Ad Code

Responsive Advertisement

பட்டதாரி ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு இன்று துவக்கம்

அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான பொதுமாறுதல் கலந்தாய்வு அக்.,26ல் துவங்குகிறது.-அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் உபரிப் பணியிடங்கள் கண்டறியப்பட்டு, அதில் பணிபுரிந்த பட்டதாரி ஆசிரியர்கள் பணிநிரவல் மூலம் மாற்றப்பட்டனர். அதற்குப்பின் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, பொதுமாறுதல் கலந்தாய்வு அக்.,26ல் துவங்குகிறது.இது தொடர்பான பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவு:


அக்.,26ல் பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர்கள் நிலை- 2க்கு மாவட்டத்திற்குள் மாறுதல்; அக்.,27ல் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு நடக்கிறது.இடைநிலை, உடற்கல்வி, சிறப்பாசிரியர்களில் இருந்து பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு, இணையதளம் மூலம் அக்.,30ல் நடக்கிறது. மனமொத்த மாறுதல் கோரும் தகுதி உள்ள ஆசிரியர்களுக்கு அக்.,௩௦ல் மாறுதல் வழங்க வேண்டும். 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement