பவர். திண்டுக்கல்லில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து, கடந்த ஜூலை மாதம் ஓய்வு பெற்றார்.
அரை சம்பள விடுப்பின் போது சம்பளத்தை கணக்கிடும் முறை:
உதாரணமாக தாங்கள் அக்டோபர் மாதம் 27 நாட்கள் அரை சம்பள விடுப்பு எடுத்துள்ளீர்கள் எனில்.
உபரி ஆசிரியர்கள் விவரங்களை டிசம்பர் 10-க்குள் அளிக்க உத்தரவு
அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்கள் குறித்த விவரங்களை டிசம்பர் 10-ஆம் தேதிக்குள் தொடக்கக் கல்வி இயக்குநருக்கு அனுப்ப வேண்டும் என மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்களை வாங்குவதற்கும், நிறைவு செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கும் புதன்கிழமை (நவ.26) கடைசி நாளாகும். இந்தத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் நவம்பர் 10-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசுப் பள்ளிக் காவலாளிகளுக்கு ஈட்டிய விடுப்பு அதிகரிப்பு
அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் காவலாளிகளுக்கு ஈட்டிய விடுப்பை 30 நாள்களாக அதிகரித்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்: அரசு உயர் நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் இரவுக் காவலாளிகளுக்கான பணியிடம் கோடை விடுமுறை உள்ள பணியிடமாகக் கருதப்பட்டு அவர்களுக்கு ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவது போன்று ஓராண்டிற்கு 17 நாள்கள் ஈட்டிய விடுப்பு அனுமதிக்கப்பட்டு வருகிறது.
பாடப்புத்தகங்களை எடைக்கு போட்ட வழக்கு முன்னாள் கல்வி அதிகாரியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
கோவையில் பாடபுத்தகங்கள் விற்பனை செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் சி.இ.ஓ. ராஜேந்திரனின் முன்ஜாமீன் மனுவை சென்னை ஐகோர்ட்டி தள்ளுபடி செய்தது. விரைவில் அவர் கைதாவார் என்று தெரிகிறது. கடந்த 2011ம் ஆண்டில் அரசு பாடப்புத்தகங்கள் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மேற்பார்வையில் ஒரு இடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
கணிதப் போட்டித் தேர்வு: மாணவர்கள் பங்கேற்பு
கணித மேதை ராமானுஜம் பிறந்த நாளையொட்டி, பள்ளி மாணவர்களிடம் கணிதப் பாடம் குறித்த ஆர்வத்தைத் தூண்டும் வகையில் திருநின்றவூரை அடுத்த பாக்கம் மகாகவி பாரதியார் மேல்நிலைப் பள்ளியில் இந்தக் கணிதப் போட்டித் தேர்வு அண்மையில் நடைபெற்றது.
Tuesday, November 25, 2014
TNPSC Tamil - அரசு வேலை தேடுபவர்களுக்கு அவசியமான ஒரு இலவச ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன்.
உங்கள் கைப்பேசி வழியாக நீங்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் சுலபமாக படிக்க மற்றும் மாதிரி தேர்வுகளை செய்து பார்க்கும் வசதி இந்த இலவச ஆன்ட்ராய்டு அப்ளிகேஷனில் உள்ளது.
EMIS ONLINE ENTRY FOR CLASS 1 & 2
2014-2015 கல்வியாண்டில் பயிலும் 1 மற்றும் 2 ஆம் வகுப்பு மாணவர்களின் விவரங்கள் மட்டும் ஆன்லைனில் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
CLICK HERE FOR EMIS ONLINE ENTRY FOR CLASS 1 & 2
இன்று முதல் கற்றலில் குறைபாடுடையோர் வார விழா
கற்றலில் குறைபாடுடையோர் ஆதரவு சங்கம் சார்பில் கற்றலில் குறைபாடுடையோர் வார விழா நவம்பர் 24-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
பள்ளிகளின் வசதி பற்றியும் ஆய்வு : பிளஸ் 2 தேர்வு ஆய்வுக்கூட்டம்
பிளஸ் 2 பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பான ஆய்வுக் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டனர். பொதுத் தேர்வு நடத்துவதற்கான தேர்வு அட்டவணை தயாரிக்கும் பணியில் தேர்வுத்துறை ஈடுபட்டுள்ளது. அதன்படி, அந்தந்த மாவட்ட உள்ளூர் விடுமுறைகள் எந்தெந்த தேதிகளில் வருகிறது, அந்த தேதிகளில் தேர்வு நடத்தினால் மாணவர்களுக்கு பிரச்னை வருமா என்பது குறித்து ஆய்வு செய்கின்றனர்.
பட்டதாரி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்
உச்சநீதி மன்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்தக்கோரி ஒருங்கிணைந்த பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர் சென்னையில் நேற்று உண்ணா விரதம் இருந்தனர். சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நடந்த உண்ணாவிரதத்தில் பல்வேறு பட்டதாரி சங்கங்கள் பங்கேற்றன.
பாரதியார் பல்கலை: இளங்கலை கல்வியியல் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் இளங்கலை கல்வியியல் படிப்புக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. பாரதியார் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் 2015-2017ம் கல்வியாண்டில் பி.எட் படிப்பில் பல்வேறு துறைகளுக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Monday, November 24, 2014
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் தலைமையில் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம்
மாவட்டக் கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் மற்றும் தொடக்க கல்வி அலுவலர்கள் பங்குபெற்ற ஆய்வுக் கூட்டம் இன்று 24/11/2014 அன்று அண்ணா பல்கலைகழக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்வாய்வுக் கூட்டத்தில், உயர்திரு பள்ளிக்கல்வி துறை செயலாளர் திருமதி.சபீதா அவர்கள், அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்ட இயக்குனர் உயர்திரு.பூஜா குல்கர்னி அவர்கள், பள்ளிக்கல்வி இயக்குனர் உயர்திரு. ராமேஸ்வர முருகன் அவர்கள், தொடக்கல்வி இயக்குனர் உயர்திரு. இளங்கோவன் அவர்கள் உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
விடலை பருவத்தினருக்கு அறிவியல் கலந்த உண்மைகளை கூற ஆசிரியர்களுக்கு அறிவுரை
விடலை பருவத்தினருக்கு அறிவியல் கலந்த உண்மைகளை கூறுமாறு ஆசிரியர்களுக்கு மனநல சிறப்பு டாக்டர் பாபு அறிவுரை வழங்கினார். சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில், மாவட்ட பள்ளி கல்வி துறை, செல்லமுத்து அறக்கட்டளை, சத்தியசாயி சேவா சமிதி சார்பில் தலைமை ஆசிரியர்களுக்கான, "மாணவர் மனநலம் காப்போம்" என்ற தலைப்பில் நடந்த விழிப்புணர்வு முகாமில் அவர் பேசியதாவது: மாணவர் சமுதாயத்தை நல்வழிப்படுத்த வேண்டிய கடமை தலைமை ஆசிரியர்களுக்கு உள்ளது.
PGTRB:முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு விண்ணப்பத்தில் குழப்பம்
தமிழ்நாட்டில் காலியாக உள்ள 1,807 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தகுதியானோர் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதற்கான விண்ணப்ப படிவங்கள் தற்போது விநியோகிக் கப்பட்டு வருகின்றன. விண்ணப்பம் பூர்த்தி செய்து அளிக்க வரும் 26-ம் தேதி கடைசி நாள்.விண்ணப்பத்துடன் படிவத்தை நிரப்ப உதவும் வழிமுறை கையேடு ஒன்றும் கொடுக்கப்படுகிறது.
VERY USEFUL SHORT FORMS
1.) GOOGLE : Global Organization Of Oriented Group Language Of Earth .
2.) YAHOO : Yet Another Hierarchical Officious Oracle .
3.) WINDOW : Wide Interactive Network Development for Office work Solution
4.) COMPUTER : Common Oriented Machine Particularly United and used under Technical and Educational Research.
5.) VIRUS : Vital Information Resources Under Siege .
2.) YAHOO : Yet Another Hierarchical Officious Oracle .
3.) WINDOW : Wide Interactive Network Development for Office work Solution
4.) COMPUTER : Common Oriented Machine Particularly United and used under Technical and Educational Research.
5.) VIRUS : Vital Information Resources Under Siege .
வெளிநாடு செல்வதற்கு பாஸ்போர்ட் பெற விரும்பும் தமிழக அரசு ஊழியர்களில், அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை ஏற்றுக் கொள்வோருக்கு மட்டுமே தடையின்மைச் சான்று வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது!!!
வெளிநாடு செல்வதற்கு பாஸ்போர்ட் பெற விரும்பும் தமிழக அரசு ஊழியர்களில், அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை ஏற்றுக் கொள்வோருக்கு மட்டுமே தடையின்மைச் சான்று வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்கென சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு வகுத்துள்ளது.
மாணவர்களின் வாசிப்புத்திறன் குறைந்ததற்கான காரணங்கள்: கல்வித்துறை ஆய்வு.
குடும்பம், வாழ்விட சூழல், சினிமா, டிவி தாக்கம், கிரிக்கெட், ஆசிரியர்களின் கவனமின்மை உள்ளிட்ட காரணங்களால், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் வாசிப்பு திறன் குறைந்திருப்பது, கல்வித்துறை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
முப்பருவ கல்வி முறை மாணவர்கள் பகீரத பிரயத்தனம்! தேர்வுக்கு தயார்படுத்த பள்ளிகள் தீவிரம்
தமிழகத்தில், கடந்த கல்வியாண்டு வரை, முப்பருவ பாடத்திட்டத்தின் படி பயின்ற மாணவர்கள், முதல் முறையாக, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை இக்கல்வியாண்டில் எதிர்கொள்கின்றனர். ஒட்டு மொத்த பாடங்களையும், ஒரே சமயத்தில் எழுதுவதால், தேர்ச்சி விகிதம் குறைய வாய்ப்புகள் உள்ளதாகவும், மாணவர்களை தயார்படுத்துவதில், மிகுந்த சிரமம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஆசிரியர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
மெதுவாக கற்கும் மாணவர்களுக்கு சிறப்பு கையேடு வழங்க உத்தரவு
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வில், மெதுவாக கற்கும் மாணவர்களுக்கு, சிறப்பு கையேடு வழங்கி பயிற்சி அளிக்க தலைமையாசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அடுத்தாண்டு மார்ச், ஏப்ரலில் நடக்கும், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில், பள்ளிகள், 100 சதவீதம் தேர்ச்சி பெறும் வகையில், பல நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சமஸ்கிருதம்:கற்பிக்க தயாராகிறது கர்நாடகா
மத்திய அரசின் உத்தரவுப்படி, கர்நாடகாவிலுள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், அடுத்த ஆண்டிலிருந்து, மூன்றாவது மொழியாக, சமஸ்கிருதம் கற்பிக்கப்படுவதை பெரும்பாலான பள்ளிகள் வரவேற்றுள்ளன.கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், மூன்றாவது பாடமாக, ஜெர்மன் மொழி கற்பிக்கப்பட்டு வந்தது.
பள்ளிகள் தயார்:கடந்த அக்டோபர், 27ம் தேதி, ஜெர்மன் மொழிக்கு பதிலாக, சமஸ்கிருதத்தை பயிற்றுவிக்க, மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை செயல்படுத்த, கர்நாடகா கேந்திரிய வித்யாலயா பள்ளிகளும்தயாராகி வருகின்றன. மத்திய அரசின் முடிவை, கர்நாடகா சமஸ்கிருத பல்கலைக்கழக துணைவேந்தர் சீனிவாச வரகேதி வரவேற்று கூறியுள்ளதாவது:நம் மொழியை பயிற்றுவிப்பதற்கு பதில், அந்நிய மொழியை பயிற்றுவிப்பது தேவையற்றது.
எம்.பி.பி.எஸ். படிப்பில் சேரும் மாணவர்களின் விவரத்தை இணையதளத்தில் வெளியிடவேண்டும் தனியார் கல்லூரிகளுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
சென்னை ஐகோர்ட்டில், ஜி.விஜயகுமார் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில், ‘தனியார் மருத்துவக் கல்லூரியில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களுக்கு தனியாக விளக்கக் குறிப்பேடு எதுவும் வழங்குவதில்லை. எனவே நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்கள், பிளஸ் 2 பொதுத் தேர்வில் பெற்றிருக்கவேண்டிய மதிப்பெண், கல்விக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து விதமாக விவரங்களுடன் விளக்கக் குறிப்பேடு தயாரிக்கவும், மாணவர்கள் சேர்க்கை வெளிப்படையாக நடைபெறும் விதமாக அனைத்து விவரங்களையும் அந்தந்த கல்லூரிகளின் இணையதளத்தில் வெளியிடவும் உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
ஆட்டிசம் குறைபாடு நீக்கஒட்டக பால் மருந்து
'குழந்தைகளைப் பாதிக்கும் மூளை வளர்ச்சி குறைபாடான, மனஇறுக்க (ஆட்டிசம்) நோயை, ஒட்டகப் பால் குணப்படுத்தும்' என, சிறப்புக் குழந்தைகளுக்கான, 'பாபா பரீத்' மையமும், இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த, டாக்டர் ரெவின் யாகிலும் இணைந்து தெரிவித்துள்ளனர்.
Sunday, November 23, 2014
இனிய இல்லக் குறிப்புகள்!!!
சொந்த வீடு கட்ட வேண்டும் என எல்லோருக்கும் கனவு இருக்கும். ஆனால் அப்படிக் கட்ட முடிவுசெய்த பிறகு சில விஷயங்களில் நாம் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். அவசர, அவசரமாக இடத்தைத் தேர்வுசெய்துவிட்டால் பின்னால் சிரமப்படுவது நாமாகத்தான் இருப்போம். அதனால் ஆயுள் முழுக்க இருக்கப்போகும் இடத்தை நிதானத்துடன் தேர்வுசெய்ய வேண்டும்.
Contributory Pension Scheme -No. allotted to the Employees of Government and Aided Institutions!!CLICK HERE
DEAR TEACHERS KNOW YOUR CPS NEW NUMBER GOVT TEACHERS ALSO IN AIDED ENTRY SO CLICK GOVT OR AIDED
==============================================================
CLICK HERE KNOW UR NUMBER GOVT OR AIDED
==============================================================
CLICK HERE KNOW UR NUMBER GOVT OR AIDED
இருவர் ஒரே மார்க் பெற்றால் குலுக்கல் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைமுறை மாற்ற வழக்கு
மருத்துவ மாணவர் சேர்க்கையின்போது இருவர் ஒரே மதிப்பெண் பெற்றால் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுப்பதை மாற்றக்கோரிய மனு தனி நீதிபதி விசாரணைக்கு மாற்றப்பட்டது. திண்டுக்கல் மாவட் டம், பழநியைச் சேர்ந்த ராமசாமி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
மாணவர்களின் வாசிப்பு திறன் குறைந்ததற்கு காரணம் என்ன? கல்வித்துறையினர் நடத்திய ஆய்வில் அதிர்ச்சி
குடும்பம், வாழ்விட சூழல், சினிமா, "டிவி' தாக்கம், கிரிக்கெட், ஆசிரியர்களின் கவனமின்மை உள்ளிட்ட காரணங்களால், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் வாசிப்பு திறன் குறைந்திருப்பது, கல்வித்துறை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
சில ஆயிரங்களுக்கு ஆசைப்பட்டு இலவச "லேப்-டாப்'களை விற்கும் மாணவர்கள்
இலவச "லேப்-டாப்' பெறும் மாணவர்களில் சிலர், சில ஆயிரம் ரூபாய்க்கு ஆசைபட்டு அவற்றை விற்று, ஏமாறுகின்றனர். இலவச பாடப்புத்தகம், சீருடை, சைக்கிள், லேப்-டாப் என 16 வகையான கல்வி நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதில், பிளஸ் 2 முடிக்கும் மாணவ, மாணவியரின் கல்லூரி படிப்புக்கு உதவும் வகையில், ஆண்டுதோறும் இலவச லேப்-டாப் வழங்கப்படுகிறது.நடப்பு கல்வியாண்டில், திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் 13,389 மாணவ, மாணவியருக்கு இலவச லேப்-டாப் வழங்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு 21.42 கோடி ரூபாய்.
அரசு ஊழியர், அதிகாரிகள் பாஸ்போர்ட் பெற புதிய கட்டுப்பாடுகள்: தமிழக அரசு உத்தரவு
வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு பாஸ்போர்ட் பெற விரும்பும் தமிழக அரசு ஊழியர்கள் - அதிகாரிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை ஏற்றுக் கொள்வோருக்கு மட்டுமே தடையின்மைச் சான்று வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்கென சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு வகுத்துள்ளது.
மருத்துவ மாணவர் சேர்க்கை: தமிழ் பாட மதிப்பெண்ணிற்கு முன்னுரிமை: ஐகோர்ட்டில் வழக்கு
மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கையின்போது, இரண்டு பேர் ஒரே 'கட்-ஆப்' மதிப்பெண் பெற்றால், தமிழ் பாட மதிப்பெண் அடிப்படையில் முன்னுரிமை அளிக்க தாக்கலான வழக்கில் தனி நீதிபதி விசாரணைக்கு மாற்றி மதுரை ஐகோர்ட் கிளை பெஞ்ச் உத்தரவிட்டது.
மெதுவாக கற்கும் மாணவர்களுக்கு சிறப்பு கையேடு: பள்ளிக்கல்வித்துறை
பத்தாம் வகுப்பு, பிளஸ்2வில் மெதுவாக கற்கும் மாணவர்களுக்கு சிறப்பு கையேடு வழங்கி பயிற்சியளிக்க தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கான ஊதியத்தை நிர்வாகத்திடம் வழங்க உத்தரவு
அரசு உதவி பெறும் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கான சம்பளத்தை, பள்ளி நிர்வாகத்திடம் வழங்கும்படி, மாவட்ட கல்வி அதிகாரிக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மருத்துவ படிப்பு சேர்க்கையில் தமிழ் பாட மதிப்பெண் சேர்க்கப்படுமா?
மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கையின்போது, இருவர், ஒரே 'கட் - ஆப்' மதிப்பெண் பெற்றால், தமிழ் பாட மதிப்பெண் அடிப்படையில் முன்னுரிமை அளிக்க கோரி தாக்கலான மனுவை, தனி நீதிபதி விசாரணைக்கு மாற்றி, மதுரை ஐகோர்ட் கிளை பெஞ்ச் உத்தரவிட்டது.
பள்ளிகளில் இனி யோகா கட்டாயம்? அடுத்த கல்வியாண்டில் அமலாகிறது
அடுத்த கல்வியாண்டு முதல், நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில், யோகாவை ஒரு பாடமாக சேர்க்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.மத்திய யோகா மற்றும் ஆயுர்வேத மருத்துவ துறைக்கான அமைச்சர், ஸ்ரீபத் நாயக் கூறியதாவது:
மாணவர்களின் படைப்பாற்றலுக்கு இங்கு இடம் இல்லை!
மலரும் பூவுக்கருகில் அமர்ந்து, வாசத்தை நுகர்பவனுக்கு ஏற்படும் உணர்வுகளை, கோடுகளாக இணைத்து சித்திரங்களாக உருமாற்றி கொண்டிருந்தார், ஓவியர், கலை இயக்குனர், கலை ஆய்வாளர் என, பன்முகம் கொண்ட ட்ராட்ஸ்கி மருது. இளமையும் இளைஞர்களும் சூழ, கணினியும், வரைபலகையும் சிநேகிக்க, தன் கலைக்கூடத்தில் இருந்த அவரிடம் பேசியதில் இருந்து...
* கலைஞர்களாக பரிணமிக்க, தகுந்த சூழல்கள், இன்றைய ஆரம்ப கல்வியில் இருக்கின்றனவா?
பொறியியல் மாணவர்களுக்கு தொழில்நுட்ப அறிவு குறைவு!
'இன்னும் சில ஆண்டுகளில், மனிதனால் முடியாது என, மலைத்து நின்ற அத்தனை செயல்களும், விரைவாகவும், நேர்த்தியாகவும் செய்து முடிக்கப்படும்' என கூறும் இவர்களுக்கு, இளம் படைப்பாளிகளுக்கான உலகத்தில் நிச்சயமான இடம் உண்டு. 'பிஞ்சு மனம், பஞ்சு விரல் கொண்ட இவர்களால் என்ன செய்ய முடியும்?' என்ற கேள்வியோடு நோக்கிய நம்மை, 'விரலிடுக்கில் வித்தைகளை ஒளித்துள்ளோம், வீரியத்தை பாருங்கள்' என, உணர்த்தினர். இடம்: எஸ்.பி.ரோபோடிக்ஸ், ரோபோ தயாரிப்பு பயிற்சி மையம், கே.கே.நகர். உணர்த்தியவர்கள்: எட்டு முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள்.
Saturday, November 22, 2014
ஆண்ட்ராய்டு போன்... பாதுகாக்கும் வழிகள்!
இன்றைக்கு அனைவரின் தேர்வாகவும் இருக்கிறது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன். விண்டோஸ் ஸ்மார்ட் போன்கள் பயன்பாட்டுக்கு எளிதாக இல்லை என்பதே இதற்குக் காரணம். ஆண்ட்ராய்டு போன்களை பாதுகாப்பாக வைத்திருக்கவில்லை எனில், அதில் பதிந்து வைத்திருக்கும் தகவல்கள் அனைத்தும் களவுபோக வாய்ப்புண்டு. தவிர, வைரஸ்களின் தாக்குதலுக்கு உள்ளாகி, சீக்கிரத்தி லேயே செயல் இழக்கவும் செய்யும். ஆண்ட்ராய்டு போன்களை பாதுகாப்பது எப்படி என்று சொல்கிறார் தொழில்நுட்ப வல்லுநர் பிரபு கிருஷ்ணா.
வீட்டுக் கடன் தொகை அதிகம் பெற வேண்டுமா?
நம்மில் பெரும்பாலானோர் வீட்டுக் கடனை நம்பியே வீடு வாங்கும் திட்டத்தில் இருப்போம். என்னதான் சேமிப்பு இருந்தாலும், வீட்டுக் கடன்தான் நம் கனவு கவிழ்ந்துவிடாமல் கரை சேர்க்க உதவும். மனை வாங்கி வீடு கட்டுவதாக இருந்தாலும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் வாங்குவதாக இருந்தாலும் நடுத்தர மக்கள் பெரும்பாலானோரின் நிலை இதுதான். இன்றைய பொருளாதார சூழலில் நம் சேமிப்பை மட்டும் நம்பி நம் கனவை நனவாக்க நினைப்பது கஷ்டத்தில் கொண்டுபோய்த் தள்ளிவிடும். நம் சேமிப்பு ஆரம்பத் தொகைக்கு மட்டுமே பயன்படும். உதாரணமாகச் சிலர் மனையை மட்டும் தங்கள் சேமிப்பைக் கொண்டு வாங்குவார்கள். வீடு கட்ட வங்கிக் கடனைச் சார்ந்திருப்பார்கள். அடுக்குமாடிக் குடியிருப்பு வாங்க இருப்பவர்கள் ஆரம்பத் தொகைக்குச் சேமிப்பைப் பயன்படுத்துவார்கள்.
முழு நேர நியமனத்துக்கு போட்டித் தேர்வு:பகுதி நேர கலையாசிரியர்கள் கலக்கம்
அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தில், பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம், 2000 ரூபாய் உயர்த்தியுள்ளதாக, அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், போட்டித்தேர்வு வழியாகவே முழுநேர கலை ஆசிரியர்கள் நியமனம் என்ற அறிவிப்பு, பகுதி நேர ஆசிரியர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினராக ராஜராஜேஸ்வரி அவர்களும் , அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் இயக்குநராக அறிவொளி அவர்களும் நியமனம்
அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் (ஆர்.எம்.எஸ்.ஏ.) புதிய இயக்குநராக திரு.க.அறிவொளி நியமனம் செய்யப்பட்டார். ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினராக 3 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றி வந்தார். இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் உள்பட 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணி நியமனத்தில் இவர் முக்கியப் பங்காற்றியுள்ளார்.
பள்ளிக்குள் புகுந்து ஆசிரியர் மீது தாக்குதல்: நடவடிக்கை கோரி பெற்றோர் சாலை மறியல்
சென்னை கோடம்பாக்கத்தில் பள்ளிக்குள் புகுந்து ஆசிரியரைத் தாக்கிய சம்பவத்தில், தொடர் புடைய மாணவரின் தந்தையைக் கைது செய்யக் கோரி பெற்றோர்கள் சாலை மறியல் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.இந்தப் போராட்டத்தால் ஆற்காடு சாலையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
நலம் பெறுமா மனம்! மாணவர்கள் உளவியல் பிரச்னைக்கு தீர்வில்லை - பெயரளவில் 'ஆலோசனை மையம்'
மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்றபடி அல்லாமல், சொற்ப எண்ணிக்கையில், உளவியல் நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால், நடமாடும் உளவியல் மையம் பயனின்றி போவதாக, பள்ளி ஆசிரியர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.பள்ளி மாணவர்களின் மனஅழுத்தம், உளவியல் ரீதியான பிரச்னைகளுக்கு தீர்வுகாணும் பொருட்டு, 'நடமாடும் உளவியல் ஆலோசனை மையம்' தமிழகத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
மத்திய கல்வித்துறை திடீர் முடிவு சி.பி.எஸ்.இ 10ம் வகுப்புக்கு மீண்டும் பொதுத்தேர்வு?
மத்திய பள்ளிக் கல்வி வாரிய பாடத்திட்டத்தில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மீண்டும் ஆண்டுப் பொதுத் தேர்வு நடத்த மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை முடிவு செய்துள்ளது. மத்திய பள்ளிக் கல்வி வாரிய(சிபிஎஸ்இ) பள்ளிகள் தென் மண்டலத்தில் 500 பள்ளிகள் இயங்கி வருகின்றன. தமிழகத்தில் 150 பள்ளிகள் இயங்கி வருகின்றன.தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கழகத்தின்(என்சிஇஆர்டி) பாடத்திட்டத்தை அடிப்படையாக கொண்டு சிபிஎஸ்இ பள்ளிகளில் பாடங்கள் நடத்தப்படுகின்றன. தமிழகத்தில் இந்த பள்ளிகள் மூலம் ஆண்டுதோறும் சுமார் 1 லட்சம் மாணவ மாணவியர் 12ம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி வந்தனர். இந்நிலையில், கடந்த முறை மத்திய பள்ளிக் கல்வி அமைச்சராக இருந்த கபில்சிபல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு தேவையில்லை என்று தெரிவித்ததின் பேரில் கடந்த 2011ம் ஆண்டில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வை சிபிஎஸ்இ ரத்து செய்தது. மேலும், உயர்கல்விக்கு செல்ல விரும்பும் மாணவர்கள் தேவைப்பட்டால் தேர்வு எழுதலாம் என்று அறிவித்தது.
TNPSC : உதவி புவியியலாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் - டிச.17 கடைசிநாள்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நேற்று வெளியிட்ட அறிவிப்பு:தமிழ்நாடு தொழிற் சார்நிலைப் பணியில் உள்ள உதவி புவியியலாளர் பதவியில் ஒரு காலி பணியிடம் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளது.
ஆண் ஆசிரியர்கள் விவரம் சேகரிக்க உத்தரவு
சிறுமியர் பாலியல் பலாத்கார சம்பவங்கள் எதிரொலியாக, பள்ளிகளில் பணிபுரியும் ஆண் ஆசிரியர்கள், ஊழியர்களின் முகவரி, மொபைல் எண், விரல் அச்சு ஆகியவற்றை சேகரிக்கும்படி, முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம்: மேலும் 22 மருத்துவமனைகள் சேர்ப்பு
புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ், அரசு ஊழியர்கள் சிகிச்சைப் பெறும் மருத்துவமனைகள் பட்டியலில், புதிதாக, 22 மருத்துவமனைகள் சேர்க்கப்பட்டு உள்ளன. இந்த திட்டம், 2012ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி, நான்கு ஆண்டுகளுக்கு, நான்கு லட்சம் ரூபாய்க்கு, மருத்துவ சிகிச்சைப் பெறலாம். ஊழியர்கள் மருத்துவ சிகிச்சைப் பெறுவதற்கு வசதியாக, 635 மருத்துவமனைகள், காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கப்பட்டன.
சிறப்பாசிரியர்களுக்கு பயிற்சி நிறைவு
அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மாற்றுத்திறனுடைய குழந்தைகளை உள்ளடக்கிய திட்டத்தின் கீழ், சிறப்பாசிரியர்களுக்கான 3 நாள் பயிற்சி வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.
மருத்துவம் சார் படிப்புக்கு 121 மாணவர்கள் சேர்ப்பு
சென்னை, ஓமந்தூரார் தோட்ட புதிய சட்டசபை வளாகத்தை, தமிழக அரசு, பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையாக மாற்றி உள்ளது. இந்த மருத்துவமனையில், மருத்துவம் சார் பயிற்சி பள்ளி ஒன்று துவங்கப்பட்டுள்ளது.
Friday, November 21, 2014
CPS ACCOUNT SLIP - VELLORE DIST - ALL BLOCKS - INDIVIDUAL QUERY - PDF
CLICK HERE - CPS ACCOUNT SLIP - VELLORE DIST - VELLORE BLOCK 1
CLICK HERE - CPS ACCOUNT SLIP - VELLORE DIST - VELLORE BLOCK 2
CLICK HERE - CPS ACCOUNT SLIP - VELLORE DIST - KAVERIPPAKKAM BLOCK 2
CLICK HERE - CPS ACCOUNT SLIP - VELLORE DIST - WALLAJAH BLOCK
CLICK HERE - CPS ACCOUNT SLIP - VELLORE DIST - WALAJAH BLOCK 1
CLICK HERE - CPS ACCOUNT SLIP - VELLORE DIST - WALLAJAH BLOCK 2
CLICK HERE - CPS ACCOUNT SLIP - VELLORE DIST - VELLORE BLOCK 2
CLICK HERE - CPS ACCOUNT SLIP - VELLORE DIST - KAVERIPPAKKAM BLOCK 2
CLICK HERE - CPS ACCOUNT SLIP - VELLORE DIST - WALLAJAH BLOCK
CLICK HERE - CPS ACCOUNT SLIP - VELLORE DIST - WALAJAH BLOCK 1
CLICK HERE - CPS ACCOUNT SLIP - VELLORE DIST - WALLAJAH BLOCK 2
உதிரி ஆசிரியர்கள் எத்தனை பேர்? பள்ளிகளில் கல்வித்துறை திடீர் ஆய்வு
மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ற ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதுகுறித்து, அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில், கல்வித்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர். அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக, கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வலியுறுத்தி, பள்ளி நிர்வாகத்தினர் கல்வித்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கனமழை : 21-11-2014 விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்
கன்னியாக்குமரி - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
திருநெல்வேலி - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
தூத்துக்குடி - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
திருநெல்வேலி - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
தூத்துக்குடி - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
Subscribe to:
Posts
(
Atom
)