Ad Code

Responsive Advertisement

மாணவர்களுக்கு நல் ஒழுக்கத்தை கற்பிக்க ஆசிரியர்களுக்கு புத்தகங்கள்; ஆசிரியர் பயிற்சி இயக்குனரகம் ஏற்பாடு

பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு பாடத்துடன் நல் ஒழுக்கத்தை கற்பிக்க ஆசிரியர்களுக்கு இந்தியாவில் முதல் முதலாக புத்தகம் தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர் பயிற்சி இயக்குனரகம் சார்பில் அச்சடிக்கப்பட்டு உள்ளன. அவை விரைவில் வினியோகிக்கப்பட உள்ளது. பள்ளிக்கல்வித்துறையின் கீழ் சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த இயக்குனரகம் முன்பு ஆசிரியர் பயிற்சி இயக்குனரகம் என்று அழைக்கப்பட்டது.


மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் வி.சி.ராமேஸ்வரமுருகன் கூறியதாவது:-



கல்வியுடன் நல் ஒழுக்கம்


ஒரு சமுதாயம் மேம்பட வேண்டும் என்றால், எல்லா மனிதர்களும் நற்பண்புகளை பெற்றிருக்கவேண்டும். இன்று ஒவ்வொரு மனிதனின் மனமும் விரிவடையவேண்டியது அவசியமாகும். நற்பண்புகள் என்பது ஒவ்வொருவருக்கும் தேவை. சமூகம் மேம்பட, சமத்துவம் நிலைத்திட, எல்லோருக்கும் எல்லாம் கிடைத்திட, ஏற்றத்தாழ்வற்ற சமுதாயம் உருவாக நாடும், வீடும் நலம்பெற நல்லொழுக்கம் உள்ளிட்ட நற்பண்புகள் மனிதர்களிடம் இருக்கவேண்டும்.எனவே பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ-மாணவிகளிடம் கல்வியுடன் நல் ஒழுக்கத்தை ஆசிரியர்கள் கற்பித்து வருகிறார்கள். இருப்பினும் நல் ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் அளித்து நல் ஒழுக்கம் உள்ளிட்ட பல நற்பண்புகளைமாணவ-மாணவிகளிடம் கற்பிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டது.


முதியோரிடம் அக்கறை செலுத்துதல்


அதற்காக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனரகம் சார்பில், தனியாக புத்தகம் அச்சடிக்கப்பட்டுள்ளது. புத்தகத்தில் முதியோரிடம் அக்கறை செலுத்துதல், நாட்டுப்பற்று, தேசிய ஒருமைப்பாடு, நன்றி உணர்வு, சுறுசுறுப்பு, நேரம் தவறாமை, கடின உழைப்பு, உணவு பழக்கவழக்கம், சேமிப்பு, இனியவை கூறல், நட்பு, ஒழுக்கம், நேர்மை, கற்றல், நம்பிக்கை, கற்பனை திறன், மகிழ்ச்சி, உதவி, பொறுமை, மன உறுதி, அன்பு, விடா முயற்சி உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் கதைகள் உள்ளன.புத்தகத்தில் உள்ள இந்த கதைகளை மாணவ-மாணவிகளிடம் ஆசிரியர்கள் கூறி பாடம் நடத்த உள்ளனர். கதை சொல்வதால் மாணவ-மாணவிகள் மகிழ்ச்சியுடன் கேட்பார்கள். மனதிலும் ஆழமாக பதியும். அந்த புத்தகங்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்களிடம் கொடுக்கப்பட உள்ளன.


பயிற்சி


இந்த புதிய புத்தகத்தில் உள்ளதை எப்படி மாணவர்களுக்கு கற்பிக்கவேண்டும் என்றுஆசிரியர்களுக்கு பயிற்சியும் நடத்தப்பட உள்ளன. பயிற்சி, முதலில் மாநில அளவில்100 பேர்களுக்கு நடத்தப்படுகிறது. பயிற்சி பெறும் அந்த ஆசிரியர்கள் மாவட்ட அளவில் உள்ள ஆசிரியர்களிடம் எடுத்துக்கூறுவார்கள். பின்னர் தாலுகா மற்றும் வட்டார அளவில் நடத்தப்படும் ஆசிரியர்கள் மத்தியில் எடுத்துக்கூறுவார்கள். பிறகு ஆசிரியர்கள் வகுப்பில் மாணவர்களுக்கு பாடம் நடத்துவார்கள். இந்த புத்தகங்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.இவ்வாறு வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்தார். 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement