Ad Code

Responsive Advertisement

ஓய்வுபெற்ற பின்னர் பி.எப். கணக்கை முடிக்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்கள் பி.எப். கணக்கை முடித்து செட்டில்மென்ட் பெறுவதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி அடுத்த மாதம் அமலுக்கு வருகிறது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்படும் பணம், நிறுவன பங்களிப்புடன் சேர்த்து சேமிக்கப்படுகிறது.

தொழிலாளர்கள் பணிபுரியும் நிறுவனத்தில் இருந்து வெளியே செல்லும்போது அல்லது ஓய்வு பெறும் போது கணக்கை முடிக்க தமாகவே விண்ணப்பிக்கும் நிலை இருந்து வருகிறது. தற்போது தொழிலாளர்கள் பி.எப். கணக்கை முடித்து செட்டில்மென்ட் பெறுவதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதியை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அமல்படுத்த உள்ளது.

ஓய்வு பெறுகிறபோது தொழிலாளர்கள் ‘செட்டில்மென்ட்’ (தீர்வு தொகை பெறல்), ஓய்வூதியம் நிர்ணயிக்கப்பெறுதல் போன்றவற்றை எந்தவித காகித விண்ணப்பமும் இன்றி செய்து முடிப்பதற்கும் இது உதவும். இந்த புதிய திட்டத்தின் மூலம் 3 நாட்களில் பணம் பெறலாம். தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பின் (இ.பி.எஃப்.ஓ) 5 கோடி சந்தாதாரர்களுக்கு பயனாக அமையும்.

“பி.எப். கணக்கை முடித்து பணம் பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதியை வழங்க இ.பி.எப்.ஓ. முடிவு செய்துள்ளது. இந்த வசதி அடுத்த மாதம் மத்தியில் அமலுக்கு கொண்டுவரப்படும்,” என்று இ.பி.எப்.ஓ. வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன. பி.எப். கணக்கு மற்றும் வங்கி கணக்கை ஆதார் எண் மூலம் இணைத்துள்ள சந்தாதாரர்கள் இந்த வசதியை பயன்படுத்தி கொள்ள முடியும். பயோமெட்ரிக் முறையில் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதால், ஆதார்எண்   அடையாளம் காணப்படுகிறது. இதில் மோசடிக்கு வாய்ப்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதையை நடமுறையின்படி பயனாளர்கள் பணம் பெறுவதற்கு, விண்ணப்பத்தில் தவறு உள்பட பல்வேறு பிரச்சனைகள் காரணமாக 30 நாட்களுக்கும் மேலாகிவிடுகிறது. ஆனால் ஆன்லைன் மூலம் அறிமுகப்படுத்தப்படும் இந்த புதிய முறையினால் மூன்று நாட்களில் பணம் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று அந்த தகவல்கள் தெரிவித்துள்ளன. புதிய திட்டத்தின்படி இந்த நிதியாண்டுக்குள் சுமார் 20 முதல் 30 சதவீதம் வரையிலான பி.எப். கணக்கு முடிப்பு தொடர்பான கோரிக்கைகளை ஆன்லைன் மூலம் தீர்க்க பி.எப். நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் உள்ள சந்தாதாரர்களுக்கு ஏற்கனவே தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, ‘யு.ஏ.என்’ என்னும் உலகளாவிய கணக்கு எண் வழங்கி உள்ளது. ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்துக்கு மாறுகிறபோதும், இந்த எண்ணை அவர்கள் தொடர்ந்து பயன்படுத்திக்கொள்ள முடியும். இந்த எண்ணைக் கொண்டு தொழிலாளர்கள் கூடுதலான சேவைகளை பெறுவதற்காக, புதிய வசதிகளுடன் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது புதிய வசதியும் அடுத்த மாதம் மத்தியில் அமலுக்கு வருகிறது.
  

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement