Ad Code

Responsive Advertisement

பட்டதாரி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

உச்சநீதி மன்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்தக்கோரி ஒருங்கிணைந்த பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர் சென்னையில் நேற்று உண்ணா விரதம் இருந்தனர். சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நடந்த உண்ணாவிரதத்தில் பல்வேறு பட்டதாரி சங்கங்கள் பங்கேற்றன.
புவியியல் பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் ராம தாஸ் தலைமை தாங்கினார். வேலையில்லா பட்டதாரி தமிழாசிரியர் சங்க மாநில தலைவர் ராமு முன்னிலை வகித்தார். உண்ணாவிரதத்தில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகளை வருமாறு:  சான்று சரிபார்ப்பு முடித்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்க வேண்டும் என்ற உச்சநீதி மன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும். 

உயர்நீதி மன்ற, உச்சநீதி மன்ற உத்தரவுகளின் படி நடைமுறை விதி அரசாணைகளில் உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஆர்எம்எஸ்ஏ திட்டப் பணியிடங்களில் 2011&2012ம்  ஆண்டுக்கான பணியிடங்களை பழைய நடைமுறையின் கீழ் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது.  பின்னர், இந்த கோரிக்கைகள் அனைத்தை யும் மனுவாக தயாரித்து தமிழக முதல்வர், பள்ளிக் கல்வி அமைச்சர், பள்ளிக் கல்வி முதன்மைச் செயலாளர் ஆகியோருக்கு ஒருங்கிணைந்த பட்டதாரிகள் நேரில் சென்று கொடுத்தனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement