Ad Code

Responsive Advertisement

அரசு ஊழியர்களின் சம்பளத்தில் ரூ.6 ஆயிரம் குறைக்க பரிந்துரைத்த நிதித்துறையின் உத்தரவுக்கு ஐகோர்ட் இடைக்கால தடை

குரூப் 2 பணியிடங்களுக்கு இணையான பணியிடங்களில் பணிபுரிந்து வந்த அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.15,600 ஊதியத்தை ரூ.9,300 ஆக குறைக்க பரிந்துரைத்த நிதித்துறையின் உத்தரவுக்கு ெசன்ைன ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.  

குரூப் 2 பணியிடங்களுக்கு இணையான பதவிகளில் பணிபுரிந்து வரும் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர், மீன்வளத்துறை ஆய்வாளர், தொழில்நுட்ப உதவியாளர் உட்பட 52 பிரிவில் பணிபுரிந்து வரும் அரசு ஊழியர்களுக்கு ராஜீவ் ரஞ்சன் கமிஷன், கடந்த 2010ல் மாத ஊதியம் ரூ.15,600 வழங்கலாம் என கூறியது.

இதைதொடர்ந்து, அந்த பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு கடந்த 2011 முதல் ஊதியம் ரூ.15,600 வழங்கப்பட்டு வந்தது. இந்த ஊதியம் அதிகபட்சமாக இருப்பதாக கூறி மீண்டும் கிருஷ்ணன் தலைமையிலான குழுவை அரசு நியமித்தது. அக்குழு, குறைந்த பட்சம் ரூ.9,300 மாத ஊதியமாக வழங்கலாம் என குறைத்து பரிந்துரை செய்தது. இது தொடர்பாக தமிழ்நாடு பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சங்கம் தரப்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த வழக்கை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. தொடர்ந்து அரசு முதன்மை செயலாளர் சண்முகம் அனைத்து அரசு செயலாளருக்கு அவசரமாக கடிதம் ஒன்றை எழுதினார். அதில், அரசாணை எண் 242ன்படி குரூப் 2 இணையான 52 பணியிடங்களில் பணிபுரிந்து வரும் உதவி பொறியாளர்களுக்கு ரூ.9,300ஆக ஊதியம் வழங்க வேண்டும். இந்த ஊதிய நடைமுறையை உடனே அமல்படுத்த வேண்டும். தற்போது அவர்களுக்கு ரூ.15,600 வழங்கப்பட்டு வரும் பட்சத்தில் அவர்களுடைய ஊதியத்தை குறைக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

 இது தொடர்பாக பொதுப்பணித்துறை பொறியாளர் சங்கத்தின் இணை செயலாளரும். செயற்பொறியாளருமான கல்யாண சுந்தரம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு மீதான விசாரணை நீதிபதி சத்தியநாராயணன் முன்னிலையில் நடந்தது. அப்போது, உதவி பொறியாளர்கள் ஊதியம் தொடர்பாக ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டாலும், சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கனவே இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. 

எனவே, நிதித்துறை செயலாளர் சண்முகம் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. மேலும், இந்த வழக்கு வரும் நவம்பர் 30ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அன்றைய தினத்தில் நிதித்துறை செயலாளர் இது தொடர்பாக பதில் அளிக்க வேண்டுமென்றும் நீதிபதி சத்தியநாராயணன் உத்தரவிட்டார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement