Ad Code

Responsive Advertisement

வாக்காளர் துணை பட்டியல்அக். 3 ல் வெளியீடு

உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் துணை பட்டியல் அக்.,3 ல் வெளியிடப்படுகிறது. விண்ணப்பங்கள் மீது கள ஆய்வு இல்லாததால் போலி வாக்காளர்கள் அதிகளவில் இருக்க வாய்ப்புள்ளது.சட்டசபை வாக்காளர்கள்படி, உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. 

மாநில தேர்தல் ஆணையம் கேட்டு கொண்டதால், வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்தப் பணியில் செப்.,11 வரை பெறப்பட்ட விண்ணப்பங்கள் படி, புதிய வாக்காளர்களாக சேர்க்கப்பட்டனர். (2017 ஜன., 1 ல் 18 வயது பூர்த்தி அடையும் விண்ணப்பங்கள் சேர்க்கப்படவில்லை). இப்பணி முடிந்து வாக்காளர் பட்டியல் விபரத்தை உள்ளாட்சித் தேர்தல் அதிகாரிகளிடம் வருவாய்த்துறையினர் ஒப்படைத்தனர்.

வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அக்., 3 ல் துணை பட்டியல் வெளியிடப்பட உள்ளது. மேலும் புதிதாக பெறப்பட்ட வாக்காளர் சேர்ப்பு விண்ணப்பங்களில் ஏராளமானோர் 25 வயதை கடந்தோராக உள்ளனர். கள விசாரணை இன்றி அவர்களது பெயர் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் வேறு பகுதிகளில் பெயர் இருந்தாலும் கூட, தங்களுக்கு வேண்டியோர் போட்டியிடும் பகுதிகளில் போலி வாக்காளர்களாக சேர வாய்ப்பு உள்ளது.


தேர்தல் அதிகாரி ஒருவர் கூறியதாவது: விண்ணப்பங்களை கம்யூட்டரில் ஏற்றி, 'சாப்ட்வேர்' மூலம் சரி பார்த் துள்ளோம். அதேபோல் ஏற்கனவே வேறு பகுதிகளில் பெயர் இருந்து, நீக்கல் சான்று இல்லாமல் கொடுத்தோரின் விண்ணப்பங்களை நிராகரித்துள்ளோம். இதனால் போலி வாக்காளர்கள் சேர வாய்ப்பில்லை, என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement