Friday, September 30, 2016
துறை சார் தேர்வில் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்
இடைநிலை ஆசிரியர்கள்
1. 004 - Deputy Inspectors Test-First Paper
(Relating to Secondary and Special Schools) (without
books)
2. 017 - Deputy Inspector’s Test--Second Paper
(Relating to Elementary Schools) (Without Books)
தேர்தல் பயிற்சிக்கு வராவிட்டால் நடவடிக்கை!!!
தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்காத, அரசு ஊழியர், ஆசிரியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என, தேர்தல் அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர். தமிழகத்தில், அக்., 17, 19ல், உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது; வேட்புமனு தாக்கல் துவங்கி உள்ளது.
பணத்தை செலவிடுவதை விட்டுவிட்டு குழந்தைகளுடன் அதிக நேரம் பெற்றோர் இருப்பது முக்கியம் - உயர் நீதிமன்றம்
குழந்தைகளுக்காக பணத்தை செலவிடுவதை விட்டுவிட்டு, அவர்களுடன் நேரத்தை செலவிடுவதை பெற்றோர்கள் முக்கியமாக கருத வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதன் அறிவுரை வழங்கியுள்ளார்.
பணி நியமனம் இல்லை : அரசு நிறுவனம் அறிவிப்பு
பணி நியமன அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை' என, தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,
தொழில்நுட்ப தேர்வு அக்டோபர் 5ல் 'ரிசல்ட்'
ஓவியம், தையல் உள்ளிட்ட தொழில் நுட்ப தேர்வு முடிவு, 10 மாதங்களுக்கு பின், அக்., 5ல் வெளியிடப்படுகிறது. ஓவியம், தையல், நடனம், இசை உள்ளிட்ட பாடங்களுக்கு, நவம்பர், 2015ல் தேர்வு நடத்தப்பட்டது; 50 ஆயிரத்தும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆனால், தேர்வு முடிவுகள், 10 மாதங்களாக வெளியிடப்படவில்லை. தற்போது, அக்., 5ல் முடிவுகள் வெளியாகும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
காமராஜர் பல்கலையில் ஐ.ஏ.எஸ்., தேர்வு பயிற்சி
சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான இலவச பயிற்சி பெற, அக்., 31க்குள் விண்ணப்பிக்கும்படி, மதுரை காமராஜர் பல்கலை அறிவித்துள்ளது. பல்கலையின் சிவில் சர்வீசஸ் தேர்வு பயிற்சி அகாடமி ஒருங்கிணைப்பாளர், வேளாங்கண்ணி ஜோசப் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஆன்லைன் படிப்பு : யு.ஜி.சி., அனுமதி
'அனைத்து பல்கலையிலும், ஆன்லைன் படிப்புகளை நடத்த வேண்டும்' என, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., அறிவித்துள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் மூலம், ஆன்லைன் வழி படிப்புகளை நடத்த, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஒவ்வொரு பல்கலையும், இந்திய உயர் கல்வி தொழில்நுட்ப நிறுவனங்களும், ஆன்லைன் படிப்பை நடத்த, அங்கீகாரம் தரப்பட்டுள்ளது.
வாக்காளர் துணை பட்டியல்அக். 3 ல் வெளியீடு
உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் துணை பட்டியல் அக்.,3 ல் வெளியிடப்படுகிறது. விண்ணப்பங்கள் மீது கள ஆய்வு இல்லாததால் போலி வாக்காளர்கள் அதிகளவில் இருக்க வாய்ப்புள்ளது.சட்டசபை வாக்காளர்கள்படி, உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
Thursday, September 29, 2016
ரூ.40 லட்சம் திரட்டி அரசு பள்ளியின் தரம் உயர்த்திய தலைமை ஆசிரியர்
மாணவர்களுடன் அன்பாசிரியர் செல்வக்கண்ணன்.
சர்வதேசப் பள்ளி என்ற அங்கீகாரத்தில் கரூர் மாவட்டம் பரமத்தி வேலூர் அரசு ஆரம்பப் பள்ளி கம்பீரத்துடன் இயங்கி வருகிறது. ஸ்போக்கன் இங்கிலீஷ், இந்தி, கராத்தே, யோகா, ஓவியம், இசை, நடனம், பாட்டு ஆகிய பயிற்சிகள் இங்கு இலவசமாகக் கற்பிக்கப்படுகின்றன.
மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
வெப்பசலனம் நீடிப்பதால் தமிழகத்தில் மழைதொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நிலவும் வெயில் காரணமாக வெப்ப சலனம் ஏற்பட்டு வளி மண்டல மேல் அடுக்கில் காற்று சுழற்சி உருவாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு 20% போனஸ்
தமிழக அரசு ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்க உள்ளதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
Wednesday, September 28, 2016
பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20% தீபாவளிபோனஸ்: முதல்வர் அறிவிப்பு.
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.மேலும், தமிழ்நாடு அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் 3 லட்சத்து 67ஆயிரத்து 887 தொழிலாளர்களுக்கு ரூ.476 கோடியே 71 லட்சம் தீபாவளி போனஸாக வழங்கப்படுகிறது என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில்,'
தேர்தல் அதிகாரியாக ஆசிரியர்கள் - காலாண்டு விடுமுறை 'கட்'
ஊராட்சிகளில், தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டதால், ஆசிரியர்களுக்கு காலாண்டு விடுமுறை, 'கட்' ஆனது. உதவியாளர் நிலையில் உள்ளோரை ஊராட்சி வார்டு பதவிக்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக நியமிக்க, மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
ஆசிரியர் படிப்பில் போலி மாணவர்கள்
அரசிடம் இருந்து, கல்வி உதவி தொகை பெற, ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில், போலி மாணவர் சேர்க்கை நடப்பதாக புகார் எழுந்துள்ளது.இதுகுறித்து, ஆசிரியர் பயிற்சி பள்ளி அதிகாரிகள் கூறியதாவது:
பிளஸ் 2 துணை தேர்வு நாளை சான்றிதழ்
பிளஸ் 2, உடனடி துணை தேர்வு எழுதியோருக்கு, நாளை அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதுகுறித்து, அரசு தேர்வுத்துறை வெளியிட்ட அறிவிப்பு:
ரேஷன் அரிசியில் புழுவா? : '1967'ல் புகார் அளிக்கலாம்
ரேஷன் பொருட்கள் தரம் தொடர்பாக, '1967' என்ற தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கும் வசதியை, தமிழகம் முழுவதும் உணவு துறை விரிவுபடுத்தியுள்ளது. ரேஷன் பொருட்கள் வினியோகத்திலும், அவற்றின் தரத்திலும், பல புகார்கள் எழுகின்றன.
சட்டத்தை மதிக்காத சி.பி.எஸ்.இ., பள்ளிகள்
மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், கட்டாய கல்வி சட்டப்படி, மாணவர் சேர்க்கை நடக்கவில்லை என, தெரியவந்துள்ளது. இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, அனைத்து தனியார் பள்ளிகளிலும், 25 சதவீத சேர்க்கை நடக்க வேண்டும்.
Tuesday, September 27, 2016
தன்னம்பிக்கை இருந்தால் வெற்றி நிச்சயம்..!

நாம் அனைவருமே எடுத்துக் கொண்ட காரியத்தில் வெற்றி பெற வேண்டும் என்றே விரும்புகிறோம். ஆனால், அனைவராலும் வெற்றி பெறமுடிவதில்லை . இந்த காரியத்தில் ஏன் என்னால் வெற்றி பெற இயலவில்லை என்று பலரும் யோசிப்பதில்லை. மாறாக, அவ்வளவு தான் என் விதி என்று விட்டுவிடுகிறோம் .
கல்விக்கடனில் இந்தியாவிலேயே தமிழகம்தான் ஃபர்ஸ்ட்!
இந்தியாவில் கல்விக்காக கடன்பட்டு இருக்கும் மாநிலத்தில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. இந்தியாவில் மொத்த கடனில் 21சதவிகிதம் தமிழகத்தில் வாங்கபட்டு உள்ளது என்று மாநிலங்கள் அவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
1ஜி.பி.க்கு, ரீச்சார்ஜ் செய்தால் 10ஜிபி நெட்பேக். இது வோடாஃபோன் அதிரடி..
ஜியோவின் அதிரடி என்ட்ரியை தொடர்ந்து, அனைத்து நெட்வொர்க்களும் மார்க்கெட்டில் தங்களது இடத்தை தக்க வைக்க ஆஃபர்களை அள்ளி வழங்கி வருகின்றன. இதில் வோடஃபோன் 1 ஜி.பி.க்கு ரீச்சார்ஜ் செய்தால், 9 ஜி.பி. இலவசம் என்ற அதிரடி ஆஃபரை அறிமுகப்படுத்தியுள்ளது.
தேர்தல் பணிக்கு 2.5 லட்சம் ஆசிரியர்கள் நியமனம் : காலாண்டு விடுமுறையை ரத்து செய்து பணிக்கு திரும்பினர்
உள்ளாட்சித் தேர்தல் பணியில் 2 லட்சத்து 50 ஆயிரம் ஆசிரியர்களை தேர்தல் ஆணையம் ஈடுபடுத்தியுள்ளது. வேட்பு மனுத் தாக்கல் முதல் வேட்பு மனுதாக்கலின் கடைசி நாள் வரை இவர்கள் பணியில் இருப்பார்கள். தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளுக்கான தேர்தல் அக்டோபர் 17 மற்றும் 19ம் தேதி என இரண்டு கட்டமாக நடக்கிறது.
அரசுப்பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள்; பொதுத்தேர்வுக்கான முன்தயாரிப்பு!
முக்கிய பாடங்களில் பின்தங்கும் மாணவர்களுக்கு, பயிற்சி அளிக்கும் நோக்கில், காலாண்டு விடுமுறையில், அரசு பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடக்கின்றன.
Monday, September 26, 2016
பள்ளி கல்வித்துறை இணை இயக்குநர்கள் மாற்றம்
பள்ளிக் கல்வித்துறையில் நேற்று 3 இணை இயக்குநர்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர். 2 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
அக். 17, 19-இல் 2 கட்டமாக உள்ளாட்சித் தேர்தல்
உள்ளாட்சி மன்ற அமைப்புகளுக்கான தேர்தல் 2 கட்டமாக அக்டோபர் 17, 19 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர் பெ.சீத்தாராமன் அறிவித்தார். சென்னை கோயம்பேடில் உள்ள மாநிலத் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
பள்ளிகளின் கல்வித் தரத்தை அறிய மாணவர்களிடையே தேர்வு: மத்திய அரசு முடிவு.
பள்ளிகளின் கல்வித் தரமறிய, மாணவர்களிடையே மத்திய அரசு மதிப்பீட்டுத் தேர்வு நடத்தும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.
நோயற்ற வாழ்விற்கு 30 குறிப்புகள்
1.தண்ணீர் நிறைய குடியுங்கள்.
2. காலை உணவு ஒரு அரசன்/அரசி போலவும், மதிய உணவு ஒரு இளவரசன்/இளவரசி போலவும்,இரவு உணவை யாசகம் செய்பவனைப் போலவும் உண்ண வேண்டும்.
3. இயற்கை உணவை, பழங்களை அதிகமாக எடுத்துக் கொண்டு,பதப் படுத்தப்பட்ட உணவை தவிர்த்துவிடுங்கள்.
4. உடற்பயிர்ச்சி மற்றும் பிரார்த்தனைக்கு நேரம் ஒதுக்குங்கள்.
Central Government has a proposal to Pay 1% DA from July 2016 as an interim Measure
Central Government has a proposal to Pay 1% DA from July 2016 as an interim MeasureThe Sources Close to the Ministry of finance informed that there is proposal to Pay 1% DA from July as an interim Measure.It is said that the Central Government has not yet decided about the DA rates in Revised Pay scale.
அசத்தல் காதுகளை காக்க களம் இறங்கிய மாணவர்கள் அரசு பள்ளியின் கள ஆய்வு தந்த விழிப்புணர்வு.
காதுகளில் குடைச்சலை ஏற்படுத்தும் வாகனங்களின் இரைச்சலை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என களஆய்வு மூலம் கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர், மதுரை ஒத்தக்கடை அரசு தொடக்கப் பள்ளி மாணவர்கள்.
91 மருத்துவ 'சீட்'களுக்கு இன்று கலந்தாய்வு
சென்னை:மாநிலத்திற்கு திரும்ப கிடைத்த, 91 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, இன்று நடக்கிறது. இ.எஸ்.ஐ., கல்லுாரிமருத்துவ மாணவர் சேர்க்கை செயலர், செல்வராஜ் கூறியதாவது:
அங்கீகாரமற்ற படிப்புகளை நடத்துகிறதா இந்திய மருத்துவ சங்கம்: மாணவர்கள் அதிர்ச்சி
மதுரை:இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதியின்றி அங்கீகாரமற்ற சான்றிதழ் படிப்புகளை பயிற்று விப்பதாக இந்திய மருத்துவ சங்கம் (ஐ.எம்.ஏ.) மீது புகார் எழுந்துள்ளன.
Sunday, September 25, 2016
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் - மாவட்ட வாரியாக தொடர்பு தொலைபேசி எண்கள்
- தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்
- தொடர்பு தொலைபேசி எண்கள்
- பொது் 044 23635010 044- 2363 5011
- மின்னஞ்சல் முகவரி tnsec.tn@nic.in
- தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் நேரடி 044- 2363 5030
- செயலாளர்
- நேரடி 044 2363 5050
- 044 23635010 விரிவு 2005
- முதன்மைத் தேர்தல் அலுவலர் (ஊராட்சிகள்)
- நேரடி 044-2363 5014
- 044-2363 5010 விரிவு 3000
OCTOBER -2016 : DIARY
- 01-10-2016: AEEO Grievance
- 02-10-2016 : Sunday - Gandhi jayanti
- 03-10-2016 RL - Hijri new year
- 08-10-2016: DEEO Grievance
- 09-10-2016 : Sunday - Holiday
12 th Tutor - கன்னியாக்குமரி மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் 12 th Tutor என்ற ஆண்ட்ராய்டு செயலி வெளியீடு!!!
முறைகேடு நடக்காமல் தடுக்க விரைவில் டி.ஆர்.பி., 'ரிசல்ட்'
272 விரிவுரையாளர் பணியிடத்திற்கான தேர்வில், முறைகேடுகளை தவிர்க்க, தேர்வு முடிவை விரைந்து வெளியிட, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது.
BHARATHIDASAN UNIVERSITY* Centre for Distance Education B.Ed Admission Notification for the Calendar Year 2017 (2 years)
*BHARATHIDASAN UNIVERSITY*
Centre for Distance Education
B.Ed Admission Notification for the Calendar Year 2017 (2 years)
Application & Prospectus for B.Ed. Programme
*Application form will be issued from 26.09.2016
*Eligibility - 10+2+3 or 11+1+3
*Cost of Application - Rs.500/-
*Fees - Rs.25,000 Per Annum
*Last date for receipt and filled-in application forms - 25.10.2016
www.bdu.ac.in
வங்கிகளுக்கு 5 நாள் விடுமுறை
அடுத்த மாதம், பொதுத் துறை வங்கிகள், ஐந்து நாட்கள் இயங்காது. வங்கிகளுக்கு,ஒவ்வொரு மாதமும், இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை விடுமுறை தினம்.
2,000 ஆசிரியர் இடம் காலி மத்திய அரசு பள்ளிகளில்: தமிழக பட்டதாரிகளுக்கு வாய்ப்பு
மத்திய அரசின் நவோதயா பள்ளிகளில், 2,072 காலியிடங்களில், புதிய ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். தமிழக பட்டதாரிகள், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். மத்திய அரசின், மனிதவள மேம்பாட்டு அமைச்சக நேரடி கட்டுப்பாட்டில், 591 இடங்களில், ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் செயல்படுகின்றன.
'அரசு ஊழியர் ஓய்வூதியமா; எங்களுக்கு தெரியாது': கைவிரித்தது ஆணையம்.
'புதிய ஓய்வூதிய திட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் குறித்த விபரம் எங்களுக்கு தெரியாது' என, ஓய்வூதிய நிதி ஒழுங்கற்று மேம்பாட்டு ஆணையம் (பி.எப்.ஆர்.டி.ஏ.,) கைவிரித்துள்ளது. மத்திய அரசு செயல்படுத்திய புதிய ஓய்வூதிய திட்டத்தில்மத்திய அரசு ஊழியர்கள், மேற்கு வங்கம், திரிபுரா தவிர்த்த மற்ற மாநில அரசு ஊழியர்கள் இணைக்கப்பட்டனர்.
டெங்கு, சிக் குன் குனியாவை தடுக்க தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை.
பள்ளி மாணவர்களுக்கு, 'டெங்கு, சிக் குன் குனியா' போன்ற காய்ச்சல்கள் வராமல் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
'இன்ஸ்பையர்' விருது பதிவு : அரசு பள்ளிகளுக்கு சிக்கல்.
மத்திய அரசின், அறிவியல் விருதுக்கான பதிவுக்கு, உரிய வழிகாட்டுதல் இல்லாததால், தமிழக பள்ளிகள் பதிவு செய்யமுடியாமல் தவிக்கின்றன. மத்திய அரசின், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, ஆண்டுதோறும், புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்தும் வகையில், 'இன்ஸ்பையர்' விருதை வழங்குகிறது.
புதிய ஓய்வூதிய திட்ட விவகாரம் : அரசு பணியாளர்கள் எச்சரிக்கை.
''புதிய ஓய்வூதிய திட்டத்தை, ரத்துசெய்ய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், போராட்டம் நடத்தப்படும்,'' என, தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்க தலைவர் செல்வராஜ் தெரிவித்தார்.மதுரையில், அவர் அளித்த பேட்டி: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு எந்த பயனும் இல்லாத, புதிய ஓய்வூதிய திட்டத்தை, ரத்து செய்ய வேண்டும்; பழைய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
தனியார் பள்ளி வாகனங்களுக்கு கிடுக்கிப்பிடி கட்டுப்பாடுகள்
மாணவர்களை ஏற்றிச் செல்லும் தனியார் வாகனங்களுக்கு, கிடுக்கிப்பிடி விதிமுறைகள் கொண்டு வர, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில், 5,500 தொடக்கப் பள்ளிகள்; 3,700 மெட்ரிக்; 5,000 மழலையர்; 660 சி.பி.எஸ்.இ., உட்பட மொத்தம், 15 ஆயிரம் தனியார் பள்ளிகள் உள்ளன.
இன்று வாக்காளர் சிறப்பு முகாம்
தமிழகத்தில் உள்ள, அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், இன்று வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. வரும், 2017 ஜன., 1ம் தேதி, 18 வயது பூர்த்தியாவோரின் பெயர் சேர்ப்பதற்காக, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடக்கிறது. வாக்காளர்கள் வசதிக்காக, இரண்டு சிறப்பு முகாம் நடத்த, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.
10ம் வகுப்பு தனித்தேர்வர் 27 முதல் விண்ணப்பம்
பத்தாம் வகுப்பு தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்கள், செப்., 27 முதல், அறிவியல் செய்முறை பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.அரசு தேர்வுத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, 2017 மார்ச்சில் நடக்க உள்ளது.
சட்டசபை தேர்தல் பணி மதிப்பூதியம் : தமிழகத்துக்கு ரூ.64.70 கோடி ஒதுக்கீடு.
சட்டசபை தேர்தல் பணியில் ஈடுபட்ட, கலெக்டர் முதல், கடைநிலை ஊழியர்களுக்கு, மதிப்பூதியமாக, 64.70 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
Saturday, September 24, 2016
அரசு பள்ளிகள், கல்லூரிகளில் WIFI - முதல்வர் ஜெயலலிதா
மாணவர்களுக்கு இணைய வசதி: மேல்நிலைப் பள்ளிகள், கல்லூரிகளில் மாணவர்களுக்கு கட்டணமில்லாத இணையதள வசதி செய்து தரப்படும் என்ற வாக்குறுதியும் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதன்படி, முதல் கட்டமாக 50 பள்ளிகளில் ரூ.10 கோடியில் நிறுவப்படும் என்றும் இந்தச் சேவையை தொடர்ந்து வழங்குவதற்காக ஆண்டுதோறும் ரூ.1.5 கோடி அளிக்கப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
பேரிடர் மேலாண்மை பள்ளிகளில் போட்டி
பேரிடர் மேலாண்மை தொடர்பாக, பள்ளிகளில் போட்டிகள் நடத்த, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர், ராமேஸ்வர முருகன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
TRB EXAM:வினாத்தாள் 'லீக்' - பெண் மீது வழக்கு
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில், 'வாட்ஸ் ஆப்'பில் வினாத்தாள் வெளியான சம்பவத்தில், தேனியைச் சேர்ந்த பெண் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.ஆசிரியர் பயிற்சி விரிவுரையாளர்களுக்கான போட்டித் தேர்வு, செப்., 16ல், மதுரை உட்பட, ஐந்து மாவட்ட மையங்களில் நடந்தது.
புதிய கல்வி கொள்கை 7 நாள் மட்டுமே அவகாசம்
மத்திய அரசின், புதிய கல்வி கொள்கை குறித்த கருத்துக்களை அனுப்ப, ஒரு வாரம் மட்டுமே அவகாசம் உள்ளது. கடந்த, 1968ல் உருவாக்கப்பட்ட கல்வி கொள்கைக்கு பதிலாக, மத்திய அரசு, புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்காக, தமிழகத்தை சேர்ந்த, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் தலைமையில், ஐந்து பேர் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
நுழைவு தேர்வுகளுக்கு தனி ஆணையம்?
'இன்ஜினியரிங் மற்றும் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுகளை நடத்த, தனி ஆணையம் அமைக்கலாம்' என, மத்திய அரசுக்கு, சி.பி.எஸ்.இ., ஆலோசனை தெரிவித்துஉள்ளது.
அரசு இ-சேவை மையங்களில் ஆதார் பதிவு
அரசு இ-சேவை மையங்களில் ஆதார் பதிவுகள் மேற்கொள்ளப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
Friday, September 23, 2016
FLASH NEWS : முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதி - நலமாக உள்ளார்
தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவர் நலமாக இருக்கிறார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, சென்னை க்ரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக வியாழக்கிழமை நள்ளிரவு அனுமதிக்கப்பட்டார். இந்த தகவலையடுத்து அங்கு பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
புதிய ஓய்வூதிய திட்டம் ரத்தாகிறதா?
ஓய்வூதிய திட்டம் குறித்து முடிவு எடுப்பதற்காக, அரசு அமைத்துள்ள நிபுணர் குழு, மூன்றாவது நாளாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களிடம் கருத்து கேட்டது. தமிழக அரசு ஊழியர்களுக்கு, பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டம், 2003 ஏப்., 1ல், அமல்படுத்தப்பட்டது. இதற்கு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் என, அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழகத்திற்கு கூடுதலாக 1,000 எம்.பி.பி.எஸ்., இடம்
தமிழகத்தில், ஏழு சுய நிதி கல்லுாரிகளில், 1,000 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு, இந்திய மருத்துவக் கவுன்சிலான, எம்.சி.ஐ., அனுமதி அளித்துள்ளது.
தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை
பள்ளி மாணவர்களுக்கு, 'டெங்கு, சிக் குன் குனியா' போன்ற காய்ச்சல்கள் வராமல் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பிய சுற்றறிக்கை
புத்தகப் பையால் ஆபத்து: சி.பி.எஸ்.இ., எச்சரிக்கை
'மாணவர்கள் தோளில் தொங்கும்படி, புத்தகப் பைகளை கொண்டு சென்றால், முதுகு பகுதியில் பாதிப்பு ஏற்படும்' என, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கு, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக, சி.பி.எஸ்.இ., வெளியிட்டுள்ள அறிவுரை:
10ம் வகுப்பு துணை தேர்வு செப்., 28ல் துவக்கம்
பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு, செப்., 28ல், துவங்கும்' என, அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
Thursday, September 22, 2016
Subscribe to:
Posts
(
Atom
)