Ad Code

Responsive Advertisement

கோடை துவங்கியாச்சு பெற்றோர்களே உஷார் : அறிவுத்திறன்களை வளர்க்க வழி செய்வோமே:அவசியம் கண்காணிப்பு

பள்ளி வகுப்புகள் முடிந்து கோடை விடுமுறை துவங்கும் நிலையில், தற்போது வெயில் கொளுத்தி வருவதால் தங்களது பிள்ளைகளின் மீது பெற்றோர்கள் கண்காணிப்பு மிக அவசியமாகிறது. கோடை விடுமுறையை பயனுள்ளதாகவும், பாதுகாப்பாகதானகவும் இருக்குமாறு பெற்றோர்கள் பார்த்துகொள்ளவேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் கடைசி வாரம் முதல் மே வரை பள்ளி மாணவர்களுக்கு கோடைவிடுமுறை விடப்படுகிறது. அடுத்த கல்வியாண்டிற்கு புத்துணர்ச்சியுடன் தங்களை தயார்படுத்தி கொள்ளவும், தங்களது உறவினர்கள் வீட்டிற்கு சென்று சொந்தபந்தங்களுடன் விடுமுறையை அனுபவிக்கவும் இது உதவுகிறது. இந்த வாரம் முதல் விடுமுறை விடப்பட உள்ளது. வழக்கம்போல் பெற்றோர்களும், பள்ளி மாணவர்களும் தங்களது விடுமுறை கொண்டாட்டத்தை திட்டமிட்டிருப்பர். ஆனால் தற்போது வெயிலின் தாக்கம் மிக கடுமையாக இருப்பதால் பெற்றோர்கள் மிக கவனமுடன் இருக்கவேண்டும்.

தோல் நோய்கள்:தங்களது பிள்ளைகள் வெயிலில் அலைவதை தடுக்கவேண்டும், இல்லையெனில் தோல் நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. மைதானங்களில் விளையாடும் கிரிக்கெட், கால்பந்து,கபடி, கைபந்து போன்ற விளையாட்டுகளை காலையில் வெகுசீக்கிரமாக முடித்துகொள்வது நல்லது. நீர்நிலைகள்,கிணறுகள், ஆறுகள், குளங்களில் பிள்ளைகள் நீச்சல் பயிற்சி செய்யவோ, குளிக்கவோ செல்லும்போது பெற்றோர்கள் உடனிருப்பது மிகவும் அவசியம்.



செய்திதாள்கள் கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்கும் வகையில் எழுத்துபயிற்சி, பொது அறிவு வளர்க்க நுாலகம் செல்வது, செய்திதாள்கள் படிப்பது, சதுரங்கம், கேரம், தாயம் போன்ற விளையாட்டுகளை விளையாடுவது,மனதைரியத்தை வளர்க்க யோகா பயிற்சி போன்றவற்றை குழந்தைகளுக்கு கற்றுகொடுக்கவும் பெற்றோர் முன்வரவேண்டும்.

பாரம்பரிய விளையாட்டுகள்: ஸ்ரீவில்லிபுத்துார் பாலசுப்பிரமணியன், “வீடியோகேம், டிவி, அலைபேசி ஆகியவற்றில் மாணவர்கள் அதிகநேரம் செலவிடுவதை தடுத்து , செய்திதாள்கள் படிப்பது, நுாலகம் செல்வது,டைப்ரைட்டிங் பயிற்சி பெறுவது, அறிவுத்திறன் வளர்க்கும் விசயங்களை தெரிந்துகொள்வது, மனத்தை ஒருமுகபடுத்தும் பயிற்சிகள், பாரம்பரிய தமிழ் விளையாட்டுகள் உட்பட பல நல்ல விசயங்களை பிள்ளைகளுக்கு கற்றுத்தர பெற்றோர்கள் முன்வரவேண்டும்,”என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement