Saturday, April 30, 2016
Friday, April 29, 2016
MBBS கட்டாய நுழைவுத் தேர்வால்தமிழக மாணவர்களுக்கு சிக்கல்.
'மருத்துவப் படிப்புக்கு பொது நுழைவுத்தேர்வு கட்டாயம்' என, சுப்ரீம் கோர்ட் அறிவித்து ள்ளதால், தமிழகத்தில் நடைமுறையில் உள்ள, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலான மாணவர் சேர்க்கையை, நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில், மருத்துவப் படிப்புகளுக்கு, பொது நுழைவுத்தேர்வு முறை ரத்து செய்யப்பட்டு, 2007 முதல், பிளஸ் 2 மதிப்பெண்ணை வைத்து, 'கட் - ஆப்' மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடக்கிறது.
ஆங்கில கல்வியில் அசத்தும் அரசு பள்ளி!
ராசிபுரம் அருகே, தமிழ் மற்றும் ஆங்கில கல்வியில் தனியார் பள்ளிக்கு இணையாக அசத்தும் கிராமப்புற பள்ளி, தற்போது இட நெருக்கடியால் அவதிப்பட்டு வருகிறது.
TNTET:ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கு ஒத்திவைப்பு.
ITEM NO.90 REGISTRAR COURT. 2 SECTION XII
S U P R E M E C O U R T O F I N D I A
RECORD OF PROCEEDINGS
BEFORE THE REGISTRAR MR. M V RAMESH
Petition(s) for Special Leave to Appeal (C) No(s).
26256-26257/2015
STATE OF TAMIL NADU, REP. BY ITS SECRETARY TO GOVT., SCHOOL
EDUCATION (TRB) DEPARTMENT AND ORS.
Petitioner(s)
VERSUS
S. VINCENT AND ORS Respondent(s)
(with office report)
கோவையில் 2-வது முறையாக வெளியானது 5-ம் வகுப்பு வினாத் தாள்: தேர்வுத் துறை இயக்குநரிடம் புகார்.
கோவை மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் தயாரான 5-ம் வகுப்பு பருவத் தேர்வு வினாத் தாள்கள் மீண்டும் வெளியாகியுள்ளதாக சர்ச்சை கிளம்பியுள்ளது. இதுகுறித்து கல்வித் துறை அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.தமிழகத்தில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டுக்கான மூன்றாம் பருவத் தேர்வு கடந்த 21-ம் தேதி தொடங்கியது.
Thursday, April 28, 2016
மருத்துவ பொது நுழைவுத் தேர்வு நடத்த மத்திய அரசுக்கு உத்தரவு: தேதிகளை அறிவித்தது உச்ச நீதிமன்றம்.
புது தில்லி :அனைத்து மாநிலங்களிலும் உள்ள மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு அகில இந்திய பொது மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்த மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அகில இந்திய பொது மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்துவது தொடர்பான தீர்ப்பை இன்று வெளியிட்டது உச்ச நீதிமன்றம்.
தபால் ஓட்டில் செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை !!! 100% தபால் ஓட்டு பதிவிற்காக....
தபால் ஓட்டு பதிவு செய்யும் போது கவனிக்க ...
முதலில் கட்சிகளின் சின்னம் அடங்கிய துண்டு சீட்டில் தங்களுக்கு பிடித்த சின்னத்துக்கு அருகில்✅ டிக் அடிக்க வேண்டும்.
வாக்குசாவடி தலைமை அலுவலர்கள் பணி:(வாக்கு பதிவு தொடங்குவதற்கு முன்) TIPS 2
வாக்குபதிவு அலுவலர்கள், போலீசார் அனைவரும் வந்துள்ளனரா என்பதை உறுதி செய்து, வரவில்லை எனில் மண்டல அலுவலருக்கு தகவல் தெரிவித்து அவர்கள் வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்குசாவடியில் போதுமான இட வசதி, வாக்காளர்கள் உள்ளேநுழையவும், வெளியேறவும் தனித்தனி வழிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
Wednesday, April 27, 2016
Emis online சேர்க்கைக்கு !
Emis online சேர்க்கைக்கு
உங்கள் பள்ளியிலிருந்து வேறு பள்ளிக்கு சென்ற மாணவர்களை உடனே நீக்கிவிடுங்கள்.
வேறு பள்ளியிலிருந்து உங்கள் பள்ளிக்கு வந்த மாணவர்களை அந்த பள்ளியிலிருந்து அவர்கள் நீக்கினால் தான் சேர்க்கமுடியும் என்ற நிலை இன்றிலிருந்து சரி செய்யப்பட்டுள்ளது.
வாக்குசாவடி தலைமை அலுவலர்கள் பணி:(வாக்கு பதிவு தொடங்குவதற்கு முன்) TIPS 1
- வாக்குபதிவுக்கு முந்தைய நாள் பகல் 12 மணிக்கே வாக்குசாவடிக்கு செல்ல வேண்டும்
- வாக்குபதிவுக்கு முந்தையநாள் பகல் 12 மணிக்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குசாவடிக்கு சென்றடையும் வகையில் பயணத்தை திட்டமிட்டுக்கொள்ள வேண்டும்.
Tuesday, April 26, 2016
ஆறு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் திருக்குறள்: உயர் நீதிமன்றம் புது உத்தரவு
தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டு முதல் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு திருக்குறளின் அறத்துப்பால் மற்றும் பொருட்பால் பிரிவுகளில் உள்ள அனைத்து குறட்பாக்களையும் முழுமையாக கற்பிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் மாணவர்களின் அறிவு, ஞானமும் மேம்பட்டு பயங்கரவாதம், குற்றங்கள், மதுவின் பாதிப்புகள் குறையும் என நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
தேர்தல் பணி பயிற்சிக்கு வரும் ஊழியர்களுக்கு மதிய உணவுக்கு ரூ.150 - தேர்தல் கமிஷன் உத்தரவு
தேர்தல் பணி தொடர்பான பயிற்சிக்கு வரும் ஊழியர்களுக்கு, மதிய உணவுக்கு பதிலாக, உணவுப்படி வழங்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில், மே, 16ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இப்பணியில், 1.97 லட்சம் பெண்கள் உட்பட, 3.29 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். இவர்களுக்கான பயிற்சி முகாம், நேற்று தமிழகம் முழுவதும் துவங்கியது.
அரசு ஊழியரின் 2வது மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் இல்லை: ஐகோர்ட்
அரசு ஊழியரின் முதல் மனைவி இருக்கும் போது அல்லது முதல் மனைவி இறந்த பின், இரண்டாவது திருமணம் செய்திருந்தால், அப்பெண் குடும்ப ஓய்வூதியம் கோர முடியாது' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி முதுவயலைச் சேர்ந்தவர் வேலு; வனத்துறையில் வனக்காப்பாளராக பணியாற்றினார்.
இணையதளத்தில் பழுது: மின் நுகர்வோர் அவதி
தமிழ்நாடு மின் வாரிய இணையதளத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக, மின் நுகர்வோர், மின் கட்டணம் செலுத்த முடியாமல், பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இது தொடர்பாக, மின் வாரியம் எந்த அறிவிப்பும் வெளியிடாதது, நுகர்வோரிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.மின் கட்டணம் செலுத்த, மின் வாரிய அலுவலகங்களில், நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதை தவிர்க்க, மின் வாரிய இணையதளம் மூலம், மின் கட்டணம் செலுத்தும் வசதி, 2007ல் அறிமுகமானது.
முதுநிலை படிப்புக்கான 'டான் செட்' தேர்வு அறிவிப்பு
அண்ணா பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளில், முதுநிலை படிப்புகளில் சேர, ஜூன், 11ல், 'டான் செட்' நுழைவுத் தேர்வு நடத்தப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கு உட்பட்ட, 550 இன்ஜி., கல்லுாரிகளில், எம்.இ., - எம்.டெக்., - எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., போன்ற முதுநிலை படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். வரும் கல்வி ஆண்டில், முதுநிலை படிப்பில் சேர, ஜூன், 12ல், 'டான்செட்' நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., படிப்புகளுக்கு, ஜூன், 11ல் நுழைவுத் தேர்வு நடக்கிறது.
Monday, April 25, 2016
தேர்தல் பற்றிய முழுமையான வீடியோ தொகுப்பு தமிழில் தமிழக தேர்தல் ஆணையம் வெளியீடு.
தமிழக தேர்தல் ஆணையம் தேர்தல் பற்றிய முழுமையான கையேடு ஒன்றை தமிழில் YouTube இல் பதிவிட்டுள்ளது. 1 மணி 12 நிமிடம் ஓடக்கூடிய 525 mb அளவில் 720p HD video வாக இது கிடைக்கிறது.
CTET தேர்வு முடிவுகள் மே -8 ல் வெளியாகிறது !
சிபிஎஸ்இ வாரியம் நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (சிடிஇடி) தேர்வு முடிவுகள் மே மாதம் 8-ம் தேதி வெளியாகின்றன. இது ஹரியாணா மாநிலத்துக்கான ஆசிரியர் தகுதித் தேர்வாகும். இந்தத் தேர்வுகள் கடந்த பிப்ரவரி 21-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. அப்போது ஹரியாணா நிலத்தில் நிர்வாகக் கோளாறு காரணமாக இந்தத் தேர்வு நடைபெறவில்லை. இதைத் தொடர்ந்து ஹரியாணா மாநிலத்துக்காக தனியாக மே 8-ம் தேதி இந்தத் தேர்வுகளை நடத்தவுள்ளது சிபிஎஸ்இ.
பகுதி நேர பி.இ., பி.டெக்.: ஏப்ரல் 25 முதல் விண்ணப்பிக்கலாம் !
பகுதி நேர பொறியியல் (பி.இ., பி.டெக்.) படிப்புகளில் சேர விரும்புவோர் ஏப்ரல் 25 முதல் மே 9 வரை விண்ணப்பிக்கலாம். 2016-17ஆம் கல்வியாண்டில் பகுதி நேர பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர பாலிடெக்னிக் முடித்து, பணியில் இருப்பவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கோடை துவங்கியாச்சு பெற்றோர்களே உஷார் : அறிவுத்திறன்களை வளர்க்க வழி செய்வோமே:அவசியம் கண்காணிப்பு
பள்ளி வகுப்புகள் முடிந்து கோடை விடுமுறை துவங்கும் நிலையில், தற்போது வெயில் கொளுத்தி வருவதால் தங்களது பிள்ளைகளின் மீது பெற்றோர்கள் கண்காணிப்பு மிக அவசியமாகிறது. கோடை விடுமுறையை பயனுள்ளதாகவும், பாதுகாப்பாகதானகவும் இருக்குமாறு பெற்றோர்கள் பார்த்துகொள்ளவேண்டும்.
BLINDER's VOTE ,TENDER VOTE ! BLINDER's VOTE:
கண் பார்வையற்றவரை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
மின்னணு இயந்திரத்தை தடவிப் பார்த்து, ஓட்டுப்பதிவு செய்ய வேண்டும்.
ஓட்டுப்பதிவு நடைமுறைகள் அனைத்தையும் படிவம் ' 17C' யில் பதிவு செய்ய வேண்டும்.
Sunday, April 24, 2016
சிறந்த ஆசிரியர்களுக்கான விருது பட்டியல் அனுப்ப உத்தரவு.
கணினி வழி கல்வி யில், சிறந்த ஆசிரியர்களுக்கான தேசிய விருதுக்கு விண்ணப்பிக்க, ஆசிரியர்கள் உத்தரவிடப்பட்டுள்ளனர்.பள்ளி மாணவர்களிடம் கணினி வழி கல்வியை ஊக்குவிக்க, மத்திய கல்வி தொழில்நுட்ப நிறுவனம் சார்பில், ஆசிரியர்களுக்கு தேசிய விருது வழங்கப்படுகிறது.
தேர்தல் பணியில் பெண்கள் அதிகம்
தமிழகத்தில், தேர்தல் பணியில், பெண் ஊழியர்கள் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சட்டசபை தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும், தேர்தல் கமிஷன் செய்துள்ளது. தேர்தல் பணியில், 1.97 லட்சம் பெண்கள்; 1.32 லட்சம் ஆண்கள் என, மொத்தம், 3.29 லட்சம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
பிளஸ் 2 தேர்வில் வினாத்தாள் பிழைகளால் 22 மார்க் போச்சு
பிளஸ் 2 தேர்வில் வினாத்தாளில் ஏற்பட்ட பிழைகளால், 22 மதிப்பெண் வரை மாணவர்கள் இழந்து, உயர்கல்வி திட்டம் மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத் தேர்வு, இந்த ஆண்டு மார்ச் 4ல் துவங்கி, ஏப்., 1ல் முடிந்தது. தேர்வில் வினாத்தாள்களில் பல மாற்றங்கள் இருந்ததால், நுாற்றுக்கு நுாறு என, 'சென்டம்' வாங்குவோர் எண்ணிக்கை கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வானளாவிய அதிகாரம் : சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆசிரியரின் தாயாரை விசாரணைக்கு அழைத்து அழைப்பாணை - ,முதன்மை கல்வி அலுவலரிடம் விளக்கம் கேட்டு கடிதம்
சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி .ஞானகௌரி அவர்கள் ,விசாரணை அலுவலராக கரூர் மாவட்ட அரவக்குறிச்சி பட்டதாரி ஆசிரியர் திரு வடிவேலு என்பாருக்கு நியமிக்கப்பட்டு கடந்த 18-04-2016அன்று விசாரணைக்காக கரூர் சென்றுள்ளார் .தனக்கு வானளாவிய அதிகாரம் உள்ளதாக நினைத்து சம்பந்தப்பட்ட ஆசிரியரின் தாயாரை விசாரணைக்கு அழைத்து அழைப்பாணை அனுப்பியுள்ளார் அவ்வாறு அனுப்பப்பட்ட ஆணைக்கு விசாருணைக்கு செல்லாமல் , முதன்மை கல்வி அலுவலரிடம் விளக்கம் கேட்டுள்ள கடிதம் உங்கள் பார்வைக்கு.....

Saturday, April 23, 2016
ஆசிரியர் நியமனம்: தனி நீதிபதியின் உத்தரவு சரியே.
இடைநிலை ஆசிரியர் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க உத்தரவிட்டதை எதிர்த்து, தொடக்க கல்வி இயக்குனர் தாக்கல் செய்தமேல்முறையீட்டு மனுவை, சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நாகை மாவட்டம், செம்பனார் கோவிலில் உள்ள, அரசு உதவி பெறும்பள்ளியில், சரவணபாபு என்பவர், இடைநிலை ஆசிரியராக, 2012 பிப்., 20ல் நியமிக்கப்பட்டார்; அன்றே பணியிலும் சேர்ந்து விட்டார்.
Election -2016:உங்கள் வாக்குச் சாவடியை அறிய....
SMS மூலம் உங்கள் வாக்குச் சாவடியை கண்டரியTypeஎன்று Type செய்து 9444123456 என்ற எண்ணிற்கு SMS செய்யுங்கள்
இணையதளம் வாயிலாக உங்கள் வாக்குச் சாவடியை அறிய இங்கு கிளிக் செய்யவும்.
7th pay commission growth only 14.28 percent!
The 7th pay commission report has failed to address the welfare of employees, said president of confederation of central government employees and workers KKN Kutty.Criticising strongly, K K N Kutty said it is “totally disappointing and beats logic”.
தபால் ஓட்டு விண்ணப்பிக்க கீழ் கண்ட ஆவணங்களை மறக்காமல் எடுத்துச் செல்லவும்.
தபால் ஓட்டு விண்ணப்பிக்க, 24.04.2016 அன்று நடைபெறும் தேர்தல் வகுப்பிற்கு கீழ் கண்ட ஆவணங்களை மறக்காமல் எடுத்துச் செல்லவும்...
1. Voter. ID Xerox
2. Assambly Name, No.
3. Serial No.
4. Part No.
5. Election Duty Order Xerox.
புதிய பென்ஷன் திட்டத்தில் இரு கணக்கு எண்களால் குழப்பம் சீரமைக்கும் கருவூலத்துறை.
புதிய பென்ஷன் திட்டத்தில் சில அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இரு கணக்கு எண் இருப்பதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனை சீரமைக்கும் பணியில் கருவூலத்துறை ஈடுபட்டுள்ளது.தமிழகத்தில் 2003 ஏப்., 1ல் புதிய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் தமிழகத்தில் 4,23,441 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அச்சுப்பிழையால் அதிகபட்ச 'கருணை' பிளஸ் 2 மாணவர்கள் 'குஷி'
பிளஸ் 2 தேர்வில் வினாத்தாளில் ஏற்பட்ட அச்சுப்பிழை காரணமாக மாணவர்களுக்கு இந்தாண்டு 22 மதிப்பெண் 'கருணை' மதிப்பெண்ணாக வழங்கப்பட்டது.மார்ச் 4ல் பிளஸ் 2 தேர்வுகள் துவங்கி ஏப்.,1ல் முடிவுற்றது. மார்ச் 14ல் விடைத்தாள் திருத்தும் பணி துவங்கி பல மாவட்டங்களில் நேற்றுடன் திருத்தும் பணிகள் முடிந்தன.கடந்த ஆண்டில் அனைத்து பாடங்களிலும் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் 'சென்டம்' பெற்றனர்.
Friday, April 22, 2016
தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு தபால் ஓட்டு போட படிவம் 7 ம் தேதி நடைபெறும் இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பின் போது ஓட்டுச் சீட்டு வழங்கப்படும்.
தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு வரும் 24ம் தேதி நடைபெறும் முதல் பயிற்சி வகுப்பிலேயே தபால் ஓட்டு போடுவதற்கான படிவம் வழங்கப்பட உள்ளது. தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு வரும் மே மாதம் 16ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறது.
தேர்தல் பயிற்சிக்கென ஒரு ஆன்ட்ராய்டு செயலி
தேர்தல் பணியில் ஈடுபடவிருக்கும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆகியோருக்கு உதவும் வகையில் ஒரு ஆன்ட்ராய்டு செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளி ஆசிரியர் இட மாற்றத்தைக் கண்டித்து பள்ளி மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்பு
அரூர் அருகே அரசுப் பள்ளி ஆசிரியரின் இட மாற்றத்தை கண்டித்து அந்தப் பள்ளி மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்பில் புதன்கிழமை ஈடுபட்டனர். அரூர் ஒன்றியம், வேப்பநத்தம் அரசு நடுநிலைப் பள்ளியில் 136 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜேந்திரன், ஆங்கிலப் பாட ஆசிரியர் காந்தி உள்பட 6 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.
போலி ஆசிரியர்கள் யார்: களம் இறங்கிய கல்வித்துறை: குழப்பத்திற்கும் தீர்வு
போலி ஆசிரியர்களை கண்டுபிடிக்க தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. உண்மைத்தன்மை சான்று பெறுவதில் இருந்த குழப்பத்தையும் ஆசிரியர் தேர்வு வாரியம் தீர்த்து வைத்துள்ளது. சமீபத்தில் போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்த ஆசிரியர் பிடிபட்டார்.
புத்தக சுமையை குறைக்க சி.பி.எஸ்.இ., புது உத்தரவு
மாணவர்களின் புத்தகச் சுமையைக் குறைக்க, சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய கல்வி வாரியம், பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளது.இது தொடர்பாக சி.பி.எஸ்.இ., வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில் கூறப்பட்டுள்ளதாவது:
தேனி, குமரிக்கு இன்று உள்ளூர் விடுமுறை.
*மங்கலதேவி கண்ணகி கோயிலில் இன்று(ஏப்.,22) சித்ராபவுர்ணமி விழா கொண்டாடப்படுவதையொட்டி, தேனி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் உத்தரவிட்டுள்ளார்.
10, பிளஸ்-2 புத்தகம் விநியோகம்
தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வியியல் பணிகள் நிறுவன மேலாண்மை இயக்குனர் மைதிலி ராஜேந்திரன்மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
பல்கலை தேர்வு தேதி நீட்டிப்பு
மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலைக்கல்வி மாணவர்களுக்கு மே 25ல் துவங்கும் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 2ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. பல்கலை கூடுதல் தேர்வாணையர் பி.டி.மனோகரன் தெரிவித்துள்ளதாவது:
பகுதி நேர பி.இ., படிப்பு விண்ணப்பங்கள் வரவேற்பு.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லுாரிகளில், 2016 - 17ம் கல்வியாண்டில், பகுதி நேர, பி.இ., - பி.டெக்., பட்டப்படிப்புகளுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தொழில்நுட்ப கல்வி இயக்குனர் மதுமதி விடுத்துள்ள அறிக்கை:
தேர்தல் பணியாளர்கள் அடையாள அட்டை அணிவது கட்டாயம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் பணியாற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் தங்களுக்கான அடையாள அட்டையைகட்டாயம் அணிந்து பணியாற்ற வேண்டும்என்றார் மாவட்டத் தோóதல் அலுவலர் சு. கணேஷ். சட்டப்பேரவைத் தோóதலில் போட்டியிடும் வேட்பாளர்களிடமிருந்து வேட்புமனு பெறும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் தொடர்பாக புதுகையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்குத் தலைமை வகித்து ஆட்சியர் பேசியது:
Thursday, April 21, 2016
20GB அளவான 3G இன்டர்நெட் டேட்டா வெறும் 50 ரூபாய்க்கு - டிஜிட்டல் இந்தியா
இன்டர்நெட் பயன்படுத்துவோரில் பெரும்பாலானோர் எதிர்கொள்ளும் ஒரு பொதுவான பிரச்சினையாக இன்டர்நெட் டேட்டா அளவு மற்றும் அதன் வேகம் ஆகிய இரண்டையும் கூறலாம். இன்டர்நெட் டேட்டா அதிகளவில் கிடைத்தால் அதன் வேகம் குறைவாகவும், இன்டர்நெட் வேகம் அதிகளவில் இருந்தால் டேட்டா குறைவாகவும் என்று, இன்டர்நெட் டேட்டாகளை வழங்கக்கூடிய நிறுவனங்கள் நம்மை பந்தாடிக்கொண்டு இருக்கின்றன.
தபால் ஓட்டுக்கான படிவம் 24ம் தேதி... வழங்கல்! அரசியல் கட்சிகளின் கோரிக்கை ஏற்பு
தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு வரும் 24ம் தேதி நடைபெறும் முதல் பயிற்சி வகுப்பிலேயே தபால் ஓட்டு போடுவதற்கான படிவம் வழங்கப்பட உள்ளது. தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு வரும் மே மாதம் 16ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறது.
ரூ.5க்கு 'குளுக்கோ மீட்டர்' உணர் கருவிகள்: அழகப்பா பல்கலைக்கழகம் கண்டுபிடிப்பு
சர்க்கரை நோயாளிகளின் ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனைக்கு பயன்படுத்தப்படும், 'குளுக்கோ மீட்டரில்' உள்ள உணர் கருவிகளை, ஐந்து ரூபாய்க்கு குறைவான செலவில் தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தை, அழகப்பா பல்கலை உயிர் மின்னணு மற்றும் உயிர் உணர்விகள் துறை கண்டுபிடித்துள்ளது.
அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு: தமிழக அரசு உத்தரவு
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள், ஆகியோருக்கு, 6 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு, ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலை மாதம், அகவிலைப்படி உயர்த்தப்படும். அதை தொடர்ந்து, மாநில அரசு ஊழியர்களுக்கான, அகவிலைப்படியை, மாநில அரசுகள் உயர்த்தும்.
மாணவர்கள் சேர்க்கை
திருச்சி திருப்பாராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண குடிலின் துவக்க, உயர்நிலைப்பள்ளியில் இலவச கல்விக்கான மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது.தாய், தந்தை இல்லாத ஆதரவற்றோர் ஒன்று முதல் எட்டாம் வகுப்பில் சேர்த்துக் கொள்ளப்படுவர். தாயோ அல்லது தந்தையோ இல்லாத ஆண் குழந்தைகள் சேர்த்துக் கொள்ளப்படுவர்.
டி.என்.பி.எஸ்.சி., தேர்வு முடிவுகள்
தமிழக அரசின் அரசுப்பணி தேர்வாணையம் டி.ன்.பி.எஸ்.சி., கடந்த ஆண்டு நடத்திய பல்வேறு தேர்வுகளுக்கான முடிவுகளை இணையதளத்தில் அறிவித்து உள்ளது.தமிழக அரசுப்பணி தேர்வாணையம் டி.என்.பி.எஸ்.சி., கடந்த ஆண்டில் நவம்பர் 8 ல் குரூப் 1 தேர்வு, ஆகஸ்ட் 1ல் பல்வேறு நிலைகளில் நுாலகர் தேர்வு, ஜூலை 11ல் உதவி புள்ளியல் அதிகாரி தேர்வு டிசம்பர் 21ல் குரூப் 4 தேர்வு ஆகியவற்றை நடத்தியது.
ஜூலை 29ல் குரூப் 1 முதன்மை எழுத்து தேர்வு: மூன்று நாட்கள் நடக்கிறது
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஜூலை 29, 30, 31 ஆகிய தேதிகளில் முதன்மை எழுத்து தேர்வு நடத்தப்படுகிறது. ஒருங்கிணைந்த குடிமைப்பணி-I தேர்வு தொகுதி-1ல் அடங்கிய 74 காலி பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி தேர்வு நடத்தப்பட்டது.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் விநியோகம்
அடுத்த கல்வியாண்டுக்கான பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்காக புத்தகங்கள் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன. இது குறித்து தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் நிறுவன மேலாண் இயக்குநர் மைதிலி கே.ராஜேந்திரன் கூறியதாவது:
Wednesday, April 20, 2016
FLASH NEWS : தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படி அறிவிப்பு.
தமிழக அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 01.01.2016 முதல் அகவிலைப்படி 6% உயர்த்தி இன்று அரசு ஆணையிட்டுள்ளது. .அரசாணைஎண் 117/நிதி (படிகள்)/நாள் 20.4.2016. தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு. இதன்மூலம் 119% இருந்து 125% அகவிலைப்படி உயர்வு பெறுகிறது.
தேர்தல் பணியில் 13 ஆயிரம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்: ஏப்.24-இல் பயிற்சி வகுப்பு.
மதுரை மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் பணியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 12,800 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்களுக்கான முதல்கட்டப் பயிற்சி வகுப்பு ஞாயிற்றுக்கிழமை (ஏப்.24) நடைபெறுகிறது.மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 2,685 வாக்கு சாவடிகள் அமைக்கப்படுகின்றன.
Tuesday, April 19, 2016
மே 9 முதல் மருத்துவ படிப்புக்கான விண்ணப்பம் விநியோகம்.
தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய படிப்புகளுக்கான விண்ணப்பம் விநியோகம் மே 9-ம் தேதி முதல் தொடங்கும் என மருத்துவ கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார்.விண்ணப்பங்களை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் பெற்றுக் கொள்ளலாம். அல்லது tnhealth.org என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.
உங்கள் குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிப்பது எப்படி ?

ஞாபகம் ஒரு வியாதி , மறதி ஒரு வரம் என்று சொல்வார்கள் ,
ஆனால் நம் குழந்தை படித்தததை எல்லாம் மறுக்கும் போது மறதி ஒரு சாபம் போல நமக்கு தோன்றும் .
புதிதாக 2.2 லட்சம் பேரை வேலைக்கு சேர்க்கிறது மத்திய அரசு
இன்னும் ஒரு ஆண்டுக்குள் 2.2 லட்சம் ஊழியர்களை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 2015ம் வருடம் மார்ச் 1ம் தேதி வரையில் மத்திய அரசில் 33.05 லட்சம் ஊழியர்கள் பணிபுரிந்தனர். இதனை இந்த ஆண்டு 34.93 லட்சமாகவும், அடுத்த ஆண்டு மார்ச்1க்குள் 35.23 லட்சம் ஊழியர்களாவும் அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதில் ரயில்வே துறையிலும் ஆட்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
எஸ்.எஸ்.எல்.சி.: கணிதத்துக்கு 4 கருணை மதிப்பெண்கள்: தேர்வுத் துறை அறிவிப்பு.
தமிழகத்தில் எ முழுவதும் ஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத் தேர்வு கடந்த வாரத்துடன் முடிந்தது. 16-ஆம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணி தமிழகம் தொடங்கியது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இரு மையங்களில் விடைத் தாள் திருத்தப்படுகிறது.
பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் இலவசமாக பதிவு: அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவி மையம் அமைப்பு.
பொறியியல் படிப்புக்கு மாணவர்கள் இலவசமாக பதிவுசெய்யும் வகையில் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் ஆன்லைன் பதிவு தொடர்பான விவரங்களை மாணவர்கள் தொலைபேசி மூலமாகவும் அறிந்துகொள்ளலாம்.
மருத்துவ படிப்புக்கு 'ஆன்லைன்' விண்ணப்பம்.
மருத்துவ படிப்புகளுக்கு, 'ஆன்லைன்' விண்ணப்பமுறை, அமலுக்கு வருகிறது. குழப்பங்களை தடுக்க, வழக்கமான காகித விண்ணப்ப முறையையும் தொடர, மருத்துவ கல்விஇயக்ககம் திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில், இன்ஜி., படிப்புக்கு, முதல் முறையாக, ஆன்லைன் விண்ணப்ப முறை அமலுக்கு வந்துள்ளது. ஏப்., 15 முதல், விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.
Subscribe to:
Posts
(
Atom
)