Ad Code

Responsive Advertisement

மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் தகவல்

வெப்பசலனம் நீடிப்பதால் தமிழகத்தில் மழைதொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நிலவும் வெயில் காரணமாக வெப்ப சலனம் ஏற்பட்டு வளி மண்டல மேல் அடுக்கில் காற்று சுழற்சி உருவாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.


அதிகபட்சமாக நேற்று மானாமதுரை, தேவக்கோட்டை, செஞ்சி, புதுச்சேரி, மரக்காணம் 50 மிமீ மழை பெய்துள்ளது. செய்யூர், சிவகங்கை 30 மிமீ, திருச்சுழி, வானூர், திண்டிவனம், மன்னார்குடி 20மிமீ, தஞ்சாவூர், திருப்பூர், போளூர், பரமக்குடி, திருப்பத்தூர், திருமயம் 10 மிமீ மழை பெய்துள்ளது. சென்னையை பொறுத்தவரை நேற்று காலையில் இருந்தே பொதுவாக மேகமூட்டம் காணப்பட்டது. புறநகரில் அதிகாலை முதல் சில இடங்களில் நல்ல மழை பெய்தது.

இந்நிலையில், ஆந்திர கடலோரப் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தம் காரணமாக ஆந்திராவில் கனமழை பெய்து வருகிறது. அந்த க ா ற்றழுத்தம் அதே இடத்தில் நீடிப்பதாலும், தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக உருவான வளி மண்டல மேல் அடுக்கில் ஏற்பட்டுள்ள காற்று சுழற்சி ஆகியவை காரணமாக வட தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்யும். தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் வாய்ப்புள்ளது. சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரின் சில இடங்களில் மழை பெய்யும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement