Saturday, October 31, 2015
கனமழை - பள்ளிகளுக்கு இன்று (31/10/0/2015)விடுமுறை
கனமழை காரணமாக இன்று 31/10/2015 சனிக்கிழமை நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்
ஆய்வு கூட்டத்தில் அவதூறாக பேசிய அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி கண்டித்து தலைமை ஆசிரியர்கள் வெளிநடப்பு
செய்யாறு தனியார் பள்ளியில் மாவட்ட அளவில் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளின் கல்வி முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. இதில் அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி, திருவண்ணாமலை மாவட்ட பள்ளிகள் வாரியாக தேர்ச்சி சதவிகிதம் குறித்து புள்ளி விவரங்களுடன் கேள்வி எழுப்பி விளக்கம் கேட்டு வந்தார். கூட்டம் மாலை வரை நடைபெற்றது.
366 பேருக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு
இடைநிலை, சிறப்பாசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் 366 பேர் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றனர். இதற்கான இணைய வழி (ஆன்-லைன்) கலந்தாய்வு மாநிலம் முழுவதும் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆங்கில ஆசிரியர்களுக்கு அரசு பள்ளிகளில் கிராக்கி
அரசு பள்ளிகளில், ஆங்கில ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தமிழ் மற்றும் அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள், பதவி உயர்வுக்கு காத்திருக்கின்றனர். அரசு பள்ளிகளில் உள்ள இடைநிலை, உடற்கல்வி மற்றும் சிறப்பாசிரியர்களில் பட்டப்படிப்பு முடித்தவருக்கு, பதவி உயர்வு வழங்கும் கலந்தாய்வு, நேற்று நடந்தது.
1.20 லட்சம் ஆசிரியர்களின் டி.பி.எப்., மாநில கணக்காயருக்கு மாற்றம்
தமிழக தொடக்கக் கல்வித் துறையில், மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சிகளில், 5ம் வகுப்பு வரையுள்ள பள்ளிகளில், 1.20 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களின் ஊதியத்தில், மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படும், வருங்கால வைப்புநிதி கணக்குகள், மாநில தகவல் மையத்தால் பராமரிக்கப்பட்டன.
CTET - மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு வெளியீடு
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) சார்பில் நடத்தப்பட்ட மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (சி.டி.இ.டி.) முடிவு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை www.ctet.nic.in, www.cbse.nic.in ஆகிய இணையதளங்களில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
10ம் வகுப்பு தேர்வில் தமிழ் மொழி கட்டாயம்!
நடப்பு கல்வியாண்டில், பத்தாம் வகுப்பு வரை அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும், தமிழ் பாடம் கட்டாயம் என்பதால், சிறுபாண்மை மொழி பள்ளி மாணவ, மாணவியரின் தேர்ச்சியை அதிகரிக்க, குறைந்த பட்ச கற்றல் கையேடு வழங்கப்படுகிறது.
அறிவியில் வினாத்தாள் முறையில் மாற்றம்!
மாணவர்கள் சிந்தித்து, பதில் அளிக்கும் வகையில், அறிவியல் வினாத்தாள் முறையில் மாற்றம் கொண்டு வரப்படும், என, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் பேசினார். கரூர், புலியூர் செட்டிநாடு பொறியல் கல்லூரியில், தலைமையாசிரியர், ஆசிரியர்களுக்கான மீளாய்வு கூட்டம் நடந்தது. பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் பேசியதாவது:
மழலையர் பள்ளிகளுக்கு புதிய விதிமுறை வெளியிட உத்தரவு
:தமிழகத்தில், அனுமதியின்றி, 700 மழலையர் பள்ளிகள் இயங்குவதாகவும், அதிக கட்டணம் வசூலிப்பதாகவும், அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் பாலசுப்ரமணியன் என்பவர், மனு தாக்கல் செய்தார். இவ்வழக்கை விசாரித்த, உயர் நீதிமன்றம், மழலையர் பள்ளிகளுக்கான புதிய விதிமுறைகளை வகுக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
மூன்று ஆண்டு சட்ட படிப்புக்கு உயர் நீதிமன்றம் மீண்டும் 'ஓகே!'
'மூன்று ஆண்டு சட்டப் படிப்பு ரத்து; பார் கவுன்சில் பொறுப்பை, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழுவிடம் ஒப்படைக்க வேண்டும்' என, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
பிளஸ் 2 தனித்தேர்வு முடிவு நவ., 2ல் வெளியீடு
தனித் தேர்வர்களுக்கான பிளஸ் 2 துணைத்தேர்வு முடிவுகள், நவ., 2ல் வெளியாகின்றன.இதுகுறித்து, அரசு தேர்வுத்துறை இயக்குனர் (பொறுப்பு) வசுந்தரா தேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: செப்டம்பரில் நடந்த தனித் தேர்வர்களுக்கான பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகள், நவ., 2 மாலை, 4:00 மணிக்கு வெளியிடப்படுகின்றன.
செல்வமகள் சேமிப்பு கணக்கு தொடங்க சலுகை காலம் தபால் துறை அறிவிப்பு
தபால் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
பெண் குழந்தைகளை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசு ‘‘சுகன்யா சம்ரித்தி’’ என்ற செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. நாடு முழுவதும் தொடங்கப்பட்ட 73 லட்சம் கணக்குகளில் 11 லட்சம் கணக்குகள் தமிழகத்தில் தொடங்கப்பட்டு உள்ளன. இந்ததிட்டத்தில் இதுவரை ரூ.2 ஆயிரத்து 328 கோடி முதலீடு பெறப்பட்டுள்ளது.
குரூப் -- 1 ஹால் டிக்கெட்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், நவ., 8ம் தேதி நடத்தப்படும், குரூப் - 1 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டு உள்ளது.
Friday, October 30, 2015
NOVEMBER-2015 DIARY
- 7 th Grievence day
*RL-Leave days
- Nov-2 Kallarai thirunal,
- Nov-11 Deepawali nonbu,
- Nov-25 Karthigai Deepam
ஏர்டெல் புதிய சலுகை இன்று முதல் 50% டேட்டாவை திரும்ப தர இருக்கிறார்கள்.
ஏர்டெல் நெட்வொர்க் டைரக்டர் ஸ்ரீனி கோபாலன் இன்று புதிய சலுகையைஅறிவித்து இருக்கிறார். சாதாரண மொபைல், ஸ்மார்ட்போன் மற்றும் மோடம் (Dongle) வைத்து இருப்பர்வார்களுக்கு 2G, 3G மற்றும் 4G பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் இந்தசலுகை உண்டு.
ஆசிரியர் பதவி உயர்வு முறைகேடு கூடாது
முறைகேடுகளுக்கு இடமின்றி, ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வை நடத்த, முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி கல்வித் துறையில், பட்டதாரி ஆசிரியர்களுக்கு, 923 காலியிடங்களுக்கு, மூன்று நாட்களாக, விருப்ப இடமாறுதல் கலந்தாய்வுநடந்துள்ளது.
'குரூப் - 4' தேர்வு: கவுன்சிலிங் அறிவிப்பு'
'குரூப் - 4' தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில், இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தருக்கான, கவுன்சிலிங் தேதி அறிவிக்கப் பட்டுள்ளது. தமிழக அரசு துறையில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர் உட்பட, 4,693 காலியிடங்களுக்கானஎழுத்துத் தேர்வு, 2014 டிச., 21ல் நடந்தது; 10.61 லட்சம் பேர் தேர்வெழுதினர்.
கர்ப்பிணி அலுவலர்களுக்கு தேர்தல் கமிஷன் சலுகை
தேர்தல் பணியில் ஈடுபடும் கர்ப்பிணி அலுவலர்களுக்கு, தேர்தல் கமிஷன், சில சலுகைகளை அறிவித்துள்ளது.தமிழக சட்டசபைக்கு, வரும், 2016ல் தேர்தல் நடக்கிறது. இதற்கான ஆயத்தப் பணிகளை, தேர்தல் கமிஷன் துவக்கி உள்ளது. ஒவ்வொருஅலுவலர்களுக்கும், 10 முதல், 15 ஓட்டுச் சாவடிகள் ஒதுக்கப்பட்டுள்ளன; அவர்கள், ஓட்டுச்சாவடிகளை ஆய்வு செய்து, அறிக்கை வழங்க வேண்டும்.தேர்தல் பணியில் ஈடுபட உள்ள, அரசு அலுவலர்களுக்கு, சுய விவர படிவங்கள் வழங்கி, விவரம் சேகரிக்கப்படுகிறது.
மனப்பாடம் செய்யாமல் பாடத்தை புரிந்து படித்து தேர்வு எழுதும் முறை: அரையாண்டு தேர்வில் அறிமுகப்படுத்தப்படுகிறது
ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளரும், அரசு தேர்வுத்துறை இயக்குனருமான தண்.வசுந்தராதேவி நேற்று கூறியதாவது:-பள்ளிக்கல்வித்துறைக்கு என அரசு அதிக நிதியை ஒதுக்கி வருகிறது. அதனால் பணம் எதுவும் செலவளிக்காமல் அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். அவர்களுக்கு விலை இல்லா பாடப்புத்தகங்கள், விலை இல்லா நோட்டு புத்தகங்கள், புத்தகப்பைகள், காலணிகள், சைக்கிள் உள்பட 14 வகையான விலை இல்லா பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றன.
ஆசிரியைகள் 'ஓவர் கோட்' திட்டம் 'பணால்!'
பள்ளிகளில், 'ஓவர் கோட்' அணியும் திட்டத்திற்கு ஆசிரியை களிடம் வரவேற்பில்லை; அதனால், இத்திட்டம், ஒரு பள்ளியுடன் கைவிடப்பட்டுள்ளது.மாணவர்கள் மற்றும் தவறான எண்ணமுடைய சில ஆசிரியர்களின் கேலி, கிண்டல் மற்றும் தவறான பார்வையில் இருந்து தப்பிக்க, ஆசிரியைகளுக்கு உடை கட்டுப்பாடு கொண்டு வருவது குறித்து, பள்ளி கல்வித்துறை ஆலோசித்தது.
தேர்ச்சி குறைந்தால் ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை!!
பொதுத்தேர்வில், மாணவியரின் தேர்ச்சி விகிதம் குறையும் பாட ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்தார்.
SSA மற்றும் RMSA திட்டத்தில் பணியாற்றும் 16 ஆயிரம் ஆசிரியர்களுக்கு 'சோதனை' தீபாவளி -கவனிப்பாரா பள்ளிக் கல்வி செயலர்
தீபாவளி பண்டிகையை கொண்டாட தயாராகி வரும் நிலையில், கல்வித்துறையில் 16 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆசிரியர்கள், அக்டோபர் மாத சம்பளம் பெற முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.தமிழகத்தில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தில் (ஆர்.எம்.எஸ்.ஏ.,) பள்ளி கல்விக்கு உட்பட்ட 6872 பட்டதாரி ஆசிரியர்கள், 1590 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.
தேசிய கல்வி நாள்: பள்ளிகளுக்கு உத்தரவு
சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்த நாளான, நவம்பர் 11ம் தேதியை, தேசிய கல்வி நாளாக கொண்டாட, பள்ளிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 'திறன் மேம்பாடு மற்றும் அதிகாரமளித்தல்' என்ற தலைப்பில், போட்டிகள் நடத்தவும், உத்தரவிடப்பட்டுள்ளது.
திறந்தநிலை பல்கலையில் பி.எட்., மாணவர் சேர்க்கை
தொலைநிலையில், பி.எட்., படிக்க விரும்புவோர், நவ., 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்த பல்கலையில், தேசிய கல்வியியல் கவுன்சில் அனுமதியுடன், இரண்டு ஆண்டு தொலைநிலை பி.எட்., படிப்பு வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்ப வினியோகம், 14ல் துவங்கியது.
Thursday, October 29, 2015
கல்விக்கடன் பெற அரசு புதிய இணையதளம்.
அண்மையில் நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட சுதந்திர தினத்தை ஒட்டி, மாணவர்கள் கல்விக்கடன் பெறுவதை மேலும் எளிமையாக்கும் வகையில் புதிய இணையதளம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பழைய ஓய்வூதியம்: ஆசிரியர்கள் தீர்மானம்
பழைய ஓய்வூதியம் முறையை அமல்படுத்த, அனைத்து இந்திய ஆசிரியர் பேரவை தீர்மானம் நிறைவேற்றியது.மதுரையில் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. தலைவர் பாலமுருகபாண்டியன் தலைமை வகித்தார். அமைப்பு செயலாளர் குமார் வரவேற்றார். பொதுச் செயலாளர் ஜார்ஜ் பேசினார். இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளைதல், பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்துதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வுகளில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க ஆசிரியர்களுக்கு அதிகாரிகள் அறிவுரை
எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வுகளில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் முகாமிட்டு அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்கள்.
குறைந்தது எம்.எட். சேர்க்கை: தேதியை நீட்டிக்கும் கல்லூரிகள்
முதுநிலை ஆசிரியர் கல்வியியல் படிப்பில் (எம்.எட்.) சேர்க்கை குறைந்ததைத் தொடர்ந்து, படிப்புக்கு விண்ணப்பிக்கும் தேதியை நீட்டிக்கும் நிலைக்கு கல்லூரிகள் தள்ளப்பட்டுள்ளன. தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்.சி.டி.இ.) புதிய வழிகாட்டுதலின்படி, பி.எட்., எம்.எட். படிப்புகளின் படிப்புக் காலம் நிகழாண்டு முதல் இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு 450 பேர் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு
இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் 450 பேருக்கு பட்டதாரி ஆசிரியர்களாக இந்த ஆண்டு பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது.
வினா வங்கி புத்தகம் விற்பனை தாமதம்
பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு வினாத்தாளில் மாற்றம் வரவுள்ளதால், வினா வங்கி விற்பனை தாமதமாகியுள்ளது.பள்ளி பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, நடப்பாண்டு பாடத்துடன், முந்தைய ஐந்து ஆண்டு பொதுத் தேர்வு மற்றும் தனித்தேர்வு வினாத்தாள்களுக்கான விடைகளும் கற்றுத் தரப்படும்.
தெருவில் கிரிக்கெட் ஆடும் மாணவர் தேசிய அணிக்கு தேர்வாகலாம்
தெருக்கள் மற்றும் மைதானங்களில், ஆக்ரோஷமாக கிரிக்கெட் மற்றும் கால்பந்து விளையாடும் மாணவர்களை, தேசிய அணியில் இடம் பெற செய்ய, மத்திய அரசு புதிய, 'ஆன் லைன்' திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
சித்தா படிப்பில் 99 கூடுதல் இடம்
சித்த மருத்துவ படிப்புகளுக்கு, கூடுதலாக, 99 இடங்கள் கிடைத்ததால், கலந்தாய்வு இரவு வரை நீடித்தது.தமிழகத்தில், ஆறு அரசு மருத்துவ கல்லுாரி கள், 21 சுயநிதி கல்லுாரிகளில், சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட, 1,099 இந்திய மருத்துவ படிப்பு இடங்கள் உள்ளன.
போனஸ் 'ஸ்டிரைக்' அறிவிப்பு '108' ஊழியர் 40 பேர் 'டிஸ்மிஸ்'
தமிழக அரசின் சுகாதார திட்டத்தின் கீழ், ஜி.வி.கே., நிறுவனம், அவசர கால, '108' ஆம்புலன்ஸ் சேவையை செயல்படுத்துகிறது; இதில், 3,500 ஊழியர்கள் உள்ளனர். தீபாவளிக்கு, 20 சதவீத போனஸ் தர, நிர்வாகம் மறுத்ததால், நவ., 8 முதல், காலவரையற்ற ஸ்டிரைக் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில், ஊழியர்கள், 40 பேருக்கு, ஜி.வி.கே., நிறுவனம், 'டிஸ்மிஸ்' நோட்டீஸ் அளித்துள்ளது.
எஸ்.ஆர்.எம்., பல்கலை நுழைவுத்தேர்வு அறிவிப்பு
இன்ஜி., மற்றும் மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வை, எஸ்.ஆர்.எம்., பல்கலை அறிவித்துள்ளது.இதுகுறித்து பல்கலை வெளியிட்ட செய்திக்குறிப்பு:சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலையில், 2016ம் ஆண்டு படிப்பில் சேர, 'ஆன்லைன்' நுழைவுத் தேர்வு ஏப்ரலில் நடக்கிறது.
பள்ளி குழந்தைகளுக்கு 'ஷூ': நடிகர் விஷால் அறிவிப்பு
ஒரு, 'ஷூ' வாங்கினால், 1,000 'ஷூ'க்களை, குழந்தைகளுக்கு தானம் செய்ய முடிவு எடுத்திருப்பதாக, நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். சென்னை, புதுப்பேட்டை, புனித அந்தோணியார் நடுநிலைப் பள்ளியில், விஷால் நற்பணி மன்றம் சார்பில், நலத்திட்ட உதவி வழங்கும் விழா, நேற்று முன்தினம் நடந்தது. நடிகர் விஷால், இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாம் சார்பில் பூங்கோதை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தீபாவளி முதல் டெலிபோன் அழைப்புகளை செல்போனிலும் பெறலாம்
பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய வசதியை தனது வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்ய உள்ளது. அதன்படி வாடிக்கையாளர் ஒருவர் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் டெலிபோன், செல்போன் இணைப்புகளை வைத்திருக்க வேண்டும். அவர்கள், இரவு நேரத்தில் வீடு அல்லது அலுவலகத்துக்கு வரும் டெலிபோன் அழைப்புகளை செல்போனுக்கு வரும்படி மாற்றிக் கொள்ளலாம்.
Wednesday, October 28, 2015
உயர்கல்வி மாணவர் சேர்க்கைக்கு இட ஒதுக்கீட்டை ரத்து செய்யலாம்: சுப்ரீம் கோர்ட்டு யோசனை
உயர்கல்வியில் மாணவர் சேர்க்கைக்கு இட ஒதுக்கீடு செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு செய்துள்ளது. ஆந்திரா, தெலுங்கானா மாநில அரசுகளும் இதே போல கோரிக்கை விடுத்து மனு செய்தன. சுப்ரீம் கோர்ட்டில் இன்று இந்த மனுக்கள் மீதான விசாரணை நடந்தது. அப்போது வக்கீல்கள் வாதம் நடந்தது.
சபாஷ் தலைமை ஆசிரியை !!!! தனியார் பள்ளியை மிஞ்சிய அரசுப் பள்ளி!
`அரசுப் பள்ளியில் அடிப் படை வசதிகள் மற்றும் ஆசிரியர் கவனிப்பு குறைவாக இருக்கும்’ என்ற பொதுக்கருத்தை மாற்றிக் காட்டியிருக்கிறது, கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி! காரணம், அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை பத்மாவதி. தன் சக ஆசிரியர்களுடன் கைகோத்தும், பல தரப்பிடம் இருந்து உதவித்தொகை பெற்றும் நூலகம், கலையரங்கம், கணினி ஆய்வகம், சிசிடிவி கேமராக்கள் என இந்த மாற்றத்தை இங்கு மலர்த்தியிருக்கிறார்!
மாணவர்களுக்கு நல் ஒழுக்கத்தை கற்பிக்க ஆசிரியர்களுக்கு புத்தகங்கள்; ஆசிரியர் பயிற்சி இயக்குனரகம் ஏற்பாடு
பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு பாடத்துடன் நல் ஒழுக்கத்தை கற்பிக்க ஆசிரியர்களுக்கு இந்தியாவில் முதல் முதலாக புத்தகம் தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர் பயிற்சி இயக்குனரகம் சார்பில் அச்சடிக்கப்பட்டு உள்ளன. அவை விரைவில் வினியோகிக்கப்பட உள்ளது. பள்ளிக்கல்வித்துறையின் கீழ் சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த இயக்குனரகம் முன்பு ஆசிரியர் பயிற்சி இயக்குனரகம் என்று அழைக்கப்பட்டது.
ONLINE- ல் வாக்காளர் பட்டியலில் தங்களது வாக்காளர் அடையாள அட்டையின் விவரங்களை சரி பார்த்து கொள்ள வழிமுறைகள்
- இணைய தள முகவரிக்கு செல்லவும்.
- உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவிடவும்,
- தேடலை சொடுக்கவும்.
குழந்தைகள் விரும்பும் பள்ளிகளாக இன்றைய பள்ளிகள் இருக்கின்றனவா?
யுனிசெப் நிறுவனம் சென்னையில் செயல்பட்டுவரும் சமூகக் கல்வி நிறுவனம் என்ற அமைப்புடன் சேர்ந்து தமிழகம் முழுவதும் குழந்தை நேயப் பள்ளிகளை உருவாக்கும் முனைப்புடன் சில செயல் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.
உலகிலேயே முதன் முறையாக ரூ.999-க்கு ஸ்மார்ட்போன்: இந்தியாவில் அறிமுகம்
உலகிலேயே விலை குறைந்த ஸ்மார்ட்போன் வருகிற டிசம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரூ.999-க்கு விற்பனை செய்யப்படவுள்ள இந்த ஸ்மார்ட்போனை அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனமும், கனடாவின் பிரபல மொபைல் மற்றும் டேப்லட் நிறுவனமான டேட்டா வைண்ட் நிறுவனமும் இணைந்து வெளியிட உள்ளது.
10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு வினாத்தாள் தயாரிப்பில் மாற்றம்
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள், மார்ச்சில் நடைபெற உள்ளன. அதற்கான, வினாத்தாள் தயாரிக்கும் பணியை, தேர்வுத் துறை துவங்கியுள்ளது. இதற்காக, ஐந்துக்கும் மேற்பட்ட ரகசிய குழு அமைத்து, ஒவ்வொரு பாடத்துக்கும், பகுதிவாரியாக கேள்விகள் தயாரிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இவ்வினாத்தாள்கள் கடினமாக இருக்கும்படி அமைக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.
சிறப்பு ஆசிரியர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு
ஆசிரியர் பட்டத்துடன் மாற்றுத் திறனாளிகளுக்கு கல்வி கற்றுக் கொடுக்கும் சிறப்பு பட்டயம் பயின்றவர்கள் தங்களது சான்றிதழ் சரிபார்ப்பை புதன்கிழமை (அக்.28) செய்துகொள்ள வேண்டும்.
குரூப்-2 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி - 2-இல் (குரூப் 2) உள்ளடங்கிய பதவிகளை நிரப்பிட வேண்டி, தகுதியுடைய பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கலந்தாய்வில் பங்கேற்கும் ஆசிரியர்கள்தற்செயல் விடுப்பு எடுக்க வற்புறுத்தல்
ஆசிரியர் கலந்தாய்வில் பங்கேற்கும் ஆசிரியர்களுக்கு பிறபணி விடுப்பு இன்றி, தற்செயல் விடுப்பு தான் வழங்க முடியும் என தலைமை ஆசிரியர்கள் கூறுவதாக புகார் எழுந்துள்ளது.அரசு, உதவி பெறும் பள்ளி பட்டதாரி, முதுநிலை பட்டதாரி , இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆண்டு தோறும் கோடை விடுமுறையில் மாவட்டம் விட்டு மாவட்டம், மாவட்டத்திற்குள் இடமாறுதல் கலந்தாய்வு நடக்கும்.
வாக்காளர் பெயர் சேர்ப்பு பணி எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற விண்ணப்பித்தவர்களுக்கு, எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் அனுப்பும் பணி துவக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறியதாவது:
சென்னை பல்கலையில் 'நெட்' தேர்வு பயிற்சி
நெட்' தேர்வு எழுத, சென்னை பல்கலை சார்பில், சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.கல்லுாரி பேராசிரியர் பணியில் சேர, பிஎச்.டி., உதவித்தொகை பெற, நெட் தேர்வில், முதுகலை பட்டதாரிகள் தேர்ச்சி பெற வேண்டும்; டிசம்பரில், இந்த தேர்வு நடக்கவுள்ளது.
குறைவாக மதிப்பெண் பெறும் மாணவர்கள் நலனில் ஆசிரியர்கள் அதிக அக்கறை கொள்ள வேண்டும்-பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச. கண்ணப்பன்.
குறைவாக மதிப்பெண் பெறும் மாணவர்கள் நலனின் ஆசிரியர்கள் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார் பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச. கண்ணப்பன். காலாண்டுத் தேர்வில் எஸ்எஸ்எல்சி ளஸ் 2 வகுப்புகளில் 60 சதவிகித்த்துக்கும் குறைவாகவும், பிளஸ் 2 பொதுத்தேர்வில் 80 சதவிகிதத்துக்கும் குறைவாக தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமையாசியர்கள், மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற தவறிய பாட ஆசிரியர்களுக்கான மீளாய்வுக் கூட்டம் தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அனைத்து நாள்களிலும் பள்ளிகளில் ஆதார் சிறப்பு முகாம்கள்: பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவு
பள்ளிகளில் விடுமுறை நாள்கள் உள்பட அனைத்து நாள்களிலும் மாணவர்களுக்கு ஆதார் அட்டை பதிவுக்கான சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு முடிவு இன்று வெளியீடு
பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு முடிவு புதன்கிழமை (அக். 28) வெளியிடப்படுகிறது. இதை தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
தேசிய திறனாய்வு தேர்வு இன்று 'ஹால் டிக்கெட்'
மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தேசிய திறனாய்வு தேர்வு, நவ., 8ல் நடக்கிறது. இதற்கான, 'ஹால் டிக்கெட்' இன்று வெளியாகிறது.
கணினி தகுதித்தேர்வு விண்ணப்பிக்க அறிவிப்பு
தமிழக தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் நடத்தும், கணினி தகுதித்தேர்வுக்கு, நவ., 16ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
பட்டதாரி ஆசிரியர்கள் கலந்தாய்வு:18 பேர் மதுரைக்கு மாற்றம்
வெளி மாவட்டங்களில் பணிபுரிந்த பட்டதாரி ஆசிரியர்கள் 18 பேருக்கு மதுரை மாவட்டத்துக்கு இடமாறுதல் உத்தரவுகள் வழங்கப்பட்டன. வெளிமாவட்டங்களில் இருந்து மதுரைக்கு பணியிட மாறுதலுக்கு விண்ணப்பித்துள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு மாநகராட்சி இளங்கோ மேல்நிலைப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
Tuesday, October 27, 2015
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றம்: அறுவை சிகிச்சை மூலம் ஆண்மை அகற்றும் சட்டத்தை கொண்டு வர வேண்டும் மத்திய அரசுக்கு, ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன் பரிந்துரை
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண்மையை அகற்ற சட்டம் கொண்டு வருவது குறித்து மத்திய அரசு ஆலோசிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன் தெரிவித்துள்ளார்.
1,310 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல்
பட்டதாரி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வில் மாநிலம் முழுவதும் திங்கள்கிழமை 1,310 பேர் பணியிடமாறுதல் பெற்றனர். பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டத்துக்குள் இடமாறுதல் கலந்தாய்வு அந்தந்த மாவட்டங்களில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் 900-த்துக்கும் அதிகமான இடங்கள் இருந்தன. மனமொத்த இடமாறுதல் கோரியவர்களுக்கும் நிறைய இடங்களில் மாறுதல்கள் வழங்கப்பட்டன.
சிவகங்கை மாவட்டத்தில் 5 ஒன்றிய பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
திருப்புவனம், மானாமதுரை உள்பட 5 ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளுக்கு செவ்வாய்க்கிழமை (அக். 27) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
எஸ்.எஸ்.ஏ., திட்டம் ஏமாறும் மாணவர்கள்
மத்திய அரசின் அனைவருக்கும்கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., திட்டத்தில், அரசு பள்ளி மாணவர்களுக்கு கைகழுவும் பயிற்சி அளிக்கப்பட்டது. அதற்கு முன், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, முதலில் பயிற்சி தரப்பட்டது. ஆனால், இந்த பயிற்சியில், அரசு உதவிபெறும் பள்ளிகள் புறக்கணிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து, அரசு உதவிபெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:
வேலைவாய்ப்பு அலுவலக இணையதளத்தில் அரசுப் பணிகளுக்கான விவரங்கள் வெளியீடு
வேலைவாய்ப்பு அலுவலக இணையதளத்தில் மத்திய, மாநில அரசுப் பணிக்களுக்கான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இ .பி.எஃப். ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியம் பெற உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க அறிவுறுத்தல்
ஓய்வூதியதாரர்கள் உயிர்வாழ் சான்றிதழை (life certificate) கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என தொழிலாளர்வருங்கால வைப்பு நிதி அலுவலகம் தெரிவித்துள்ளது.இது குறித்து அதன் சென்னை மண்டல ஆணையர் எஸ்.டி.பிரசாத் வெளியிட்டசெய்திக்குறிப்பு:
பி.எப். தொடர்பான குறைகளை தீர்க்க நவ.11-ம் தேதி சிறப்பு முகாம்
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி தொடர்பான புகார்கள் மற்றும் குறைகளை தீர்க்க வரும் நவம்பர் 11-ம் தேதி சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க வரும் 31-ம் தேதிக்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Monday, October 26, 2015
பத்தாம் வகுப்பு தேர்வு முறையை ஏன் மாற்ற வேண்டும்?
அண்மையில் நடைபெற்ற காலாண்டுப் பொதுத்தேர்வில் 80%-க்கு குறைவாகதேர்ச்சி பெற்ற பள்ளி ஆசிரியர்களை மாவட்ட வாரியாக பள்ளிக்கல்வித்துறை இயக்குநரே நேரில் சந்தித்து ஆய்வுக்கூட்டங்களை நடத்தி வருகிறார். 100% தேர்ச்சி என்பதுதான் அரசின் இலக்கு என்பதை வலியுறுத்தினார். அரசின் இந்த இலக்கை அடையவேண்டுமெனில் அலுவலர்கள் மேலிருந்து திட்டங்களைத் தீட்டுகிற போக்கை மாற்றிக்கொள்வது அவசியம்.
அரசு மருத்துவமனைகளில் 547 மருத்துவர்கள் பணி: ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 547 இடங்களுக்கு மருத்துவர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இந்த பணியிடங்கள் மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் (MRB) மூலம் நிரப்பப்பட உள்ளன.
திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்கள் பதவி உயர்வு மனுவை பரிசீலிக்க உத்தரவு
திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்கள் பதவி உயர்வு கேட்ட மனுவைபரிசீலிக்க வேண்டும் டி.என்.பி.எஸ்.சி.க்கு, ஐகோர்ட்டு உத்தரவுதிறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்களுக்கு பதவி உயர்வு கேட்டு வழங்கப்பட்ட மனுவை 6 வாரத்துக்குள் பரிசீலிக்கவேண்டும் என்று டி.என்.பி.எஸ்.சி. செயலாளருக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில், வெங்கடேசன் உள்பட 4 பேர் ஒரு மனுவை தாக்கல் செய்தார்கள். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–
தமிழ்நாட்டில் 5 இடங்களுக்கு ‘அறிவியல் எக்ஸ்பிரஸ்’வருகிறது
அறிவியல் தொழில்நுட்பம், இயற்கை வளங்கள் ஆகியவற்றைப் பாதுகாப்பது தொடர்பானவிழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் இயக்கப்படும் “அறிவியல்எக்ஸ்பிரஸ்' ரயில் கடந்த 2007-ம் ஆண்டு முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது.
அரசு ஊழியர்கள் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வலியுறுத்தல்
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என ஆசிரியர் சங்க செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.பெரம்பலூரில், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பின் அவசர செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
பட்டதாரி ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு இன்று துவக்கம்
அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான பொதுமாறுதல் கலந்தாய்வு அக்.,26ல் துவங்குகிறது.-அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் உபரிப் பணியிடங்கள் கண்டறியப்பட்டு, அதில் பணிபுரிந்த பட்டதாரி ஆசிரியர்கள் பணிநிரவல் மூலம் மாற்றப்பட்டனர். அதற்குப்பின் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, பொதுமாறுதல் கலந்தாய்வு அக்.,26ல் துவங்குகிறது.இது தொடர்பான பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவு:
சிவில் சர்வீஸ் தேர்வு :அட்டவணை வெளியீடு
ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான சிவில் சர்வீஸ் பிரதானத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.ஐ.ஏ.எஸ்., -- ஐ.பி.எஸ்., உள்ளிட்ட, 24 வகை உயர் பதவிகளில், 1,129 காலியிடங்களை நிரப்ப, ஆகஸ்ட், 23ல், சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு நடந்தது. இதன் முடிவு கடந்த வாரம்வெளியானது. தேர்வு எழுதிய, 4.5 லட்சம் பேரில், 15 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
மத்திய அரசின் குரூப் பி,சி,டி, பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு ரத்து: பிரதமர் மோடி அறிவிப்பு
நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது பல்வேறு கூட்டங்களில் பேசியநரேந்திர மோடி மத்திய அரசின் கீழ்நிலை பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வை ரத்து செய்தாக வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.இந்த நேர்முகத் தேர்வுக்கு பரிந்துரை செய்யவேண்டி, ஏழை, எளிய மக்கள் பல இடைத்தரகர்களை நம்பி ஏமாந்து வருவதாகவும், தங்கள் மகனுக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக விதவைத் தாய்மார்களும் பணத்துக் காக சிரமப்பட வேண்டியுள்ளது.
பருவ மழை ஆபத்து,முன்னெச்சரிக்கை நடவடிக்கை-பள்ளிகளுக்குஇயக்குனர் கண்ணப்பன் சுற்றறிக்கை
பருவமழை ஆபத்துக்களில் மாணவர்கள் சிக்காமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு, பள்ளிகளுக்கு இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.பள்ளிகளுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:
Rajasthan Public Service Commission Recruitment for 13000+ posts of School Lecturer
Rajasthan Public Service Commission published an advertisement for recruitment of Lecturer for which applications are invited from eligible and desirable candidates. Application form must be submitted Online in prescribed format. Candidatesmay apply Online from 23rd October 2015 and the last date of receipt of applications Online is 23rd November 2015
தீபாவளி சிறப்பு பஸ்கள்: 28ம் தேதி அறிவிப்பு
சிறப்பு பஸ்கள் இயக்குவது குறித்து, போக்குவரத்து துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம், 28ம் தேதி நடக்கவுள்ளது. அன்றைய தினம் சிறப்பு பஸ்கள் குறித்த அறிவிப்புவெளியாகும்.
Sunday, October 25, 2015
தண்டனை... மாணவருக்கா, ஆசிரியருக்கா?கல்வித் துறை, ஆசிரியர்களின் உள்ளக் குமுறலை புரிந்து கொள்வது எப்போது?
மாதா, பிதா, குரு, தெய்வம் என, தாய், தந்தைக்கு அடுத்தபடியாக, ஆசிரியரை மதித்த காலம் இன்று மலையேறி விட்டது. ஆசிரியரைக் கண்டு மாணவர்கள் பயந்த காலம் போய், இன்று மாணவர்களைப் பார்த்து ஆசிரியர்கள் அஞ்சி நடுங்கத் துவங்கிஉள்ளனர். மாணவர்களின் நலனில் அக்கறை கொள்ளும் கல்வித் துறை, ஆசிரியர்களின் உள்ளக் குமுறலை புரிந்து கொள்வது எப்போது?
ஆசிரியர்களுக்கு ஒழுக்கம் கற்றுத்தர சிறப்பு பயிற்சி
மாணவர்களுடன், ஆசிரியர்களுக்கும் ஒழுக்கத்தை கற்று கொடுக்க, வரும், 27ல், சென்னையில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவர்கள், ஆசிரியர்கள் இடையே இணக்கமான சூழலை ஏற்படுத்தவும், மாணவர்களுக்கு பாடத் திட்டத்துடன், நற்பண்புகள் மற்றும் தனித்திறனை வளர்க்கும் வகையில் பாடம் நடத்தவும் ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
லேப்- - டாப் பெற்ற மாணவர்களின் விவரங்களை கேட்ட கல்வித்துறை
மூன்று ஆண்டுகளாக, லேப் - டாப் பெற்ற மாணவர்களின் ஜாதி, இருப்பிடவிவரங்களை, ஒரேநாளில் வழங்க அறிவுறுத்தியதால் மாவட்ட கல்வி அலுவலக ஊழியர்கள் அதிருப்தியில் உள்ளனர்.தமிழகத்தில் ஆண்டுதோறும்பள்ளிக் கல்வித்துறை பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு இலவச லேப் - டாப் வழங்குகிறது.
நீர்நிலைகளோடு, கலையையும் காப்பாற்றும் முயற்சி: ஆறு, குளங்களைக் காக்க பொம்மலாட்டப் பிரச்சாரம் - ஊர் ஊராகச் செல்லும் கோவை ஆசிரியர்
அழிந்து வரும் பாரம்பரியக் கலையான பொம்மலாட்டம் மூலம் நீர்நிலைகள் பாதுகாப்பு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் கோவையைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஓவிய ஆசிரியர் ஆனந்தராஜ்.கோவை செட்டிப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியின் ஓவியம் மற்றும் சாரணர் ஆசிரியர் ஆனந்தராஜ். இவர் கடந்த 20 ஆண்டு களாக ஊர் ஊராக சென்று, தமிழகத்தின் ஆறு, ஏரி, குளங்கள் மாசுபடுவது குறித்து பொம்மலாட்டக் கலை மூலம் பிரச்சாரம் செய்துவருகிறார்.
ஆசிரியர்களுக்கு பொது மாறுதல்,பதவி உயர்வு கலந்தாய்வு
திருவள்ளூர் மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல், பதவி உயர்வு வழங்க அக்டோபர் 26, 27, 30 ஆகிய தேதிகளில் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சிறப்பு ஆசிரியர்கள் பணியிடம் நிரப்ப பதிவு மூப்பு பரிந்துரை
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு மாநில அளவிலான பதிவுமூப்பு பரிந்துரைக்கப்பட உள்ளது. தகுதியுடையோர் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அக்.,28 இல் பதிவு மூப்பு சரி பார்க்கலாம்.இது குறித்து சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுப்பிரமணியன் கூறியது:
முன்னுதாரணமாக விளங்கும் வடமணப்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளி
எண்ம முறையில் பாடம் கற்றல், குழந்தைகள் நூல்கள் வாசித்தல், கணினிபயிற்சி பெறுதல், அறிவியல் ஆய்வகம் என பல சிறப்பு அம்சங்களுடன் சுகாதாரம், ஒழுக்கம் ஆகியவற்றுடன் சேர்ந்து கல்வி கற்பிக்கப்படுகிறது.
ரகசியம் காக்க தவறியதால் பணம் பறிகொடுத்த ஆசிரியர்கள், வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் எச்சரிக்கை
கோவை பள்ளி ஆசிரியர்கள், ஆறு பேர் வங்கி கணக்கில் இருந்து, நுாதன முறையில் பணம் திருடப்பட்ட சம்பவம், சக ஆசிரியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மீன்வளத் துறையில் பணி: விண்ணப்பிக்க அழைப்பு
மீன்வளத் துறையில் புள்ளியியல் சேகரிப்பாளர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
'ஆன்லைனில்' ஆர்.டி.ஐ., மனு மத்திய தகவல் ஆணையர் தகவல்
''தகவல் அறியும் உரிமை சட்டப்படி, விபரங்கள் கோரும் மனுவையும், அதற்கான பதிலையும், 'ஆன்லைனில்' அனுப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என, மத்திய தகவல்ஆணையர் யசோவர்த்தன் ஆசாத் கூறினார்.நெய்வேலி நிலக்கரி கழகமான, என்.எல்.சி., சார்பில், 'தகவல் அறியும் உரிமை சட்டம் - 2005' என்ற தலைப்பிலான கருத்தரங்கம், சென்னையில் நேற்று நடந்தது.
Saturday, October 24, 2015
SABL & ALM TIME TABLE
SABL TIME TABLE
8.50-9.10 CLEANING
9.10-9 .30 PRAYER
9.30-9.35 MEDITATION
9.35-12.10 SUBJECT 1
12.10-12.40 VALUE EDUCATION, YOGA ETC
தமிழ்வழி பொறியியல் பட்டதாரிகளுக்கு குவியும் அரசு வேலைவாய்ப்புகள்
தனியார் நிறுவனங்களில் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், தமிழ்வழி யில் பொறியியல் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகள் குவிந்து வருகின்றன.தமிழ்வழி பொறியியல் கல்வி திட்டம் கடந்த 2010-ம் ஆண்டு திமுக ஆட்சியில் அறிமுகப்படுத்தப் பட்டது. அதன்படி, அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ்வழியில் சிவில், மெக்கானிக்கல் பொறியியல் பாடப் பிரிவுகள் தொடங்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் தலா 60 இடங்கள் உருவாக்கப்பட்டன.
அரசு பள்ளி ஆசிரியர்கள் வெளிநாடு செல்ல தடை
தமிழக பள்ளிக் கல்வித்துறை இயக்குனரின் அனுமதியின்றி, ஆசிரியர்கள் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு, பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள், பாஸ்போர்ட் பெறுவதிலும், வெளிநாடு செல்வதிலும் பல கட்டுப்பாடுகள் உள்ளன.
நவ.16ம் தேதி முதல் 2ம் பருவ இடைத்தேர்வு துவக்கம்
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, நவ., 16ம் தேதி முதல், இரண்டாம் பருவ இடைத்தேர்வு நடத்த, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில், ஒன்பதாம் வகுப்பு வரை முப்பருவ தேர்வு மற்றும் கற்பித்தல் முறை அமலாகிறது. 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை ஆண்டு தேர்வு நடத்தப்படுகிறது.
தரம் உயர்த்தப்பட்ட 344 பள்ளிகளில் கட்டடங்கள் கட்டும் பணி தொடக்கம்
தமிழகம் முழுவதும் உயர்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்பட்ட 344 பள்ளிகளில் ரூ.555 கோடியில் கட்டடம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் சார்பில், 2010-11, 2011-12 ஆகிய ஆண்டுகளில் முறையே 344, 710 நடுநிலைப் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டன. இந்தப் பள்ளிகளுக்குக் கட்டடம் கட்ட தனது 75 சதவீதப் பங்கான ரூ.518 கோடியை மத்திய அரசு ஒதுக்கியிருந்தது.
அரசு ஊழியர்களின் சம்பளத்தில் ரூ.6 ஆயிரம் குறைக்க பரிந்துரைத்த நிதித்துறையின் உத்தரவுக்கு ஐகோர்ட் இடைக்கால தடை
குரூப் 2 பணியிடங்களுக்கு இணையான பணியிடங்களில் பணிபுரிந்து வந்த அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.15,600 ஊதியத்தை ரூ.9,300 ஆக குறைக்க பரிந்துரைத்த நிதித்துறையின் உத்தரவுக்கு ெசன்ைன ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.
குரூப் - 2 ஏ: விண்ணப்ப தேதி நீட்டிக்கப்படுமா
தமிழக அரசின், 33 துறைகளில், குரூப் - 2 ஏ பதவியில் காலியாக உள்ள, 1,863 இடங்களுக்கு, டிசம்பர், 27ல் தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. அதே தேதியில், மத்திய அரசின், 'நெட்' தேர்வு நடக்க உள்ளதால், குழப்பம் ஏற்பட்டது.
திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்கள் பதவி உயர்வு கேட்ட மனுவை பரிசீலிக்க வேண்டும் டி.என்.பி.எஸ்.சி.க்கு, ஐகோர்ட்டு உத்தரவு
திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்களுக்கு பதவி உயர்வு கேட்டு வழங்கப்பட்ட மனுவை 6 வாரத்துக்குள் பரிசீலிக்கவேண்டும் என்று டி.என்.பி.எஸ்.சி. செயலாளருக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில், வெங்கடேசன் உள்பட 4 பேர் ஒரு மனுவை தாக்கல் செய்தார்கள். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–
ஆர்.கே. நகரில் ஐ.டி.ஐ.: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
ஆர்.கே. நகரில் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் (ஐ.டி.ஐ.) தொடங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து, தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
பார்வையிழந்த மாணவி சிகிச்சைக்காக தவிப்பு
பார்வை இழந்த, 10ம் வகுப்பு மாணவி, அறுவை சிகிச்சை செய்ய வசதியின்றி தவிக்கிறார்.திருப்பூர் மாவட்டம், இடுவம்பாளையம், நாச்சம்மாள் காலனியை சேர்ந்தவர் ஜெயலட்சுமி. கணவரை இழந்த இவர், பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவருக்கு, பிரியங்கா, 15, விக்னேஷ், 13, என, இரு குழந்தைகள். பிரியங்கா, இடுவம்பாளையம் அரசு பள்ளியில், 10ம் வகுப்பும், விக்னேஷ் எட்டாம் வகுப்பு படிக்கின்றனர்.
பாடத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு! அரசுக்கு கல்வி ஆர்வலர்கள் கோரிக்கை
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், காலாண்டுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள், பொதுத்தேர்விலும் அதிக மதிப்பெண் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதுபோன்று, படிப்பில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கும் நடத்த வேண்டும் என கல்வி ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆய்வக உதவியாளர் பணி 7 லட்சம் பேர் காத்திருப்பு
பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கான தேர்வு முடிவு கிடப்பில் போடப்பட்டுள்ளதால், ஏழு லட்சம் பேர், ஐந்து மாதங்களாக காத்திருக்கின்றனர். அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாகஇருந்த, 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு, மே, 31ல் எழுத்துத் தேர்வு நடந்தது; ஏழு லட்சம் பேர் பங்கேற்றனர். இந்த தேர்வுக்கான அறிவிப்பே குளறுபடியாக இருந்ததால், ஆரம்பத்திலேயே பிரச்னைகள் ஏற்பட்டன.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று கடைசி நாள் அரசு விடுமுறை என்பதால் ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று (சனிக்கிழமை) கடைசி நாளாகும். அரசு விடுமுறை என்பதால் ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
பள்ளி சான்றிதழில் ‘பகீர்’ மோசடி : போக்குவரத்து கழக ஊழியர் 13 பேர் அதிரடி பணிநீக்கம்
போக்குவரத்துக்கு கழகங்களில் வேலைக்கு சேர்பவர்கள் பணி நியமனத்தின்போது தரும் பள்ளி சான்றிதழ், சென்னையில் உள்ள பள்ளிக்கல்வி துறைக்கு அனுப்பப்பட்டு உண்மை நிலை அறியப்படும். காரைக்குடியில் உள்ள அரசு போக்குவரத்து கழகத்தில் கடந்த 1991ம் ஆண்டு முதல் 2002 வரையிலான ஆய்வில் 15 பேர், 8ம் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை என்பது தெரியவந்தது.
Friday, October 23, 2015
சிறந்த மாற்றுத் திறனாளி ஆசிரியர்களுக்கான விருதுகள் - புதிய நெறிமுறைகள்:தமிழக அரசு உத்தரவு
சிறந்த ஊழியர், பணியாளர் உள்பட பல்வேறு பிரிவுகளில், அரசு விருதுக்கு மாற்றுத் திறனாளிகளைத் தேர்வு செய்வதற்கான புதிய உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்து மாற்றுத் திறனாளிகள் நலத் துறை முதன்மைச் செயலாளர் முகமது நசிமுதீன் வெளியிட்ட உத்தரவு:
எதிர்காலத்தில் எந்த துறைக்கு மவுசு?
* வேலை வாய்ப்பை பொறுத்தவரை, இளநிலை அல்லது முதுநிலை படிப்பை எந்த பல்கலைக்கழகத்தில் படிக்கிறோம்? என்பது மிக முக்கிய பங்கு வகிக்கும்!
* துறை சார்ந்த சர்வதேச அறிவு அவசியம். அதன் அடிப்படையிலேயே, வரும் 2020ம் ஆண்டிற்குள் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவர். அதேசமயம், நாம் பெற்றுள்ள திறனில் 40 சதவீதம், நாம் சார்ந்த தொழில், துறை அல்லது தொழில்நுட்பத்திற்கு சம்பந்தமே இருக்காது என்பதையும் உணர்ந்துகொள்ள வேண்டும்.
Tips for Blocking all Annoying Ads on Android Devices
Pop-up ads that keep appearing on the screen while browsing on your Android phone can be a source of frustrations and annoyance.
If you choose to do nothing about the pop-up ads, be ready to use an Android device that not only surfs slowly but also costs a lot of money. Blocking the pop-up ads that keep showing up on the device is the best and most effective method through which to make it surf faster and save some money in the process.
இந்த அப் தான் உங்கள் ஆண்ட்ராய்ட் போனின் செயல்திறன் அதிகம் பாதிக்கிறது
எவ்வளவு விலை உயர்ந்த ஸ்மார்ட்போன் வாங்கினாலும் நாளடைவில் அதன் பேட்ரி லைப்பும், செயல்திறனும் குறைந்துவிடுகிறது. இதற்கு முக்கிய காரணம் நாம் பயன்படுத்தும் சில அப்ஸ்.
நாசா செல்ல வாய்ப்பு தரும் 'சூப்பர் பிரெய்ன் சேலஞ்ச்'
மாணவர்களின் அறிவுத்திறன் மற்றும் சிந்தனையை துாண்டும், 'சூப்பர் ப்ரெய்ன் சேலஞ்ச்' போட்டியை, 'எட் சிக்ஸ் பிரெய்ன் லேப் ஸ்கில் ஏஞ்சல்ஸ்' என்ற, நிறுவனம் அறிவித்துள்ளது; பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவியர் பங்கேற்கலாம்.முதல் கட்டத் தகுதிப் போட்டி, நவம்பர், 14 முதல், 22 வரை, 'ஆன்லைனில்' நடத்தப்படுகிறது; இறுதி போட்டி, பின்னர் அறிவிக்கப்படும்.
மலேசியாவுக்கு இந்திய ஆசிரியர்கள்
மலேசியாவின் கிராமப்புறங்களில் வசிக்கும் மலேசியர்களின் திறனை அதிகரிப்பதற்காக இந்தியாவைச் சேர்ந்த ஆங்கில ஆசிரியர்களை நியமிக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மலேசிய நாடாளுமன்றத்தில் கல்வி அமைச்சர் பி. கமலநாதன் புதன்கிழமை கூறியதாவது:
Thursday, October 22, 2015
பட்டப்படிப்புக்கான கூடுதல் கால அவகாசம் 2 ஆண்டுகளாக குறைக்க வேண்டும்: பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரை
பட்டப்படிப்பு படிக்கும் மாணவ, மாணவியர் நிர்ணயிக்கப்பட்ட ஆண்டுகளுக்குள் தேர்ச்சி பெறா விட்டால் வழங்கப்படும் கால நீட்டிப்பை 2 ஆண்டாக குறைக்கும்படி பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரை செய்துள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு நவம்பர் 22-ல் கணிதத்திறன் தேர்வு
பள்ளி மாணவர்களுக்கு நவம்பர் 22-ம் தேதி சென்னையில் கணிதத்திறன் தேர்வு நடத்தப்பட உள்ளது. தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு நவம்பர் 22-ம் தேதி கணிதத்திறன் தேர்வு நடத்தப்பட உள்ளது.
ஆர்.கே. நகரில் புதிய அரசு கல்லூரிக்கு ரூ.8 கோடி நிதி - 2015/2016 கல்வியாண்டு முதல் செயல்படும் : முதல்வர் ஜெயலலிதா உத்தரவு
சென்னை ஆர்.கே.நகரில் அமையவுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கென புதிய கட்டடம் கட்டுவதற்காக ரூ.8 கோடி ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு கல்விக்கு உரிய முக்கியத்துவம் அளித்து பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறது.
Subscribe to:
Posts
(
Atom
)